Showing posts with label சேலம் - பஞ்சபூத தலங்கள். Show all posts
Showing posts with label சேலம் - பஞ்சபூத தலங்கள். Show all posts

Monday, November 24, 2025

ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்) - சேலம் - பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)
ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில் கூகையூர், தமிழ்நாடு 606301   

🌟 தமிழ்நாட்டில், சேலத்திலிருந்து 88 கிமீ தொலைவிலும், விருத்தாசலத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், கூகையூர் அமைந்துள்ளது.
🌟கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
🌟திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், 
🌟திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், 
🌟வியாழபகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

கூகையூரில் உள்ள 5 சிவன் கோவில்கள்:

1) ஸ்ரீ பெரியநாயகி சமேத கைலாயமான பொன் பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் / ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் - மிகவும் பழமையான மற்றும் பிரபலமான கோவில் மற்றும் உள்ளூர் மக்களால் 'பெரிய கோயில்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது புனரமைப்பில் உள்ளது.

2) ஸ்ரீ கரியம்புரீஸ்வரர் கோவில் - ஒரு அழகான கிரானைட் கோவில் இப்போது பாழடைந்த நிலையில் உள்ளது, ஆனால் முக்கிய தெய்வமான சிவபெருமான் ஒரு பாழடைந்த கருவறைக்குள் திறந்த வெளியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

3) ஸ்ரீ ஒப்பிலாஅம்மை சமேத ஸ்ரீ பஞ்சாட்சர நாதர் / ஸ்ரீ திருமூல சித்த நாதர் கோவில் (தேவர்கள் தம்பிரான் கோவில்), வீர சைவர்களின் குலதெய்வ கோவில் மற்றும் உள்ளூரில் சித்தர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

4) ஸ்ரீ கைலாச சோழீஸ்வரமுடைய நாயனார் கோவில் - ஒரு சிறிய தனி ஆலயம்

5) ஸ்ரீ பொன் பரப்பின சோழீஸ்வரமுடைய நாயனார் கோவில் - தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

🛕கூகையூரில் உள்ள 5 சிவாலயங்களும் பஞ்ச பூத தலங்களாகக் கருதப்படுகின்றன. 

சுவர்ணபுரீஸ்வரர் கோயில், 
மிகப் பிரமாண்டமான மற்றும் அழகான கோயிலாகும், இது மிகப்பெரிய சுற்றுச்சுவரைக் கொண்டுள்ளது, ஏராளமான சிறந்த கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம்.

சிறப்பு

🌟நவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்*

🌟வசிஷ்ட நதியின் வடகரையில் 
முனிவர் வசிஷ்டரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது.
🌟நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.
🌟இந்தக் கோயில் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும்.
🌟பிரதான தெய்வம் சுவர்ணபுரீஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கம்.
🌟இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.
🌟மூலவர் : ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் –
 🌟அம்பாள் : ஸ்வர்ணாம்பிகை, உமையாள்; ஸ்தல விருட்சம் : அரச மரம்.
தலபுராணம்

1. பஞ்சபூததலம்:

🌟சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு
சுக பிரம்ம ரிஷியின் அறிவுரைப்படி, அவர்கள் அனைவரும் இந்தப் பகுதிக்கு வந்தனர்.

🌼 ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவரும் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 
அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால் சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். 

🌟நதிக்கரையில் வெவ்வேறு இடங்களில் பஞ்ச பூத மூர்த்திகளாக ஐந்து இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். 

🌟பஞ்ச பூத தலங்களில் கடைசியான கூகையூரில், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு, இழந்த அறிவையும் சக்தியையும் மீண்டும் .

🌟அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர
பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது.

 🌟இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.

🌼வசிஷ்டர் முனிவர் நிறுவிய பஞ்ச பூத ஸ்தலங்களின் பட்டியல் : 1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் (நிலம்) 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் (நீர்) 3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) 
4) ஸ்ரீ காமநாதர் கோவில்,அரகளூர்.
5) ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)

2.வியாழ பகவானுக்கு தரிசனம்
🌟ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர்களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது. தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.
அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். 

🏵️மற்றொரு புராணத்தின் படி, இந்த கோயிலின் ஸ்தபதியின் மகன் பாம்பு விஷத்தால் இறந்தபோது, ​​இந்த கோயிலின் இறைவன் ஒரு சித்தர் வடிவத்தில் வந்து சிறுவனின் உயிரைக் கொண்டு வந்தார்.

ஆலய வரலாறு

🛕கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான்.

🛕இந்தக் கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது: 

🛕1178 ஜூலை 6-8 தேதிகளில் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னர் மூன்றாம் 
குலோத்துங்கரின் முடிசூட்டு விழாவின் போது, ​​ராஜா மற்றும் ராணியிடம் ஒரு தெய்வீகக் குரல் கேட்டது, "உங்கள் முடிசூட்டு விழாவின் போது எனக்கு ஒரு கோயில் கட்டுவதாக நீங்கள் செய்த சபதத்தை மறந்துவிட்டீர்களா?". 

