கொல்லிமலை - அறப்பளீஸ்வரர் ஆலயம்
பயண அனுபவக் குறிப்புகள்🕊️சுப்ராம்.அருணாசலம், காரைக்கால் 🔱🇮🇳
கொல்லிமலை
☘️கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொல்லி மலை, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சிறிய மலைத்தொடர் ஆகும்.
🍁சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
🍀இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ.) ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர்.
🍁இது 1000-1300 மீட்டர் உயரத்தில், 70 ஹேர்பின் வளைவுகளுடன், மூலிகை வளம் மற்றும் அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி முதலிய இடங்களுக்குப் பெயர் பெற்றது.
🍀சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.
🍁கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார்.
⛳அமைவிடம்
சாலை வழியாக
1. நாமக்கல் to கொல்லிமலை வழி சேந்தமங்கலம்
2. ராசிபுரம் to கொல்லிமலை வழி காளப்பநாயக்கன்பட்டி
3. சேலம் to கொல்லிமலை வழி மெட்டலா-,முள்ளுக்குறிச்சி-நரியான்காடு.
நாமக்கல் நகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது.
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், தம்மம்பட்டி, மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
மலைப்பாதையின் தூரம்கி.மீ 26 .. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர்.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மற்றும் இதர கிழக்கு மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தம்மம்பட்டி வழியாக அதிக கொண்டை ஊசி வளைவுகள் இல்லாத இரண்டு பாதைகள் உள்ளன. சென்னை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், தம்மம்பட்டி, சேரடி வழியாக ஒரு சாலையும் தம்மம்பட்டி முள்ளுக்குறிச்சி வழியாக இன்னொரு சாலையும் உள்ளது.
முக்கிய சுற்றுலா இடங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்:
இங்குள்ள அறப்பலீசுவரர் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, எட்டுக்கை அம்மன் கோவில், தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், , படகு இல்லம், பெரியசாமி கோவில், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவை சுற்றலா பயணிகளை கவரும்.
சிறந்த நேரம்: ஆண்டு முழுவதும் செல்லலாம் என்றாலும், ஜூன் முதல் டிசம்பர் வரை ரம்மியமாக இருக்கும்
🛕🔱🛐🛕🔱🛐🛕🔱🛐🛕🔱🛐
அறப்பளீஸ்வரர் கோயில் (Arapaleswarar Temple): 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சிவனிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயில்.
அறப்பளீஸ்வரர் கோவில். தேவார வைப்புத்தலம்.
கோவில் சிறப்புகள்
🔱கொல்லிக் குளிரறைப்பள்ளி / கொல்லிமலை / அறப்பள்ளி / கொல்லி அறப்பள்ளி / வளப்பூர்நாடு சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப்பற்றி திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்களது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
🔱 இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
🔱கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
🔱12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
🔱இறைவர் திருப்பெயர்: அறப்பளீசுவரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்படுகிரார்.
இறைவியார் திருப்பெயர்: தாயம்மை, அறம் வளர்த்த நாயகி
🔱ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.
🔱புராண காலத்தில் இத்தலம் அறமலை மற்றும் சதுரகிரி என்று அழைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.
🔱'அறை' என்றால் மலை என்றும் பள்ளி என்றால் தங்கியிருத்தல் என்றும் பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் "அறைப்பள்ளீஸ்வரர்" என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மாறி இருக்கலாம்.
🔱சித்தர்கள் நிர்மாணித்த ஆருஷி லிங்கம்
உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறைவழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், ஆங்காங்கே நதிக்கரைகளிலும் மலைகளிலும் குகைகளிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். அறத்தை (தர்மத்தை) மையமாக கொண்ட வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
🔱இயற்கை வளம்மிக்க கொல்லிமலை வல்வில்ஓரி என்னும் மன்னன் ஆண்ட
பகுதியாகும். காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்
🔱 பிற்காலத்தில் இயற்கை மாற்றங்களினால் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்து விட்டது.
ஏர்க்கலப்பையில் தட்டிய லிங்கம்.
🔱ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லி மலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அரசனிடம் சென்று தெரிவிக்க, லிங்கம் கிடைத்த இடத்தில், அந்தப் பகுதியை ஆண்டு வந்த வல்வில் ஓரி என்ற அரசனிடம் தெரிவித்தான்.
அவ்வரசனே இவ்வாலயத்தைக்கட்டி வணங்கினான். லிங்கத்தின் மீது ஒரு சிறு காயம் இன்றும் காணப்படுகிறது.
