Monday, March 30, 2026

4.கோவிலூர் :நெல்லித்தோப்பு பஞ்சபூத தலம் (வான் தலம்)ஸ்ரீ ஞானபுரீஸ்வரர், ஸ்ரீசெளந்தரநாயகி ஆலயம்.பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26

4.கோவிலூர் :
நெல்லித்தோப்பு 
பஞ்சபூத தலம் (வான் தலம்)

⛳ இருப்பிடம்

தஞ்சாவூர் - நாகை பிரதான சாலையில்,

அம்மாப்பேட்டையிலிருந்து மேற்கே 15 கி.மீ தூரத்தில், சாலைக்கு வடக்கில், பூண்டி -சாலியமங்கலம் அருகில் உள்ள ஆலயம்.

⭐ஆலய சிறப்பு - பஞ்சபூத தலங்களில் இது ஆகாயதலம்.
ஸ்ரீ ஞானபுரீஸ்வரர், ஸ்ரீசெளந்தரநாயகி ஆலயம்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்கள்.

🛕ஆலய அமைப்பு.

கிழக்குப் பார்த்த ஆலயம். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆலயம்.

முன்புறம் கிழக்கில் சற்று பெரிய குளத்துடன் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்த 3 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

தெற்குப் பக்கம் ஒரு வாசலும் உள்ளது.
ராஜகோபுரம் அடுத்து நந்திபகவான் தனி மண்டபத்துடன் உள்ளார்.
சுவாமி, அம்பாள் இணைந்துள்ள மண்டப முன்முகப்பில் அழகான காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாள் தெற்கு பார்த்து தனியாக உள்ள அமைப்பு; முன்மண்டபமும் உள்ளது.

சுவாமி உள் மண்டபத்துடன் தனி கருவரையில் கிழக்கு நோக்கியுள்ளார்.

உள் மன்டபத்தில், சித்தி விநாயகர், பாலமுருகன், விஸ்வநாதர் விசாலாட்சி உள்ளார்கள். 

கோஷ்ட்டத்தில், நர்த்தன கணபதி, தெட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவர்,
பிர்மா, தனி சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.

பிரகாரத்தில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி தனித்தனி சன்னதிகளுடன் உள்ளனர்.
தலவிருஷம் நெல்லிமரம் உள்ளது.

வடக்குப் பிரகாரத்தில் ஞானலிங்கம் நந்தியுடன் உள்ளது. 

கிழக்கு மூலையில், பைரவர், சனீஸ்வரர், ஹரி ஹர புத்திரர் உள்ளனர்.
நவகிரகம், சந்திரன், சூரியன், உள்ளனர்.

பிரகாரம் முழுவதும் பாதுகாப்புடன் மேற்கூரை அமைக்கப்பட்டது. தரைமுழுதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் சார்ந்த நகரத்தார் சமூகத்தினரின் உதவியால், புனரமைப்பு செய்யப்பட்டும்,

நித்திய கால பூசைக்காக, நிலம் தருமம் செய்யப்பட்டுள்ளதற்கும் பழைய கல்வெட்டு உள்ளது.

தற்காலத்தில், 2008ல் மதில் சுவர் கட்ட இந்து அறநிலையத்துறை உதவியுள்ள குறிப்பும் காணப்படுகிறது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
ஆலயம் அருகில் உள்ள வீட்டில் தெரிவித்து, ஆலயம் தரிசனம் செய்யலாம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 18.02.2023 அன்று நாங்கள் முதன்முறை தரிசித்தோம். சிவராத்திரி விழாவும் நாட்டியாஞ்சலியும் நடைபெற்றது.

நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
சமீபத்தில் குடமுழுக்கு ஆனது. ஆலயம் தற்போது மிகவும் பொலிவுடன் உள்ளது.
2008 ல் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
18.02.2023 #மகாசிவராத்திரி சனிமகாபிரதோஷம் #ஆலயதரிசனம்
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...