🛕அதே நேரத்தில், கூகையூரிலிருந்து சோழ அரசின் துணை நிலைத் தலைவர் ஒருவர் வந்தார், அப்போது கூகையூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து கிரானைட் கோயிலாக மாற்றுவதற்கான தனது முந்தைய சபதம்/விருப்பத்தை மன்னர் திடீரென்று நினைவு கூர்ந்தார். அவர் உடனடியாக வேலையைத் தொடங்க உத்தரவிட்டார், 6 ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 24.01.1184 அன்று மன்னர் மூன்றாம் குலேத்துங்கர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலின் சரியான தேதி பொறிக்கப்பட்டுள்ளதால், இது "தேதியிட்ட கோயில்" என்று அழைக்கப்படுகிறது.

🛕இரண்டாம் ராஜராஜ சோழன் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டிய பிறகு, அவனுடைய மகன் மூன்றாம் குலோத்துங்கன் இந்தக் கோயிலைக் கட்டினான். அதனால் தாராசுரம் கோயிலின் செல்வாக்கு பல்வேறு சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் இங்கு காணப்படுகிறது.

ஆலய அமைப்பு

🌼நாம் கோயிலுக்குள் நுழைந்ததும், 46 தூண்களைக் கொண்ட ஒரு பெரிய வசந்த மண்டபம் உள்ளது, அங்கு பல்வேறு கோயில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

🌟ஸ்ரீ மகாலட்சுமியின் அனைத்து குணங்களுடனும் அன்னை சுவர்ணாம்பிகை, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

🌟முருகப்பெருமானின் சன்னதி வெளிப்புற பிரகாரத்தில் உள்ளது; அவர் ஒரு மயில் மீது அமர்ந்து தரிசனம் அளிக்கிறார், சிலை 8 அடி உயரம் கொண்டது. அவர் தனது 6 முகங்கள் மற்றும் 12 கைகளுடன் தனது மனைவியர்களான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கம்பீரமாகத் தோன்றுகிறார். 

கல்வெட்டுகள் சிற்பங்கள்

🌟அம்மன் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது
மற்றும் கட்டிடக்கலை சிறப்பால் நிறைந்துள்ளது. கொடுங்கை (முன் மண்டபத்தின் கூரை) மிகவும் பிரபலமானது, மேலும் "கூகையூர் கொடுங்கை அழகு / கூகையூர் கொடுங்கை அழகு " என்ற பழமொழி அதன் அழகைப் பறைசாற்றுகிறது. அம்மன் சன்னதியைச் சுற்றியுள்ள கோஷ்டச் சுவர்களில் பார்வதி தேவி, கண்ணப்ப நாயனார், குரங்கு, நண்டு போன்றோர் வழிபடும் உருவம் உள்ளது.
🌼இந்தக் கோயிலில் மட்டும் 19 கல்வெட்டுகள் உள்ளன, கூகையூரில் உள்ள 5 கோயில்களிலும் மொத்தம் 32 கல்வெட்டுகள் உள்ளன. இவை ஸ்ரீ ராம அருணாச்சலம் எழுதிய "கூகையூர் கல்வெட்டுகள்" என்ற தனித் தமிழ் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன

🏵️கொடுங்கை, 20 x 20 அடி பெரிய சதுரத்திற்குள் 72 சதுரங்களில் சிவனின் பல்வேறு தெய்வீக நாடகங்களின் அழகிய சின்னங்களுடன் மிகவும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.

🏵️வெளிப்புறச் சுவர்களில் மூன்றாம் குலோத்துங்க மன்னர் மற்றும் ராணி திருபுவன சுந்தரியின் சின்னங்களும் உள்ளன. மேலும், அம்மன் சன்னதி மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன, அவை தூண்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அனைத்து சப்த ஸ்வரங்களையும் வெளிப்படுத்துகின்றன.

🌟 இரண்டு வரிசைகளில் 108 சிவலிங்கத் திருவுருவங்களும், வெளிச் சுவர்களில் மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருபுவன சுந்தரியின் திருவுருவங்களும் உள்ளன. 

🌟தூண்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து சப்த ஸ்வரங்கள் ஒலி வருமாறு அமைந்துள்ளன.
🌟இந்தக் கோயிலில் உள்ள நந்தி கன்றுக்குட்டியின் அளவு - பால நந்தி / குழந்தை நந்தி என்று அழைக்கப்படுகிறது. 
ராகு - கேதுவின் பாதகமான விளைவுகளை எதிர்கொள்பவர்கள் பால நந்திக்கு அபிஷேகம் செய்கிறார்கள் - அது நீல நிறமாக மாறும்.

தரிசன பலன்
🪴இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ணம்சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
 
ஆலய நடைதிறப்பு
🌟 கோயில் காலை 0700 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐 2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 10.11.2025 மீள் தரிசனம்.