🔱பிற்கால மன்னர்கள், கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன், விஜயநகர அரசர் வேங்கடபதி போன்ற மன்னர்கள் அரசிகள், ஆலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.
🛐உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.
கோவில் அமைப்பு:
🛕ஆலயம் கிழக்கு நோக்கியது. நான்கு புறமும் உள்ள சுற்றுச்சுவற்றின்மேல் 18 சித்தர்கள் மற்றும் காவல் நந்திகள் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ராஜகோபுரத்திற்கு பதிலாக, காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
உட்புறம், கொடி மரம், பலிபீடம், நந்தி, அடுத்து ஆலயம் நுழைவு மண்டபம்.
இங்கிருந்து, அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு
தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு உள்ளது.
🛕சுவாமி முன் மண்டபத்தில் நால்வர், விநாயகர் பின் உள் மண்டம், கருவரையில் கிழக்கு நோக்கி அருள்தரும் சுவாமி அறப்பளீஸ்வரர் உள்ளார்.
🛕அம்பாள் சந்நிதி - அம்பாள் நின்ற திருக்கோலம்; தெற்கு நோக்கியருள் தரும் அமைப்பில் உள்ளார். முன்மண்டபத்தின் மேற்சுவரில் மகா மேருவும், அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது.
🛕ஏகப்பிரகாரம் கொண்ட ஆலயத்தில் தெற்கில் வள்ளி, தேவசேனாவுடன் முருகனும், தெற்கு நோக்கி அமைப்பில் தட்சினாமூர்த்தியும், அருகில் தலவிருட்சம் வில்வமும் உள்ளன.
🛕மேற்கில் தனி விநாயகர் சன்னதி உள்ளது. காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி கருவரை சன்னதிகள் முன் மன்டபத்துடனும், இரண்டு கருவரை கோபுரங்களும், வடநாட்டு (காசி ஆலய) அமைப்பில் உள்ளன. மற்றும் கோஷ்ட்டத்தில், மகாவிஷ்ணு உள்ளார். எதிரில் பிரகாரத்தில் மகாலெட்சுமி, சரஸ்வதி, ஜேஷ்ட்டா தேவி தனித்தனி சன்னதிகளில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்கள்.
🛕வடக்கு கோஷ்டத்தில், பிரும்மாவும், துர்க்கை தனிசன்னதி அமைப்பிலும், உள்ளனர். தனி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கால பைரவர் தெற்கு நோக்கிய தனி சன்னதியும், வட கிழக்கு மூலையில் நவகிரகங்கள் தனி மண்டபத்துடனும், மற்றும், வடபுறம் சந்திரன், தென்புறம் சூரியன் தனி தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.
🛕கிழக்கில் முறையான வாசல் பகுதி ஒன்றும், வடகிழக்கில் ஒரு பாதையும் ஆலயத்தில் உள்ளன.
🍃 வருடத்தில், தமிழ் மாதஆடி 18ஐ ஒட்டி ஐந்து நாட்கள் பெருவிழாக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
⚡ஆலயத்தில் முறையான பூசைகள் விழாக்கள் நடைபெற்று வருகிறது. ⚡பராமரிப்பில் ஆலயம் உள்ளது.
⚡மாதா மாதம் ஆலயம் சுற்றி கிரிவலம் செல்கிறார்கள்.
⚡ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
⚡வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளன.
⚡தனி Auto / Car வசதிகள் அதிகம் இல்லை.
⚡ஆலயம் சுற்றி மூலிகை பொருட்கள் மற்றும் பானம் முதலிய பொருட்கள் கடைகளும், சில சிறிய உணவு கடைகளும் உள்ளன.
⚡கட்டண கழிப்பறை ஒன்றும் செயல்படுகிறது.
⚡ஆகாய கங்கை செல்ல தனிக் கட்டணம் உண்டு.
⚡தங்க இட வசதிகளும் அரசும், தனியார் களும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மேலும் சில குறிப்புகள்:
🌟அரிகண்டம்
❄️ஆலயம் நுழைவு கிழக்குப் புறம், நேர் எதிரில் வெட்ட வெளியில், அரிகண்டம் கொடுக்கும் பலி வீரர்கள் இருவர் சிலைகள் உள்ளன.
❄️இது பழந்தமிழர்கள் வழிபாட்டு முறைகளில் உண்டு. அரிகண்டம் என்பது இறைக்கு தன்னுடைய தலையை ஒரே வெட்டில் அறுத்து சமர்ப்பிப்பதாகும்.
