Saturday, June 27, 2026

பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் -
பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம்

கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ஊர்
அ/மி பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம்
பவானி ஆற்றின் கரையோரம்,
பசுமை சூழ அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில்,
நம் இனிய ஈசன், திருமகழீசராக
(சுயம்பு லிங்க திருமேனியராய்) அருட்காட்சியளிக்கிறார்.

தனி சன்னதியில் யோக பீடம் எனும் சதுர பீடத்தில் நம் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அழகுற அருள்பாலிக்கிறாள். அம்பாளின் மகுடம்
ஜடா மகுடமாக (வரிவரியாக சடை முடிய பெற்றது) அணிந்திருப்பது விசேஷம்.

பவானி ஆற்றின் கரையில்,
துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஐந்து சிவஸ்தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்தின் இறைவனை,
பல சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டு இறையருள் பெற்றுள்ளனர்.

முற்காலத்தில், மகிழ மரங்கள் அடர்ந்து
வளர்ந்திருந்த வனமாக இருந்த இங்கு இறைவன் சுயம்புவாக தோன்றியதால்,
மகிழ வனமுடைய நாயனார் எனும் காரணப்பெயரிட்டு வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
(பாண்டியர்களின் மீன் கொடி சின்னமும், சோழர்களின் கல்வெட்டும் காணப்படுகிறது.
 இத்திருத்தலம், உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான சிறப்புமிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும்

நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், மஹா சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொன்னாச்சியம்மன் ஆலயம்
மேலும், இவ்வாலயத்திற்குத் தெற்கில் இவ்வூரில் உள்ள சிறப்புவாய்ந்த அ/மி ராஜராஜேஸ்வரி பொன்னாச்சியம்மன் ஆலயம் மற்றும் பாலமுருகன் ஆலயங்கள் மிகவும் புகழ் பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது 
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️


பண்ணாரி மாரியம்மன் கோயில் 14.06.26

பண்ணாரி மாரியம்மன் கோயில்
அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும். அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது. இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் என்னும் பேராற்றலாக எழுந்தருளியுள்ளது.
 தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த கோவிலாகும்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே இக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம்
 பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.

ஆலய அமைப்பு
இத்தலத்தில் தெற்குப் பார்த்த சதுர வடிவ கருவறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு வடிவமாக உள்ளது. பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் மூலவர் சன்னதியின் மேல் ஐந்து கலசங்கள் கொண்ட சுமார் 25அடி உயரமுள்ள விமானம் கோபுர அமைப்பில் உள்ளது.

அருள்மிகு சந்தான விநாயகர் சன்னதி
உபசன்னதியாக அமைந்துள்ளது.
திருக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபத்தில் திருக்கோயில் தல புராணம் தற்கால ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீமிதி (பூக்குழி) திருவிழா.பெரிய திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும்.

தலவரலாறு - 1.
பண்ணாரி மாரியம்மனது வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.அக்காலத்தில் வண்ணார் சமுதாயத்தைச் சார்ந்த கணவன் மனைவியும் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலை கீழ் அமைந்து இருந்த ஆற்றில் துணி சலவை செய்ய எடுத்து சென்றனர்.அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.பின் சலவை துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது. பின் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை.பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் கவுண்டரிடம் முறையிட்டுள்ளனர். பின் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே அவர்களால் தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது.(அதை இன்றளவும் நாம் பூசையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). அந்த தாழியின் உள்ளேயே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது. அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு நாட்டு வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர். அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது. இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது, 
தலவரலாறு 2.
இன்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும்.காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும்.இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் தென்குமரி தெய்வத்தின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகினுக்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும் புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
இச்சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள்.காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.ஒரு பட்டியிலிருந்து காராம்பசு ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்போன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று கவனித்தான். அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பால் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தான். இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியோர்களிடமும் விபரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் ( மாடு ) காராம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான். அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியனைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள்.இது தெய்வத்தின் திருவிளையாடல் என்றெண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்யும் போது கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள். அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு ( மண்ணார்க்காடு ) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் எனப் போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார். அன்னையின் அருள்வாக்கின் படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்களும் பெரியதனக்காரர்களும் அன்னையின் சிறப்புக் கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோயில் அமைத்து பத்மபீடத்துடன் திருவுருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

பிராத்தணைத்தலமாக இருப்பதால், பக்தர்கள் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது.
மாலை 6.00 மணி அளவில் தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️
https://www.facebook.com/share/v/17veRChngh/பண்ணாரி

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் 14.06.26

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆஞ்சநேயரின் தாகத்தை போக்குவதற்காக முருகன் நீர் ஊற்று ஏற்படுத்திய கோவில் இதுவாகும். மன அமைதியை தரும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. 
அமைவிடம்: கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தூரம் சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீ. தூரம் சென்றால் இத்திருக்கோவிலை அடையலாம்.
மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் கணுவாய் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் உண்மையில் மருதமலை மலைகளின் வடக்குப் பக்க சரிவில் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அகலமான சுமார் 500 படிகள் உள்ளன.
சிறப்பம்சம்: இங்குள்ள சிறிய சுனை நீர் (தீர்த்தம்) மிகவும் பிரசித்தி பெற்றது. 
இத்திருக்கோவிலுக்கு வடக்கே குரு விருட்சமலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று 3 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
தலவரலாறு
இந்த கோவில் ராமாயண கால தொடர்பு உடையது. அதாவது இலங்கையை ஆண்ட ராவணன், சீதையை கடத்தி சென்று சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்க ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்தபோது, ராவணனின் மகனால் விடப்பட்ட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப்போனான்.
அவரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகை தேவைப்பட்டது. அதை கொண்டு வர அனுமான் அனுப்பி வைக்கப்பட்டார். மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால் அந்த மலையை பெயர்த்து எடுத்து கொண்டு அனுமான் பறந்து சென்றார். சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும்போது அனுமான் மிகவும் தாகமாக உணர்ந்ததாகவும், தாகத்தைத் தணிக்க வேண்டி அப்போது அவர் முருகப்பெருமானை வேண்ட, தனது வேல் கொண்டு ஒரு சுனையை
முருகன் தனது ஈட்டியை எறிந்து, இந்த நீரூற்று நீரை அனுமன் முன் தோன்றச் செய்து, அனுமனது தாகத்தைத் தணித்தார். என்பது தலவரலாறு.

