Monday, March 30, 2026

இடையாற்றுமங்கலம்: மாங்கல்யேஸ்வரர் - மங்களம்பிகை- ஆலயம் - உத்தர நட்சத்திர பரிகார தலம். வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.

இடையாற்றுமங்கலம்:
 மாங்கல்யேஸ்வரர் - மங்களம்பிகை- ஆலயம் - உத்தர நட்சத்திர பரிகார தலம். 
வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.

🛐திருச்சி லால்குடிக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம்.
லால்குடிக்குத் தெற்கில் 3 கி.மீ.தூரத்தில் கொள்ளிடம் நதிக்கு வடக்கில் உள்ள வாய்க்கால்  தென் கரையில் உள்ளது.
இங்கே சுமார் 900 வருடங்கள் பழைமைமிக்க ஆலயத்தில் 
இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி குடிகொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர்.
ஸ்வாமி மற்றும் அம்பாளின் திருப்பெயர்களே, இது கல்யாண வரம் தரும் ஆலயம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.
இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

🔰தல வரலாறு:  
மண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு (திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான வைபவ நேரத்தை, சுபமுகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பார்கள்.
அற்புதமான அந்த நேரத்தில், தன் சீடர்களான தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அருள்கிறார் மகரிஷி என்பதாக ஐதீகம்!
இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

 உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.

 மாங்கல்ய மகரிஷி. வணங்கி வழிபட்ட இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.

🛕ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கி, இருந்தாலும், தென்புறமாக உள்ள பிரதான நுழைவே வாயிலாக உள்ளது. காட்சி கோபுரம் சுற்று சுவருடன் உள்ளது. கிழக்குப் பகுதியில் பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.  மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் சித்திவிநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் ஒரே சந்நிதியில் இங்கே காட்சி தருகின்றனர்.

🪷உத்திர நட்சத்திரக்காரரான மாங்கல்ய மகரிஷி வழிபட்டுப் பலன் பெற்ற தலம் என்பதால்,  இங்கே... தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் மாங்கல்ய மகரிஷி.

🌟திருவிழா: பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, திருக்கார்த்திகை, நவராத்திரி.

🛐பிரார்த்தனை:  

தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய்விளக்கு ஏற்றி, மாலை சார்த்தி, அவரின் திருப்பாதத்தில் ஜாதகம் வைத்து வழிபடவேண்டும்.

அதேபோல், ஸ்ரீமங்கலாம்பிகைக்கும் ஸ்ரீமாங்கல்யேஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண வரன் தேடி வரும்.

பிறகு மூன்று மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது.வரன் தகைந்ததும் கல்யாணப் பத்திரிகையுடன் வந்து ஸ்வாமி, அம்பாள் மற்றும் மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்குப் பத்திரிகை வைத்து, கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு மட்டுமின்றி, அவர்களையும் கல்யாணத்துக்கு வரும்படி பக்தர்கள் அழைப்பு விடுப்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்.

 திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
 திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

அத்துடன், கல்யாண வரம் மட்டுமின்றி குடும்ப ஒற்றுமைக்காகவும், கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் இங்கு வந்து வழிபட்டு வரம் பெறலாம். குடும்ப ஒற்றுமைக்காகவும், உடலில் கால்வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். 

தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

 தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழவும், 
பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள்.

📚பொது தகவல்: உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌟காலமுறை பூசை வழிபாடு விழாக்கள் நடைமுறையில் உள்ள புராதான ஆலயம்.
🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும்.  சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.
#Subbramசுப்ராம்🔱🇮🇳

நன்றி🙏 💻📡📚 15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம்

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...