Monday, March 30, 2026

பூண்டி - புஷ்பவனேஸ்வரர்புஷ்பவனநாயகி உடனுறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.

4.பூண்டி - புஷ்பவனேஸ்வரர்
புஷ்பவனநாயகி உடனுறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.
பூண்டி வாண்டையர் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஆலயம். நல்ல பராமரிப்பில் பாதுகாப்பில் உள்ளது.

⛳ இருப்பிடம்

தஞ்சாவூர் - நாகை பிரதான சாலையில்,
அம்மாப்பேட்டைக்கு மேற்கே உள்ளது. சாலைக்கு வடக்கில், பூண்டி என்ற ஊரில் ஈசான பாகத்தில் உள்ள பெரிய ஆலயம்.

🛕ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம். தென்புறம் ஒரு குளம் உள்ளது. 
கிழக்குப்புறம் 5 நிலை ராஜகோபுரம் ஒன்றும், தென்புறம் 3 நிலை ராஜகோபுரம் ஒன்றும் உள்ளது.
வசந்தமண்டபம், கொடிமரம், நந்தி அமைக்கப்பட்டுள்ளது.  

 நுழைவில், மேல் பகுதியில், சிவக்குடும்ப சிற்பங்கள் அழகிய முறையில் பாதுகாப்புடன் உள்ளது. நுழைவு அடுத்து, சுவாமி கிழக்குப் பார்த்து தனி பிராகாரத்துடன் அமைந்துள்ளார். 

அம்பாள் தென் திசை நோக்கி தனி கருவரை அமைப்புடன் உள்ளார்.

தெற்கு பிரகார மண்டபத்தில், 63 வர் உள்ளார்.

கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை, தனி சண்டிகேஸ்வரர்.

மேற்கு பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகர், மகாலெட்சுமி, முதலியோர் அமைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்குப் புறத்தில் தனி நவகிரகம், பைரவர் முதலியோரும் இருக்கின்றனர்.

தென்புறம் தேரடி மண்டபம், மற்றும் பெரிய குளம் ஒன்றும் உள்ளது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
இவ்வாலயம் பூண்டி வாண்டையார் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
இராவ்பகதூர் அ. வீரைய்யா வாண்டையார் அவர்கள் முதன் முதலாக 1948 ல் ஆலயத்தை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்துவித்தார்கள், தொடர்ந்து, ஆலயம் வளர்ச்சி அடைந்து அடுத்ததடுத்த ஆண்டுகளில் முறையாக கும்பாபிஷேகம் நடத்தி பராமரிப்பில் வைத்துள்ளார்கள்.

ஆலயம் மிகவும் முறையான பராமரிப்பில் பூசைகளில் உள்ளது. 6 கால பூசை ஸ்ரீ புஷ்பவனேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

எல்லா விஷேச கால நடைமுறைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

ஆலயம் வளாகம் பெரியதாக உள்ளதால்
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. பூசை குருக்கள் வீடும் ஆலயம் அருகிலேயே உள்ளது. தெரிவித்து தரிசனம் செய்யலாம்.

ஆலயம் அருகில் வேறு கடைகள் ஒன்றும் அருகில் இல்லை.

8.03.2026 ல் தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...