அனு என்பது அனுமனையும் வாவி என்பது நீர் என்ற பொருளையும் குறிப்பதால் இவ்விடம் அனுவாவி என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அடிவாரத்தில் இருந்து 586 படிக்கட்டுகள் ஏறி கோவிலை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம். படிகள் அதிக செங்குத்து உயரம் இல்லாது இருப்பதால், மலைக்குச் செல்வது அதிக சிரமம் இல்லை.
மலை ஏறும் போது நடுவில் வடக்கு நோக்கி ஒரு பெரிய மற்றும் மிகப்பெரிய அனுமான் சிலையுடன் ஒரு துணை சன்னதியும் உள்ளது.
அணுவாவி முருகன் கோவில் கிபி 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. சற்று உயரத்தில் சுமார் 20 படிகள் உயரத்தில் சிறிய கருவரையில் சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
முனிவரும், சித்தருமான அகத்தியர், முருகக்கடவுளின் சீடராக அறியப்படுகிறார். குருவுக்கும், சீடருக்கும் ஒரே இடத்தில் இங்கு கோவில் உள்ளது. குருவான சுப்பிரமணியசுவாமி மலை உச்சியில் இருந்து அருள்பாலிக்கிறார். சீடரான அகத்தியர் மலை அடிவாரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அடிவாரத்தில் உள்ள அகத்தியர் தினமும் மலைக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்கி விட்டு வருவதாக நம்பப்படுகிறது. அங்குள்ள குகையில் தான் அகத்தியர் கோவிலை 2-ம் தலைமுறையாக பராமரித்த காட்டுசுவாமிகள் தவம் மேற்கொண்டு இருக்கிறார்.
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு.சூரசம்காரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் மற்றும் கிருத்திகை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
திருக்கோவில் மிகவும் அமைதியான, இயற்கையான சூழல் கொண்ட கோவில். 
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️https://www.facebook.com/share/p/14dECjtF2to/


சரவணம்பட்டி முருகன் கோவில் 14.06.26

சரவணம்பட்டி முருகன் கோவில் 
இரத்தினகிரி குமரக்கடவுள் என்ற
மருதாச்சலக்கடவுள் திருக்கோவில்
என்றும் அழைக்கப்படும் கரட்டுமேடு கோயில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியான சரவணம்பட்டியில் அமைந்துள்ள ஒரு அமைதியான மற்றும் ஆன்மீக எழுச்சி தரும் முருகன் கோயிலாகும்.
 ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில், நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி ஓர் அமைதியான ஓய்விடத்தை வழங்குவதோடு, அதன் அமைதியான சூழல் மற்றும் பரந்த காட்சிகளுக்காகவும் போற்றப்படுகிறது.

அடிவாரத்தில் வாகன நிறுத்துமிட வசதி உள்ளது. கிழக்குப்பார்த்த அமைப்பில் ஆலயம். மலை அடிவாரத்தில் வடபுரம் தலவிருட்சம் வன்னி மரமும், அதன் அடியில் மேற்கு நோக்கிய அமைப்பில், வன்னீஸ்வரப்பெருமான் என்ற திருநாமத்துடன் லிங்கமூர்த்தியாக சிவன் உள்ளார்.

குமரக்கடவுள் மலைக்கோவில் :

மலை அடிவாரத்தில் உள்ள நுழைவுவாயில் அடுத்து ஒரு பெரிய மண்டபம் அமைந்துள்ளது. ஒரு விநாயகர் ஆலயமும் உள்ளது. தொடர்ந்து இடும்பன் சன்னதி மற்றும் கன்னிமார் சன்னதிகள் கடந்து பக்தர்கள் சுமார் 150 படிக்கட்டுகள் வழியாக ஏறி குன்றில்மேல் உள்ள ஆலயம் அடையலாம்.
செல்லும் வழி எல்லாம் மரங்கள் உள்ளதால் மர நிழல்கள் கலைப்பை போக்கும்.
குன்றின் உச்சியில் நீண்ட செவ்வக பெரிய மண்டபத்தில், முருகப்பெருமான் கருவறை உள்ளது. அங்கு மிகவும் பிரியமானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வர்ணிக்கப்படும் வடிவத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
முன்புறம் தீபத்தூன் அமைந்துள்ளது
மூலவர் கருவரை வலதுபுறம் தனி விநாயகர் சன்னதியும் உள்ளது.
மேல் பிரகாரத்தில் தனி விநாயகர் மற்றும் ஒரு வேல் கருவரையும் அமைக்கப்பட்டுள்ளது.  

பிரகாரத்திலிருந்து கோவைப்பகுதி முழுமையும் காட்சிப்பெறலாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ் நகரின் பல பகுதிகள் தூரத்துக்காட்சியாகவும் பார்க்கலாம்.
இக்கோயில் தினமும் அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையிலும், மீண்டும் மாலை 4-7.00 மணிவரையிலும் திறந்திருப்பதால், ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களுக்கும், அமைதியான ஓர் இடத்தைத் தேடிச் சிந்திக்க விரும்பும் குடும்பங்களுக்கும் இது ஒரு பிரபலமான இடமாக விளங்குகிறது.

இது ஒரு சிறப்பான வரலாற்றுக் கதையைக் கொண்டுள்ளது. ஒரு அரக்கன் சிவபெருமானை பல நூற்றாண்டுகளாக தவம் செய்து, அனைத்து உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். வரம் மற்றும் அவரது வல்லமையின் சக்தியால் போதையில், அவன் மிகவும் கொடூரமான முறையில் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான், . ஒருமுறை அரக்கன் தன் மறைவிடத்தில் தேவர்களின் ராஜாவாகிய இந்திராவைப் பார்த்தான். இந்திரன் ஓட ஆரம்பித்தான் ஆனால் அவனை துரத்தியது. இந்திரன் இந்த ரத்னகிரி மலையை அடைந்தார், அங்கு முருகப்பெருமான் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றினார். ஏமாற்றத்துடன் அரக்கன் திரும்பினான். சாஸ்திரப்படி இங்குதான் அந்த அதிசயம் நடந்தது.
சுற்றுப்புறம் அமைதியாகவும் பசுமையாகவும் உள்ளது. கோயில் உயரமான இடத்தில் அமைந்திருப்பதால், இதமான காற்றும் ரம்மியமான காட்சிகளும் தியானச் சூழலை மேம்படுத்துகின்றன. சிலருக்கு இந்த ஏற்றம் சற்று செங்குத்தாகத் தோன்றினாலும், அந்த முயற்சிக்கு மன அமைதியும் மன இணைப்பும் வெகுமதியாகக் கிடைக்கின்றன
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️


மருதமலை - பாம்பாட்டி சித்தர் ஆலயம் 14.06.26

மருதமலை - பாம்பாட்டி சித்தர் ஆலயம் 

கோவையின் மிகப்பிரசித்தி பெற்ற குன்றக் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை காற்று நிறைந்த சூழலில்
அமைந்துள்ள மருதமலை, முருகப் பெருமானின் அறுபடை வீடு

இவ்வாலயம் மலைக்குன்றின் மேல் உள்ளது.
ஆதிமூலஸ்தானம், தண்டாயுதபானி சன்னதி, பஞ்ச விருட்ஷ விநாயகர் அடுத்து பாம்பாட்டி சித்தர் குகைக் கோவில் இவைகள் மிக முக்கியமான சன்னதிகள்
பாம்பாட்டி சித்தர் முருகனின் அருள்பெற்றவர் பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது.
முக்கியத்துவம் மிக்க இந்த சித்தருக்கு தனிக் குகையில் மண்டபம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
 
கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. 
பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர் குகைக்கும் வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி சித்தர் தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
 பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். 
தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.

