Showing posts with label முக்திநாத்திருப்பயணம் - 24 #NepalYatra. Show all posts
Showing posts with label முக்திநாத்திருப்பயணம் - 24 #NepalYatra. Show all posts

Thursday, June 27, 2024

சீதாகுண்ட் #கயா#முக்திநாத்திருப்பயணம் - 36 #NepalYatra 20.04.2024 - 4.5.24

#சீதாகுண்ட் 
#கயா
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
36
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்
01.05.2024
சீதா குண்ட்.

🌼இந்த இடம் பல்குனி நதியின் எதிர் கரையில் உள்ளது.
🏵️சீதை தன் தகப்பனாருக்கு, தர்ப்பணம் கொடுத்த இடம்.
🌼இந்தக்கரையிலும், பலவித ஆலயங்கள், மண்டபங்கள். அழகிய முறையில் படித்துறை பகுதிகள் கட்டப்பட்டுள்ளன.

🏵️பொதுவாக கயாவில் புதிய எழுச்சிமிக்க
புனரமைப்பு கட்டட வேலைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

🌼சீதாகுண்ட் அதிக கூட்டமில்லாத பகுதி. மிக மிக அமைதியான . இடம். நீர் இல்லாமல் இருந்தாலும் அழகிய கரையியோரம் . எதிர்கரையில் உள்ள விஷ்ணு ஆலய பகுதிகள் தூரத்தில் தெரியும்.

🏵️இந்த இடம், பார்த்து விட்டு, சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள மங்கள கௌரி ஆலயம் சென்றோம்.

#மீள்தரிசனம்
நன்றி🙏🏼 1.05.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் 33 -#NepalYatra 20.04.2024 - 4.5.24

#DANUSHDHAM
#ஜனக்பூர் 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
33
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.

30.04.24 தரிசனம்
🎋தனுஷாதம் என்பது தென்கிழக்கு நேபாளத்தின் மாகாணம் எண். 2 இல் உள்ள தனுஷா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் .

🚍இந்த இடம் ஜனக்பூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் தனுஷதம் மற்றும் ஜனக்பூரை இணைக்கும் கான்கிரீட் சாலை உள்ளது. கார், மோட்டார் சைக்கிள், பஸ் மற்றும் பலவற்றில் இதை அடையலாம். ஜனக்பூரிலிருந்து பேருந்தில் பயணம் செய்ய 45 நிமிடங்கள் ஆகும்.

 🛕இது நேபாளத்தில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலமாகும். சீதையின் சுயம்வரத்தின் போது ராமரால் உடைக்கப்பட்ட சிவ தனுஷின் (சிவ கடவுளின் வில்) ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதனால்தான் இதற்கு தனுஷதம் என்று பெயர்.

🏵️இப்போது மீதமுள்ள வில் பகுதியைச் சுற்றிலும் கோயில் உள்ளது 

🏵️உலகம் முழுவதிலிமிருந்து இந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். 

🏵️ஒவ்வொரு ஆண்டும் மகர சக்ராந்தியின் போதும் ஒரு திருவிழா நடைபெறுகிறது. மற்றும் பக்தர்கள். கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

புராணம்

💥சத்தியயுகத்தில், சிவபெருமான், திரிபுரா சூரன் என்ற அசூரனை வில்லால் அடித்து வீழ்த்தினார். மகரிஷி தட்சிசி என்ற முனிவரால் பங்களிக்கப்பட்ட மரத்தினால் இந்த வில் உருவாக்கப்பட்டிருந்தது.

💥இந்தவில்லானது பரசுராம முனிவரிடம் கொடுத்து தசரத மகா மன்னனிடம் சேர்ப்பித்து விடுமாறு சிவன் கட்டளையிடுகிறார். 

💥 சிவதனுசு என்ற இந்த வில்லானது தசரத சக்கரவர்த்தியிடம் இருந்து வந்தது.

💥 தசரதர் ஆட்சியில் ஒரு முறை,
மிதுலா ராஜ்யத்தில், தொடர்ந்து மழையின்றி வரட்சி ஏற்பட்ட போது, இறையுணர்வு அறிவுரையைப் பின்பற்றி ஜனகமன்னர் பூமியை கலப்பையால் உழுவ, சீதாமாத குழந்தையாகக் கிடைக்கப் பெற்றாள். 