இந்த முறையில் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி தந்தனர். இந்த வழக்கம் கொற்றவை எனும் காளிதேவிக்கு தங்கள் உயிரை தந்துள்ளனர். தமிழகத்தில் இந்த அரிகண்ட சிற்பங்கள் பல்வேறு இந்து சமய கோயில்களில் காணப்படுகின்றன. சில சிற்பங்கள் கோயில்களில் அல்லாமல் வெட்ட வெளியில் இருக்கின்றன. ❄️கொற்றவை தெய்வத்திற்கு கொடுக்கப்பட்ட இந்த பலி முறை குறித்து வைக்கப்பட்ட சிலைகள் கொற்றவை தெய்வக் கோயில்கள் அழிந்தபின்பும், குறிப்பிட்ட சில ஆலயங்களில் உள்ளதாக கருதப்படுகிறது.
🥹ஆலயங்களில் இது போன்று உயிர் பலிகள் கொடுக்கப்பட்ட முறைகள் மனித உயிர் பலிகள் கொடுப்பதும், முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது; என்றாலும்,
தற்காலத்தில் கூட போலி பகுத்தறிவாள தலைவர்களுக்காகவும், அவர்களின் மீதுள்ள முரட்டு அபிமானத்தாலும் சில, 'தலை கொடுப்பான் தம்பிகள்" - வேறு முறைகளில், உயிர் கொடுக்கும் முறை, நடைமுறையில் உள்ளது நினைவிற்கு வருகிறது.
ஆலய தீர்த்தம் : ஆலயத்தின் வட பகுதியில், உள்ள மீன் பள்ளி என்ற அய்யாறு நதியும் சிற்றருவியும் உள்ளது.
ஆலயம் கிழக்குப் பகுதியில் ஆகாய கங்கை உள்ளது.
🏞️சிற்றருவி
💦அறப்பளீஸ்வரர் ஆலயத்திற்கு வடக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இது ஆலயதீர்த்தம். இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது
💦ஆலயம் அருகில் வடபுறம் உள்ளது சிற்றருவி சுமார் 100 படிகள் வரை சென்று நீராடி வரலாம். வழியில் ஒரு அய்யனார் ஆலயமும், விநாயகர் ஆலயமும் உண்டு.
💦முடி காணிக்கை செய்யும் இடம் ஒன்றும், விநாயகர் ஆலயம் அருகில் உள்ளது.
💦இதன் மேற்குப்பகுதியில் சிறிய அணை கட்டி வருகிறார்கள். மேலும் உடைமாற்றும் இடங்கள், கழிப்பிட வசதிகள் முதலிய சிறப்பான சுற்றுலா வசதிகள் செய்து தரப்பட வேண்டும், ஆலயம் வருபவர்கள் ஆகாய கங்கை தவிர்த்து, இங்கு சென்று நீராட விரும்பி ஏராளமானோர்கள் வருகிறார்கள்.
🏞️ஆகாய கங்கை
அறப்பளீஸ்வரர் கோவிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன.
🍁கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் நன்மைகளையெல்லாம் அள்ளி வந்து கொட்டுகிறது. இந்த அருவி பின் ஆறாக ஓடி உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.
💢கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக -1196 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 300 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.
💢நதிக்குச் செல்ல கட்டணம் உண்டு.
கட்டுப்பாடுகளும் உண்டு. முதியோர், நோயாளிகள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
💥வல்வில் ஓரி விழா
சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.
💫கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன்.
💫ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார்.
💫ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி" எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. அங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றிய சிவனுக்கு வல்வில் ஓரி திருத்தலம் அமைத்தான். எனவே அறப்பள்ளியில் எழுந்தருளிய ஈஸ்வரன் என்ற பொருளில் "அறப்பள்ளி ஈஸ்வரன்" என்று மக்கள் வழங்கினர். இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.
💫செம்மேட்டில் 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. அரசு தரப்பில், வல்வில் ஓரி என்ற மன்னனின் வரலாற்று சிறப்பு குறித்து ஒரு விழாவும் நடைபெறுகின்றன.
வலைதள தகவல் 💻📡📚
பயண அனுபவக் குறிப்புகள்🕊️
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 22.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱 22.02.2026
அடுத்த பதிவு...கொல்லிப்பாவை - எட்டுக்கை அம்மன் ஆலயம்.
No comments:
Post a Comment