மருதமலையின் முக்கிய சித்தர் ஆலயம்

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
மலைவாழ் விலங்குகள் அச்சுறுத்தல் உள்ளதால் மலைக்கோவிலுக்கு செல்ல.
மலைப் பாதை மற்றும் வாகனப்பாதைகள் காலை 6.00 மணிக்கு திறப்பு மற்றும் மாலையில் பூட்டி விடுவார்கள். 
அடிவார ஊரில் ஏராளமான கடைகள் ஹோட்டல்கள் தங்குமிடங்கள் உண்டு. வாகணங்களில் வருபவர்கள் பொருட்கள் வைத்துவிட்டு, குளியல் கழிவறைகள் பயன்படுத்தி தங்கி செல்ல நபர் கட்டணம் வசூல் செய்கிறார்கள். வாகனங்களும் அங்கேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மலையில் மீது வாகன நிறுத்தம் இடத்திலிருந்து ஆலயம் அடைய சுமார் 50 படிகள் மேல ஏறி சென்று தரிசிக்கவும் இப்போது மின்தூக்கி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மலைமீதும் கழிவரைகள் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
ஆலயம் தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரிப்பு செய்யப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சில முறைகள் தரிசனம் செய்து உள்ளோம். 14.06.2026 மீள் தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள் 
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️


மருதமலை முருகன் கோவில் 14.06.26

மருதமலை முருகன் கோவில் 
மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில் (Maruthamalai Marudhachalamurthy Temple)
 கோவையின் மிகப்பிரசித்தி பெற்ற குன்றக் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை காற்று நிறைந்த சூழலில்
அமைந்துள்ள மருதமலை, முருகப் பெருமானின் அறுபடை வீடு கோவில்களுக்கு அடுத்தபடியாக அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாக உள்ளது.
சிறப்பு:
அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் “ஏழாம்படை வீடாக’ கருதப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது இத்தலம், இங்குள்ள முருகன் மட்டுமல்ல, விநாயகரும் சுயம்புவாக தோன்றியவர் ஆவார். மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் முதன்மையானது
அமைவிடம்
கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆலயம் செல்ல பாதைகள் அமைப்பு:
இத்திருக்கோயில் மலைக் கோயிலாகும். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்ல சுமார் 646 படிக்கட்டுகள் கொண்ட படிப்பாதை மற்றும் வாகனங்கள் மூலம் செல்ல 2.5 கி.மீ நீளத்திற்கு தார்சாலை வசதியும் உள்ளது.

மலை அடிவாரத்தில் இருந்து கோவில் நிர்வாகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டனம் ரூ 10/- ஒரு நபருக்கு. மலை மீது வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து இராஜகோபுர வழியில் ஆலயம் செல்லலாம்.
மலைப்பாதை
தான்தோன்றி விநாயகர்
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன.
அடிவாரத்திலிருந்து இப்பாதை ஆதிமூலஸ்தானத்தில் முடிவடைகிறது.
இப்பாதையில் செல்வோர் கவனிக்கக்கூடிய முக்கிய இடங்கள்: பதினெட்டாம் படி எனப்படும் முதல் பதினெட்டுப் படிகள்; காவடி சுமந்த வடிவிலுள்ள இடும்பன் கோயில்; குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறை. படிப்பாதை வழியே சென்றால் ஆதிமூலஸ்தான சன்னதியை அடையலாம்.
மருதமலைக்கோயில் அமைப்பு🛕
வாகனங்கள் மூலம் மலையின் மீது சென்றதும் அங்கிருந்து சுமார் 50 படிக்கட்டுகள் மூலம் மேல ஏறி சென்று அல்லது மின் தூக்கி மூலம் ஆலய வளாகம் அடையலாம்.  
கிழக்குப்பார்த்த ஏழு நிலை கொண்ட இராஜகோபுரத்துடன் அமையப்பெற்றுள்ள இத்திருக்கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் அமைக்கப்பட்ட பாதை, இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது.

ஆதிமூலஸ்தானம்  
இது தண்டபானி ஆலயத்தை ஒட்டித்தென்புறமாக உள்ளது
ஆதிமூலஸ்தானம் கருங்கல் கட்டிடங்கள் ஆகும் ஆதிமூலஸ்தானத்திற்கு முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன

இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

பஞ்ச விருட்ச விநாயகர்
ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது. பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்

 தண்டபாணி ஆலயம் அமைப்பு :

இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.
செங்கற்களால் கட்டப்பட்டுள்ள
மகாமண்டபம். அதன் முன்புறம் உள்ள அலங்கார மண்டபம் முன்புறம் மயில்வாகனம், பலிபீடம், கொடிமரம், தீப ஸ்தம்பம் ஆகியவை உள்ளன.

அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜ பெருமாள் சன்னிதி,

அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது, தண்டபானி கருவரை தென்புறத்தில் அருள்மிகு பட்டீஸ்வரர் சன்னதி, வட புறத்தில் அருள்மிகு மரகதாம்பிகை சன்னதி, அமைக்கப்பட்டுள்ளன.

தண்டாயுதபாணி சன்னதி
முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

பாம்பாட்டி சித்தர் குகை (தனி பதிவு)

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
மலைவாழ் விலங்குகள் அச்சுறுத்தல் உள்ளதால் மலைக்கோவிலுக்கு செல்ல.
மலைப் பாதை மற்றும் வாகனப்பாதைகள் காலை 6.00 மணிக்கு திறப்பு மற்றும் மாலையில் பூட்டி விடுவார்கள். 
அடிவார ஊரில் ஏராளமான கடைகள் ஹோட்டல்கள் தங்குமிடங்கள் உண்டு. வாகணங்களில் வருபவர்கள் பொருட்கள் வைத்துவிட்டு, குளியல் கழிவறைகள் பயன்படுத்தி தங்கி செல்ல நபர் கட்டணம் வசூல் செய்கிறார்கள். வாகனங்களும் அங்கேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மலையில் மீது வாகன நிறுத்தம் இடத்திலிருந்து ஆலயம் அடைய சுமார் 50 படிகள் மேல ஏறி சென்று தரிசிக்கவும் இப்போது மின்தூக்கி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மலைமீதும் கழிவரைகள் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
ஆலயம் தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரிப்பு செய்யப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சில முறைகள் தரிசனம் செய்து உள்ளோம். 14.06.2026 மீள் தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்

குமரன்கோட்டம் சுவாமிநாதசுவாமி ஆலயம் -அறுபடை முருகன் ஆலயம் கோயம்புத்தூர் 13.06.26

குமரன்கோட்டம் சுவாமிநாதசுவாமி ஆலயம் -அறுபடை முருகன் ஆலயம்
அமைவிடம்
கோயம்புத்தூர் நகரத்திலிருந்து திருச்சி சாலையில் கிழக்கே சுமார் 21 கி.மீ. சூலூர் பகுதியில் அமைந்துள்ளது

