Showing posts with label வினாவுரை பதிகம்-திருநள்ளாறும் திரு ஆலவாயும். Show all posts
Showing posts with label வினாவுரை பதிகம்-திருநள்ளாறும் திரு ஆலவாயும். Show all posts

Wednesday, August 4, 2021

வினாவுரை பதிகம் - திருநள்ளாறும் திருஆலவாயும் - பதிவு - 3

திருஞானசம்பந்தரின்
#வினாஉரை_பதிகங்கள் அமைப்பைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பதிவு : 3.
🔱பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். 
🔱ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும், தமிழின் கவியின் உயர் சிறப்பும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் உணரலாம். 
🔱எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
🔱வினாவுரை என்றால் என்ன?
🟩வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்
மேலும், தலத்தின் சிறப்புடன், இறைவரின் சிறப்பு கோலம், பேரருட்டிரன் வெளிப்படுத்தும் பாங்கு வியப்பும், சிறப்பும் மிக்கது.

🔱இந்தத் தொடரில் நாம் சிந்திக்கவிருக்கும் பதிகம்.

🔱முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

🔱பதிக சிறப்பு:
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும் ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.

🔱திருநள்ளாற்று சிறப்பும்,
 ஆலவாய் சிறப்பும் கூறி நள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை நோக்கி வினவுதல் போன்ற அமைப்பு.
💚
🔱பாடல்: 3
தண்ணறு மத்தமும் கூவினமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்

நண்ணல் அரிய நள்ளாறுடைய
நம்பெருமான் இது என் கொல் சொல்லாய்

புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனை இழையார்

அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே.

🔱பொருள் :
ஊமத்தம், வில்வம், முதலிய மலர்கள் தாங்கிய மாலைகள் அணிந்து, யாரும் அரிதில் நெருங்க முடியாத அரியவனாய் இருக்கும் இறைவா, திருநள்ளாற்றில் வீற்றிருந்து அருளுபவரே,

பெரும் புண்ணியம், தவம் செய்தவர்கள் சிறப்பாய் போற்றிப் பாடல் தொடுக்கும் பெருமானே, ஆலவாய் அமர்ந்த அழகு என் கொல்? என்று போற்றுகிறார்.
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5977308079011066&id=100001957991710

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...