Showing posts with label சம்பந்தர் அமுதம் - வினாவுரை பதிகங்கள். Show all posts
Showing posts with label சம்பந்தர் அமுதம் - வினாவுரை பதிகங்கள். Show all posts

Wednesday, December 2, 2020

வினாவுரை பதிகம் மூன்றம் திருமுறை பதிகம்.

பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                 🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், பொருளையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :
#வினாஉரை_பதிகங்கள் =
வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : மூன்றாம் திருமுறையில் 
வரும் பதிகம்: 296 பாடல் பற்றியது.
🙏
மூன்றாம் திருமுறை:
பதிகம்: 296
தலம்: திருக்கண்டியூர் வீரட்டம்.
பண் : கொல்லி
பதிகம் முதலடி : 'வினவினேன் அறியாமையில் '
 பாடல் சிறப்பு:
1. வினாவுரைத் திருப்பதிகம்.
மாணிக்கவாசகர் திருச்சாழல் பதிகத்தை ஒப்புநோக்கத்தக்கது. மிகச்சிறப்பான பாடல்கள் அமைந்தது.
2.  இறைவரின் பேராற்றலை, அவர்தம் அடியார்களிடம், வினாவுரையாக அமைத்த அற்புத பதிகம்.
3. ஒவ்வொரு பாடலின்
முதலடியும் அடியாரிடம் அவர் பெருமை கூறி இறைவன் செயல் காரணம் வினவுகிறார்.
4.இரண்டாவது வரி தலப் பெருமை கூறுவது.
5.மூன்றாவது வரி இறைவன் சிறப்பை உணர்த்தியது.
4. கடைசி வரியில், இறைவரின்
 அருட்பேராற்றலை வியந்தது.

இப்பதிகத்தின் 11 பாடல்களின் பொருள் விளக்கத்தை சிறிது சிந்திப்போம்.
1️⃣
முதல் பாடல் :
1. அடியவர் பெருமை அமைத்து கேள்வி கேட்கும் விதம்: 'வினவினேன் அறியாமையில் உரை 
செய்ம்மினீர் அருள் வேண்டுவீர்'
2.. தலப் பெருமை:
'கனவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன் '
3. இறைவர் பெருமை:
'தனமுனே தனக்கு இன்மையோதமர்
ஆயினார் அண்டம் ஆளத்தான்'.
4. பேரருட் திறன் வியப்பு
'வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப்பாடி இவ்
வையமாப்பலி தேர்ந்ததே '
பொருள் :
1.முதல்வரி:
ஈசனைத் தொழுது போற்றி அருள் நாடும் அன்பர்களே. அறியாமையால் வினவுகிறேன். உரைசெய்யுங்கள்.
2. இரண்டாவது வரி:
ஆரவாரமிகுந்து செல்லும் காவிரியின் கரையில் மேவும் கண்டியூர் வீரட்டன்
3. மூன்றாவது வரி:
தனக்கு இணையாக ஒருவரும் இல்லாதவரான ஈசன்
4. நான்காம் வரி:
பேராற்றல் வியப்பு: தனக்குவமையில்லாத, இறைவர்
மயானத்தில் ஆடியும் பாடியும் இவ்வுலகில் கபாலம் ஏந்தி பிச்சை கொண்டு விளங்குவது கண்டு வியத்தல்.
2️⃣
பாடல். 2.
1. 'உள்ள வாறெனக்கு உரை செய்மின் உயர்
வாய மாதவம் பேணுவீர்.
2. கள்ள விழிபொழில் சூழும்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்.
3. பிள்ளைவான் பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி
4. வெள்ளத் தாங்கியது என் கொலோமிகு
மங்கையான் உடனாகவே '.
பொருள் :
1.உயர்வாகிய மாதவத்தைப் பேணுகின்றவர்களே! உள்ளவாறு உரைப்பீரே.
2.தேன் கமழும் பொழில் சூழும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன், 
3.பிறை சந்திரனை சடையின் மீது வைத்ததும்,
4.பெருநீராகிய கங்கையைத் தாங்கியதும் என் கொல் !
என்று வினவுகிறார்.
3️⃣
பாடல் 3.
1. 'அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப் '
2. 'படியெலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்'
3. 'முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர்'
4. 'பொடியதார் திரு மார்பினிற்புரி
நூலும் பூண்டெழு பொற்பதே'

பொருள் :
1.அடியவர்கள் ஆகியவர்களே அரனின் செய்கையைச் சொல்லுங்கள்.
2. உலகமெல்லாம் தொழுது ஏத்துகின்ற கண்டியூரில் வீரட்டானத்தில் உறைகின்ற பெருமான், 
3.அந்தமாக, முதற் பொருளாய் உலகம் முழுதும் ஆகி இருப்பவர்;
4. திருவெண்ணீற்றினைத் திருமார்பில் பூசி, முப்புரி நூல் அணிந்து மேவும் பொற்பு தான் யாது? என்று வினவுகிறார்.
4️⃣
பாடல் 4.
1. 'பழைய தொண்டர்கன் பகருமின் பல
வாயவேதியன் பான்மையைக் '
2. கழையுலாம் புனல் மல்கு காவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்.
3. குழையொர் காதினிற் பெய்து கந்தொரு குன்றின் மங்கை வெருவுறப்
4 புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்து உகந்த பொலிவதே. 

பொருள் :
1. வாழையடியாக வந்த திருக்கூட்ட  தொண்டர்களே பலவாகிய தன்மைகள் உடைய ஈசன் பாங்கினை பகருங்கள்.
2. காவிரி வளம் பெருகி மேவும் கண்டியூர் வீரட்டன்
3. குழையணிந்த காதிணன், மலைமகளான உமையவளுடன் இருப்பவர் ஈசன்.
 4. மலைமகள்  வெறுவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
5️⃣
பாடல்.5.
1. 'விரவிலாது உமைக் கேட்கின்றேன் ஈசன் அடி விரும்பி ஆட் செய்வீர் விளம்புமின்
2. கரையெலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
3. முரவமொந்தை முழாவொலிக்க முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
4. பரவுவானவர்க்காக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசதே'.

பொருள்.
1. ஈசனடி போற்றும் தொண்டர்களே விளம்புங்கள்.
2. காவிரியின் அலைகள் பெருக மேவும் கண்டியூர் உறையும் வீரட்டனார்
3. மொந்தை, முழவு, வாத்தியங்கள் முழங்க பேய் பூத கணங்களும் சூழ நிற்கும் ஈசன்.
4. வாணவர்க்காக கடலில் தோன்றிய நஞ்சினை உடன் பரிசு என் கொல். என்றார்.
6️⃣
பாடல். 6.
1. 'இயலுமாறு எனக்கு இயம்புமின் இறைவனுமாய்
(வன்னுமாய்)  நிறை செய்கையைக்
2. கயல் நெடுங்கண்ணி னார்கள் தம்பொலி
கண்டியூர்உறை வீரட்டன்
3.புயல் பொழிந்திழி வானுளோர்களுக்
காக அன்றயன் பொய்ச்சிரம் 
4. அயல்நகவ்வது அரிந்து மற்றதில்
ஊணுகந்த அருத்தியே'.

பொருள் :
1. ஈசன் திருவடி வணங்கும் பக்தர்களே, நான் அறிந்து கொள்வதற்கு இயலுமாறு இயம்புவீர்
2. கயல் போன்ற கண்ணுடைய மகளிர் பொலிந்து வாழும் கண்டியூரில் உறையும் வீரட்டன்.
3. உலகில் மழை பெய்வித்து நலம்புரியும் தேவர்களுக்காக பிரமனுடைய (ஆணவத்தை) சிரத்தை கொய்த அருட் திறன். 
4. பிரம்மன் தலையைக் கொண்டு, பிச்சை ஏற்று உண்ணும் விருப்பத்தைக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
7️⃣
பாடல்: 7
1. திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
2.கருந்தடங் கண்ணி னார்கள் நாம் தொழு 
கண்டியூர் உறை வீரட்டன்
3.இருந்து நால்வரோடு ஆல்நிழல் அறம் உரைத்ததும்மிகு வெம்மையார்
4. வருந்தவன்சிலை யால் அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.

பொருள்:
1. நன்கு சிவஞானத்தை உணர்ந்த சிவதொண்டர்களே, சிவபெருமானின் திறம் நன்கு உரை செய்வீராக.
2. மகளிர் கூடி தொழும் கண்டியூரில் உறையும் சிவன்
3. சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லால மரத்தின் நிழலில் இருந்து அறப்பொருள் உரைத்த திறன்.
4. முப்புர அரசுகளும், அவர்கள் கோட்டை மதில்களும் எரியுமாறு
மேருமலையை வில்லாக கொண்ட திறன் சிறப்பைக் கூறுக.
8️⃣
பாடல் : 8
1. நாவிரித்தரன் தொல்புகழ் பல
பேணுவீர் இறை நல்குமின்
2.  காவிரித்தடம் புனல்  செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
3. கோவிரிப்பயன் ஆன் அஞ்சு ஆடிய
கொள்கையும் கொடி வரை பெற
4. மாவரைத்தலத் தால் அரக்கனை வலியை  வாட்டிய மாண்பதே.

பொருள். 
1. நாவினால் ஈசன் புகழ் போற்றும் அன்பர்களே விடை கூறுங்கள்.
2. காவிரியின் நீர் வளம் பெருகும் கண்டியூர் சிவன்.
3. பசுவிலிருந்து பெறும் பஞ்ச கெளவியத்தை பூசிக்கும் பொருளாக ஏற்றவர்.
4. இரவணன் கயிலைமலையால் நெரியுமாறு விரலை ஊன்றி, வலிமையை அழித்து விளங்கிய மாண்பு யாது என வினவுகிறார்.
9️⃣
 பாடல் : 9
1. பெருமையேசர ணாக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசுமின்
2. கருமையார்பொழில் சூழுந்தண்வயற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. ஒருமையால் உயர் மாலும் மற்றை
மலரவன் உணர்ந்து ஏத்தவே
4. அருமையால் அவருக்கு உயர்ந்து எரி
யாகிநின்ற அத் தன்மையே.

பொருள் :
1. சிவனார் பெரும்புகழ் பரவி சரன் புகுந்து அருளில் திளைக்கும் பக்தர்காள் பகர்வீராக.
2. வளமையான பொழில் சூழ்ந்தும், குளிர்ச்சியான வயல்களும் உடைய கண்டியூர் உறையும் வீரட்டன்.
3.திருமாலும், பிரமனும் ஏத்தி நிற்பவன்.
4. மாலுக்கும், பிரம்மனுக்கும் எட்டாதவனாய் உயர்ந்து, தீத்திரளாய் நின்ற தன்மை தான் யாது?
🔟
பாடல்: 10
1. நமர் ஏழுபிறப்பு அறுக்கு மாந்தர்காள்
நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
2. கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. தமரழிந்தெழு சாக்கியச் சமண்
ஆதர்ஓதும் அதுகொளா
4. தமரர் ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே.

பொருள் :
1. தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தினரின் பிறவிப் பிணியை அறுக்கும் அடியவர்களாகிய மெய்த்தொண்டர்களே
2.வரட்சி இல்லாத குளிர்ந்த நீர் பெருகும் வயல்கள் சூழ்ந்த கண்டியூரில் உறையும் ஈசன்.
3. சமணர், சாக்கியர்தம் சொற்களைக் கருத்துடையதாகக் கொள்ளாதது.
4. அந்தகனைச் சூலத்தால் சம்ஹாரம் செய்த அருள்திறன்
என் கொல்.
1️⃣1️⃣
பாடல்.11
1. கருத்தனைப் பொழில் சூழுங் கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
2. அருத்தனைத்திறம் அடியார்பால்மிக்க மிகக்
கேட்டு கந்த விளைவுரை
3. திருத்தமா திகழ் காழி ஞானசம் பந்தன் செப்பிய செந்தமிழ்
4.ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார்  உயர்ந்தார்களே.

பொருள் :
1. அன்பர்தம் கருத்தாக விளங்கி, கண்டியூரில் உறையும் ஈசன், பிறரால் காணப்பெறாது, மனத்தைக் கவரும் கள்வராகவும்,
சொல்லின் பொருளாகவும் இருப்பவர். அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழ்ந்த, திருத்தமாய்த் திகழும் காழியின் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இதனை, ஒருவராகத் தனித்தும், பாராகச் சேர்த்தும் பாடுபடுபவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள்.
சிறப்பு:
திருத்தமாந்திகழ்காழி ஞானசம்பந்தன்:

திருஞானசம்பந்தர், ஈசன் 
அருட்திறத்தை நன்கு உணர்ந்தவர் என்பது இவ்வரிகளால் உணரலாம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=4670461403029080&id=100001957991710
மற்றும்
https://subbramarunachalam.blogspot.com/2020/10/53.html?m=1
❤️🙏🔱🔯🕉️📿🕊️🇮🇳🛐☸️🏵️📚🌹

Friday, October 30, 2020

வினாஉரை_பதிகங்கள் #திருமுறைகளில்தமிழமுதம்: பதிவு: 5.3

பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : இரண்டாம் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏1.
இரண்டாம் திருமுறை
 பதிகம்:2.137
தலம் : பூந்தாராய் 
பாடல் முதலடி: 'செந்நெல்' 
பண்: இந்தளம்
பதிக சிறப்பு:
I' 'சொலீர்' என்று அனத்துப் பாடலிலும் கேள்வி வைத்துள்ளார்.
1.செஞ்சடையில் பாம்பு வைத்தது,
2.இடப வாகனம் ஏறியது,
3.யானை தோல் உரித்தது,
அங்கத்தில் பங்கமாக அர்த்தநாரியாக இருப்பது,
4.காமனை சாம்பல் பொடியாக்கியது,
5. கங்கையை சடையில் வைத்தது,
6. காதில் குழையும், தோடும் அணிந்தது.
7. அரக்கன் ஆற்றலை அழித்தருள் செய்தது;
8. மாலும், அயனும் தேடியும் 
காணதது.
9. பிறமதத்தவர், பொருளற்றதை
உரைப்பது ஏன்.
இவ்வாற்றலுக்கும், அருளுக்கும் என்ன காரணம் என்பதாக  'சொலீர்' என்று ஒவ்வொரு திருப்பாடலிலும் வினா
கேட்டுபாடல் அமைத்துள்ளார்.

II. மேலும், முதல் இருவரிகளில் தலத்தின் சிறப்பை  விளக்கும் முகமாக அதன் இயற்கை வளத்தையும், வனப்பத்தையும், மிக அழகாக சுட்டிக் காட்டி, இப்படிப் பட்ட பூந்தாராய் என்னும் தலத்தில் வசிக்கும் இறையே என்று குறிப்பையும் கூறி வியக்க வைக்கும் பாடல்கள் சிறப்பு வாய்ந்தது.
Ill.  திருக்கடைக்காப்பில்
"மகர வார் கடல் வந்தனவும் மணற் கானல்வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில்மிகு பூந்தாராய்ப்

பகவனாரைப் பரவு சொல்மாலைப் பத்தும் வல்லார்

அகல்வர்  தீவினை நல்வினை யோடுடன் ஆவரே."

பொருள் :
சுறாமீன் விளங்கும் கடல் மணல் சேரும் சோலைகளுடைய புகலியின் சம்பந்தன், எழில்மிகு பூந்தராய் பதியின் இறைவரைப் போற்றிய இத் தமிழ் சொல் மாலையாக விளங்கும் பாடல்களை பாட தீவினை அகன்று நல்வினை பெறலாமே; என்று பதிகப் பலனையும் கூறிப்பிட்டுள்ளமையும் சிறப்பே.

2.🌺🌷
இரண்டாம் திருமுறை 
பதிகம்:138
தலம் : திருவலஞ்சுழி 
பாடல் முதலடி: 'விண்டெலாமர்'
பண் : இந்தளம்
பதிகச் சிறப்பு:
1. ஒவ்வொறு பாடலின் முதல் இருவரிகளும் திருவலஞ்சுழி தலத்தின் சிறப்பை, வனப்பத்தை, வளத்தை, இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களின் காட்சிகளை ஓவியமாகக் காண்பித்து, இப்படிப்பட்ட தலத்தில் வாழுகிறார் நம் இறைவன்; என்று நமக்கு உணர்த்துவதையும், நாம் உணர வேண்டும்.

2. சொலீர்....என்று எல்லாப் பாடல்களிலும் இறைவனை நோக்கி வினா எழுப்புகிறார்.

3. இறை அருட் செயலான, பிரம்ம கபாலம் ஏந்த விரும்பியது, பலி கொண்டது, ஏன் என்று இறைவனை  வேண்டியருளுகிறார். 

மேலும். 
4.திருக்கடைக்காப்பில்.
"வீடு ஞானமும் வேண்டுதிரேல்            விரதங்களால்
வாடின் ஞானமென்னாவதும்
எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன் 
செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானவல்லார் அடி
சேர்வது ஞானமே."

பொருள் :
வெறும் விரதங்களால் வீடு பேறு, முக்தி அடையமுடியாது. தமிழ் ஞானசம்பந்தர் பாடலை செந்தமிழ் கொண்டு இசையோடு பாடினால், ஞானம் கிடைக்கும்  முத்தி அடை முடியும் என்கிறது சிறப்பு.

3.🌹🌷🌺
 இரண்டாம் திருமுறை பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
பதிகச் சிறப்பு.

1. ஒவ்வொரு பாடல்களின் முதல் இரு வரிகளிலும், 
திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்று
இறைவரை விளித்து அவர்தம் அருட்பேராற்றலை வியந்து வினவுகிறார்.
1. பன்றி வடிவ அரக்கனை அழித்து, வேடுவத்திருக்கோலம் பூண்டு உமாதேவியுடன் நின்றது
2.காமனை பாணம் எய்து காய்ந்தது.
3. உமாதேவியுடன் காட்சியளித்தது.
4. உமாதேவியரை ஒரு பாகத்தில் வைத்தது.
5. பிச்சை ஏற்க நடந்தது
6. யானையைத் கையால் தாக்கி அழித்தது.
7. கொன்றைமலர் சூடியது
8. அரக்கன் தலைகளையும், கரங்களையும், நெறித்த திறன் மற்றும்,
9.9 வது பாடலில்
'காலெடுத்த திரைக்கை
கரைக்கெறி கால் சூழ்
சேலடுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே'.
(கால் = காற்று)
கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளிவீசுகிறது = கவிநயம் வியந்துணரத்தக்கது.

திருமால் உனது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்தி நிற்குமாறு, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம் என்று வினவுகிறார்.
10. சாக்கியர், சமணர்களின் பயனற்ற திறத்தினை நீக்கியது.

மேலும்.
திருக்கடைக்காப்பில் வரும்
'திக்குலாம் பொழில் சூழ்தெளிச்
சேரி எம் செல்வனை

மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய

தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித் 

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே,'

என்றார்.
பொருள்:

பொழில் சூழ்ந்த தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பரமனை, காழி ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத் திருப்பதிகத்தினை மனதார நாவினால் சொல்லினாலே தேவர் சூழ இருப்பார் என்று உரைத்தார்.

4. 🌹🌷🌺🍁
இரண்டாம் திருமுறை
பதிகம்:140
தலம் :-திருவான்மியூர் 
பண் : இந்தளம்
பாடல் முதலடி : 'கரையுலாங் கடலிற்'
பாடல் சிறப்பு:
1. பாடல்களின் முதல் இருவரிகள் தலத்தின் இயற்கை வளம், உயிர் காட்சிகள், மனிதர்கள், குறிப்பாக மங்கையர் பக்திப்பாங்கு, இவற்றின் சிறப்பைக் குறிப்பிட்டு, இத்தலத்தில் வசிக்கும் இறைவரை அழைத்து வினாவுகிறார்..
1. ஒவ்வொறு பாடலிலும் 'சொலீர்.'.. என்று குறிப்பிட்டு
வினவுகிறார்.

1. அம்மை அப்பராக - அர்த்தநாரியாக விளங்குவதன் பொருள்;
2. செம்மையான திருமேனி கொள்ளச் செய்தது;
3. யாணையை உரித்து தோலைப் ஆடையாகப் போர்த்தியது, நெருப்பை கரத்தில் கொண்டு நடனம் புரிந்தது
4.நஞ்சுண்டு வானவர்க்கு இன்னருள் புரிந்தது.
5. செஞ்சடையில் விண்பிறை வைத்தது
6. முப்புரத்தை எரியூட்டிய வல்லமை
7. சனகாதி முனிவர்கட்கு வேதப் பொருளுரைத்தது.
8. பூதகணங்கள், பேய்கள் சூழ நடனம் ஆடுவதும்
9. தாருகாவனத்து மாதர்கள் இல்லம் சென்று பலியேற்றது
10. சமணர், சாக்கிய, பிற 
மதத்தவர் பொய்யுரை பகர்வது

இவை எல்லாம் ஈசன் அருளியது ஏன் என்று வினாவின் வழி அறிவுருத்தும் பாடல்களாக அமைத்தருளியுள்ளார்.
மேலும், 
திருக்கடைக்காப்பில்,
'மாதொர் கூறுடைநற்றவ
ணைத்திரு வான்மியூர்

ஆதியெம்பெருமானருள்
செய்ய வினாவுரை

ஒதியன்றெழு காழியுண்
ஞானசம் பந்தன் சொல்

நீதியால் நினைவார் நெடு
வானுலகு ஆள்வரே. '
என்றார்.
பொருள் :
'எம்பெருமானை, அருள் செய்யும் பொருட்டு வினாவுரையாக ஓதும் காழியாரின் இப்பதிகம் ஒதுவார், வானுலகை ஆள்வார்கள்'. என்று அமைத்துள்ளார்.

5-🌸🏵️💮🌼🌷
இரண்டnம் திருமுறை
பதிகம்:165 
தலம் - திருப்புகலி
பாடல் முதலடி - 'முன்னிய'
பண் : இந்தளம்
பாடல் சிறப்பு :
1. திருவிராகப் பதிகம்.

2. இது  12 பெயர்கள் கொண்ட
சீர்காழி தலத்தின் ஒரு  பெயரான திருப்புகலி என்னும் தலப் பெருமையையும் கூறும் பதிகம்.

3.முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமையையும், அருட்சிறப்பையும் வைத்து, ஈசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், அடுத்துவரும் இருவரிகளில் தலப் பெருமை உரைத்து திருப்புகலியாமே என்று  என்ற பதில் அமைப்பில் பாடல் அமைத்துள்ளமை சிறப்பு.
பொருள் :
மூவுலகிலும் சிறப்பு வாய்ந்த தலைவர் வசிக்கும் பதியாது என்றும்,
பாடும் பக்தர்கள் விரும்பிடும் இடம்; 
இறைவன் உமையோடு வீற்றிருக்கும் பதி; 
அறுவகை சமயத்திற்கும் அருள்புரியும் ஈசன் பதி;  
நஞ்சினை உண்டவன் உறையும் பதி;
 வல்வினை தீர்த்தருளும் மைந்தன் இடம்;
 இராவணை அடக்கியருள் செய்த அண்ணல் இடம்;
 பிறையும், அரவமும் வைத்தாடும் ஈசன் உறையும் பதி;
பிற சமய மொழிகளை ஏற்காத அரும் ஞானிகள் வாழும் ஊர் எது என்றும் இறைவரின் அருள்செயல்களை விவரித்து அவர் வசிக்கும் ஊர் எது என்பது வினாவாகவும்,

இதற்கு விடையாக, பதியின் சிறப்புகளாக
தேவர்கள் துதி செய்து வணங்கும் திருப்புகலி என்றும்
தாமரை மலரின் வளம் நீர் வளம், சோலைகளின் மண் வளம் நிறைந்த ஊர்,
சிவகணத்தவர் கூடியிருந்து போற்றும் ஊர்,
செழுமையான வயல்கள் நிறைந்த ஊர்.
தென்னைமரத்திலிருந்து தேன் பெருகும் வளம் மிக்க ஊர்,
செல்வ செழிப்பு மிகுந்தவூர்.

திருப்புகலியாமே என்று;
ஒவ்வொரு பாடல்களிலும், இறைவரின்  சிறப்பை உணர்த்தி அவர் உறையும் இடம் எது என்று வினாவி, அதற்கு பதில் தரும் வகையில்  தலத்தின் இயற்கை வளம், உயிர்வளம், தலப் பெருமையை விளக்கி அது திருப்புகலியாமே என்று விடையாக அமைத்திடுவார்.
திருக்கடைக்காப்பில்,

'செந்தமிழ் பரப்புறு 
திருப்புகலி தன் மேல்

அந்தமுதலாகி நடுவாய பெருமானைப்

பந்தனுரை செய்தமிழ்கள் 
பத்தும்இசை கூர

வந்தவணம் ஏத்துமவர்
வானமுடையாரே ''

என்று பதியின் சிறப்பு போற்றி வினா விடையமைப்பு பதிகம் அருளியுள்ளார்.

6.🍂🍀🍁🌻🌸🌹
இரண்டாம் திருமுறை
பதிகம்: 170
தலம் : திருப்பழுவூர்
பாடல் முதலடி : 'முத்தன்மிகு '
பண் : இந்தளம்.
பாடல் சிறப்பு:
1. இது திருவிராக அமைப்புடைய பதிகம்.
2. இந்தப் பதிகம் பழுவூர் என்ற பதியின் சிறப்பை வினா விடையாக ஏற்றி அருள்செய்துள்ளார்.
3. முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமை வைத்து, அவ்வீசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், மற்ற இருவரிகளில் பதியின்  சிறப்பு அமைத்து அப்பதி பழுவூரே என்ற பதிலமைத்து பாடல்களை தந்தருளியுள்ளார்.
பொருள்:
1.திரிசூலம் கொண்ட ஈசன் உரையும் இடம்?
சித்தர் வாழும் பழுவூரே.

2.முடியில்அரவம் வைத்த பெருமான் இடம்?
மாளிகையில் வசிக்கும் மகளிர் பாடல் இசைக்கும் பழுவூரே.

3..முப்புரம் எரித்தவர் இடம்?
மகளீர் மகிழ்ந்து நடனமாடுமூர்.

4.எண் எழுத்து, இசைக்கு முதற்
பொருளானவர் வசிக்குமிடம் ?
மலையாளர் தொழுது எத்தும் பழுவூரே.
5. மயானத்தில் நடனம் புரிபவர் இடம்?
வேத மொழி சொல்லும் மறையாளர் வாழும் ஊர். 

6.முப்புரம் எரித்தவர், யானையுரித்தவர்  இடம்?
பாவையர்கள் கற்பொரு பொலிந்த  ஊர்.
7. தக்கன் யாகம் அழித்தவர் இடம்?
மாதர்கள் தழையப் பெருகி வழிபடும் ஊர்.

8.கண்டத்தில் விடம் வைத்த,
இராவணனை அடக்கிய அப்பன் இடம்?
சோலைகளும், வயல்களும் நிறைந்த பழுவூர்.
9.மாலும், நான் முகனும் தேடியும் தோன்றாதவன் தழலாய் ஓங்கியவன் உறையும் இடம்?
வேதம் நாலும் உணர்ந்தவர் கூடி மகிழுமூர்.
10. சமனர், பெளத்தர்கள் சொல்கின்ற பொருத்தமில்லா மொழிகளை வெறுக்கும் ஈசன் உறைவிடம்
தாழை, தென்னை, பாக்கு செழித்தோங்கும் ஊர்.
மேலும்,
11. திருக்கடை காப்புப் பாடலில்...

'அந்தணர்கள் ஆனமலை யாளர் அவர் ஏத்தும்.

பந்தமலி கின்ற பழு வூர் அரணை ஆரச்

சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி

வந்த வணம் ஏத்துமவர் வானமுடையாரே.'

மலைநாட்டவர் பக்தியுடன் வந்து வழிபடுகின்ற ஈசனை ஞானம் உணர்ந்த ஞானசம்பந்தன் சொல்லி உரைத்தவாறு ஏத்தி வழிபடுகின்றவர்கள் தேவர்களாவர்; என்று உரைத்தார்.
🌸 🏵️🙏🙇‍♀️🌼🙇🌼🙏🏵️🌸📚🌹
💥இதுகாறும், இரண்டாம் திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

Thursday, October 22, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் வினாஉரை பதிகங்கள்

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.2.
4.வினாஉரை பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️ன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.2.1
4.வினாஉரை பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : முதல் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏
திருப்பதிகம்: 
முதலாம் திருமுறை:
பதிகம் : 4.
தலம்: - திருபுகலியும்திருவீழிமிழலையும்:
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:  
'மைம்மரு பூங்குழல்'.

பதிக சிறப்பு:
1. ஒவ்வொரு பாடலிலும்,
'புகலி நிலாவிய புண்ணியனே' என்று சிறப்பித்தும்,
'என் கொல் சொல்லாய்.'
என்று கேள்வி எழுப்பியும் அமைத்துள்ளார்.
🌹
2. பாடல்: 7 ல்
'காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கிக்
காம்பன தோளியோடும் கலந்து

பூமரு நான்முகன் போல்வார் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே

ஈம வனத்து எரியாட்டு உகந்தி
எம்பெருமான் இது என் கொல்சொல்லாய்

வீமரு தண்பொழில்சூழ் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.'

பொருள் சிறப்பு:
உலகத்தோர் திருமணத்திற்கும், இறைவன் இறைவி திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு.
காமன் இன்றி சிவசக்தி திருமணம் நடைபெற்றது சுட்டப்படுகிறது.

பூமரு = மலர்மேல் உறைபவன்
ஈமவனம் = இடுகாடு,
வீமரு = மலர்கள் சூழ்ந்த.
11வது பாடல் திருக்கடைக்காப்பில்:

விண்ணிழி கோயில் விரும்பி மேவும் 
வித்தகம் என் கொல் இது என்று சொல்லிப்

புண்ணிய ணைப்புகலிந்நிலாவு
பூங்கொடி யோடு இருந்தானைப் போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
நான் மறைஞானசம் பந்தன் சொன்ன

பண்ணியல் பாடல்வல்லார்கள் இந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.

பொருள் சிறப்பு:
இறுதி வரியில், 
'வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்ற குறள் தெளிவு.
🌷

2.
முதல் திருமுறை: பதிகம்: 1.6.
தலம்: - திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:   'அங்கமும் வேதமும்'

பாடலில் வரும்  சிறப்பு: 
1 ஒவ்வொரு பாடலிலும் 'மைந்த சொல்லாய்'  என்றமைந்துள்ளது.
2. திருமருகலில் இருந்த சம்பந்தரைச் சந்தித்த சிறு தொண்டர் தம்  பதிக்கு வருமாறு கோர, சம்பந்தருக்கு செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் காட்சி தந்த போது அருளிய பதிகம்.
🌺
3.
முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

பதிக சிறப்பு
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.
10வது பாடலில் 
'தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்  தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பனோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே'

பொருள் சிறப்பு:
அடியவர்கள் வேண்டுதலின் பொருட்டும், மற்றும் சுபகாரிய களை மேற்கொள்ளவும் 'எடுக்கும் விழவு' எனவும், இறைவன் திருநட்சத்திரங்களில், நாள்களில் 
(திருவாதிரை, பூசம் மற்றும்  பிரதோஷம் போன்ற நாட்கள்) நடத்தும் திருவிழாக்கள் மக்களைக் காத்தலையொட்டி நடைபெறுவதால் . இரும்பலி இன்பினோடு' எனப்பட்டது. காத்தல் செய்யும் திருவிழாக்கள் இன்பம் தரவல்லது என்பதாம்.

(பொருள் : சாதியில் நீங்கிய = பாரம்பரியத்திலிருந்து மாறிய
நடுக்குற = அதிர்ச்சியுற, 
இரும்பலி இன்பினோடு = இன்பத்தின் அளவு மிகுந்த இன்பம் இரு = பெரிய  பலி = காக்கும் தன்மை   அடுக்கும் பெருமை = பெருமைகளின் திரட்சி)

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...