⛳இருப்பிடம்
சுந்தரவள நாடு, வாளமர் கோட்டை
தஞ்சாவூர் - நாகப்பட்டினம் பெருவழி சாலையில், புகழ்பெற்ற தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து தென்கிழக்கில் 8 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது.
பிரதான சாலையில் வையச்சேரி என்ற ஊரிலிருந்து தெற்கில் வர வேண்டும்.
📚தலபுராணம் - 1.
ராஜராஜ சோழன் ஒரு மரத்தின் அடியில் தன் வாளை வைத்துவிட்டு, பின்னர் எடுக்க முடியாமல் போனதால், அந்த இடத்தில் சிவனுக்குக் கோவில் கட்டினார். "வாள் அமர்ந்த கோட்டை" என்பது காலப்போக்கில் வாளமர்கோட்டை என மருவியது.
வரலாற்றுச் சிறப்பு: இக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணாம்பிகா ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
📚தல புராணம் - 2
முன்னொரு காலத்தில் ஸ்ரீ விக்கிரம சிங்க பாண்டியன் என்னும் மன்னன் சீரும் சிறப்புமாக இந்தப் பகுதியில் உள்ள நாடுகளை ஆண்டு வந்தான் அவன் சிறந்த சிவ பக்தன் ஆவான் அவனுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது அது என்னவென்றால் சிறந்ததொரு சிவன் ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். அதே நினைப்புடன் இந்த மன்னன் நாடு முழுவதும் வலம் வரும் பொழுது ஆலங்காட்டில் கல்லால மரத்தின் மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது உடனே மன்னன் விக்கிரம சிங்க பாண்டியன் தனது உடைவாளை எடுத்து கீழே வைத்து சிவ லிங்கத்தை தரிசித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். பிறகு தன்னுடைய உடைவாளை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை மன்னன் இது சிவனுடைய வேலை என்று அறிந்து சிவனை மனதார நெஞ்சு உருக வேண்டினான். உடனே சிவபெருமான் இடப உருவமாகி காட்சியளித்து இவ்விடத்திலேயே கோயில் எழுப்பு என ஆசீர்வதித்தார் மன்னன் இத்தல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் எனவும் அம்மை சௌந்தரநாயகி எனவும் பெயரிட்டு திருக்கோயில் எழுப்பி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
📚ஆலய வரலாறு.
இந்த சுந்தர நாட்டில் வசித்து வந்த தவத்திரு மாதவமணி காத்தையா சுவாமிகள் அவர்கள் 1901ம் ஆண்டு பிறந்தவர். அவர் இந்தத் திருக்கோயிலை அடைந்து, அரன் திருவருளால், அன்பர்கள் உதவியுடன், கிராமங்கள் தோறும் சென்று தாய்மார்கள் பெரியோர்களிடத்தில் வாழ்த்தும், ஆசியும், பெற்று, 1915ம் ஆண்டு திருப்பணி தொடங்கி 96 வருடம் பல சீர்த்திருத்தங்களும், புதிய மண்டபங்கள், மற்றும் பல்வேறு பணிகள் செய்து, பல குடமுழுக்குகளை செய்து தனக்குப் பிறகு இவ்வாலயத்தைத் தொடர்ந்து செம்மையாக பராமரித்து வர வேண்டி தமக்கு உதவியாக இருந்த நாட்டார்களை அங்கீகாரம் செய்து 28.10.1996 ல் முக்தி அடைந்தார்.
அவர் காலத்தில் 1938லும், 1963லும், 1986லும், குடமுழுக்கு செய்துவிக்கப்பட்டுள்ளது.
அவரிக் கட்டளைப்படி தொடர்ந்து
அவரின் நினைவுகளைப் போற்றி தனி அறக்கட்டளை ஏற்படுத்திய சுந்தர நாட்டார்கள், அங்கு அவருக்கு தனியாக மணி மண்டம், ஆலய வளர, பல வசதிகள், மண்டபம், மற்றும் திருமண மண்டபம், அன்னதான வசதிகள், ஆஸ்ரமம், அமைத்தும், பக்த பொதுமக்களுக்கு பல வசதிகளை செய்தும் 2008 மற்றும் 2025 முதலிய ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆலயம் முழுமையாக சிறப்பாக தற்போதும் பராமரிக்கப்ட்டு வருகிறது.