ஆர்.வி.எஸ் குழுமம் என்ற கல்வி நிறுவனம் இந்த ஊரில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளது . அவற்றில் முதலாவது அறுபடை வீடு முருகன் கோயில். இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், இங்கு தரிசித்து வழிபடுபவர்களுக்கு ஆறு அறுபடை வீடு கோயில்களையும் தரிசித்த பலனும் கிடைக்கும்

மூலவர்:சுவாமி நாதர்
பழமை:500 வருடங்களுக்குள்
இங்குள்ள சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் தான் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
மூர்த்திகளும் ஒவ்வொரு வடிவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளன.
மூல சன்னதி சுவாமிமலை பாணியில் (மயிலுக்குப் பதிலாக யானை) அமைக்கப்பட்டுள்ளதால், இக்கோயில் ஸ்ரீ சுவாமிநாதன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது கோவை குமார கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

 இதில் மிகப்பெரும் விசேஷம் என்னவென்றால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடைவீடுகளில் முருகப்பெருமான் எந்த பெயரில் எந்த திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாரோ, அதே பெயரில் அதே திசையில் இங்கும் அருள்பாலிக்கிறார். இந்த சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும்.

ஆலய அமைப்பு 
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தின் வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் அடுத்ததாக குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப் பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை. இந்த சரவண பொய்கையை அஷ்டதிக் பாலகர்கள் காவல் காத்து வருகிறார்கள்.
பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தையும் மயில் வாகனத்தையும் தாண்டி சென்றால் சுவாமிநாத சுவாமி சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் "நானே அழகு' என்பது போல் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார்.
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, "ஒம்' என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.
 சுவாமி மலையில் இருப்பது போலவே யானை வாகனமாக உள்ளது.
மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளி- தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால் சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார். அடுத்து சென்றால் தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருக்கிறார். தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் தனி சன்னதி, அடுத்து இல்வாழ்க்கை இனிமையாக அமைய என்னை வணங்கு என்பதைப் போல், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருளாசி அள்ளி வழங்குகிறார்.

இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறர்கள்

மேலும், விசாலாட்சியுடன் கூடிய காசி விஸ்வநாதருக்கு ஒரு சன்னதி உள்ளது, மேலும் பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சன்னதியும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அனுமன், தட்சிணாமூர்த்தி மற்றும் தன்வந்திரி ஆகியோரும் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். நவகிரக சன்னதியின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. கோபுரம் உட்பட, இக்கோயிலில் கட்டப்பட்ட அனைத்தும் பளிங்கு போன்ற வெண் கல்லால் ஆனவை. பக்தர்கள் தூய உள்ளத்துடன் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இது இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம்.

காலை5 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
13.6.2026 Subbram_ தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள் ⛳

செஞ்சேரிமலை - மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில்கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் 13.06.26

செஞ்சேரிமலை - மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில்
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே செஞ்சேரிமலையில் அமைந்துள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில்திருப்புகழ் தலம். முருகப்பெருமான் அருள்புரியும் மிகச்சிறப்பான ஆன்மீகத் தலமாகும். அறுபடை வீடுகளுக்கும் முந்தைய முருகன் தலம்
🛐செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலின் சிறப்புகள் மூலவர்:
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம். இங்குள்ள மூலவர் மந்திராசல வேலாயுதமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களையும் ஒரே நேரத்தில் இங்கு தரிசிக்கலாம்.
இக்கோயிலின் மற்றொரு முக்கியச் சிறப்பு, இங்குள்ள மயில் வாகனத்தின் தலை வழக்கத்திற்கு மாறாக இடதுபுறம் திரும்பியிருக்கும்.
தலவிருட்சம்: இக்கோயிலின் தலவிருட்சமாக கருநொச்சி விளங்குகிறது.
சிவபெருமான் தன் மகன் முருகனுக்கு உபதேசித்த தலம் தென் சேரி மலை. இவ்விடத்தில் முருகன் சிவனை நோக்கி தவம் இருந்து சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை பெற்றார்.

முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது  
சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம். அறுபடை வீடுகளுக்கும் முந்தையது.
தல வரலாறு
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அதனால் அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து,'குமரா! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவபெருமானின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார். பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

🛕ஆலய அமைப்பு 
முருகன் இருக்கும் மலை சிறிய மலைதான் , மலையைச் சுற்றிவர கிரிவீதி உள்ளது. அழகிய படிக்கட்டுகள் மலையின் கிழக்கு பகுதியில் உள்ளது. மலைக்குன்று மேல் ஏறி சென்று ஆலயம் அடைய சுமார் 200 படிகள் உண்டு. வயதானவர்களும் மலைப் படிகளில் மெல்ல ஏறி தரிசிக்கலாம் வழியில் பாதவிநாயகர் மற்றும் சில மன்டபங்களும், குழந்தை வேலாயுதனார், சப்தகன்னிகள் சன்னதியும் உண்டு. 
மலை மீது உள்ள ஆலயம் கிழக்கு நோக்கியது. கொடிமரம் மற்றும் நீண்ட செவ்வக வடிவ முன் மண்டபம் உள்ளது. 
வடமேற்குப் பிரகாரகத்தின் மூலையில் உள்ளே நுழையும் வழி உள்ளது. படி வழியாகச் சென்றால் சந்திதிக்கு நேரே கிழக்கு பார்த்த மூன்று நுழைவாயில்கள் உள்ளன
நுழைவாயில் மூன்றாக இருந்தாலும் அம்மன், ஸ்வாமி, முருகன் மூவரையும் ஒரே மண்டபத்தில் அடுத்து அடுத்துக் காணலாம்.
அம்மன் பெரியநாயகி அம்மன், சுவாமி கைலாசநாதர், தெற்கில் நடராஜர் சன்னதி உள்ளது.
 மூலவராக முருகன் மந்திரகிரி வேலாயுத சுவாமி இருக்கும் சந்நதி பெரியது.

ஆறுமுகங்களுடன், பன்னிரு கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடனும், மயிலுடனும் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இடது கையில் சேவலே ஒரு கருவி போல இருக்கிறது, இது முருகன் தவம் செய்த இடம்.
முருகன் சூரசம்கார காலத்திற்கு முந்தியது என்பதால் மயில் முருகனது இடதுபுறம் நோக்கி இருக்கிறது.
முருகன் தன் கைகளில் சேவலும், பாம்பும் ஏந்தியிருக்கும் தனிச்சிறப்பு
இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருப்பது சிறப்பு.
கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும்.
 பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.

