Showing posts with label முக்திநாத்திருப்பயணம் - 24 #Nepal Yatra. Show all posts
Showing posts with label முக்திநாத்திருப்பயணம் - 24 #Nepal Yatra. Show all posts

Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 10 Nepal Yatra 20.04.2024 - 4.5.2024

#முக்திநாத்திருப்பயணம் 
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024
10
#ஹனுமன் ஆலயம்
சக்ராகாட், A. நவல்பூர்

✨சுனோலியிலிருந்து 24.4.2024 அன்று காலையில் ஹோட்டல் மானசரோவரிலிருந்து காலை உணவு முடித்துக் கொண்டு, காட்மண்டு செல்லத் தொடங்கினோம்.

✨காட்மண்ட் செல்லும் மலைப்பாதை வழியில் திரிசூலி ஆறு வளைந்து நெளிந்து  வழி எங்கும் அற்புதமாக உள்ளது.

🌟நவல்ப்பூர் என்ற இடத்தில் ஆறு பல துணை ஆறுகளை இணைத்து சக்கரமாக வளைந்து செல்லும் கரையில் ஒரு சிறிய அழகிய ஹனுமன் ஆலயம். இது ஒரு சங்கமத்துரை என்பதால், புன்னிய மிக்க இடமாக உள்ளது. 
ஒரு புராதான சிறிய சிவன் ஆலயம் மற்றும்,
 புதிதாக ஒரு ஹனுமன் ஆலயமும் உள்ளது.

🛕ஶ்ரீ ஹனுமான் ஆலயம்

திரிசூலி நதியின் கரையில் 
ஶ்ரீ ஹனுமான் மந்தீர் சமீதி, சக்ரகாட், செயற்குழுவின்முயற்சியால், பத்தர்கள் தானங்கள், மற்றும் நேப்பாள அரசின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் நிதி உதவிப் பெற்று புதிய ஆலயம், சிறப்பாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.  
மேலும், பக்தர்கள் முயற்சியால், ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டுவருகிறது. பூசைகள், ஹனுமந் ஜெயந்தி அதிவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.

24.02.24 #சுப்ராம்ஆலயதரிசனம் 
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A
🙏🏻🕊️🌏🇮🇳🙏🏼

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - 9 #Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#சுனோலி
#முக்திநாத்திருப்பயணம் 
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024
9.
சுனோலி

பயண அனுபவக் குறிப்புகள்

⛳சோனாலி என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மஹராஜ்கஞ்ச் நகருக்கு அருகிலுள்ள ஒரு நகரம். 

⛳இது இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது மற்றும் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே நன்கு அறியப்பட்ட மற்றும் மிகவும் பிரபலமான போக்குவரத்து புள்ளியாகும்.

🌏இந்த இடத்தில் நமது ஆதர்கார்டு Check செய்தும், நமது வாகனங்களை சோதனை செய்தும், நேப்பாள் - இந்திய எல்லைகளை கடக்க அனுமதிக்கின்றனர். கடவுச்சீட்டு passport , விசா முதலியவை தேவையில்லை.

💫பொதுவாக நேப்பாள் சுற்றுலாவில், கோரக்பூர், லக்னோ, இவ் ஓர் வழியாக வரும் போது இங்கு  நேப்பாள் பகுதியில்  உள்ள ஹோட்டலில் வந்து தங்கி நேப்பால் பயணம் தொடங்குகிறார்கள்.

⛳இவ்வூர் அருகில் புத்தர் பிறந்த பூமியான லும்பினி என்ற பிரபலமான ஆன்மீக சுற்றுலா தலம் உள்ளது. நாங்கள் சென்றமுறை முக்திநாத் பயணம் சென்ற போது சென்று வந்தோம்.

🏢இந்த முறை சுனோலி நேப்பால் எல்லையில் உள்ள Manasarovar என்ற Hotel லில் இரவில் தங்கி 24.04.24 அன்று காலை உணவு முடித்துவிட்டு, நேப்பால் புறப்பட்டோம்.
🌟✨🌟

🙏🏻🕊️🌏🇮🇳🙏🏼
23.04.2024 மீள் தரிசனம்

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - 8 Nepal Yatra 21.04.2024 - 4.5.2024

#கோரக்ப்பூர்
8
பயண அனுபவக் குறிப்புகள்.

🕊️ 23.04.24 அன்று, அயோத்தியிலிருந்து காலை உணவு முடித்துக்கொண்டு மதியம் கோரக்பூர் வந்து சேர்ந்தோம்.

🛕கோரக்கநாதர் ஆலயம்
மற்றும் மடம் (Gorakhnath Mutt).

 இந்து சமயத்தில் நாத சைவம் பிரிவை நிறுவிய மச்சேயந்திரநாதர் கோரக்கநாதர் மடத்தை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் நிறுவினார்.