தமிழக அரசின் மூலம் இவ்வாலயத்தில் தவத்திரு காத்தையா சுவாமிகள் மடம் ஒரு கால பூசை செய்ய ஏற்பாடுகளும் செய்துள்ளது.
🛕ஆலய அமைப்பு
ஆலயவளாகம் மிகப்பெரியது. ஆலயம், மணி மண்டம், சுவாமிகள் மடம், திருமண மண்டபம், இவற்றுடன் பெரிய குளம் ஒன்றும் கிழக்கில் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய பெரிய ஆலயம்.
முன்புறம் அழகாக அமைந்துள்ள குளம். குளக்கரையில் சிறிய விநாயகர், அடுத்து
மிகப்பழமையான அரசமரம் ஒன்றும் அதனையில் ஒரு சிவலிங்கம் ஒன்றும் உள்ளது.
அடுத்து புதிய அமைப்புடன் அமைக்கப்பட்ட ஆலய நுழைவு வாயில் உள்ளது.
இடது புறம் திருமண மண்டபம் வலதுபுறம் தவத்திரு காத்தையா சுவாமிகள் மணி மண்படம் ஆசிரம வளாகம்.
கிழக்கில் உள்ள 5 நிலை ராஜகோபுரம் முன்புறம் இரண்டு புறங்களிலும், விநாயகர், பாலமுருகன் சிறிய சன்னதிகள் மற்றும் தென்புறம் 3 நிலை ராஜகோபுரம் உடையது.
ராஜகோபுரம் கடந்து நீண்ட மண்டபத்தில் கணபதி, கொடிமரம், பலிபீடம், நந்தி.
தென்புறம் நோக்கிய சன்னதியில் ஸ்ரீ பூர்ணாம்பிகை.
அடுத்து ஆலயம் உள்ளே துவார பாலகர்கள் மற்றும், கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய தனி கருவரையில் உள்ளார்.
சுவாமி கோஷ்ட்டத்தில், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், வடக்கில் பிரும்மா, பைரவர், உள்ளனர்.
63 நாயன்மார்களும் உள்ளனர். வள்ளிதெய்வானையுடன் முருகர், மற்றும் சேக்கிழார், மாணிக்கவாசகர் முதலியோர்கள் உள்ளனர்.
அடுத்துள்ள பிரகாரத்தில், மேற்கில், ஸ்ரீ கணபதி, கருடாழ்வார், ஶ்ரீதேவி, மகாவிஷ்ணு, பூதேவி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சன்னதி, வன்னி மரம், கெஜலெட்சுமி தனி சன்னதி உள்ளது.
மற்றும் துர்க்கா பரமேஸ்வரி, ஆஞ்சநேயர் தனி சன்னதி, கிழக்கில்
நவகிரகங்கள், பைரவர், சூரியன்,
ஆலயம் கற்றளியாக அமைந்துள்ளது பொலிவுடன் உள்ளது.
சிறப்பான அமைப்பு.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026
ஆலயம் மிகவும் முறையான பராமரிப்பில் பூசைகளில் உள்ளது. நாட்டார்கள் அமைப்பு பராமரிப்புடன் நடத்தி வருகிறது.
எல்லா விஷேச கால நடைமுறைகளும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.
ஆலயம் வளாகம் பெரியதாக உள்ளதால்
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. பூசா காலங்களில் தரிசனம் செய்யலாம்.
ஆலயம் அருகில் வேறு எந்த கடைகள், குடியிருப்புகள் ஏதும் அருகில் இல்லை.
சிறப்பான ஆலயம், பக்தி உணர்வுடன் கூடிய அமைதி, இயற்கையான மரம், சோலை அமைப்புகளுடன் கூடியது. அற்புத உணர்வுகள் தரும் தலமாக விளங்குகிறது.
8.03.2026 ல் தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026
No comments:
Post a Comment