🌟பெரிய ஆலயம் மிகவும் பழமையானது. சிறப்பானது. திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.
🌟சிற்றூர் ஆக இருப்பதால், சாதாரண நாட்களில் வெளியூர் பக்தர்கள் மட்டும் வருகிறார்கள். 
🌟அருகில் குருக்கள் வீடு உள்ளதால், நடை திறப்பு நேரம் விசாரித்து தரிசனம் செய்யலாம்.
🌟வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
🌟இவ்வூரில் மேலும் 4 ஆலயங்கள் உள்ளன. சில ஆலயங்கள் மிகவும் சிதைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பகலில் சென்று அவற்றையும் தரிசிக்கலாம்.
🌟 சிறப்பான ஆலயம் அவசியம் தரிசிக்க வேண்டியது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

காமநாத ஈஸ்வரர் கோவில், ஆரகளூர் (காற்று)ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், அரகளூர் - தலைவாசல் சாலை, அரகளூர், - சேலம் பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

காமநாத ஈஸ்வரர் கோவில், ஆரகளூர் (காற்று)
ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், அரகளூர் - தலைவாசல் சாலை, அரகளூர், தமிழ்நாடு 

🛕சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். 

🛕 இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது

சிறப்புகள்

🛕வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வசிஷ்ட முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயுலிங்க தலமாகும்.

🛕பஞ்சபூத தலங்கள் பட்டியல் : 1) தான்தோன்றே ஈஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை 
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர்
5) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்

மூலவர்: ஸ்ரீ காமநாத ஈஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ பெரியநாயகி.

 “அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர்” என எட்டு என பொருள்படும் அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் இருப்பது சிறப்பம்சமாகும். 

தல சிறப்பு
ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

தலபுராணம்

🌟இக்கோயிலில் இருக்கும் சிவபெருமானை வசிஷ்டர் பூஜித்ததால் இந்த சிவனுக்கு வசிஸ்டேஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு

🌟இந்த கோயில் தல புராணங்களின் படி அசுரனான “அந்தகன்” மற்றும் அவனது அசுர படைகளால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்த போது, அவர் தியானத்தில் இருப்பதை கண்டு அவர் தியானத்தை கலைப்பதற்கு அனைவரும் அஞ்சினர். சிறிது ஆலோசனைக்கு பிறகு தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று தங்களுக்காக சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு தேவர்கள் கூற, அவர்களுக்காக மன்மதன் சிவபெருமானின் மீது மலர் அம்புகளை தொடுத்து அவரின் தியானத்தை கலைத்தார். தியானம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் காமத்திற்கு நாயகனாகிய மன்மதனை அழித்ததால், இக்கோயிலின் இறைவனுக்கு “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயர் ஏற்பட்டது.

மன்மதன் வழிபட்ட தலம் : 
🌟இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.

🌟 முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆலய அமைப்பு : 

🍁 கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் வளைவுடன் 3 அடுக்கு ராஜகோபுரத்துடன் இருபுறமும் மண்டபங்களும் கொண்டு உள்ள ஆலயம். அம்பாள் சன்னதிக்கு ஒரு தனி நுழைவாயிலும் உள்ளன.

 🍀3 நிலை ராஜகோபுரத்திற்கு முன்னால் துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் ரிஷபம் ஆகியவை உள்ளன, 

🍀இது கோயிலில் ஒரு குளம் உள்ளது.
இந்த கோயிலில் இருபுறமும் இரண்டு யானைகளுடன் கஜலட்சுமி - லட்சுமிக்கு ஒரு சன்னதி உள்ளது. தனி விநாயகர் சன்னதி உள்ளது.

🍀முதல் சுற்றில் உற்சவ மண்டபம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், முக மண்டபம், 16 தூண் மண்டபம் மற்றும் 100 தூண்கள் கொண்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

🍀கருவறையில் ஆனந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கருவறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ஒரு தனி ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 
🍀அம்பாளுக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.

🍀2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. 

🍀கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. 

🍀இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

🍀8 பைரவர்கள் (வெவ்வேறு இடங்களில்) உள்ளது. அசிதங்கம், கால, கபால, க்ரோத, ருத்ர, ருரு, சம்ஹார மற்றும் உன்மத்த பைரவர்கள்.

சூரிய பூசை
இந்த கோயிலின் ஸ்ரீ சிவனை சூரியனும் வழிபடுவதாக நம்பப்படுகிறது. பங்குனி 
உத்திரத்திற்கு முந்தைய நாள், ​​பூர நட்சத்திர நாளில் காலையில் மூலவர் மீது சூரியனின் கதிர்கள் விழும்.  

வரலாறு
🌼அரசன் வானகோவராயர் தன் மனைவி புண்ணியவாட்டி நாச்சியாருடன் வழிபட்டது.
இந்த மண்டலத்தை ஆறகளூரை தலைநகராகக் கொண்டு வானகோவராயர் ஆட்சி செய்தார். சோழ, பாண்டிய மற்றும் வானகோவராயர் காலங்களின் கருவறைச் சுவரைச் சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன, அவை முக்கியமாக தினசரி பூஜைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒரு கல்வெட்டு கிருஷ்ணதேவராயர் பற்றிப் பேசுகிறது, அவர் அர்ச்சகர்களுக்கு வரி விலக்கு அளித்தார்.