💥சிவதனுசுவை மாத சீதாவழி பட்டுவர,
மிதுவைக்கு ஸ்ரீ ராமர் வந்த போது, தனுசுவை எடுத்து வளைத்த போது, அது மூன்று துண்டாகியது.

💥வில்லின் வலதுபாகம் ஒரு துண்டு தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடியிலும்,
இடது இடதுபகுதி ஜனக்பூரில் உள்ள தனூஷ் சாகர் என்ற குளத்திலும்,
நடுப்பகுதி தனுஷ் தாம் என்ற இந்த இடத்திலும் விழுந்ததாக புராணம் கூறுகிறது.

💥மேலும், அந்தவில்லின் நடுப்பகுதியானது பிப்பல் (FICUS RELIGIOSA) என்ற மிகப் பழைமையான மரம் (550 வருடம்) உள்ளது. 
ஒவ்வொரு 5,7ம் ஆண்டுகளில், கொட்டை வளருகிறது. மேலும், இந்த இடத்தில் ஒரு குளம் உள்ளது. அதை PATAL GANGA என்று அழைக்கிறார்கள்.

ஆலய சிறப்பு

💥விவசாயிகள் விவசாய அறுவடையை இந்த குளத்தின் நீர் கொண்டு மதிப்பிடுகின்ற வழக்கம் உள்ளது.

💥 தனுஷ்தாம் ஆலயம். பிரதான சாலை ஒட்டி உள்ளது. ராமர் வில்லை ஏந்திக்கொண்டிருக்கும் உருவம் உள்ள நுழைவுவாயில் உள்ளது.

💥ஆலயம் நீள் சதுரம் அமைப்பில் உள்ளது. உள்ளே உள்ள பிரதான பிப்பல் மரத்தின் அடிப்பகுதியே கருவரையாக உள்ளது. இந்த மரத்தின் வேர்பகுதி கல்லாகி மாறி துண்டு துண்டாகக்காணப்படுகிறது.
இதுவே சிவதனுசுவின் பாகமாகக் கருதப்பட்டு பூசைகள் நடைபெறுகிறது. 

💥மரத்தின் அடிப்பகுதியில் உள்ள கற்களுக்கு சிவப்பு ஆடை போர்த்தி, பூசை செய்து வணங்கி வருகிறார்கள்.
கருவரை உள் சுவரில் ஆலய புராதானக் கதை எழுதப்பட்டுள்ளது.

💥மரத்தின் வேர்பகுதி கல்லாக மாறிவிட்டதால் அந்த கல் காணப்படும் நீளத்தில் பாதுகாப்பு வரிசையும் கட்டப்பட்டு உள்ளது.

💥ஆலயத்தின் அடுத்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு சின்ன மண்டபங்களில் சுவாமி சிலைகள் அனுமன், முதலியவைகள் வைத்து வணங்கப்படுகின்றன.

💥முழு வளாகப் பகுதியும் தூய்மையாகவும், இடைவெளிகள் கொண்டதாகவும் உள்ளது.

🎋தனுஷ்தாம் பார்த்துவிட்டு மாதா சீதா அவதாரம் செய்த சீதாமரி சென்று அடைந்தோம். 

நன்றி🙏🏼 30.04.2024

#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்



முக்திநாத்திருப்பயணம் 28 -#NepalYatra 20.04.2024 - 4.5.2428

#PurusottamTemple
#ஜனக்பூர் 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
28
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
Visited on 29.4.2024 

29.04.24 தரிசனம்

#PurusottamTemple
புதிய ஆலயம். தனியார் Trust மூலம் பராமரிப்பில் உள்ள ஆலயம்.

எதிரில் ஒரு குளம் உள்ளது. இவ்வூரில் 71 குளங்கள் உண்டு என்று கூறுகிறார்கள்.
புருஷோத்தமன் ஆலயம்.

சிவபூசை செய்யும் ராமர், 10 தலைகளில் அனுமன், பெருமாள் அவதாரங்கள். முதலியன. இன்னும் சில சன்னதிகளில், பலவித வடிவங்களில் சுதைவேலைப்பாடுகளில் கண்காட்சி போல வைத்துள்ளார்கள்.