சூரசம்காரத்திற்கு முன் இந்திரன் மயிலாக இருப்பார் முருகனுக்கு, அப்புறம் சூரசம்காரம் செய்தபின் சூரபதுமனின் உடல் , ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி மயிலாவும் மாறின. இறைவன் அவற்றுக்கு ஞானத்தை அளித்து சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார். அதன் பின் இந்திரனாகிய மயில் மீதிருந்து இறங்கி சூரபத்மனாகிய மயில் மீது எழுந்தருளினார். பின் இதுவரை மயிலாகவும் சேவலாகவும் நின்ற இந்திரனும், அக்கினியும் முருகன் அருட்பார்வையால் பழைய வடிவை பெற்றனர். என்பது கந்தபுராணம்
தனித்தனி கோஷ்ட பிரகாரங்கள் அமைப்பும் அவற்றில் முறையான தெய்வ சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்மன்டபத்தில் உற்சவர் விஷேச அலங்காரம், சுவாமி புறப்பாடு பூசைகள் செய்யப்படுகிறது.
ஒரு சுற்றுப்பிரகாரம் உள்ளது. 
தங்கத்தேர் அமைக்கப்பட்டு கார்த்திகை முதலிய விஷேச நாட்களில் தேர் திருவிழா மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. பிரகாரத்தில்
இங்குள்ள திருமால் வலது கையில் சிவலிங்கத்தை வைத்து க்கொண்டு இருக்கிறார்.

படி ஏறமுடியாதவர்களுக்கு, சிறிய வாகனங்கள் மூலமாகவும் மலைக்கோவில் அடையலாம்.
வாகனங்களில் செல்ல மலையின் பின்புறம் மேற்கில் வாகனப் பாதை உள்ளது வசதியாக இருக்கிறது. வளைந்து வளைந்து செங்குத்தாய் சாலை கோவிலின் அருகில் முடிகிறது.

இந்த கோவிலை பற்றி இங்குள்ள நம்பிக்கை:
இந்த ஊரில் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு மந்திரகிரி என்று பெயர் வைப்பது வழக்கம் எந்த வீட்டில் பசு, கன்றை ஈன்றாலும் முதலில் கறந்த பாலை முருகனுக்கு கொடுத்து விடுவார்களாம். காரியங்களை தொடங்கும் போது முருகனின் பூவிழுதல் குறிபார்ப்பார்களாம் ,வலது பக்கம் பூ விழுந்தால் நல்லது, இடது பக்கம் பூ விழுந்தால் கெட்டது. இரண்டுபுறமும் விழுந்தால் பரவாயில்லை என்று அர்த்தமாம். 
தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்கிறார்கள். கோவிலுக்கு வடக்கில் வள்ளிசுனை உள்ளது.
பிரார்த்தனை
இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து முருகப்பெருமான் சன்னதியில் தீபம் ஏற்றி வேண்டினால் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு முதலிய நற்பலன்களை அடையலாம். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது
அமைவிடம்:
கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தென் சேரி மலைக்கு உடுமலைபேட்டை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பத்தூரில் இருந்து வெகு சில பேருந்துகள் இக்கோவில் வழியே உடுமலைபேட்டை செல்லுகின்றது.

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைதிறந்திருக்கும்.

13.6.2026 Subbram_ தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள் ⛳


சித்தம்பலம் சிவன் கோயில், நவகிரகக் கோட்டைக்கோவில் 13.06.26

சித்தம்பலம் சிவன் கோயில், நவகிரகக் கோட்டைக்கோவில்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் "கோளறுபதி நவகிரக கோட்டை" அமைந்துள்ளது. இதுவே உலகத்தில் நவகிரகங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரே கோட்டை வடிவிலான சிவன் கோயிலாகும். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள இக்கோயில், பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் வரலாற்று சிறப்பும், கட்டிடக்கலை சிறப்பும் கொண்டது.

ஸ்ரீ சித்தம்பலம் சிவன் கோயில், ஸ்ரீ நவகிரகக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் கட்டப்பட்ட உண்மையான இடம் சின்னகவுண்டன் புதூர் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நவீன கோயிலாகும். இக்கோயிலைக் கட்டிய பெருமை, இந்து பூசாரியான ஸ்ரீ காமாக்ஷி கோடி மற்றும் அவரது சீடர்களையே சாரும். இக்கோயிலுக்கு வடக்கு நோக்கிய நுழைவாயில் உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்தலாம் அல்லது கோயில் வளாகத்திற்குள் எடுத்துச் செல்லலாம். 
கோயிலின் சிறப்பம்சங்கள்:அமைப்பு:
சிக்கலான சிற்பங்கள் மற்றும் துடிப்பான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அதன் கோபுரம் (கோயில் கோபுரம்) அதன் ஆன்மீக மண்டலத்திற்கு பக்தர்களை வரவேற்கிறது.

இக்கோயிலின் முதன்மைக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்தம்பாளையம் கோயில் திராவிட கட்டிடக்கலையின் உருவகமாகும்.

கோயிலின் கருவறையில் சிவபெருமானின் பிரபஞ்ச ஆற்றலைக் குறிக்கும் லிங்க வடிவில் தெய்வம் உள்ளது.
கோயில் வடக்கு நோக்கியே அமைந்துள்ளது. தொடக்கத்தில், நவகிரக கோட்டை பிரசாதக் கடை உள்ளது. அதற்கு அடுத்ததாக, கிழக்கு நோக்கிய ஸ்ரீ விநாயகர் சன்னதி உள்ளது. இந்த கிழக்கு நோக்கிய விநாயகரின் உப சன்னதிக்கு முன்பாக இரண்டு துவாரபாலக சிலைகள் உள்ளன. இங்கு குணபதி கலையரங்கம் உள்ளது, அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம். அடுத்ததாக, கிழக்கு நோக்கிய உப சன்னதி உள்ளது. அதில் ஒரு ஹோம குண்டம் காணப்படுகிறது. மேலும், ஸ்ரீ நந்திகேஸ்வரரால் சூழப்பட்ட சிவபெருமானின் கிழக்கு நோக்கிய திருவுருவமும் உள்ளது. சிவபெருமானின் சிலைக்குக் கீழே தெய்வீக ஆதிசேஷன் இருக்கிறார்

