🛐திருவானைக்காவல், அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் (Thiruvanaikaval Jambukeswarar Temple) திருச்சி மாநகரில் வடக்கு பகுதியில் காவிரி கொள்ளிடம் புண்ணியநதி சூழ்ந்த பகுதியில் காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கம்பீரமாக மாபெரும் சிவன் கோவில் நகரமாகும்.
🛐அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-ஆவது சிவன் தலமாகும்.
🛐திருவானைக்காவல்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நீர், (அப்பு) ஸ்தலமாக இத்திருத்தலம் வழிபாடு செய்யப்படுகிறது. நாவல் மரக்காட்டில், ஜம்பு ரிஷியாலும், அம்பிகையாலும், வழிபாடு செய்யப்பட்டவர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர். யானையும் சிலந்தியும் இத்தலத்தில் இறைவனை வழிபாடு செய்து மோட்சம் பெற்றுள்ளது. பிரம்மா இத்தலத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து இறைவன், இறைவியின் தரிசனம் பெற்று ஸ்திரீ பாவ விமோசனம் பெற்றார். அன்னை அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்கரங்களை தாடகங்களாக அணிவித்துக் கொண்டு அருள்பாலிக்கின்றார்
🛐இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ தேவர் குல பாண்டியர்கள், தவிர, முத்தரையர் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை கல்வெட்டுகளிலும் பொறிக்கப்ப்பட்டுள்ளது.
🛐பல்வேறு சிறப்புகளும், புராண, சரித்திர வரலாறுகள் நிறைந்த, தமிழ்நாட்டிற்கு பெருமையும், சிறப்பும் தரும் மிக முக்கிய ஆலயம் இது.
🛐வாழ்வில் ஒரு முறையாவது இவ்வாலயம் வந்து முழுவதுமாக தரிசித்து பலன் பெறுவீர்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
15.2.26- சிவராத்திரி (மீள்) தரிசனம்
தெற்குவாசல் வழியாக வந்து- குபேரலிங்கம் - ஜம்பு தீர்த்தம் - ஆதிஜம்புகேஸ்வரர் ஆலயம் தரிசனம் செய்து பின் சுவாமி (சிறப்பு கட்டணம் 25/-), அம்பாள்
தரிசனம் செய்து வந்தோம்.
(விழா மண்டபத்தில் கலை நிகழ்வுகள் இரவு முழுதும் காலை 5.00 மணிவரை நடைபெற்றது)
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026 (வலைதள தகவல் 💻📡📚) #Subbramசுப்ராம்🔱🇮🇳
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026
No comments:
Post a Comment