🎪 இம்மடத்தின் பூசகர்களாக பிராமணர் அல்லாதோர் உள்ளனர்.
18 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, 12-ஆம் நூற்றாண்டில் கோரக்கர் மடம் மற்றும் கோயில் நிறுவப்பட்டது. இம்மடத்தில் சித்தரான கோரக்கநாதரின் சமாதி உள்ளது.

 🎪இம்மடம் கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், தராய் பகுதியில் உள்ள கோரக்பூர் எனும் நகரத்தில் உள்ளது.

🎪 துறவியான யோகி ஆதித்தியநாத் தற்போது இம்மடத்தின் தலைவராக 14 செப்டம்பர் 2014-இல் பொறுப்பேற்றார்.

🎪கோரக்கநாதர் மடம் சார்பில், நேபாள நாட்டின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள கோரக்கநாதர் மடத்தில் கோரக்கநாதருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

🎪மிகப்பெரிய மடவளாகம். வெளிப்புறத்தில் தனியாக வாகன நிறுத்த இடவசதிகள் உள்ளது.

🎪சிறு குறு கடைகளும் நிறைந்த வணிக வளாகப் பகுதி அருகாமையில் உள்ளது.

🎪ஆலயப் பகுதி முழுவதும் சுற்று சுவருடன், 4 புறங்களிலும் தனித்தனி வாசல் பகுதிகள் உள்ளது. கிழக்கு நுழைவாயிலே பிராதானமானது.
ஆலயம் உள்ளே, பொருட்கள், காலணிகள் வைக்கும் இடம் தனியாக உள்ளது. எதற்கும் கட்டணம் கிடையாது. கைப்பேசிகள் அனுமதிக்கப்படுகின்றன.

🛕ஆலயவளாகம்

🛕மத்தியப் பகுதியில் கிழக்கு நோக்கிய வெள்ளை பளிங்கினால் கட்டப்பட்டுள்ள ஆலயம். நீண்ட முன்மண்டபம். மூன்று தனித்தனி கருவரைகள் சன்னதிகள் கொண்டது.

🛕ஆலயம் முன் பகுதியில் தென்புறம் சிறிய குளம் உள்ளது.

🛕பிரதான ஆலயத்தின் முன்பகுதியில் வடபுறம் ஒரு யாக குண்டம் மண்டபத்துடன் உள்ளது.
அடுத்து இந்து மதத்தின் வேராகவிளங்கும் சித்தர்கள், ஞானிகள், துறவிகள், மிகப்பிரபலமான பக்திமான்கள், பண்டிதர்கள், முழு சிலைவடிவில் பெரிய மண்டபத்தில் அமைத்துள்ளர்கள் .

🛕வடபகுதியில், மேலும், சற்று உயரமான பகுதியில், தனித்தனி சன்னதிகளில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கும் கருவரை அமைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றன.

🛕ஆலயம் பின்புறம், மிகப்பெரிய மாநாட்டுக் கூடம் / தியான மண்டபம் / கலைக்கூடம் அமைந்துள்ளது.

🛕தெற்குப் பகுதியில் மடத்தின் அலுவலகம், மற்றும் துறவிகளின் இருப்பிடம், வாழ்விடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

🛕மடத்தின் முதன்மை துறவியான திரு யோகி ஆதித்திய நாதர் மாநில முதல்வராகவும் உள்ளதால், காவல் கட்டுப்பாடுகள் இப்பகுதியில் உள்ளன.

🛕பொதுவாக, தெய்வீக அமைதி நிறைந்த வளாகமாக உள்ளது.

🛕ஆலய வளாகத்தின் வடக்குப் புறத்தில் பொது மண்டபம், சமையல் கூடம், உணவுக்கூடம் உள்ளது.

🛕உள்ளூர் வெளியூர் பொதுமக்கள்
தங்கள்  திருமணம் முதலிய பல குடும்ப விழாக்களை இங்கு வந்து
நடத்திக்கொள்கிறார்கள்.

🛕சுனோலி வழியாக நேப்பாள் செல்பவர்கள், இங்கு வரத்தவறுவதில்லை.

🛕ஏற்கனவே, 5 ஆண்டுகளுக்கு முன்பு முக்திநாத் சென்ற போதும் 
மீண்டும் வரும் போதும் இந்த ஆலயம் தரிசித்து சென்றோம்.

🛕இந்த முறை, நாங்கள் இங்கு ஆலய தரிசனம் முடிந்து, மதிய உணவும் முடித்துக் கொண்டு சுனோலி புறப்பட்டோம்.