நன்றி🙏🏼 29.04.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் 24 NepalYatra 20.04.2024 - 4.5.2424

#ஜனக்பூர்
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
24
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
Visited on 29.4.2024 
ஜனகர் மாளிகை. 

சீதா. வளர்ந்த இடம்,
ஜனகர் மாளிகையில் கருவரையில் வெள்ளியால் உள்ள சிலைகள், ஜனகர் - ராம் - சீதா - மற்றும் அனைத்து தெய்வ சிலைகள் சிறிய அளவில் உள்ளன.
கருவரை மண்டபம் பின்புறம் ராமர் - சீதா வெள்ளி சிறு சிலைகளும், சாலக்கிராம கற்கள் மிக அதிகமாக வைத்தும் பூசை நடைபெறுகிறது.
ஒரு புறம் மூலையில் சிறிய கண்காட்சியும் (கட்டனத்துடன் அமைத்துள்ளனர்)
மிகப் பிரமாண்டமான தோற்றம் கொண்டது. மாலையில் விளக்கு ஒளியில் மிக பிரமாதமான அழகிய முறையில் வண்ணங்களில் ஜொலிக்கின்றது.

அருகில்திருமணம் நடந்த மண்டபம் உள்ளது. (அதற்குத்தனி கட்டணம் உண்டு)

நன்றி🙏🏼 29.04.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Visited on 29.4.2024

முக்திநாத்திருப்பயணம் - 21NepalYatra 20.04.2024 - 4.5.2421

#FEWALAKE _ #Pokhara 
#ஃபெவா ஏரி , #ஃபெவா தால்

#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
21

🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
28.04.2024

💥போக்ரா நகரம் ஒரு அருமையான சுற்றுலா பகுதி.

💧28.04.2024 அன்று ஜோம்ஸம் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் போக்ரா வந்து சேர்ந்தோம்.

🌄போக்ரா மிக முக்கிய நகர். நேப்பாள தேசத்தின் இரண்டாவது பெருநகர்.
பொதுவாக, முக்திநாத் பயணத்தில்,
இங்கு வந்து தங்கி இங்கிருந்து, சிற்றூர்தி அல்லது Helicopter மூலம் ஜோம்சம் சென்று அங்கிருந்து ஜீப் / சிற்றூர்தி மூலம் முக்திநாத் அடிவாரம் செல்ல வேண்டும். அங்கிருந்து நடந்தோ, டோலி அல்லது  குதிரை மூலம் ஆலயம் செல்ல வேண்டும்.

⚡தரிசனம் முடிந்து மீண்டும் ஜோம்சம் வந்து இரவு தங்கி மறுநாள் புறப்பட்டு போக்ரா வருவார்கள். இங்குள்ள சில ஆலயங்கள் சுற்றுலா இடங்கள் கண்டு களித்துப்பின் செல்வார்கள்.

🏵️மேலும், போக்ராவில், ஏராளமான தங்கும் இடங்கள் இருப்பதால், முதலில் இங்கு வந்து தங்கி பின் முக்திநாத் சென்றவர உள்ள பயணத்திற்கு வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பயணப் பொருட்களை இங்கேயே வைத்து விடுகிறார்கள்.

🌺முக்திநாத் தரிசனம் முடிந்து வந்து போக்ரா நகர் பகுதியில் மற்ற இடங்களை சுற்றிப் பார்த்த பின் செல்கிறார்கள்.

🏵️2023 ல் முக்கிநாத் பயணத்தின் போதும் இங்குள்ள இடங்களை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த முறையும் மீண்டும் இவ்விடங்களை புதிய நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து அனுபவித்தோம்.

🌸இவ்விடங்களின் சிறப்புகளை வலைதளத்தில் உள்ள சில குறிப்புகளுடன், எமது அனுபவக் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

🏞️ஃபெவா ஏரி , ஃபெவா தால் அல்லது ஃபேவா ஏரி  என்பது நேபாளத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரியாகும்.

🏞️ இது முன்பு போக்ரா பள்ளத்தாக்கின் தெற்கில் அமைந்துள்ள பைடம் தால் என்று அழைக்கப்பட்டது, இது பொக்ரா நகரம் மற்றும் சாரங்கோட் மற்றும் கஸ்கிகோட்டின் சில பகுதிகளை உள்ளடக்கியது .