கட்டிடக்கலை
🏵️கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், ஒரு முக மண்டபம், 16 தூண் மண்டபம், 100 தூண் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது இக்கோயில். கருவறை, ஜகதி, குமுதம், பட்டிக்கையுடன் கூடிய பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. பிட்டி வேதிகாவில் தொடங்குகிறது. கலசம், குடம், பலகை, பொத்தியல் ஆகியவற்றைக் கொண்ட விஷ்ணுகாந்த பைலஸ்டர்கள். பிரஸ்தாரம் நாசிகுடுகளுடன் வாலாபி மற்றும் கபோதம் கொண்டது. கருவறையில் மூன்று அடுக்கு திராவிட செங்கல் விமானம் உள்ளது.

பைரவர்:
🔱தேவர்களின் துன்பத்தை தீர்க்க தனது அம்சமான பைரவரை அசுரர்களை அழிக்க அனுப்பினார் சிவபெருமான். திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி அந்தகன் மற்றும் அவனது அசுரர் சேனைகளை அழித்தனர். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்டபைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது.

🔱காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடானது என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் கருத்தாக உள்ளது.

🔱ஆரகளூரில் நிறுவப்பட்ட அஷ்ட பைரவர் சின்னங்கள்: 
கால பைரவர், அசிடங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுக்காக அறியப்படும் கோயில் இது. ஏழாவது பீஷ்ம பைரவர் ராஜகோபுரத்தின் இடது பக்கத்தில் ஒரு சிறிய மண்டபத்தின் கீழ் பலிபீடம் வடிவில் இருக்கிறார்.
மேலும் ராஜகோபுரத்தின் மேல் அடுக்கில் எட்டாவது பைரவர் கபால பைரவர் தெற்கு நோக்கி இருக்கிறார். கபால பைரவர் கோபுரத்தில் அமைந்துள்ளது

🔱1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோவில் கருதப்படுகிறது.

🔱ஆரகளூரில் பௌர்ணமிக்குப் பிறகு வரும்
தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில் இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கும் நள்ளிரவில் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது.

🔱பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். 

🔱இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு, உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

🔱பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி விழா இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. அன்று மாலை நடைபெறும் மகா யாகத்தில் தேனில் தோய்த்த 1008 வடைகளை யாகத்தில் இட்டு பைரவரை பூஜிக்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொண்டு அஷ்டபைரவர்களை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என இங்கு வழிபடும் மக்கள் கூறுகின்றனர்.

🔱பௌர்ணமிக்குப் பிறகு 8 வது நாளில் (அஷ்டமி நாள்) நடைபெறும் நள்ளிரவு பூஜைக்காக மக்கள் இந்த கோயிலில் அதிக அளவில் கூடுகிறார்கள்.

🔱இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம்

 🔱இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் கருத்தாகும். திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருவிழாக்கள்: 
🌻ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் பைரவர் பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

🏵️ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் (மார்கழி மாதம் திருவாதிரை அன்று) ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

தரிசன பலன்
💦ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும். 

💦அஷ்டபைரவர்கள் : காமநாதீஸ்வரர் கோவிலில் இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. 

💦அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண மக்கள் இங்கு அஷ்டபைரவரை வழிபடுகிறார்கள்.

💦இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை

கோயில் நேரங்கள் 

கோயில் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். முக்கியமான விழா நாட்கள், அஷ்டமி நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் மாறும்.

கோயில் சிறப்பு நேரம் காலை 5 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

அமைவிடம் :

🌻சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. 

🍀சேலம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
🍀ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வழித்தட பேருந்து எண்கள் 6 மற்றும் 31 உள்ளன.
🍀ஆத்தூரில் இருந்து ஆறகளூருக்கு சாரதா என்ற தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது.
🍀தலைவாசல் மற்றும் வி. கூட் சாலையில் இருந்து மினிபஸ் வசதி உள்ளது.

தகவல்: வலைதளங்கள்
நன்றி🛕

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்

🛕பஞ்சபூத தலம், பிரதான சாலையில் இருந்து இவ்வாலயம் தெற்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🛕ஆலயம் உள்ள சன்னதி தெருவில் எதிரில் ஒரு பெருமாள் ஆலயம் உள்ளது.

🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

அ /மி. சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில், வீரகவுண்டனூர், ஏத்தாப்பூர், - சேலம் பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

அ /மி. சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்
சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில், வீரகவுண்டனூர், ஏத்தாப்பூர்,  தமிழ்நாடு 

💥 ஆலய சிறப்பு

🔱அப்பர் 7ம் திருமுறையில் பாடல் பெற்ற
இது வைப்பு ஸ்தலம்
🔱ஐப்பசி - 9 முதல் 15 வரை மற்றும் மாசி 1 முதல் 7 வரை சூரியன் காலைக்கதிரால் வணங்கும் இடம்
🔱சப்த ரிஷிகளில் ஒருவரான (ஏழு பெரிய ரிஷிகள்) வசிஷ்டரால் பெயரிடப்பட்ட "வசிஷ்ட்ரோனம்" என்றும் எத்தாபூர் குறிப்பிடப்படுகிறது. 
🔱ஐந்து சக்தி ஸ்தலங்களில் - வசிஷ்ட நதியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் , இந்த கோவில் அப்பு-நீருக்கு சொந்தமானது. 
🔱நான்கு மறைகளும் வழிபட்ட பெருமைக்குரியது இந்தக் கோவில்.

