பூவாளூர் : ஶ்ரீ குங்கும சுந்தரி உடனுறை திருமூலநாதர் சுவாமி திருக்கோயில்.
Sri Thirumoola nadhar Shiva temple at Poovalur.
திருமுறை வைப்புத்தலம்.
🔱திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், லால்குடி- அரியலூர் நெடுஞ்சாலையில் லால்குடியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூவாளூர் என்ற இந்த தலம்.ரயில் நிலையம் லால்குடியில் இருந்து ஆட்டோவில் செல்வது எளிது.வாகனங்கள் மூலம் மிகவும் எளிதாக சென்று அடையலாம்.
🔱இங்குள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமூலநாத சுவாமி’. இறைவி பெயர் குங்கும சவுந்தரி அம்பாள். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது என்பதால் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் கொடி மரமும் நந்தியும் உள்ளன.
ஆலயஅமைப்பு:
🔱மூன்று நிலைகளைக் கொண்ட உள் ராஜகோபுரத்துடன் 16 விமானங்களைக் கொண்ட கிழக்கு நோக்கிய கோயில் இது. பிரம்மன், இந்திரன், அக்னி, சந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமாகும்.
🛕130 அடி அகலம் 170 அடி நீளம் கொண்ட பெரிய ஆலயம், பிரகாரங்கள் கொண்டது.
🛕காட்சி கோபுரம் ஆலய நுழைவில் உள்ளது. ஆலயம் முன்புறம், வாக்குவாளம்மன் என்று ஒரு சன்னதியில் சப்தகண்ணியர் வைத்து வணங்கி வருகிறர்கள்
🛕முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும் மகாமண்டபமும் உள்ளன.
🛕கொடிமரம் முன்பு மேற்கு நோக்கி மிகவும் உயரமான கருவரையில் ஆலய சுவாமி கருவரை நோக்கி தனி சிறப்பு விநாயகர் அமைந்துள்ளது.
🛕மகாமண்டபத்தினுள் உள்ளே மூலவர் திருமூலநாதர் சுயம்பு வடிவமாகவும், அதே போல் அம்பாள் குங்கும சுந்தரியும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம், இரண்டு நந்திகள் இருப்பது மிகவும் சிறப்பாகும்.
🛕சுவாமி கிழக்குநோக்கிய அமைப்பு. தனி கருவரை சன்னதியும், அம்பாள் இடதுபுரம் தனி கருவரை ஆலயமாகவும் உள்ளது. பிரகாரத்தில், 63 நாயன்மார்கள், உள்ளனர். விநாயகர், காசி விசுவநாதர், தனி சன்னதியில் மகாலிங்கேஸ்வரர் , உள்ளர்கள் . இரண்டு கருவரை சன்னதிகள் கோஷ்ட்ட மூர்த்திகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
🛕 மேற்கு பிரகாரத்தில், வெள்ளைவாரண விநாயகர், இரட்டை விநாயகர் சன்னதி, நர்த்தன கணபதி, தட்சினாமூர்த்தி சன்னதியில், பெரிய அளவில் சனகாதி முனிவர்கள் அமைப்பு, அண்ணாமலையார், பிரும்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, அம்பாள் பின்புறம் தனியாக ஒரு துர்க்கை, மற்றும், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், தண்டபாணி, கெஜலெட்சுமி, ஜேஷ்ட்டா தேவி, தனியான நடராஜர் சன்னதியும், பள்ளியறையும் வடபுறத்தில் உள்ளது.
ஆலயமுன்புர கோபுரம் இடது புறத்தில் வள்ளலார் ஜோதி வழிபாட்டிற்கும், மேடையில் இடம் ஒதுக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
🪷12 திருமுறைகளுக்காக தனியாக திருமறை கோயில் என்ற சன்னதி உள்ளது.
🛕தல விருட்சம் வில்வம், தீர்த்தம் பல்குனி
சிறப்புகள்:
🔱இக்கோயில் கி.பி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பெருமையுடையது
🔱திருஞானசம்மந்தர் இங்கு சில நாள் தங்கியிருந்து திருமூலநாதரை வணங்கி சென்றுள்ளார். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் இத்தலம் பித்ரு சாப விமோட்சன ஸ்தலமரம் விளங்கி வருகிறது.
தலவரலாறு:
🔰பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது.
🔰தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக் கணை வீசி சிவனது தவத்தை கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் மறுத்துவிட்டான். ‘மறுத்தால் தாங்கள் சாபம் விடுவோம்’ என தேவர்கள் பயமுறுத்தவே, பயந்த மன்மதன், சிவன் மேல் மன்மத பாணத்தை ஏவினான்.