🏞️இது நேபாளத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும் மற்றும் நேபாளத்தின் நீர்நிலைகளுடன் ஒப்பிடுகையில் ராரா ஏரிக்குப் பிறகு கண்டகி மாகாணத்தில் மிகப்பெரியது .

🏞️ இது நேபாளத்தில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் பார்வையிடப்பட்ட ஏரியாகும். ஃபெவா ஏரி 742 மீ (2,434 அடி) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 5.7 கிமீ 2 (2.2 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

⚡இதன் சராசரி ஆழம் சுமார் 8.6 மீ (28 அடி) மற்றும் அதிகபட்ச ஆழம் 24 மீ (79 அடி) ஆகும்.

💧 ஏரியின் அதிகபட்ச நீர் கொள்ளளவு தோராயமாக 43,000,000 கன மீட்டர் (35,000 ஏக்கர்⋅அடி) ஆகும்.

☄️வடக்கில் உள்ள அன்னபூர்ணா மலைத்தொடர் ஏரியிலிருந்து சுமார் 28 கிமீ (நேரியல் தூரம்) தொலைவில் உள்ளது . மச்சாபுச்ரே மலை மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள அன்னபூர்ணா மற்றும் தௌலகிரி மலைகளின் மற்ற மலை சிகரங்களின் பிரதிபலிப்பிற்காகவும் இந்த ஏரி பிரபலமானது .

🌠ஏரி வண்டல்களின் பகுப்பாய்வு அதன் வயது கி.மு. 12640 - 12025 என்பதை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் ஃபெவா ஏரி கிமு 13000 இல் உருவானதாகக் கருதப்படுகிறது.

🌄ஏரி பொருளாதாரம்
ஃபெவா ஏரி மற்றும் நீர் விளையாட்டுகள் பொக்காரா நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும், மேலும் ஏரியின் வடக்கு கரையானது சுற்றுலா மாவட்டமாக உருவாகியுள்ளது.

🏝️பொதுவாக லேக்சைட் என்று அழைக்கப்படும் , ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்கின்றன.

🏖️ ஃபெவா ஏரியின் கடையின் நீர் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. ஃபெவா பவர் ஹவுஸ் ஃபெவா ஏரியின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் 1.5 கிமீ (0.93 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.  ஏரியின் ஒரு பகுதி வணிக கூண்டு மீன்வளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

💫பைடம் என்பது லேக்சைட் என்றும் அழைக்கப்படும் ஃபெவா ஏரியின் கிழக்குக் கரையாகும். இந்த பகுதியில் ஹோட்டல்கள், லாட்ஜ்கள், உணவகங்கள், புத்தகக்கடைகள் மற்றும் நினைவு பரிசு கடைகள் ஆகியவற்றின் முடிவில்லாத துண்டுகள் உள்ளன. இந்தப் பகுதி நேபாளத்தின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாகும். இது போகாராவுக்குச் செல்லும் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.

✨ஏரிக்கு சென்று சுற்றிப் பார்க்க போட் கட்டணம் உண்டு.

தால் பராஹி கோயில்

🛕ஃபெவா ஏரியின் மையத்தில் அமைந்துள்ள தால் பராஹி கோயில் , போகாராவின் மிக முக்கியமான மத நினைவுச்சின்னமாகும். இந்த இரண்டு அடுக்கு பகோடா விஷ்ணு எனப்படும் இந்துக் கடவுள்களில் பராகி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பொதுவாக சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

💥ஏரியில் நடுவில் ஒரு புறத்தில் அமைந்துள்ள இயற்கையான மிகச்சிறிய தீவுப்பகுதி. முக்கிய ஆலயமாக இது விளங்குகிறது. பாறை போன்ற அமைப்புடன் சில மரங்களும் உள்ளன.

✨விநாயகர், அனுமான், பைரவர், முதலிய தெய்வங்களுக்கு சிறிய சிறிய சன்னதிகளும் உண்டு
நாங்கள் சென்ற போது அதிக பக்தர்கள் கூட்டம் இல்லை.  படகு கட்டணம் செலுத்தி கிழக்கு பகுதியில் இருந்து சென்று வந்தோம்.

✨ஏரியில் தனியாக சென்றும் உலா வரலாம்.
மிகப்பெரிய ஏரி.

