Monday, March 30, 2026

5. உடையார்கோவில்கரவந்ததீஸ்வரர் - தர்மவல்லி ஆலயம்(நீர் தலம்) பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26

5. உடையார்கோவில்
கரவந்ததீஸ்வரர் - தர்மவல்லி ஆலயம்
(நீர் தலம்) பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
⛳ இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலயம்.
அம்மாப்பேட்டைக்கு முன் (அருகில்) உள்ளது. பிரதான சாலையில் இருந்து ஆலயத்திற்கு செல்ல பழமையான ஆலய வளைவு ஒன்றும் உள்ளது.

தெற்கில் செல்லும் அந்த சாலையில் சென்றால், பெரிய ஏரி வரும், ஏரியின் மேற்கில் ஆலயம் அமைந்துள்ளது.

⭐ பஞ்சபூததலம் - நீர்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.

💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்: 
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,

2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,

3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்

4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,

5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்கள்.

⭐ஆலய சிறப்பு
சுவாமி : கரவந்தீஸ்வரர் -
காளா செடியை தலவிருட்சமாக கொண்டதால், திருக்காளாவுடையார் என்பர். கரவிந்தம் என்பது களா மாரத்தைக் குறிக்கும். களா என்பது கரவிந்தம் என்றும் கரவிந்தேஸ்வரர், மருவி கரவந்தீஸ்வரர் என்பதும், களாவுடை பெருமான், என்றும் சுவாமியை குறிப்பிடுகின்றனர்.
சதய நட்சத்திரக்காரர்களுக்கு உகந்ததலம்.

இந்த ஆலயம் சுற்றிலும் தீவு போல திரிபுவனமாதேவி பேரேரி அமைந்துள்ளது. இதை வேத தீர்த்தம் எனப்படுகிறது.

பிரம்மன் சாபம் நீக்கியது, மலையத்துவசன் மன்னன் குருசாபம் போக்கியது, பூமாதேவி வழிபட்டது.
சுவரதன் என்ற மன்னன் சாபம் நீங்கியது.
வீரசோழ மன்னன், பசுவைக்கொன்ற சாபத்தை நீக்கியது.

🛕ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம். 
10ம் நூற்றாண்டு ஆலயம்..
தீர்த்தம் வேத தீர்த்தம் படித்துரை உள்ளது. ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது.

முதலில் ஒரு காட்சி கோபுரம் உள்ளது. 10.07.1959 ல் மதுரை ஆதீனகர்த்தாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலிபீடம் நந்தி மண்டபத்துடன், அடுத்து கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம்.

உள்வெளி பிரகாரங்கள். முன், வெளி உள் மண்டபங்கள்.
மூலவர் சுயம்புமூர்த்தி கிழக்கு நோக்கியருளுகிறார்.
சுயம்பு உயரமான லிங்கம். அர்த்த, நிருத்த மண்டபங்கள். மண்டத்தில் சுவாமி முன் நந்தி. துவார பாலகர்கள்
அம்பாள்.தர்மவல்லி தனி கருவரை தெற்கு நோக்கிய அமைப்பு.
முன் மண்டபத்தில் சந்திரன்,சூரியன், நால்வர், நவகிரகங்கள், நர்த்தன விநாயகர் கிழக்கு நோக்கி தனிசன்னதியில் உள்ளனர்.

கோஷ்ட்டத்தில், விநாயகர், தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) இருபுறமும் பிரும்மா, விஷ்ணு தனித்தனியாக உள்ளனர்.
கோமுக பிரும்மா, விஷ்ணு துர்க்கை,
தனி சன்டிகேஸ்வரர் சன்னதியுடன்.

பிரகாரத்தில்,
தென்கிழக்கில், கிழக்கு நோக்கிய தனி பிரதான விநாயகர் சன்னதி ; மேலும், ஆலய சிறப்பாக விநாயகர் சன்னதியில் அனுராதா க்ரமன சரஸ்வதி தெற்குப் பார்த்து அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் சிறப்பு.
அருகில் சிறிய அளவில் ராகு கேதுவும் வைத்துள்ளனர்.

மேற்கு பிரகாரம் முழுவதும் வெளவால் நெத்தி மண்டபம் தனித்தனி சன்னதிகளில், குருணி அரிசி விநாயகர், 
பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசிவிஸ்வநாதர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், மற்றும் வேதபுரீஸ்வரர், சதூர்வேதபுரிஸ்வரர், பூலோக நாதர்,
மகாலெட்சுமி உள்ளனர்.
கிழக்கில், பைரவர், சேக்கிழார் சன்னதிகளும் உள்ளது.

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026 
 ஆலயம் வரை நல்ல சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம். மற்ற ஆலயம் அருகில் வேறு எந்த கடைகளும் இல்லை. சிறிய வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
எல்லா விழாக்களுடன் சிறப்பாக ஆலயம் பராமரிப்பில் உள்ளது. 
தரிசித்துப் பலன் பெற வேண்டிய பழமையான ஆலயம்.

கும்பாபிஷேகம்:
12.07.1959 ஞாயிறு நடைபெற்றுள்ளது
20.05.2013 திங்கள் நடைபெற்றுள்ளது.

நாலுகால பூசைகள் நடைபெறுகிறது.

மிகச்சிறப்புவாய்ந்த புராதானத்தலம்.
தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயங்களின் ஒன்று.

18.02.2023 #மகாசிவராத்திரி
சனிமகாபிரதோஷம்
மற்றும் 28.10.23 அன்னாபிஷேகம்
#ஆலயதரிசனம் 
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...