Tuesday, January 19, 2021

திருத்தலங்கள் தரிசனம்: 1 ஜனவரி, 2021

1.01.2021
I. காரைக்கால் -  கொல்லாபுரம் - கும்பகோணம் சாலை

1. கொல்லாபுரம் 2.கிளியனூர். 
3. நல்லாவூர் 4. புதூர் 5.திருக்கொளம்பியம் 

II. ஆடுதுறை-கும்பகோணம் சாலை

6. ஆடுதுறை 7. பானபுரி 8. திருபுவனம்

III. 
 I. சுவாமிமலை.
Il. திருவலஞ்சுழி 

lV. கும்பகோணம் - (வடகரை) கோனேரிராஜபுரம் வழி

1.சிவபுரம் 2. ஐவர்பாடி
3.இளந்துறை 4. மல்லாபுரம் 5. வயலூர்.

🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏
1. கொல்லாபுரம்: 
காரைக்கால் - பேரளம் பிரதான சாலையில் வரும் சிற்றூர். பஸ் நிறுத்தம் மிக அருகில். 
கிழக்கு பார்த்த சிவன், விஷ்ணு ஆலயம்.
வினாயகர், 
ஸ்ரீ அர்ச்சனேஸ்வரர், 
ஸ்ரீ வரதராஜபெருமாள்
ஸ்ரீ வினாயகர்
தனித்தனியாக இருப்பினும் ஏகமண்டபம்.. மேலும், சப்த கன்னியர், 
துர்க்கை, சன்டீஸ்வரர், கருடாழ்வார், ஹனுமார், மற்றும் தனி நவகிரகங்கள் மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஆலயம்.
புராதான, பழமையான ஆலயம் சிதைந்துவிட்டதால் புதிய ஆலயமாக கட்டப்பட்டு முறையான வழிபாட்டில் உள்ளது.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏
2. திருமெய்ஞானம் : 
காரைக்கால் கொல்லுமாங்குடி - கும்பகோணம் பிரதான சாலையில் கொல்லாபுரம் தாண்டி 5 கி.மீ. சென்றால் வரும் கிளியனூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கில் 500 மீட்டர் தூரம் சென்றால் கிழக்கு புரத்தில் உள்ள பழமையான ஆலயம்.
கிழக்குப் பார்த்த 3 நிலை ராஜகோபுரம். முன்மண்டபம் கொடிமரம் நந்தி சேர்த்தது.
உள் மண்டம், கருவறை முன் மண்படம் உள்ளிட்டது.
ஸ்ரீ ஞானபுரீஸ்வரர், ஸ்ரீ ஞானம்பிகை.
சுவாமி கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்குப் பார்த்தும், அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று பிரகாரம். தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்
இவ்வாலயத்தின் கருவரையில் உள்ள அம்மன் சிலையில் கிளி ஒன்று 2, 3 நாட்கள் தொடர்ந்து இருந்து வழிபட்டு, மிகுந்த பரபரப்பாக இருந்தது.
2003 ல் கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

3. நல்லாவூர்
காரைக்கால்- கும்பகோணம் பிரதான சாலையில் வரும் பாலையூர் கடந்து காஞ்சி வாய் என்ற பேருந்து நிறுத்தம் அருகில் தெற்கில் பிரியும் பாலம் கடந்து 500 மீ. தூரத்தில் கிழக்குப் பார்த்த ஆலயம். அருகில் பாபா ஆலயம் பிரசித்தமாக தற்போது உள்ளது.
தேவார வைப்பு தலம்.
ஸ்ரீ பசுபதீஸ்வரர் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் (பெரிய உருவம்), சௌந்தரநாயகி அணைத்தும் கிழக்கு நோக்கி தனிதனி சன்னதி. மேலும், வினாயகர், தெட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்களும் உள்ளது. வடகிழக்கு புறத்தில் சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் அமைந்துள்ளது.
நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

4.  S.புதூர். :
காரைக்கால் - கொல்லுமாங்குடி - கும்பகோணம் சாலையில் உள்ள முக்கிய ஊர். 
இவ்வூரின் வடக்கு புறத்தில், திருக் கொளம்பியம் சாத்தனூர், திருவாடுதுறை முதலிய ஊர்களும், தெற்கு புறத்தில் கோனேரிராஜபுரம் முதலிய ஊர்களும் அமைந்துள்ளன.