🍃வசிஷ்டர் முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களின் பட்டியல்  : 1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், பேலூர், சேலம் 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோயில், ஏத்தாப்பூர்
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோயில், ஆத்தூர் கோட்டை 
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோயில், அரகளூர் கோவூர் நாகபுரி கோயில்.
5)ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்

🔰ஆலய அமைப்பு : 

🔱கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தில் பிரதான விநாயகப் பெருமான் வழிபடுகிறார்.
🪴இந்த ஆலயம் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை என மூன்று பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
🍁கோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 
🔱கருவறையில் மூலவரான சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். 

🍃உற்சவர் உமா மகேஸ்வரர். அம்பாள் திருநாமம் மனோன்மணி என்பதாகும். இவர் தெற்கு நோக்கியவாறு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். 

💥சூரிய பூசை
இந்த லிங்க மூர்த்தியின் மீது ஐப்பசி மாதம் 9-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையும், 
மாசி மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும் சூரிய கதிர் விழும் அதிசயத்தைக் காணலாம்.

🌻கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, முருகன் ஆகியோர் உள்ளனர். இதையடுத்து அஷ்டதிக்கு பாலகர்கள், பைரவர், அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீற்றிருக்கின்றனர். 
பிரகாரத்தில் சகஸ்ர லிங்கம் தனி சன்னதியில் உள்ளது.
☘️இங்கு அதிசய சண்முகர் சிலை உள்ளது. முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகர் காட்சி தருகிறார்.
 🍃இந்தக் கோவிலின் மடப்பள்ளி அருகே தென்மூலையில் நான்கு லிங்கங்கள் உள்ளன. இதற்கு ‘சதுர்வேத லிங்கம்’ என்று பெயர்.
🌲கோவில் கருவறையின் பின்புறம் 10 லிங்கங்கள் உள்ளது சிறப்பம்சம். 
🌺பஞ்சலிங்கங்கள், சேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் உள்ளனர்.

 🌟தீர்த்தம் : ஆலயம் அருகில் வடக்கு நோக்கி வளைந்து  நோக்கி ஓடும் வசிஷ்ட நதி. 
தலமரம் வில்வம்

🌼விழாக்கள்.
இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிஅவிட்டம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், தை பிரம்மோற்சவம், மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

🔰தலபுராணம் - 1

 🪴முன்னொரு காலத்தில் பார்வதி தேவியின் தந்தையான தக்ஷ பிரஜாபதி தன்னலம் கருதி யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்காதது மட்டுமின்றி, அவருக்குரிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். ஆனால் அந்த யாகத்திற்கு ஈசனின் உத்தரவை மீறி பார்வதி தேவி சென்றார். இதனால் அவர் மீது சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தனது உத்தரவை மீறியதால் ‘தன்னை விட்டு பிரிந்து வாழக் கடவாய்’ என்று சக்திக்கு சாபமும் கொடுத்தார். பின்னர் சக்தியை விடுத்து, கோபமடைந்த சிவன், மன அமைதியை நாடி, இந்த இடத்திற்கு வந்தார் தனியாக இத்தலம் வந்து லிங்க உருவில் வில்வ மரத்தடியில் தங்கினார்.

🍄இறைவனை பிரிந்த பார்வதி தேவி எங்கு தேடியும் இறைவனை காணாது துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவபெருமான் அசரீரியாக, தான் பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், தம்மை சூரியன் தினமும் வழிபட்டு கொண்டிருப்ப தாகவும், அப்போது நீ வந்து எம்மை வழிபடு’ என்றார். அதன்படியே பார்வதி தேவி, சிவபெருமானை குளிர்விக்க, அம்பிகாவும் தனது சகோதரர் விஷ்ணுவுடன் இங்கு வந்து தவம் செய்தார். சிவபெருமானும், வில்வ மரத்தின் கீழ் தனது மனைவிக்கு தரிசனம் அளித்து அவளை மன்னித்து, அருள்பாலித்து தன்னுடலில் சரிபாதி தந்து ஏற்றுக்கொண்டார்.

தலபுராணம் - 2.
🌼மனைவியை பிரிந்த கவுதம மகரிஷி :

🪴புராணத்தின்படி, தேவர்கள் மத்தியில் தனது 
அரச பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்திரன் இங்கு ஒரு யாகத்தை - ஹோம பூஜை -  செய்ய நினைத்தான். அவனுக்கு கவுதம மகரிஷி அதி அற்புதமான அமிர்த நேரம் ஒன்றை குறித்துக் கொடுத்தார். ‘பலகோடி யுகங்களுக்கு ஒருமுறை வருகின்ற இந்த அமிர்த நேரத்தை, சுயநலமின்றி இறை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என இந்திரனுக்கு அறிவுரையும் வழங்கினார். 

