⛳ இருப்பிடம்
திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம்.
📚தலவரலாறு - 1.
சபீப வனம் எனும் வன்னி மரக்காட்டின் நடுவே தவம் செய்து கொண்டிருந்தார் பிருகு முனிவர்.
அப்போது அரசன் தன் படையுடன் வந்து சிங்க வேட்டையாடி முனிவரின் தவத்தை கலைக்க , அரசன் சிங்க முகத்துடன் காட்டில் அலையுமாறு சாபம் இடப்படுகிறான்.
இதையடுத்து, சிம்மவர்மன் என்ற அந்த மன்னன் சிங்க முகத்தைப் பெற்றான் அந்த மன்னன், தினமும் விருத்த காவேரியில் (வெட்டாற்றில்) நீராடி, சிவனையும், எண்கண் வேலவனையும் தரிசித்து வந்தான்.
அரசனும் தை பூசமும் பௌர்ணமியும் சேரும் நாள் வரை காத்து நீராடி இறைவனை வணங்க நாராயணன் தன் கருட வாகனத்திலும், முருகன் தன் மயில் வாகனத்திலும் தோன்றி அருள் புரிகின்றனர்.
📚தல வரலாறு 2.
படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலை அவரிடமே ஒப்படைக்கக் கூறினார். ஆனால் பிரணவப் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று முருகன் மறுத்து விட்டார். இதையடுத்து சிவன், “அப்படியானால், பிரணவத்தின் பொருளை நீயே பிரம்மனுக்கு எடுத்துரைத்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்து விடு” என்று கூறினார். இதையடுத்து பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்தார், முருகப்பெருமான். இதையடுத்து பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது.
எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.
⭐ஆலய சிறப்பு
இந்த கோவிலில் ஈஸ்வரன் ப்ரஹ்மபுரீஸ்வரர், அம்பாள் ப்ரஹன் நாயகி. ஈஸ்வரன் கிழக்கு நோக்கியும், அம்பாளும் முருகனும் தெற்கு நோக்கியும் அமர்வு.
சோமஸ்கந்தர் அமைப்பு.
சிவனும், திருமாலும், மால் மருகனாகிய முருகனும் அருள் தரும் ஆலயம்.
தெற்கு வாயிலில் ஸ்ரீஆதி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார். நித்திய கருட சேர்வை.
பிரம்மபுரிஸ்வரர்:
பிரம்மா தன் எட்டு கண்களால் இறைவனை பூஜித்ததால் இத்தலம் எண்கண் என அழைக்கப்படுகிறது.
கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தல பிரம்மபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும்.
சுப்பிரமணியர் அருள் சிறப்பு
இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.
தெற்கு நோக்கி அருள் புரிகிறார் சண்முகர்.
அருணகிரி பாடிய திருப்புகழ் தலம்.
🛕ஆலய அமைப்பு
இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் இது.
கிழக்கு நோக்கிய ஆலயம்.
ஆலயம் முன்புறம் வன்னிமரம் சில்ப முனிவர் மற்றும் விநாயகர் வணங்க வேண்டும்.
கண் நோய் நீக்கும் கவலைப் போக்கும் ஆலயம். 5 நிலை ராஜகோபுரம் கடந்து நீண்ட உள் மண்டபம் உள்ளது.
மூலவர் பிரம்மபுரிஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரை, அடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளிதெய்வானையுடன் முருகன் மயில் மீது தெற்கு நோக்கி அமர்ந்த கோலம்.
முருகன் உற்சவர் தெற்கு நோக்கிய தனி சன்னதி. அம்பாள் பெரிய நாயகி தெற்கு நோக்கிய தனி கருவரைமேலும், அம்பாள் சன்னதி முன்புறம் உத்திராபுரிஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்.
கோஷ்ட்டத்தில், நர்த்தன விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சன்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர். சுற்றுப் பிரகாரத்தில், மேற்கில் பிரதான விநாயகர், பிரகார மண்டபத்தில்
பஞ்ச லிங்கங்கள் தனித்தனியாக, மற்றும், பாலசுப்பிரமணியர், மகாலெட்சுமி.
வடக்கில் உள்ள மிகப்பெரிய மிக நீளமான வெளவால் நெற்றி மண்டபம் .
கிழக்கில் விஸ்வநாதர், விசாலாட்சி, நவகிரகங்கள், பைரவர். இன்னும் லிங்கோத்பவர் முதலிய சிலைகள் வைத்துள்ளனர்.
வலது புறம் தனியாக ஆதிநாராயணப் பெருமாள் இணைந்துள்ள ஆலயம்
💥இங்கு உள்ள முருகனின் சிற்பம்
அற்புத சிற்பியின் கலைப்பொக்கிஷம்.
தனி சிறப்பு பெற்றது. இறைவனின் முழு எடையை யும் மயிலின் கால்கள் தங்கி நிற்கிறது. சிக்கல் ( பொரவாச்சேரி) எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலைகள், ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை. முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.
💥ஆறுமுகன் சிற்பத்தின் கதை :
பொருள்வாய்த்த சேரி, எட்டுக்குடி சிற்பங்களை அமைத்த சிற்பி முதலில் தன் விரலையும், பின்னர் கண் பார்வையும் இழந்த பின் அமைத்த சிற்பம்.
முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் (பொரவாச்சேரி) என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் (பொரவாச்சேரி) உள்ளது போலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். சிற்பம் அமைக்கும்போது உளி பட்டு ஒரு பொறியால், அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டுபார்வை மீண்டும் பெற்ற.சிற்பிக்கு கண்பார்வை வந்ததும், என்கண், என்கண் என்று பரவசத்துடன் கூற இத்தலம் என்கண் என பெயர்பெற்றதாக கூறுவர்.
💫விழாக்கள் /பிரார்த்தனைகள்
இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாள் பிரம்மோற்சவமாக நடைபெறும்.
இத்தலத்தில் கண்நோய் பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.
வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும்.
மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில் உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது.
செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026
மீள் தரிசனம் 8.3.2026.
பிரும்மபுரீஸ்வரர் ஆலயம் 1991, 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அருகில் உள்ள நாராயணப்பெருமாள் ஆலயம் 2000, 2012, மற்றும் (இன்று) 8.3.2026 ல் சம்ப்ரோஷணம் நடைபெற்றுள்ளது.
ஆலயம் முன்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
பேருந்து வசதிகள் உண்டு. ஆலயம் தென்புறத்தில் சில கடைகள் உண்டு. தெற்கில் 2 கி.மீ யில் முகுந்தனூர் நாகை - தஞ்சை பிரதான சாலை.
வடக்கில் 3 கி.மீ. திருவாரூர் - குடவாசல் பிரதான சாலை. உள்ளது.
சிவனும், மாலும், மருகனும், அருளும் ஆலயம். தமிழகத்தின் மிக சிறப்பு பெற்ற முருகன் தலங்களின் ஒன்று. வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#அம்மாப்பேட்டைஅருகில் உள்ள தலங்கள்8.3.26
No comments:
Post a Comment