Tuesday, July 21, 2020

திருஎழுக்கூற்றிருக்கை பதிவு : ஒன்று

#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : ஒன்று
மேல் அடுக்கு : ஒன்று . 
பாடல் வரிகள் : 1 முதல் 2 வரை
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பெரிய பதிவு :
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
💫கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம், சாரங்கபாணி ஆலயம், சுவாமிமலை, மற்றும் பல ஆலயங்களில் பிரகாரத்தில் பளிங்கு கற்களில் அல்லது வண்ண ஓவியமாக ஒரு தேர் படம் அமைத்து இருப்பார்கள். அதில்  குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு கட்டமாக அறைகள் வரைந்து அதில் சில வார்த்தைகளும் வரிசை வரிசையாய் எழுதி நடுவில் அம்மைப்பன் உருவம் அல்லது முருகன் உருவமும் கூட இருக்கும். (படம் இணைப்பு காண்க).

⚛️இது என்ன என்றும் இதன் விளக்கம் என்னவென்றும் அறிந்து கொள்ள முயன்ற போது, பலவித வியப்பான தகவல்கள் கிடைத்தது.

💥உலகத்தின் ஒப்பு உயர்வற்ற மொழியாகிய தமிழின் சிறப்பு விளங்கும் ஒரு அற்புத படைப்பு இது.

☸️இது ஒரு தெய்வீகப் பாடல் அமைப்பு. 
#எண்ணலங்கரம் என்ற பாடல் அமைப்பை ஒட்டி அமைந்த கவி முறை. இதற்கு சித்திரக்கவி, ரத பந்தம், தேர்ப்பந்தம் என்று பெயர். 

💠உலகத்தின் வேறு எந்த மொழியிலும் இப்படிப்பட்ட சித்திர அமைப்புக் கவிதைப் பாடல்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று மொழி அறிஞர்கள் மொழிகிறார்கள்.

🔯இந்த அமைப்பு முறைக்கு
திருஎழுக்கூற்றிருக்கை என்று இலக்கணம் ஆய்ந்தோர் பெயர் அளித்துள்ளார்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🛐முதன்முதலாக இந்த வகைப்பாடல் அமைப்பு முறையை அருளியவர்.
மூன்று வயதில் ஞானப்பால் அருந்தி அருள் பெற்ற தமிழ் கடவுள் முருகன் அவதாரம் என்று அருணகிரிநாதரால் போற்றப்பட்ட தமிழ் ஞானசம்பந்தர் ஆவார்.

🔹திருஞானசம்பந்தப்பெருமான் தமிழில் பல புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்தார்.

🔹திருஞானசம்பந்தர், பக்தி இலக்கியத்தை தமிழ்மொழியில் விளங்கச் செய்தவர்.

🔘இவரைப் பின்பற்றி திருமங்கையாழ்வர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முதலிய மிகச்சிலரே எழுகூற்றிருக்கையை அமைத்திருக்கின்றனர்.

🔱ஏழாம் நூற்றாண்டில், சாக்கியர்களையும், சமணர்களையும், பெளத்தர்களையும், தன்அருட்திறமையால் தமிழ்ப் பாடல்களில்வென்றவர். 

🎶திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற்கும், பாடி மகிழ்வதற்கும்மட்டுமின்றி, 
தமிழ்ச்சொல்லணி இயலுக்கும், இசைக்கும் மூலமாகத் திகழ்கின்றன.

🔰இவற்றை இலக்கண நூலார் மிறைக் கவிகள் சித்திரக் கவிகள் விருந்து வனப்பு என்று பலவாறு அழைக்கின்றனர்.

✳️திருஞானசம்பந்தர் இதனை விருந்தாய சொல்மாலை என்று தமது பதிகத்தில்குறித்துள்ளார். 
மொழிமாற்று, மாலைமாற்று... என இதில் பலவகை உண்டு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில் கீழ்கண்ட தலைப்பில் 

#சம்பந்தர்தூது:
🔹தூது அமைப்பில் உள்ள பாடல்

#எண்ணலங்காரம் :
⏺️தமிழ் இலக்கனத்தில் ஆகுபெயர் வகையைச் சார்ந்தது.
⏺️ஓர் எண்ணால் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது:

#ஏகபாதம்:
🔹நான்கு அடிகள் உள்ள பாடலில் ஒரே வரியையே மீண்டும் மீண்டும் வைத்துப் பாடுவது, ஆனால் ஒவ்வொரு அடியும் வேறு வேறு பொருள் தருவது.

#மடக்கணி:
🔹மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.

#மொழிமாற்று:
🔹ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.*

மேலும்,

🔹திருவியமகம் ( ஒவ்வொரு இரண்டு அடிகளின் கடைசியில் ஒரே வார்த்தையை, வேறு வேறு அர்த்தம் தருமாறு பாடுவது) , 

🔼 சக்கரமாற்று (ஒருபாடலின் இறுதியில் சொன்ன பெயரை அடுத்த பாடலின் ஆரம்பத்தில் வைத்துப் பாடுவது),  

🔸மாலைமாற்று (முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும் ஒரே வார்த்தை, ஒரே அர்த்தம் தருவது) , 

🎆இது போன்று ஏராளமான அமைப்பில் சம்பந்தர் பெருமான், பதிகங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

❇️ இந்த வகையில் நாம் இந்த பதிவுகளில் திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி சிந்திப்போம்.

🎄திருஎழுக்கூற்றிருக்கை:

💥இவ்வகைப்பாடல்கள் இயற்றி அமைத்துப் பாடுவதற்குக் மிகக் கடினமானதாகும்.  ஞானம் இல்லாத கவிஞர்களால்  இயற்ற முடியாது.  மிறைகவி என்றும் கூறுவர்.

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றில் பதிமூன்று அறைகள்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
அமைப்பர்.

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
📔இனி இந்தப் பதிகப் பாடல் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி
தொடர்ந்து சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💠தேரின் மேல்பாகம்:

1️⃣மேல் அடுக்கு : ஒன்று:  
                             1  2  1
☢️ பாடல் : (வரிகள்:1-2)

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்

(1) ஓர் உரு வாயினை
      மான் ஆங்காரத்து

(2) ஈர் இயல்பு ஆய்

(1) ஒரு விண் முதல் பூதலம்

☣️ பொருள்:

(1) ஈசன், ஏகரூபனாய் இருந்து 5 தொழில் களுக்கும் அதிபதியாக விளங்குபவன்.

🔸ஐந்தொழில் : 
   படைத்தல், காத்தல், அழித்தல்,      
   மறைத்தல், அருளுதல் 
   என்ற ஐந்து தொழில்களை      
   செய்வதற்காக ஒரு உருவமாய்
   இருக்கிறார்

🔸ஆங்காரத்து= ஐந்தொழில் ஆற்ற

(2) சிவன், சக்தி எனும் இருவகை 
      இயல்புடன் உயிர்களைப் பதியை    
      நோக்கி சாரவும், மும்மலமும் நீங்கவும் 
       அருள்புரிபவன்.

(1) விண்முதல் 
      ஐம்பூதங்களையும் (படைத்தவன்).

💠விளக்கம்:

சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை, உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.

நன்றி
சிவாயநம
திருச்சிற்றம்பலம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...