🪴கவுதமர் குறித்து கொடுத்த அமிர்தநேரம் அறிந்த இந்திரன் மனம் மாறியது. தானே எப்போதும் இந்திரப் பதவியில் இருக்க வேண்டும் என்ற சுயநலம் அவனுள் எழுந்தது. இந்திரனின் எண்ணத்தை தனது ஞானத்தால் உணர்ந்த கவுதமர், ஓர் அழகிய மலரை படைத்து இந்திரன் மனைவியான இந்திராணியிடம் கொடுத்தார். இந்திராணி அந்த மலரின் அழகில் மயங்கிப்போனதால், அமிர்த நேரத்திற்குள் அவளால் ஹோமத்திற்கு வர இயலாமல் போய்விட்டது. மனைவியின் துணையின்றி ஹோமபூஜையை செய்ய இயலாத இந்திரனின் எண்ணம் தோல்வியடைந்தது. தன் எண்ணத்தை நிறைவேறவிடாமல் செய்த கவுதம மகரிஷி மீது இந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது. ‘என் மனைவியை ஹோமபூஜையில் கலந்துகொள்ள விடாமல் பிரித்தது போலவே, உமது மனைவியையும் பிரிந்து வாழக்கடவாய்’ என கவுதமருக்கு சாபமளித்தான் இந்திரன். 

🍄 இந்த சாபத்தின் மாயையால் கவுதமர் தனது மனைவி அகலிகையை ‘கல்லாகக் கடவது’ என சாபமிட்டார். பின்னர் கவுதமர் இந்த சாப நிவர்த்திக்காக சிவபெருமானை வேண்டினார்.
அப்போது ஈசன், ‘ஏத்தாப்பூரில் சூரியன் என்னை வழிபடும் வேளையில் வந்து தரிசனம் செய்தால் நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாய்’ என்று திருவாய் மலர்ந்தார். 

🍄அதன்படியே, கவுதமர் மாசி மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்) சூரியன் பகவானை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த திருத்தலத்துக்கு வந்து ஒரு சிவலிங்கத்தை நிறுவி சிவனை வழிபட்டார். ​​முனிவருக்கு தரிசனமும் இந்திரனின் சாபத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது சாம்பமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்ய, இறைவனின் திருவுளப்படி ராமபிரானின் திருப்பாதம் பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றார். அதைத் தொடர்ந்து கவுதமர் தனது மனைவி அகலிகையுடன் இணைந்தார் என தல வரலாறு கூறுகிறது. 

🔱வசிட்டர் வழிபட்டதால் வஷிட்டாரண்யேசுவரம் என்றும் தலப்பெருமையுடையது.

🔰தலபுராணம் - 3.

🍀சாபவிமோசனம் அடைந்த காமதேனு:
 🪷தேவலோகத்தில் உள்ள காமதேனு எனும் தெய்வீக பசு, சகல ஐஸ்வரியங்களும் நிறைந்தது. கேட்டதை எல்லாம் தரும் சக்தி உடையது. அமைதியே வடிவான இந்த காமதேனு, ஒரு முறை மாயையினால் ஆட்கொள்ளப்பட்டு கடும் பசிக்கு ஆளானது. பசியின் கொடுமையால் மாமிசத்தை உண்ணத் தொடங்கியது. இதனால் இறைவனின் சாபத்திற்குள்ளாகி புலியாக மாறியது. தனது தவறுக்கு மனம் வருந்திய புலி வடிவம் கொண்ட காமதேனு, சாபநிவர்த்தி அடைவதற்காக ஏத்தாப்பூர் வந்து இங்குள்ள சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டு பழைய சுயஉருவத்தை அடைந்தது. காமதேனு, புலி வடிவம் கொண்டு இங்கு வழிபட்டதால், இந்த ஊர் ‘ஏய்ச்சரம்’ என அழைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள்.

🛕ஆலய உருவாக்கம்
🌟கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த ஆலயம், கட்டிடம் இல்லாமல் வில்வ மரத்தின் அடியில் லிங்கத் திருமேனி மட்டும் இருந்துள்ளது. ஒரு நாள் மைசூர் மகாராஜாவின் கனவில் தோன்றிய இறைவன், தனக்கு கோவில் கட்டுமாறு பணித்தார். அதன்படி மகாராஜா உத்தரவின்படி அவரது மந்திரிகளில் ஒருவரான சே‌ஷய்யர் என்பவர் இங்கு வந்து கோவில் கட்டும் பணியைச் செய்தார். கோவில் அமைக்கும் பணிக்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டது. அப்போது பூமியில் இருந்து பெருமாள் சிலை வெளிப்பட்டது.
சிவபெருமானுக்கு கோவில் அமைக்கும் பணியின் இடையிலேயே, அந்தப் பெருமாளுக்கும் தனி கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் ‘லட்சுமி கோபால பெருமாள் கோவில்’ என்ற பெயரில் இருக் கிறது. இதனை அறிந்த மைசூர் மகாராஜா, மந்திரி சே‌ஷய்யரை அழைத்து பாராட்டி, முதல் கும்பாபிஷேகம் பெருமாளுக்கும், பின்னர் சிவனுக்கும் செய்ய உத்தரவிட்டார். இன்றும் முதல் பூஜை பெருமாளுக்கும், அதன்பிறகே சிவனுக்கு விசே‌ஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

🌺சமாதானப் பெருமாள் : 
🌻சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் லட்சுமி கோபாலபெருமாள் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள பெருமாள் சிலை, சிவன் கோவில் அமைப்பதற்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டபோது, அதன் அடியில் இருந்து கிடைத்தது. இதையடுத்து அந்த பெருமாளைக் கொண்டு தனிக் கோவில் அமைக்கப்பட்டது.