இக்கோயிலில் நவகிரகங்கள் கோட்டை வடிவில் அமைந்துள்ளன. பக்தர்கள் நவகிரகங்களைச் சுற்றி வரும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதான கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு சதுர மேடை உள்ளது. அதன் மீது, மூலஸ்தானத்தை நோக்கியவாறு தெற்குப் பார்த்த நந்தி வாகனம் அமைந்துள்ளது. இது ஒரு நீரூற்றால் சூழப்பட்டு, மூலஸ்தானத்தை நோக்கியவாறு அமைந்துள்ளது. இந்த நந்தி வாகனத்தைச் சுற்றி 27 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்தின் பின்னாலும் ஒரு விருட்சம் உள்ளது. பிரதான கோவில் வளாகத்தை அடைய பக்தர்கள் நான்கு முதல் ஐந்து படிகள் ஏற வேண்டியிருக்கும். நுழைவாயிலில் இருபுறமும் இரண்டு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. வடக்குப் பார்த்த இந்த இரண்டு துவாரபாலகர் சிலைகளும் மூலஸ்தானத்திற்குக் காவலாக நிற்பது போல் காட்சியளிக்கின்றன
மூலஸ்தானத்தில் ஸ்ரீ சிதம்பலம் சிவனின் மூலவர் வடக்கு நோக்கி சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆவுடையின் அடிபாகம் வட்ட வடிவில் உள்ளது, அதில் 12 ராசிகளும் காட்சியளிக்கின்றன. மேலும், ஒரு சிவலிங்கச் சிலையும் மகாமேருவும் அங்கு உள்ளன. அதனைச் சுற்றி ஸ்ரீ கௌரி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ பத்ரகாளி, ஸ்ரீ யமதர்மராஜன், ஸ்ரீ சித்திரகுப்தன், ஸ்ரீ இந்திரன், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ மகா விஷ்ணு மற்றும் ஸ்ரீ ருத்திரன் ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன. சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிதம்பலம் சிவனின் மூலவர், மிகப் பெரியதாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கிறார். ஒளிமயமான நாகபரணத்துடன் சிவலிங்கத்தைக் காணும்போது, ​​அது பக்தர்களின் கண்களுக்குப் பேரொளி வீசுகிறது.
கோயிலின் உட்புறத்தில் ஸ்ரீ கஜலட்சுமியின் திருவுருவச் சிலை உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒன்பது நவகிரகச் சிலைகளும், இரண்டு நவகிரகச் சிலைகளுக்கு இடையில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான மூன்று நட்சத்திரச் சிலைகளும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் மூலவரை நோக்கியவாறு வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. 
 ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சண்டி ஹோமம் நடத்துவதற்கு இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் பிரசாதம் வழங்குவதில் கோயில் நிர்வாகம் மிகுந்த அக்கறை கொள்கிறது. பொதுவாக, கைபேசிகள் மற்றும் காணொளிப் பதிவு ஆகியவை கோயில் நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்படுவதில்லை. சமீப ஆண்டுகளில், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்குக் குவிகின்றனர். இதன் காரணமாக, இக்கோயிலின் பெயரும் புகழும் படிப்படியாக இந்த மாவட்டத்தின் மூலைமுடுக்குகளெல்லாம் பரவி வருகிறது. இக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற நவகிரக தோஷ பரிகார ஸ்தலமாகும்.
வழிபாடுகள்: ராகு-கேது பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி மற்றும் சோமவார அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் லட்சார்ச்சனை இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
பிறசிறப்புகள்
பல்லடம் சாலையில் அமைந்துள்ள சித்தம்பாளையம் கோயில், இப்பகுதியில் உள்ள பக்தர்களால் போற்றப்படும் புனித தலமாகும்.
சித்தம்பாளையம் கோவிலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, அதன் அமைதியான சூழல், ஆன்மீக புத்துணர்ச்சி பெற விரும்புவோருக்கு ஆறுதல் அளிக்கிறது. கோவில் வளாகம் அமைதியால் சூழப்பட்டுள்ளது, பக்தர்களுக்கு பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான அமைதியான சூழலை வழங்குகிறது. புனிதப் பாடல்களின் தாள முழக்கங்களும், தூபத்தின் நறுமணமும் பக்தி மற்றும் சுயபரிசோதனைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குகின்றன.
ஆண்டு முழுவதும், கோவிலில் பல்வேறு மத திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் நடத்தப்படுகின்றன, தொலைதூரத்திலிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மஹா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை பிரமாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த விழாக்கள் விரிவான சடங்குகள், வண்ணமயமான ஊர்வலங்கள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகளால் குறிக்கப்படுகின்றன, இது கோயிலின் ஆன்மீக சூழலுக்கு அதிர்வு சேர்க்கிறது.

மத முக்கியத்துவம் தவிர, சித்தம்பாளையம் கோயில் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கும் கலாச்சார மையமாகவும் செயல்படுகிறது. கோவிலில் பாரம்பரிய இசை கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் மத சொற்பொழிவுகள் ஆகியவை சமூகத்தின் கலாச்சார கட்டமைப்பை வளப்படுத்துகின்றன.

பல நூற்றாண்டுகளாக, சித்தம்பாளையம் கோயில், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, நம்பிக்கை மற்றும் பக்தியின் கலங்கரை விளக்கமாக உள்ளது. அதன் செழுமையான பாரம்பரியம், கட்டிடக்கலை நேர்த்தி மற்றும் ஆன்மீக ஒளி ஆகியவை தொடர்ந்து வருகை தரும் அனைவருக்கும் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, இது தெய்வீகத்தின் மீதான பயபக்தி மற்றும் பிரமிப்பு உணர்வை வளர்க்கிறது.
தகவல்கள் வலைதளங்கள் - நன்றி🙏

கோவில் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

இடம் மற்றும் வழிகாட்டி:அமைவிடம்: பல்லடம் - உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள சித்தம்பலம் (சின்னகவுண்டன் புதூர்) பகுதியில் உள்ளது.அருகிலுள்ள முக்கிய இடங்கள்: கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரிலிருந்து எளிதாக சாலை மார்க்கமாக இந்த இடத்தை அடையலாம்.
பல்லடத்திலிருந்து சித்தம்பலத்திற்கு உள்ள தூரம் 5 கி.மீ.
திருப்பூரிலிருந்து சித்தம்பலத்திற்கு உள்ள தூரம் 21 கி.மீ. ஆகும்.
ஈரோட்டிலிருந்து சித்தம்பலத்திற்கு உள்ள தூரம் 84 கி.மீ. ஆகும்.
13.6.2026 Subbram_தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்

மாதப்பூர் முத்துக்குமார சுவாமி ஆலயம் 13.06.26

மாதப்பூர் முத்துக்குமார சுவாமி ஆலயம்
இத்தலம் அமைந்துள்ள இடம் பல்லடம்-காங்கேயம் நெடுஞ்சாலையில் உள்ள (என்ஹச்-67) மாதப்பூர் எனும் கிராமம்
ஆலயம் செல்ல ஆர்ச் ஒன்றும் அதன் வழியாக சுமார் 100 மீட்டர் பாதையும் அமைத்து உள்ளனர்.

