Monday, March 30, 2026

ஆமூர் - ரவிஷ்வரர் - ஆனந்தவள்ளி அம்மன் ஆலயம்

ஆமூர் - ரவிஷ்வரர் - ஆனந்தவள்ளி அம்மன் ஆலயம்

ஆமூர் - ரவீஸ்வரர் கோவில்,

திருச்சி- முசிறி - நாமக்கல் சாலையில் சுமார் திருச்சியில் இருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில்.

இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி.
இது ஒரு ஒரு பரிகாரத் தலமாகும்.

சுவாமி: ரவீஸ்வரர் கிழக்கு நோக்கியும்
இங்கு அம்பிகை ஆனந்தவள்ளி என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள்.  உபசன்னதிகளும் உள்ளன.
1972 மற்றும் 1996 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது.

அனைத்து பூசைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

🛕கோயில் அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கியது. காட்சி கோபுரத்துடன் அமைந்தது.
ஆலயத்திற்குள் சூரிய தீர்த்த கிணறு தென்கிழக்கில் உள்ளது.
276 திருமுறை பாடல் தலங்கள் சுவாமி அம்பாள் பெயர்களுடன் எழுதப்பட்டுள்ளது. 
பிரதோஷ நந்தியை தனிமண்டபத்துடன் அமைந்துள்ளார்.

இக்கோயிலில் சுவாமி ரவீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பிகை ஆனந்தவள்ளி தெற்கு நோக்கியும் சன்னதிகள் அமைத்துள்ளார்கள்.
இரண்டும் முன் மண்டபத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.
சுவாமி கருவரை முன்பு விநாயகர் மற்றும் பால தண்டபானியும் இருபுறமும் உள்ளனர்.

பிரகாரத்தில், விநாயகர், புன்முறுவல் பூக்கும் தெட்சிணாமூர்த்தி - கால முனிவருடன்,
வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர்,
பிரம்மா, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், மற்றும் நவகிரகங்கள் உள்ளன.

முருகன் பாலாபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறுகிறார்.

தலவரலாறு அழகிய ஓவியங்களால் உள் மண்டத்தில் புனரமைப்புடன் உள்ளது. 

பூசைகள்வழிபாடு: காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

 முக்கிய விழாக்கள். 
 ஐப்பசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள்.

சூரிய பூசை:
சித்திரை 1. அன்று காலை 5.50 - 6.00 சூரிய பூசை சிறப்பாக நடைபெறுகிறது.

🌼சிறப்பு:
சூரியன்
💥ரவீசுவரர் சுவாமி எழுந்தருளியுள்ள ஆமூருக்கு திருஆதவத்தூர் என்ற பெயரும் உண்டு. 

💥சூரியனின் வெப்பத்தைத் தணித்த ஆமூர்.

 நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சூரிய பகவான், தாங்க முடியாத அளவின் வெப்பம் காரணமாக உஷ்ணத்தால் தகித்துக் கொண்டிருந்தார்.இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார்; 

💥இத்தல இறைவனை சூரியபகவான் வழிபட்டதால், சூரிய தோஷம், ஜாதக தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் தலமாக இது விளங்குகிறது. 

சூரிய பகவானின் வேண்டுகோளை ஏற்று, ஆனந்தவல்லி அம்மன் உடனுறையாக ரவீசுவரர் சுவாமி (சிவபெருமான்-பார்வதி) தம்பதி சகிதமாக எழுந்தருளி, அவருக்கு நேர் எதிரில் காட்சியளிப்பதால், இத்திருக்கோயில் தனி பிரசித்தி பெற்று விளங்குகிறது

திருவதன தட்சிணாமூர்த்தி
💥 பிரகாரத்தில் உள்ள திருவதன தட்சிணாமூர்த்தியை சித்தர்கள் இந்த கோவிலில் வணங்குகிறார்கள். 
இத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள், திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். காலவ மகரிஷி, இத்தல ஈசனின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார். இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள்  திருமகளை திருமணம் புரிந்த போது, லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும், பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம். அந்த தெய்வீக காட்சியைக் கண்ட தேவர்கள் எல்லாம் மணம் குளிர்ந்து தட்சிணா மூர்த்தி, காலவ மகரிஷி, பெருமாள் தம்பதிகள் மேல் மலர்கள் தூவி வணங்கினார்கள். அன்று முதல் ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தி, திருவதன தட்சிணா மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருவதன தட்சிணா மூர்த்தியைப் போல பெருமாளும், லட்சுமி தேவியும் புன்னகை புரிய அப்போது தோன்றியதே பெருமாளின் அழகிய மணவாளன் தரிசனம். திருமணமானவர்கள் முதன் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே திருவதன தட்சிணா மூர்த்தி ஆவார். இங்கு தரிசனம் பெறும் புதுமணத் தம்பதிகளுக்கு மற்றோர் ஈடு இணையற்ற பாக்கியமும் காத்திருக்கிறது. தம்பதிகள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தியையும், காலவ மகரிஷியையும் வணங்கும்போது அது குபேர திசையான வடக்கு நோக்கி அமைவதால் காலவ மகரிஷியின் 360 திருமகள் தேவிகளின் ஒருமித்த லட்சுமி கடாட்ச சக்திகளுமே அவர்கள் மேல் குபேர நிதியாக பொழியும்.

இரட்டை வாகன பைரவர்

💥 இரட்டை வாகனத்துடன் இருக்கும்  பைரவர் அரிய தோற்றம்
பொதுவாக சிவாலயங்களில் இறைவன் சன்னதி மண்டபத்துக்கு வெளியே தெற்குத் திசை நோக்கி தான் பைரவர் எழுந்தருளியிருப்பார். ஆனால், இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரரின் சன்னதி மண்டபப் பகுதியில், மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பைரவர் தனது வாகனமான நாயுடன் தான் காட்சி அளிப்பார் . ஆனால், இக்கோவிலில் வலதுபுறத்தில் நாய் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார். 

💥கல்வியில் சிறக்க அருளும் இந்த இரட்டை வாகன பைரவர்  கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகள் இந்த இரட்டை வாகன பைரவரை வழிபட்டு தங்கள் நாவில் தேன் தடவிச் சென்றால் அவர்களது குறைகள் நீங்கும்.

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். 

ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. 

பிரார்த்தனை செலுத்தவும், வழிபாடுகள் செய்யவும் பத்தர்கள் விஷேச காலங்களில் அதிகம் வருகிறார்கள்.

நன்றி🙏
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம்  15.02.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...