 🌼சிவபெருமானுடன், தனது தங்கயான பார்வதி தேவியை சேர்த்து வைப்பதற்காக பெருமாளும் அம்பாளுடன் இத்தலம் வந்தார். தங்கைக்காக சிவனை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைக்க வந்ததால், இவர் ‘சமாதானப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படு கிறார். இந்த பெருமாளின் திருமேனிதான் தற்போது லட்சுமிகோபால பெருமாள் கோவிலில் உள்ளது.

⛳பிரார்த்தனைகள்.
🪴 சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
🌴வில்வ மரம் பிரகாரத்தில் உள்ளது. 
🍀ஒருவருக்கொருவர் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்காக மரத்தை சுற்றி வருகிறார்கள்
 🌿கோவில் பிரகாரத்தில் உள்ள வில்வமரத்தை பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதுடன், சகல செல்வங்களுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது

🍃சர்ப்ப தோஷம்,புத்திர தோஷம் - முதலியவற்றிற்கு சிறந்த பரிகாரத்தலமாக வணங்கப்பட்டு வருகிறது.

நன்றி வலைதளங்கள்.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்
🛕பஞ்சபூத தலத்தில் இரண்டாவது தலம், முதல் தலமாகிய பேளூரிலிருந்து இங்கு நேரடியாக வரலாம்.
🛕இக்கோயிலில் சாம்பமூர்த்தி, லட்சுமி கோபாலசுவாமி, மனோன்மணி அம்மையார் சன்னதிகள் உள்ளன. 
🛕இங்குக் கோயில் தேர் உள்ளது. 
🛕இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
🛕இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது
🛕மிகவும் பழமையான ஆலயம். 
🛕இராஜகோபுரம் அடுத்து ஏகப் பிரகாரம் கொண்ட கற்றளி ஆலயம். முன்மண்டபம், உள், நடு,அர்த்தமண்டபம் தாண்டி கருவரையில் சுவாமி கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளார்.
முன்மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அம்பாள் நின்ற கோலத்தில் உள்ளார்.
🛕ஆலயத்தின் கருவரை சுற்று பிரகார சுவற்றில் வரலாறு குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
🛕முன்புறம் பிரதான சாலை உள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதியும் உள்ளது. ஆலயத்தின் வடபுறத்தில் வீடுகள் உள்ளன. வணிக வளாகம், கடைகள் ஏதும் இல்லை.
🛕அருகில் உள்ள குருக்கள் வீட்டில் தொடர்பு கொண்டு தரிசித்தோம்.

ஆலய திறப்பு:
🍀கோயில் நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

அமைவிடம்
🌟சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் 37 கிலோமீட்டர் தூரத்தில், வாழப்பாடியை அடுத்து, புத்திரகவுண்டன்பாளையம் எனும் ஊருக்கு வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் வசிஷ்டநதியின் வடகரையோரம் இந்த ஆலயம் இருக்கிறது. ஆத்தூர் மற்றும் வாழப்பாடியில் இருந்து பஸ் வசதி உள்ளது.

🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்சேலம் - நிவா நதி - பஞ்சபூத - தலங்கள். (9.11.2025)

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்

சேலம் - நிவா நதி - பஞ்சபூத - தலங்கள்.

🏵️சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு
சுக பிரம்ம ரிஷியின் அறிவுரைப்படி, அவர்கள் அனைவரும் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்தனர்.

🌟ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவர் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 

🌟அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால்  சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால்
கல்வராயன் மலையிலிருந்து (வெள்ளி மலை)
 🌟‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். வசிஷ்ட நதியை உருவாக்கி, நதிக்கரையில் பஞ்ச பூத மூர்த்திகளாக ஐந்து இடங்களில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். 

🏵️மேலும் அதன் கரையில் பல்வேறு சிவாலயங்களை வழிபடுவதற்காக நதியை ஓட அழைத்ததாகக் கூறப்படுகிறது - இதனால் இந்த நதி நீவா - நிவா நதி எனப்பட்டது.

🪷1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் (நிலம்) 
🪷2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் (நீர்) 
🪷3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) 
🪷4) ஸ்ரீ காமநாதர் கோவில்,அரகளூர்.
🪷5) ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)

🌟சிவபெருமானின் 5 பஞ்ச பூத தலங்களை வழிபடுவதாக உறுதிமொழி எடுப்பவர்கள் இங்கு வந்து ஒரே நாளில் 5 கோயில்களையும் வழிபட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
🌟மேலும், ஒரு நாளில்  தரிசிப்பது மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது.

சப்ததுறை தலங்கள்
⛳மேற்கண்ட 5 கோயில்களைத் தவிர, இந்த நதியின் கரையில் அமைந்துள்ள சப்த ரிஷிகளால் வழிபடப்படும் மற்ற கோயில்கள்
சப்த துறை தலங்கள் எனப்படுகின்றன.