மூலவர் : முத்து குமார சுவாமி.
உற்சவர் : முத்துகுமாரசுவாமி, மதிமாலீஸ்வரர். மரகதாம்பிகை.
அம்மன்/தாயார் : மரகதாம்பிகை.
தல விருட்சம் : ஆலமரம்.
தீர்த்தம் : சரவண தீர்த்தம்.
மாதப்பூர் முருகன் கோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில், பழனி முருகன் கோவிலைப் போலவே ஒரே உருவ ஒற்றுமையுடன் அமைந்துள்ளது. பேரழகு வாய்ந்த இத்தல மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
 கோவிலின் சிறப்பம்சங்கள்: 
தல வரலாறு: சிவபெருமானும் பார்வதியும் மாதப்பூர் குன்றின் மீது நின்று, ஞானப்பழத்திற்காக கோபித்துச் சென்ற முருகனை "மகனே எங்கே இருக்கிறாய்" என அழைக்க, பழனியிலிருந்து "தாயே, இதோ இங்கு இருக்கிறேன்" என முருகன் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. 'மாதாவுக்கு மகன் காட்சியளித்த ஊர்' என்பதால் இப்பெயர் பெற்றது.
திப்பு சுல்தான் வரலாறு: திப்பு சுல்தான் தனது படைகளைத் தேடி முருகனின் மீது ஏறி நின்றபோது பார்வை இழந்ததாகவும், பின்னர் முருகனை வேண்டி மன்னிப்பு கேட்டு மீண்டும் பார்வை பெற்றதாகவும், அதன் நன்றிக்கடனாக அவர் இக்கோவிலை எழுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது.

பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பு. அதுமட்டுமின்றி முருகன் தாய், தந்தையருடன் அமர்ந்துள்ள இடம் என்பதால் இது மிகவும் சிறப்புமிக்கதாகும்.
மைசூர் மகாராஜாக்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. கோயில் பூஜைகள் தொடர்ந்து நடைபெறவும், வாத்தியம், ஆடல்மகளிர் என அனைத்து பணிகளுக்கும் தனித்தனியே நிலங்கள் வழங்கி நித்திய பூஜைகள், விழாக்கள் போன்றவை தங்குதடையின்றி நடைபெற அன்றைய அரசர்கள் உதவி புரிந்துள்ளனர். கோயில் பெயரில் தனியே நிலமும் ஊழியம் செய்பவர்களுக்கு என தனியே மானிய நிலங்களும் அரசர்களால் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதற்குண்டான ஆவணங்கள் அனைத்தும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பழநி கோயில் உருவான சமகாலத்தில் இக்கோயிலும் உருவானதாக அறியப்படுகிறது. பழநி முருகனுக்கும் மாதப்பூர் முருகனுக்கும் உருவ ஒற்றுமை உள்ளது பழநி முருகன் மேற்கு நோக்கியும் இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பது மட்டுமே வேறுபாடு இத்தலத்தில் உள்ள சுனை, பாத விநாயகர், படிகள் மற்றும் கற்கோவில் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் சமகால வரலாற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.

கோயிலின் தென்பகுதியில் மதிமாலீஸ்வரர் சன்னிதியும், அடுத்து மரகதாம்பிகை சன்னிதியும் உள்ளன. அடுத்துள்ள தனிச்சன்னிதியில் முருகன் முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார் முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இவரோ பேரழகன். கண்டு துதிக்க கண் கோடி வேண்டும் முருகன் அழகை கண்டு தொழ நாலாயிரம் கண்படைத்திலனே அந்த நான்முகன் என அருணகிரிநாதர் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வரும் மலைக்கோயில் 40 படிக்கட்டுகளைக் கொண்டது. படி தொடக்கத்தில் பாதவிநாயகர் சன்னிதி உள்ளது. கொங்கு நாட்டு மரபுபடி தீபஸ்தம்பம் கோயிலுக்கு வெளியே வாசலில் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தின்போது மகா தீபம் இங்குதான் ஏற்றப்படும்.
மலைக்கோவில்:
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். ஆனால் தாய் தந்தையுடன் அருள்பாலிக்கும் ஓர் அற்புத தலமாக விளங்குகின்றது மாதப்பூர் முத்து குமார சுவாமி கோயில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கற்கோயில்.
 மதிமாலீஸ்வரர், மரகதாம்பிகை. முத்துகுமாரசுவாமி என மூவருக்கும் தனிச் சன்னிதிகள் வரிசையாக உள்ளன தனித்தனியே விமானங்களும் அழகிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு பெரிய பாறை மீது அமைந்துள்ளன. கருவறைக்கு முன் அர்த்த மண்டபம், முன் மண்டபம் என அழகிய கற்சிற்பங்களுடன் கூடிய மண்டபங்களனைத் தன்னகத்தே கொண்டது. மீன் சின்னங்கள் காணப்படுவதால் பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்த கோயில் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்திருந்தாலும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது பிரிதொரு சிறப்பு. கோயிலைச்சுற்றி வெளி பிரகாரத்தில் சூரியன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர், காலபைரவர், நவகிரஹம் மற்றும் சந்திரன் ஆகிய தெய்வங்கள் தனிச் சன்னிதியில் அருள் பாலிக்கின்றனர்.

இக்குன்றின் தென்புறம் ஒரு சுனை உள்ளது. அம்பாள் தனக்காக கங்கையை உருவாக்கிக் கொண்டதாகவும், மகன் தாய்க்காக சுனையை உருவாக்கியதாகவும் அறியப்படுகிறது வருடம் முழுவதும் பாறை இடுக்குகளில் இருந்து வரும் நீர் தரைமட்டத்திற்கு பொங்கி வந்து வழிந்து ஓடுவதும் என்றும் வற்றாமல் இருப்பதும் பேரதிசயமாகும். கடுமையான வறட்சி காலத்திலும் வற்றியது இல்லை 

*சஷ்டி விரதம் இருந்து துதித்து வந்தால் திருமண தடைகள், பிள்ளைப்பேறு ஆகிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாலும், அன்னை மரகதாம்பிகை தாயுள்ளத்தோடு அருள்வதால், வேண்டுவன எல்லாம் நிறைவேறுகின்றன. என ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர்.
சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளது. திருமணம் போன்ற மற்றும் சிறிய விழாக்கள் நடத்துவதற்கு ஏற்றஒரு சிறிய மண்டபம் உள்ளது. மேலும் கழிவறை வசதிகள் குளியலறை வசதிகள் இருக்கின்றன
வேறு எந்த விதமான கடைகள் வீடுகள், பெரிய கட்டிடங்கள் அருகில் இல்லை
ஆலய விழா விஷேச காலங்களில் தற்காலிக ஏற்பாடுகள் செயல்படலாம்.
தனிமையும், அமைதியும் பக்தியும் முருகன் அருள் நிறைவும் வேண்டுபவர்களுக்கு அருமையான இடம்
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

நன்றி🙏
13.6.2026 Subbram_சுப்புராம் தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#கொங்குத்தலங்கள்

அழகு மலை :கைலாசநாதர் ஆலயம் 13.06.26

அழகு மலை :
கைலாசநாதர் ஆலயம்
 திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கைலாசநாதர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும்.
அமைவிடம்: ஸ்ரீ ஆதி கைலாசநாதர் கோயில் அலகுமலையின் மையத்தில் அமைந்துள்ளது.
இவ்வூர் காங்கேயத்திலிருந்து 18 கி.மீ., பல்லடத்திலிருந்து 23 கி.மீ., திருப்பூரிலிருந்து 22கி.மீ., தாராபுரத்திலிருந்து 36 கி.மீ., கோயம்புத்தூரிலிருந்து 62 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
மிக அருகிலுள்ள ரயில் நிலையம் திருப்பூர் ஆகும்.
திருப்பூர் - கொடுவாய் சாலையில், திருப்பூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

மூலவர் ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் அன்னை பெரியநாயகி அருள்பாலிக்கும் இக்கோயில், பழமையான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் தலமாகும்.

