Monday, March 30, 2026

திருத்தலையூர் - உடையவர் கைலாசநாதர்(இரட்டை நந்தீஸ்வரர்) திருக்கோவில் .

திருத்தலையூர் - உடையவர் கைலாசநாதர்
(இரட்டை நந்தீஸ்வரர்) திருக்கோவில் .

திருத்தலையூர் 
அமைவிடம்: திருச்சிக்கு வடக்கில் உள்ள துறையூர் சென்று அங்கிருந்து தண்டலை வழியாக முசிறி செல்லும் சாலையில் உள்ளது.
(துறையூர் கண்ணனூர் சாலை State Highway. .
கண்ணனூர் (இவ்வூரிலும் இரண்டு சிவன் ஆலயங்கள் உள்ளது) - தலையூர் சாலை குறுகியது)

துறையூரிலிருந்து மேற்கில் நாமக்கல் சாலையில் கண்ணனூர் வந்து தெற்கில் திருத்தலையூர் சாலையில் செல்லவேண்டும்.

முசிறி - திண்ணக்கோணம் தண்டலை வழியாகவும் வரலாம். 

இந்த ஆலயம் முன்பு காசி விசுவநாதர் என்று இருந்தது. தற்போது ஆலயம் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயம் ஊரின் உள்ளே பிரதான சாலையில் கிழக்குப் பார்த்து அமைந்த ஆலயம்.

ஆலயம் முன் பகுதியில் உள்ள இரட்டை நந்திகள் கொண்ட மண்டபத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
 இரட்டை நந்திகள் கருவரை நோக்கி அமைந்துள்ளது.

மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு பார்த்த அமைப்பில் உள்ளது. ஒரு மண்டப அமைப்பில் உள்ளது. முன் பகுதியில் முகப்பில் சிறிய காட்சி கோபுரம் உள்ளது.

பைரவர் சண்டிகேஸ்வரர் சிறிய அளவில் உள்ளது.

ஆலயம் சுற்றி வரும் பாதை நன்றாக அமைக்கப்படுள்ளது.

அடியார்கள் பூசை செய்கிறார்கள்.

முழு ஆலயமும், சன்னதிகளும் கட்டி முடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. 

 ஆலயம் தற்போது சில அடியார்களின் பெரும் முயற்சியால் புதிய பொலிவு பெற்று வருகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.

நடைமுறையில் அடியார்கள் பூசை செய்யும் ஆலயம்.

சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் மக்கள் வழிபாட்டுக்கும், பூசைகளுக்கும் உதவியாக இருந்தார்கள்.
விரைவில், முழுத் திருப்பணியும் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்தித்து வழிபாடு செய்தோம். 

சிற்றூர் அடியார் பெருமக்களின் சிவராத்திரி விழா ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது.

சாதாரண நாட்களில் பூசை நேரங்களில் அல்லது
முன் தகவல் தந்து வழிபட வேண்டிய ஆலயம்.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

No comments:

Post a Comment

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...