💦6) ஆதித்துறை (காரியனூர்) 
💦7) திருவாளந்துறை
💦8) திருமாந்துறை
💦9) சு.ஆடுதுறை 
💦10) திருவத்துறை (திட்டக்குடி)
💦11) திருநெல்வாயில் அறத்துறை மற்றும் 
💦12) திருக்கைத்துறை. - முடவன் துறை & பெலான் துறை 

🌟நிவா நதியை அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் பல்வேறு பாடல்களில் போற்றியுள்ளனர். 

🌟சுந்தரர் தனது 'திருநெல்வயல் அரத்துறை' தேவார பதிகத்தில் இந்த நதியின் முக்கியத்துவத்தைப் பற்றி 11 பதிகங்களைப் பாடியுள்ளார். 

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்

🌟இந்தக் கோயில்கள் 'துறை கோயில்கள்' (தமிழில் துறை என்றால் ஆற்றங்கரை என்று பொருள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

 🌟இவற்றுடன் முக்தி தலங்களான விருத்தாசலம், சிதம்பரம் தலங்களையும் இணைந்து தரிசித்து வர வருடத்தில் ஒருமுறை ஒரே நாளில் அனைத்து ஆலயங்களையும் சென்று குழுவாக தரிசிக்க  ஶ்ரீ அஷ்ட்ட பைரவர் வழிபாட்டுக் குழுவினர் ஆத்தூர் திரு மு.தேவராஜ் (9626746789) மற்றும் திரு D. ராஜா ( 9842740750) அவர்கள் ஏற்பாடு செய்து வருவதாக விளம்பரம் ஆலயத்தில் உள்ளது.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

 🌻பஞ்சபூத தலங்கள் அனைத்தும் சில கி.மீ. தூரத்தில் அடுத்தடுத்து  நல்ல பாதை வசதிகளுடன் அமைத்திருப்பதால், ஒரு நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்துவிட முடியும்.

🌻பேளூர், ஏத்தாப்பூர், ஆத்தூர், ஆரகளூர்
மற்றும் கூகையூர் என்பன இவ்வூர்கள். இந்த வரிசைப்படியே தரிசிக்க இயலும்.

🌻ஒவ்வொரு ஊரிலும், மேலும் சில பழமையான சிவ ஆலயங்கள், பெருமைமிகு பெருமாள் ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளது, 

🌻மேலும், வட சென்னிமலை, முத்துமலை முதலிய புகழ் பெற்ற முருகன் தலங்கள், இன்னும் பல சிறப்பான ஆலயங்களும் உண்டு, என்பதால் அவற்றையும் தரிசிக்க,  சரியாகத்திட்டமிடுதலும், வாகன வசதிகளும் இருத்தல் அவசியம்.

🌻சில ஆரகளுர், கூகையூர் பழமையான சிற்றூர் என்பதாலும், நிறைய புராதானமான ஆலயங்கள் இங்கு இருப்பதாலும் நடை திறக்கும் நேரம், மற்ற வசதிகள் ஏற்பாடுகள் சற்று சிரமம் ஏற்படலாம்,

🌻இறையருள் கூட்டி வைத்தால், நிச்சயம் பயணம் வெற்றியாக நிறைவேறும்,

🌻2017 ம் ஆண்டும், மீண்டும் 9.11.2025 அன்றும்
இந்த பயணம் வெற்றிகரமாக இறையருள்  கூட்டிவைத்தது.

🌻இந்த பயணம் - ஆலய விபரங்கள் குறித்த எமது அனுபவபதிவுகளையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மேலும் கீழ்கண்ட எமது வலைதளங்கள் தங்களுக்கு உதவலாம். அதன் விபரங்கள் இணைப்புகள் கீழே குறிப்பிட்டுள்ளேன். 

நன்றி🙏

🙏🏼🛕🛐🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🛐🔱
🛕ஆலயங்கள் சென்று ஆலய விழாக்களில்  சிறப்புடன் நேரில் சென்று அவசியம் கலந்து  கொண்டு தரிசித்து ஆலயம் வளர, உதவி செய்து, இறையருளும் ஞானமும், அருளும் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
எமது வலைதள பதிவுகளைப் பின்தொடர்ந்து வரும் தங்களுக்கு மிகவும் நன்றி🇮🇳🙏
தொடருங்கள்....தொடர்பில் இருப்போம்......
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
நன்றி🙏🏼
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
💟ARATTAI - CHANNEL..
*_சுப்ராம். அருணாசலம்_* 
https://aratt.ai/@subbram_arunachalam

 *_சுப்ராம். அருணாசலம்*_ 
💟WHATSAPP CHANNEL....
ஆன்மீக பாரதம்
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

💟FACE Book
ஆன்மீக பாரதம்
https://www.facebook.com/groups/1396741377679271/?ref=share&mibextid=NSMWBT


💟ஆலயம் தொழுவது சாலவும் நன்று
https://www.facebook.com/share/15XJLTLk9K/
https://whatsapp.com/channel/0029VbArVSVBA1f5tVIAiM04



💟Subbram Arunachalam :
https://www.facebook.com/share/15oHkTYQYm/

✅*_SUBBRAM_* 
https://subbramarunachalam.blogspot.com/?m=1

🔱🙏🏼🛕🛐🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🛐🔱

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...