🙏🏻🕊️🌏🇮🇳🙏🏼
23.04.2024 மீள் தரிசனம்

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 21.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

முக்திநாத்திருப்பயணம் - 6 #Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#Hanuman Ghari
#அயோத்தி
22.04.2024
6.

#பயணஅனுபவக்குறிப்புகள்

அயோத்தியில் உள்ள மிக முக்கிய ஆலயம்
ஶ்ரீ ஹனுமான் ஆலயம் தரிசித்து ஸ்ரீ ராம் ஆலயம் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள ஆலயம்.

நாங்கள் இந்த முறை (இன்று 22.04.24) ராமர் ஆலயம் சென்று தரிசித்துப்பின் இந்த ஹனுமன் ஆலயம் தரிசித்தோம்.
மீள் தரிசனம்

🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕
[  2024 மார்ச் மாதம் தரிசனம் செய்து வந்த போது உள்ள பதிவு - மீள்.] 
🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕

🙏🏻
💥அனுமன் ஆலயம்:
ஹனுமான் ஆலயம்

✨லால் செளக்கிலிருந்து  Rs.20/- கொடுத்தால், மின் Auto மூலம், அனுமன் கோயில் வளாகம் மிக அருகில் இறக்கி விடுகிறார்கள். 

✨அங்கிருந்து நடை தூரத்தில் அனுமன் ஆலயம் உள்ளது.

✨சிலர் ஷேர் ஆட்டோ மூலமாகவும் Rs.25 / - (ஒரு நபருக்கு) கொடுத்து ஒரு சுற்றுப்பாதையில் அனுமன் ஆலயம் மிக அருகில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

🌟மகாராஜாவிக்ரமாதித்தியாவால் கட்டப்பட்ட ஆலயம். ஆலயம் அழிக்கப்பட்டு மக்களால் ஹனுமன் திலா என்று அழைக்கப்பட்ட இடம், நவாப் காலத்தில், டி கைத் ராய் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது.  

🌟தற்போது ஹனுமாங்ஹரி என்று உள்ளது.

🌟இராமர் ஆலயம் அருகில் உள்ள இந்த ஆலயத்தை  ராமர் ஆலயம் தரிசிக்கும் முன் அவசியம் இதையும்  தரிசிக்க வேண்டும் என்று. கூறுகிறார்கள். 

🌟அனுமன் ஆலயம் உயரமான இடத்தில் உள்ளது.   இந்த ஆலயம் முதலில் 30 படிகள் மேலே ஏறிய பிறகு முன் மண்டபம் ஒன்று உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒரு 10-15 படிகள் மேல் ஏறினால் ஆலயம் கருவறை மண்டபம்  அடைந்து விடலாம்.

🌟ஆலயம் ஒரு பெரிய மண்டப அமைப்புடன் உள்ளது.  நடுவில் கருவறை அதில் சிறிய அனுமன் சிலை உள்ளது.  பின்புறம் ராமர், பட்டாபிஷேகம்  உருவம் உள்ள சிலைகள் வெள்ளி கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

🌟இந்த கருவறை மண்டபத்தை ஒட்டிய பிரகார மண்டபத்திலும் பூசைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது.

🌟அயோத்தியில்,  மிக மிக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த இடத்தில் தான் கூடுகிறார்கள்.

🌟காவல்துறை மிக அருமையாக, கண்ணியத்துடனும், மிகக் கட்டுப்பாடுடனும் வழிநடத்தினார்கள்.

🌟நமக்கு அனுமன் கோயில் சென்று தரிசனம் செய்யும் நேரம் சற்று அதிகமாக உள்ளது.   மேலும் அனுமன் ஆலயம் அனைத்து பக்தர்களும் வந்து செல்வதாலும் ஒரு நெருக்கடியான இடத்தில் இருப்பதாலும், கூட்டம் அதிகம் இருந்தவாரே உள்ளது.

 🌟ஹனுமன் ஆலயத்தை தரிசித்து பின் வெளிவருவதற்கு தனி வழி உள்ளது. அதன் வழி நாம் வெளியிலும் வரலாம். அதன் வழியாக கூட்ட நேரங்களில் பக்தர்கள் மற்றும் சிறப்பு பூசை செல்பவர்களும், VIP களும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.

 🌟ஹனுமன் ஆலயம் தரிசித்து பிறகு அந்த ஆலயத்தின் பின்புறம்  வெளியே செல்ல ஒரு சிறிய வழி உள்ளது. அதன் வழியாக சென்று ராமர் கோயில் செல்லும் பாதையை அடைந்து விடலாம்.
🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕

22.04.24 மீள் தரிசனம்

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - 2 Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#நைமிசாரன்யம் 
சக்கர தீர்த்தம்
2.
#நைமிசாரண்யம்
22.04.2024

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் செங்கல்பட்டு மாவட்டம்

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும...