Monday, March 30, 2026

வாத்தலை - (முக்கொம்பு)பாதாள ஈஸ்வரர் - பாலசுந்தரி அம்மன் ஆலயம். கரியமாணிக்கம் - மேற்கு

வாத்தலை - (முக்கொம்பு)
பாதாள ஈஸ்வரர் - பாலசுந்தரி அம்மன் ஆலயம்.  கரியமாணிக்கம் - மேற்கு

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் (குணசீலத்திற்கு முன்னால் 2 கி.மீ ), முக்கொம்பு அணை நுழைவில் அமைந்துள்ளது. வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில். 

இறைவர் : பாதாள ஈஸ்வரர்
இறைவியின் திருநாமம் பாலசுந்தரி சப்தரிஷிகள் வழிபட்ட தலம்.

சுமார் 10 படிகள் கீழே இறங்கி தான் சுவாமி அம்பாளை தரிசிக்க இயலும்.

கிழக்குப் பார்த்த ஆலயம் பதாளஈஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் பாலசுந்தரி தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரையில் உள்ளார்கள்.

வெளிப்புறம் சிறிய முன் மண்டபத்தில்,
விநாயகரும் தண்டாயுதபாணியும், இரண்டு பக்கங்களிலும் உள்ளனர். கிழக்குப் பகுதியில் சுவாமிக்கு நேர் எதிரில் சனிஸ்வர பகவான் உள்ளார்.  

வெளிப்பகுதி தரை பகுதியில் ஆலயம் சுற்றி வரலாம், வடக்குப் புறத்தில் வன்னிமரமும், அதன்கீழ் நாகர் அமைந்துள்ளார்.
ஆலயம் சமீப வருடங்களில் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொலிவுடன் உள்ளது.

ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானை ஏழரை நாழிகை நேரம் பிடிக்க முற்பட்ட போது, சனியிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு பாதாள ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமானை பிடிக்க வந்த சனி பகவான் மூலவருக்கு எதிரில் இடதுபுறம் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி முதலிய சனி தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய பரிகாரத் தலம் இது. அதனால் இத்தலம் திருநள்ளாறுக்கு இணையான தலம் என்று போற்றப்படுகிறது. 

சனிபகவனால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்தவர்கள், இந்த தலத்தில் வழிபட்டால் அந்த இழப்பிலிருந்து மீண்டு வரலாம். இந்த தலத்தை தரிசனம் செய்த பிறகு படி ஏறி மேலே செல்லும் போது முழுவதும் சனி தோஷம் நிவர்த்தி ஆகி நமது வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருநள்ளாறு தலத்திற்கு இணையான தலம்
சனியால் அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் நன்மை பெற வழிபட வேண்டிய தலம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥இத்தலத்து மூலவரை தரிசிக்க, நாம் தரைமட்டத்தில் இருந்து பல படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். குறுகிய பகுதி. சிறிய ஆலயம் என்பதால் 10, 10 பேர்களாக மட்டும் சென்று தரிசித்து வர வேண்டும் இட நெருக்கடி ஏற்படலாம். .

முக்கொம்பு அணையின் முன்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால், ஆலயம் தரிசித்துப்பிள் அனையை ரசித்து வருகிறார்கள். 

வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். 
சாதாரண நாட்களில் . பூசை நேரங்களில் மட்டும் சிவாச்சாரியார் இருப்பார். பூசை காலங்களில் தான் ஆலயம் திறப்பு. முன் தகவல் கொடுத்து தரிசிப்பது சிறப்பு. 

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

ஆயினும், முக்கொம்பு அணை, பிரதான சாலை - திருச்சி - முசிறி நாமக்கல் சாலையை ஒட்டிய சுற்றுலா தலமாக இருப்பதால், சிறிய சிறிய கடைகள் நிறைய உண்டு.

சாலையில் எப்போதும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளதால் பெரியவர்களும், குழந்தைகளும் மற்றவர்களும் அதிக கவனத்துடன் இருப்பது மிக மிக நல்லது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026
15.02.26 தரிசனம்
# சுப்ராம் அருணாசலம், காரைக்கால்.

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...