ஊரின் வடக்குப்புறம் பிரியும் சாலையில் 200 மீ.தூரத்தில் உள்ள மேற்கு பார்த்தசிவன் ஆலயம்
ஸ்ரீ சனத்குமரேஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி ஆலயம்.
தேவார வைப்புத்தலம்.
குரு மிகவும் பிரசித்தம்.
ஆலயம் அமைதியான சூழலில் பிரகாரத்தில் மரங்கள் சூழ அமைந்துள்ளது. முன் மண்டபம் வினாயகர், முருகன் சிறிய சன்னதிகள்.
அம்மன் தெற்கு பார்த்தும் அமைந்துள்ளர்.
கருவரை, முன் மண்டபத்துடன் உள்ளது. முன்மண்டபத்தின் நுழைவில், தலவரலாற்றுடன் அமைந்துள்ளது.
ஒரு பிரகாரம் மட்டுமே.
தெற்கு பிரகாரத்தில் அமைந்துள்ள குருவிற்கு விஷேச பூசைகள் உண்டு.
பராமரிப்பில் உள்ள ஆலயம்.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

5. திருக்கொளம்பியம்: 
1. காரைக்கால் - கும்பகோணம் வழித்தடத்தில் வரும் 
S.புதூர் என்ற ஊர் வந்து வடக்கில் செல்லும் சாலையில் 2 கி.மீ. தூரம்.

2. திருவாடுதுறை ஆலயத்திலிருந்து தெற்கில் செல்லும் சாலையில் 1கி.மீ வந்து வீர சோழன் ஆற்று பாலம் கடந்து மல்லபுரம் வந்து, அங் இருந்து தெற்கில் 1.5 கி.மீ வரலாம்.

திருக்கொளம்பியம் சிறிய கிராமம். 
ஸ்ரீகொளம்பிய நாதர், ஸ்ரீ கோகர்னேஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி புராதான,
பாடல் பெற்ற அருட்தலம்.
ஆலயம் முன் புன்னிய தீர்த்தம்.
 இராஜகோபுரம், கொடிமரம் தாண்டினால், தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதி தரிசனம். அடுத்து உள்ள உள் கோபுரம் கடந்தால் கற்றளி ஆலயம், முன்மண்டபம், 
உள் மண்டபம் கடந்தால் கருவறையில் கிழக்கு நோக்கிய அருள்தரும் சுவாமி வணங்கலாம்.
கருவரை சுற்றில், தட்சினாமூர்த்தி, பிரகாரம் விநாயகர், சண்டிகேஸ்வரர். தனிசன்னதி.
ஏராளமான கல்வெட்டுகள்.
அற்புத சிவாலயம். பழமை மாறாமல், அமைதியான சூழலில் உள்ள பாடல் பெற்ற தலம்.
பகலில் மெய்காவலர் உண்டு. தரிசிக்கலாம்.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏
 II. ஆடுதுறை-கும்பகோணம் சாலை

6. ஆடுதுறை/தென்குரங்காடுதுறை:

மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள ஊர். பேருந்து நிலையத்திலிருந்து தென்புறம் 700 மீ. தூரத்தில் அமைந்துள்ள கிழக்கு பார்த்த திருக்கோவில்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் முதலியவர்களால் பாடப்பெற்ற திருத்தலம்.
சுவாமி : ஆபத்சகாயேஸ்வரர், பவளக்கொடியம்மை
வாலி, வழிபட்ட இடம்.
அகத்தியர் வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.
மூன்று நிலை ராஜகோபுரம் கொடிமரம் முன் மன்டபம் தொடர்ந்து, அம்பாள் தெற்குநோக்கி தனி சன்னதி, சுவாமி தனி முன், நடு,மண்டபம், உள் மண்டம், கடந்து கருவறையில் கிழக்கு நோக்கி அருளுகிறார்.
கருவறை சுற்றில் அமைந்துள்ள கம்பீரமான அகத்தியர் சிறப்பு வழிபாடு. தொடர்ந்து பல்வேறு அழகிய அற்புத சிற்பங்கள் கருவறை சுவற்றின் மேல்பகுதியில் காணலாம். பிரகாரத்தில் தனி வினாயகர், சுப்ரமணியர், திருப்புகழ் பாடப்பெற்றது. துர்க்கை அம்மன் தனி சன்னதி அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு உண்டு.
துர்க்கை அருகில் காரைக்கால் அம்மையார் ஈசனை வழிபடும் தனி சிற்பம் கருவறை சுவற்றில் உள்ளது.
சண்டிகேஸ்வரர் தனி சன்னதி.
பக்தர்களால் சிறப்பாக வழிபடபெற்று வரும் ஆலயங்களில் இதுவும் உண்டு.
(01.01.2021).
#சிற்றூர்_ஆலய_தரிசனம்.
🙇🏼🙏🙇🏼🙏🙇🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏❤️🙏❤️🙏❤️🙏

7. வாணபுரம் : 
மயிலாடுதுறை - குத்தாலம் - ஆடுதுறை தாண்டி வரும் கோவிந்தபுரம் அருகில் தென்புறம் செல்லும் சாலை 1 கி.மீ.தூரத்தில் உள்ள ஊர்.
ஸ்ரீ பானபுரீஸ்வரர், ஸ்ரீ அபிராமி ஆலயம்.
சிறப்பான சிறிய ஆலயம். 
3 அடுக்கு இராஜகோபுரம் தாண்டி சிறிய முன் மண்டபம் அடுத்துள்ள நடுமண்டபத்திலிருந்து சுவாமி, அம்பாள் ஒரு சேர தரிசிக்கும் அமைப்பில் பெரிய அளவில் உள்ளது.
சுவாமி மேற்கு பார்த்தும் அம்பாள் தெற்குநோக்கியும் அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

ஒரே பிரகாரம் உள்ளது.
திருவாடுதுறை ஆதீனத்திற்குரிய ஆலயம்

பராமரிப்பில் உள்ள ஆலயம்.
(01.01.2021)

#சிற்றூர்ஆலயதரிசனம்
🙇🏼🙏🙇🏼🙏🙇🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
❤️🙏❤️🙏❤️🙏

8. திருபுவனம்: 
ஸ்ரீ கம்பகரேஸ்வரர் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள், ஸ்ரீ சரபேஸ்வரர்
அருள்தரும் ஆலயம்
சிற்ப அற்புதம். தமிழரின் பெருமை உணர்த்தும், வரலாற்று சிறப்புள்ள மிகப்பெரிய ஆலயம்.
கட்டாயம் தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயங்களில் ஒன்று.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள்
#சிற்றூர்ஆலயதரிசனம்
🙇🏼🙏🙇🏼🙏🙇🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

I.  சுவாமிமலை:
அற்புத முருகனின் ஆறுபடைவீடு.
01.01.2021

#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏https://m.facebook.com/story.php?story_fbid=4958343027574248&id=100001957991710

II.  திருவலஞ்சுழி :
கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதான சாலையில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் பேருந்து நிறுத்தம் அருகில் வடக்கில் பிரியும் சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ள மிகப் பெரிய கற்றளி ஆலயம். 
சுவாமி : கம்பகரேஸ்வரர்
அம்பாள்: பெரியநாயகி
தேவாரத்தலம்
திருப்புகழ் தலம்.
வலம்புரி விநாயகர்
சோழ அரசர் வணங்கிய காளி
ஏரகண்ட முனிவர்
துர்வாச முனிவர் வணங்கிய லிங்கங்கள்
கிழக்கு நோக்கிய தனி சனிஸ்வரர் 

இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால், வலதுபுரம் தீர்த்தக் குளம். குளக்கரையில் வினாயகர் தனி சன்னதி. அடுத்துள்ள அலங்கார அமைப்புடன் அமைந்துள்ள கோபுரம். 
அடுத்து வரும், கொடிமரம், அடுத்துள்ள தனி அழகிய கருங்கல் சிற்பங்கள் சிறப்புள்ள அழகு மன்டபம் அடுத்து உள்ள சிறிய சன்னதியில் வெள்ளை நுறையில் அமைந்துள்ள சிறிய பிரசித்திபெற்ற வலஞ்சுழி விநாயகர். 
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகள் ஆலயத்திற்கு தொடர்புள்ள புராணத்தில் வருபவர்.
இவ்வாலயம் மிகப்பெரியது.
அடுத்து வரும் அழகிய கோபுரம் தாண்டினால் நீண்ட வெளி, உள், நடு, மண்டபங்கள் தாண்டினால் வரும் கருவரையில் சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
கருவறை சுற்றில் விநாயகர், தெட்சினாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர். அருகில் ஏரகண்ட முனிவர். 
ஆலய தென்புறம் சுற்றில் ஏராளமான லிங்கங்கள். சப்தமாதர், விநாயகர், 
வடபுறம் முனிவர்கள் பூசித்த லிங்கங்கள்.
கருவறை சுற்றின் கிழக்குப் பகுதியில், தனி சனிஸ்வரர் சன்னதி.

சுவாமி ஆலயத்தின் தென்புறம் பெரியநாயகி அப்பாளுக்கு தனி ஆலயம்.
உள்ளே இடதுபுறம் அமைந்துள்ள புராதானமான காளி, மிக சக்தியுடையது. பெரிய கற்சிலை அமைப்பு. 
இன்னும் புராதான சிறப்பு மிக்க 
பல கலைச்செல்வங்களும் கல்வெட்டுகளும் ஆலயத்தில் உள்ளன.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள்
#சிற்றூர்ஆலயதரிசனம் 
🙇🙏🙇🙏🙇🙏
என்றும் அன்புடன்
 #சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏🔱🙇🙏🔱🙇🙏

lV. கும்பகோணம் -சிவபுரம் முதல்
 (வடகரை) கோனேரிராஜபுரம் வழி

1.சிவபுரம்
கும்பகோணம் கிழக்கு சுற்றுப்பாதை (Bye pass) வழியில் பிரதான சாலையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறிய ஊரில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம்.
ஸ்ரீ சிவகுருநாதஸ்வாமி
ஸ்ரீ சிங்காரவல்லி அம்மன்.
விஷ்ணு வெண்பன்றி அவதாரம் எடுத்து சுவாமியை வணங்கி அருள் பெற்ற வரலாறு தலம்.
பைரவர் தனி சன்னதி மிகவும் பிரசித்தமாக வழிபாடுகள் நடைபெறும் ஆலயம்.

அழகிய இராஜகோபுரம் கடந்து விசாலாமான பிரகாரத்தில் கொடிமரம், நந்தி தாண்டினால் பெரிய மண்டபம் 
அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னதி
அடுத்து சுவாமிக்கு உள் மண்டபம், நடுமண்டபம் தாண்டி கருவரையில் கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதி.
வெளிமண்ட சுவற்றில் பெருமான் பன்றி வடிவத்துடன் சென்று பூசித்த காட்சி கல்லில் வடிவமைத்துள்ளது.
தட்சினாமூர்த்தி, வினாயகர், சுப்பிரமணியர், மகாலெட்சுமி சண்டிகேஸ்வரர், தனி தனி சன்னதியுடன். அமைந்துள்ள கற்றளி ஆலயம். நகரத்தார் கட்டியது.
சில ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்றதால், ஆலயம் பளிச்சிட்டுள்ளது.

 சுற்று தூண்களை பாதுகாக்க, வேட்டி, துணிகளை சுற்றி வைத்துள்ளார்கள்.

பைரவர் தெற்கு நோக்கி தனியான சன்னதியில் அமைந்துள்ளார்.
ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

2. அய்யாவாடி / ஐவர் பாடி:
அய்யாவாடி என்று வழக்கில் உள்ள ஐவர்பாடி என்னும் சிற்றூர். 
இங்கு உள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ மகா மகாபிரிங்கா தேவி ஆலயம். ஆலயத்தின் ஒரு பகுதியில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.
1.திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் ஆலயம் வந்து, அங்கிருந்து தெற்கில் உள்ள நாச்சியார்கோயில் வழியில் உள்ள ஒரு சிற்றூர்.
2. கிழக்கில் அம்மன்குடி, தண்டந்தோட்டம், இளந்துறை, முதலிய தலங்களும்,
மேற்கில் சிவபுரம் என்னும் தேவார பாடல் பெற்ற தலங்களும் சூழ இயற்கையான அமைப்பில் உள்ள ஊர். தெற்கில் அரசலாறும், வடக்கில் நாட்டாரும் உள்ளன.
ஸ்ரீ மகா பிரித்தியங்கரா ஆலயம் மிக மிக சக்திவாய்ந்தது. நிகும்பல யாகம் அம்மாவாசைகளில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் வந்து வணங்குகிறார்கள்.
ஆலயம் மேலும் மேலும் சிறப்படைந்து புதிய கட்டுமானங்களில் பக்தர்கள் பங்குபெற்று வருகிறார்கள்.
தனியார் பராமரிப்பில் உள்ள ஆலயம்.