🌸கரையில் ஒரு சிறிய சிவன் ஆலயமும்
உள்ளது.

🌼கரையில் சிறிய உணவகம், மற்றும் போட் அலுவலகம், Ticket Counter உள்ளது. சிறுசிறு கடைகளும் உண்டு. சற்று பெரிய Bazzar நடை தூரத்தில் உள்ளது.

நன்றி🙏🏼
28.04.2024
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/4moRzuhDT65yWihv/?mibextid=Nif5oz


முக்திநாத்திருப்பயணம் - 20 #NepalYatra 20.04.2024 - 4.5.24

Sri Venkatesh mukti Narayan temple
SALIGRAM Musiam temple 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
20

Visited on 28.4.24 Sri Venkatesh mukti Narayan temple. Wonder ful collection of Saligram. Hindu culture demonstration. On return from Jomsom to Pokhra.
Shreedharacharya Saligram Museum( || श्रीधराचार्य शालिग्राम संग्राहलय)
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - 14 #NepalYatra 20.04.2024 - 4.5.2024

#பூதநீலகண்டர்கோயில்
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 
14
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
25.04.2024

✨25.04.2024 காலையில் ஆலயம் சென்று பசுபதீநாதரை வணங்கி விட்டு, காலை உணவு முடித்துக் கொண்டு, நேப்பாள் ஆலயங்கள்காட்மண்டு மற்றும் அருகில் உள்ள  சிலவற்றை தனி வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்று தரிசித்து விட்டு மதியம் Hotel வந்தோம்.

⛳ஆலயங்களைப் பற்றிய வலைதளக் குறிப்புகளும் எமது அனுபவ குறிப்புகளும்
தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி🙏🏻

ஸ்ரீபுத்த நீலகண்டர் கோவில்
பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple), 
#ஜலநாராயணர்

🕉️பூதநீலகண்டம் (Budanilkantha), நேபாள நாட்டின் மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தின் சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்த நகரம் ஆகும். தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு வடக்கே 8 கிமீ தொலைவில் பூதநீலகண்டம் நகரம் உள்ளது. 

🕉️திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். 

 🕉️பூதநீலகண்டம் ஆலயம் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

🛐நீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும்.

🛐கோயில் மூலவரான பூதாநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச் சிலை ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட பூதாநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே, ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார்

🌼 சுற்றிலும்,ஆலய வளாகக் கட்டிடங்களுடன், நடுவில் அமைந்துள்ள
ஒரு குளத்தின் நடுவில், வெட்ட வெளியில், 4 கருங்கல் தூன்கள் கொண்ட விதானத்துடன், நீண்ட உருவமாக நாகத்தின் மீது பள்ளி கொண்டிருக்கும் அமைதியான, அற்புதத் திருக்கோலத்தில் மேற்கு நோக்கியவாறு  ஸ்ரீமன் ஜலநாராயணர்  உள்ளார். 

🌟 குளம் உள் சுற்று வெளி சுற்று வருவதற்கு படிகள் அமைப்புகள் உள்ளன.
குளத்தின் மேற்கு கரையின் சுவற்றுப் பகுதியில் பல்வேறு தெய்வ உருவங்கள் காணப்பெறுகின்றன.  இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதி. வரிசையில் நின்று, மேற்குப்புரம் உள்ளே நுழைந்து ஸ்ரீஜலகண்டரை அருகில் சென்று வணங்கி வரலாம். சென்றசென்ற முறை மாலை நேரத்தில் வந்து தரிசனம் கண்டோம்.

🌼கரைப்பகுதியில் தெற்குப் புறத்தில், சில சிறிய கருவரை மண்டபத்துடன், சிவலிங்கம்,  முதலிய தெய்வ உருவங்கள் கொண்டவை அமைக்கப்பட்டுள்ளது.

🌼ஹோமம், பூசைகள் செய்யவும் வசதி செய்து தரப்படுகிறது.

🌟வடக்குப்புறம் தனி சன்னதியில், அம்பாள் சன்னதியும் உண்டு.

🛐நீரில் தெரியும் ஜலகண்டரின் முழு உருவம் கவனித்து தரிசனம் செய்வது சிறப்பு.

25.4.24 #மீள்தரிசனம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...