🔰கிழக்கு நோக்கி இருந்த சிவன் மேற்கு நோக்கி திரும்ப, சிவனின் நெற்றிக் கண் பார்வை பட்டு மன் மதன் எரிந்து போனான். இந்த சம்பவம் நடந்த தலம் கொருக்கை. நாகை மாவட்டத்தில் உள்ளது இத்தலம். அதன்பின், தன் கணவனை இழந்த ரதிதேவி அழுதாள். கண்ணீர்விட்டு கதறினாள். பலன் இல்லை. உடனே சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். பிரம்மாவும் தவித்தார். மன்மதன் இல்லாததால் அவரது படைப்புத் தொழிலை அவரால் செய்ய முடியவில்லை.
🔰தனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவுக்கும் மன வேதனை. அனைவரும் சிவபெரு மானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த ரதியின் முன் தோன்றினார்.
🔰‘உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான்’ என்று ரதியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது இந்த ஆலய தல வரலாறு.
🔰 யோகத்தில் தட்சிணாமூர்த்தியை அமர்ந்து தவம் செய்த சிவபெருமான் மீது காமத்தை திருமலர் அம்புகளை கொடுத்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் சிவன். மன்மதனின் மனைவியான ரதியின் வேண்டுகோளுக்கு மனம் இறங்கி அவள் கண்களுக்கு மட்டுமே தெரியும் உயிர் தந்தார் சிவபெருமான். அதனால் ஊருக்கு மன்மதபுரம் என்றும் மலர் அம்புகள் போட்டதால் பூவாழியூர் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் இவ்வூர் பூவாளுர் என்று கூறப்படுகிறது.
🪷பழமையும், பெருமையும் மிக்க கோயில். மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இது தென்னிந்தியாவின் கயா எனும் சிறப்பு பெற்றது.
🪷ஸ்ரீ தென் கயா பற்குனி ருத்ர சித்தர்
. இவருடைய யோகா ஜோதி
இத்திருக்கோயிலில் தான் எப்போதும் இருந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். கயா, ருத்ரா சித்தர் சன்னதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று பித்ரு தர்ப்பணம் மற்றும் பித்ரு ஹோமம் நடைபெறும். மாதம்தோறும் பௌர்ணமியில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
🪷இத்திருக்கோயிலின் வெளிப் பகுதியில் வலதுபுறம் அமைந்துள்ள கயா பல்குனி (தற்போது பல்குனி ஆறு) ஆற்றின் கரையில் தனிக் கோயில் கொண்டு அமர்ந்துள்ளார்
🪷ஸ்ப்த ரிஷிகள் வழிபட்டு ஞானம் பெற்றதால், ஞானபுரீஸ்வரர் என்றும் இறைவனின் நாமம் வணங்கப்படுகிறது.
பிரும்மா, இந்திரன், அக்னி தேவர், சந்திரன் முதலியோர் வழிபட்டது.
🔰கச்சியப்பமுனிவரால், பூவாளூர் புராணம் எழுதப்பட்டுள்ளது.
🔰12 திருக்கரங்கள் உடைய சுப்பிரணியரைப் பேற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளியது.
பூசைகள்
தினசரி நான்கு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பரிகாரங்கள்
🪷கயாவுக்கு நிகரான பல் குனி ஆற்றில் குளித்து இக்கோயிலில் உள்ள இரட்டை கணபதியை வழிபட்டால், பித்ரு தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
துர்வாச முனிவருக்கு பித்ரு தோஷம் நீக்கிய தலம். பித்ரு சாபம், தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து, கயா பற்குனியில் நீராடி, தர்ப்பணங்கள், சிரார்த்த ஹோம வழிபாடுகள் செய்து திருமூல நாதரையும், குங்கும சௌந்தரி அம்மனையும் வழிபட்டு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷங்களையெல்லாம் இங்குள்ள பித்ரு காவல்தேவ மூர்த்திகள் ஏற்று, தோஷ நிவர்த்தி ஏற்படுவதுடன் பரிபூரண பலன்கள் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
🪷குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவியின் சன்னிதியில் தொட்டில் வாங்கி கட்டினால் அந்த பாக்கியம் உண்டாகும் என்றும் சொல்கின்றனர் பக்தர்கள் .தரிசித்து வழிபட வேண்டிய புராதான தலங்களில் ஒன்று.
( தகவல்:வலைதளம் 💻📡📚)
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌟காலமுறை பூசை வழிபாடு விழாக்கள் நடைமுறையில் உள்ள புராதான ஆலயம்.
🌼திருமுறை வைப்புத்தலம்.
🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏 💻📡📚 15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம்
No comments:
Post a Comment