ஸ்ரீமகாப்ரத்யங்கரா தேவியை பஞ்சபாண்டவர்கள் ஐவர் யாகம் அமைத்து வழிபட்டு, இழந்தவற்றையெல்லாம் பெற்றதாக புராண வரலாறு சிறப்பு உண்டு.
ஸ்ரீ மகாப்ரத்யங்கரா தேவி வடக்கு நோக்கி அமர்ந்து அருள் தருகிறார். முன்புறம் நிகும்பல யாக மண்டபம் அமைத்துள்ளார்கள்.
அடுத்து அமைந்துள்ள
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவன் ஆலயமும் மிகவும் புராதனமானது. 
ஸ்ரீஅகத்தீஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
ஒரு பெரிய மண்டபத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, தனி விநாயகர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் நிறைந்த மிகப்பழமையான ஆலயம். 
ஸ்ரீ மகா ப்ரத்யங்கரா தேவி ஆலயத்துடன் இணைந்து நல்ல முறையில் பராமரித்து, பூசைகள் நடைபெற்று வருகிறது.
ஆலயம் அமைந்துள்ள பகுதியே, இயற்கை வளத்துடன் அமைந்துள்ளது.
பெருஞ்செல்வர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பல யாக பூசைகள் செய்து வருவதாலும், தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதாலும்,
ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

3. இளந்துறை
#தேவாரவைப்புத்தலம்.
வழி:
1. குடந்தை-காரைக்கால் சாலையில் வரும் திருநீலக்குடி (பாடல் பெற்ற தலம்) வந்து, தென்புறம் விட்டலூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால், அபிஷேகபுரம் - வடகரை சாலையில் மேற்கில் திரும்பி 1. கி.மீ.யில் வரும் சிறிய ஊர்.

2. திருநாகேஸ்வரம் - ஒப்பிலியப்பன் கோயில், தெற்கில் உள்ள அய்யாவாடி என்ற ஐவர்பாடி என்ற ஊரிலிருந்து கிழக்கில் வடகரை செல்லும் சாலையில்
 2.கி.மீயில் இளந்துறை செல்லலாம்.

இலந்தை வனத்தில் அமைந்த ஆலயம் என்பதால் இளந்துறை என்பது புராணம்.
சோழர் கால கற்கோவில்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கிழக்குப் பார்த்தும், ஸ்ரீ அபிராமி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
ஆலயம் முன்புறம் நீண்ட தீர்த்தக்குளம் உள்ளது. ஆலயம் முன்பு குளம் ஒட்டி ஆலயத்திற்கு இடதுபுரத்தில் ஒரு சிவலிங்க தனி சன்னதியும் உள்ளது.
ஆலயம் மூன்று அடுக்கு இராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்புறம் நந்தி கொடிமரம் தாண்டினால் அடுத்துவரும் முன் மண்டபம். தென்புறம் பார்த்த அம்பாள் சன்னதியும் உள்ளது. 
சுவாமி கிழக்குப் பார்த்த அமைப்பு,
நடுமண்டபமும், கருவரையும் உள்ளது.

சுற்றுப் பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி. மேற்கில் நீண்ட மண்டபத்தில் 
அழகிய பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்துள்ளர்கள். அடுத்துள்ள பிரதான விநாயகர் வாகன மண்டபம், முருகன், மகாலெட்சுமி சன்னதிகளும், வடக்குப்புறம் துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் சன்னதி, நவ கிரகங்கள் அமைந்துள்ளது.

செவ்வாய் தோஷம் போக்கும் தலம்,
கார்த்திகை கடை செவ்வாய் கிழமையில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பு.

ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#தேவாரவைப்புத்தலம்
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

4. மல்லபுரம் :
கோனேரிராஜபுரம் அருகில் உள்ள வடகரை யிலிருந்து மேற்கில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.

2. திருநீலக்குடி - கொத்துக் கோவில் வழியாகவும் வரலாம்.

சாலையிலேயே வரும் 
சிறிய ஆலயம். இராஜ கோபுரம் பதிலாக சுவாமி அம்பாள் காட்சி தரும் மண்டப முன் முகப்பு.

ஸ்ரீ விருபாஷிஸ்வரர் ஸ்ரீ பார்வதி அம்மன்.
ஓரே மண்டத்தில் சுவாமி அம்பாள் தரிசனம் செய்ய முடியும். 
சுற்று பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி, தனி வினாயகர், மற்றும் மேற்கு புற நீண்ட மண்டத்தில் முருகன் தனி சன்னதி, மகாலட்சுமி,
சண்டிகேஸ்வரர், தெற்கு பார்த்து பெரிய பைரவர் தனி சன்னதிகள் உள்ளன.

துர்க்கை அழகுடன் மிக கம்பீர அமைப்பு சிறப்பு.

ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏
4. மல்லபுரம் :
கோனேரிராஜபுரம் அருகில் உள்ள வடகரை யிலிருந்து மேற்கில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.

சாலையிலேயே வரும்
சிறிய ஆலயம். இராஜ கோபுரம் பதிலாக சுவாமி அம்பாள் காட்சி தரும் மண்டப முன் முகப்பு.

ஸ்ரீ விருபாஷிஸ்வரர் ஸ்ரீ பார்வதி அம்மன்.
ஓரே மண்டத்தில் சுவாமி அம்பாள் தரிசனம் செய்ய முடியும்.
சுற்று பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி, தனி வினாயகர், மற்றும் மேற்கு புற நீண்ட மண்டத்தில் முருகன் தனி சன்னதி, மகாலட்சுமி,
சண்டிகேஸ்வரர், தெற்கு பார்த்து பெரிய பைரவர் தனி சன்னதிகள் உள்ளன.

துர்க்கை அழகுடன் மிக கம்பீர அமைப்பு சிறப்பு.

ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

5. வயலூர் :
கோனேரிராஜபுரத்திலிருந்து வடகரை வந்து மேற்கில் 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள சிற்றூர். சாலையில் அமைந்துள்ள தனி பெரிய விநாயகர் ஆலயத்திலிருந்து தெற்கில் பிரியும் சாலையில் ஊர் வந்தால் கிழக்குப் பார்த்த ஒரு சிவன் ஆலயம், மற்றும் ஒரு பெருமாள் ஆலயமும் இணைந்துள்ளது. முன்புறம் பெரிய தீர்த்தக்குளம் உள்ளது.
ஸ்ரீ கார்கோடஸ்வரர்.
 ஸ்ரீ மங்களாம்பிகை
சிறிய முன்வாசல் கோபுரம் தாண்டி உள்ளே நீண்ட மண்டபம் அடுத்து தென்புறம் பார்த்து அம்மன் சன்னதி, தனி கருவறை மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சுவாமியும் உள்ளனர்.
சுற்றில் தனி வினாயகர்.
கருவறை தென்புறம் தெட்சினாமூர்த்திக்கு சற்று முன்பாக கார்கோடகர் சுவாமியை வழிபடும் சிற்பம் அமைந்துள்ளது. 
முருகன் துர்க்கை, சன்டிகேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது. சுவாமி ஆலயம் ஓட்டியே, வடபுறத்தில்
வரதராஜ பெருமாள் தனியாக ஒரு ஆலயமும் உள்ளது.
மிகப்புராதானமான ஆலயம் இருந்து சிறைந்து போய், தற்போது புதிதாக அழகாக அமைத்துள்ளனர்.
ஆலய சிறப்பை இவ்வூர் சார்ந்த மிக உயர்ந்த நிலையில் தற்போது உள்ள ஆகம பண்டிதர் எழுதிய ஆலய சிறப்பை இவ்வாலயத்திலேயே வைத்துள்ளனர்.
மிக அருகாமையில் சிவாச்சாரியார் உள்ளார். உள்ளன்போடு அனுகுகிறார்.
ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...