கோயிலின் சிறப்பம்சங்கள்: மூலவர்: சதுர வடிவிலான லிங்கம் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கிறது.
வரலாறு: திருமலை நாயக்கர் காலத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டதற்கான கல்வெட்டுகள் (கி.பி. 1614) இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
அலகு' என்றால் அலகு என்று பொருள். இந்த மலை அலகு போல் தோற்றமளிப்பதால், இவ்விடம் 'அலகுமலை' என்று அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு:
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மேலும் இதில் 36 அடி உயர தீபஸ்தம்பம் உள்ளது. மூலவரை நோக்கியவாறு, தீபஸ்தம்பத்தின் அடியில் நந்தி தேவரின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயிலில் ஒரு மண்டபம் உள்ளது.

நுழைவாயில் மண்டபத்திற்குப் பிறகு 28 அடி உயரமுள்ள துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் ரிஷபம் (ரிஷபம் மூலவரை நோக்கியுள்ளது - எனவே 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனாருக்கு முன்பே இக்கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது) ஆகியவை அமைந்துள்ளன. மூலவர் சதுர வடிவில் உள்ளார், இது ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வ வேதங்கள் என நான்கு வேதங்களைக் குறிக்கிறது. கோஷ்டத்தில், தட்சிணாமூர்த்தி மட்டுமே உள்ளார். மற்ற மாடங்கள் காலியாக உள்ளன, ஆனால் மகரத் தோரணங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் அற்புதமாக உள்ளன.
கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள் இருக்கிறார். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மாப்பிள்ளை விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், அஷ்ட லிங்கங்கள், கால பைரவர், நவகிரகங்கள், ஆஞ்சநேயர், நால்வர், சந்திரன், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

கட்டிடக்கலை
கோயில் வளாகம் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம் மற்றும் திறந்த முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறைக்கு மேல் இரண்டு அடுக்கு வேசர விமானம் உள்ளது. அதிஷ்டானம் என்பது மூன்று பட்டா குமுதம் கொண்ட எளிய பாத பந்த அதிஷ்டானம். அம்பாள் சந்நிதியும் இதே போன்ற கட்டுமானத்தில் உள்ளது.
கருவறையின் சுவர்களில் முதலை, குரங்கு மற்றும் அன்னப்பறவையின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

சிறப்புகள் மற்றும் கல்வெட்டுகள்:
அருகிலுள்ள கோயில்களையும் கட்டுமானப் பாணியையும் கருத்தில் கொண்டு, இக்கோயில் சோழர் / பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் . இக்கோயிலும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலும் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் கூன் பாண்டியனால் கட்டப்பட்டதாக கோயில் நிர்வாகம் கூறுகிறது.

கோயிலின் கிணற்றிலிருந்து லட்சுமி நாராயண பெருமாள் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார். லட்சுமி நாராயணனின் மடியில் அமர்ந்திருக்கிறார். இக்கோயிலில் மூன்று தேர்கள் உள்ளன.
கோயிலின் இடதுபுறத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின்படி, இந்த அழகுமலை பொங்கலூர் நாட்டில் அமைந்திருந்தது. இந்தக் கல்வெட்டுகள் மதுரை நாயக்கர் திருமலை நாயக்கர் (கி.பி. 1641) காலத்தைச் சேர்ந்தவை. அழகுமலை முருகனின் (அழகுமலை குமாரசுவாமி) ஊர்வலத்தின் போது, ​​உற்சவ மூர்த்திகளைச் சுமந்து செல்பவர்களுக்கு சர்வமந்திரமாக சிறப்புரிமைகள்/உரிமைகள் வழங்கப்பட்டதாக ( உற்சவ மூர்த்திகளைச் சுமந்து செல்பவர்களுக்கு சர்வமந்திரமாக ) கல்வெட்டு பதிவு செய்கிறது.
புராணங்கள்
சூரியன் இக்கோயிலின் சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்த புராணக்கதைக்குச் சான்றாக, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 5- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை மூலவர் மீது சூரியக் கதிர்கள் விழுகின்றன.

மேலும், அம்பாள் சிவபெருமானை பசு வடிவில் வழிபட்டதாக நம்பப்படுகிறது.
(நன்றி🙏 வலைதளம்)
பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள்
வழக்கமான பூஜைகள் தவிர, பிரதோஷம், அஷ்டமி நாட்கள், ஏகாதசி, லட்சுமி நாராயண பூஜை, அமாவாசை (அமாவாசை) மற்றும் மகா சிவராத்திரி, தைப்பூசம், திரிசதி வழிபாடு மற்றும் பௌர்ணமி கிரிவலம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தரிசன நேரம்: தினமும் காலை 07:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 05:30 மணி முதல் இரவு 07:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நன்றி🙏
13.6.2026 Subbram_சுப்புராம் மீள் தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்

அலகுமலை முருகன் கோவில் திருப்பூர் 13.06.26

அலகுமலை முருகன் கோவில் 
திருப்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் கொடுவாய் செல்லும் வழியில் அலகுமலை அமைந்துள்ளது. 900 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் முத்துக்குமார சுவாமி பாலதண்டாயுதபாணி ஆண்டி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அலகுமலைப் பெயர் காரணம்: 
புகழ்விளங்கும் பொங்கலூர் நாட்டில், பூம்பொழில்களுக்கிடையே அமைந்திருக்கும் வானவன்சேரி அலகுமலை’ என்பது சான்றோர் வாக்கு.
மலை அடிவாரத்தில் 'அழகாபுரி அம்மன்' என்ற அன்னை ஊர்க்காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். இதன் காரணமாக அன்னையின் பெயரே மருவி, இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக இருப்பதுபோன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்ட மலை, ஊதியூர் மலை, பழனி மலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை அழகுற காட்சியளிக்கிறது.
 அலகுமலை என்றால் அகன்று உயர்ந்த மலை என்று பொருள். அதேபோன்று, பச்சைப்பசேல் என்று பச்சைப்பட்டு உடுத்திய பாவைபோல் இயற்கை அழகுடன் காட்சி தரும் இந்த மலையை, `அழகுமலை' என்று சொல்வதும் மிகவும் பொருத்தம்தான்.
அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு மலை' எனப் பெயர் பெற்றது.
 இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைக்கோவிலுக்குச் செல்ல 300 படிகளும், உச்சி வரை வாகனத்தில் செல்ல தனி சாலை வசதியும் உள்ளது.

ஆலய அமைப்பு:
அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும், மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்வதற்கு கிட்டத்தட்ட 300 படிகளை ஏறி செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதை தாண்டி படியேறி சென்றால் எட்டு தூண்கள் கொண்ட மண்டபம் காணப்படும். இதை கடந்து சென்றால் இடதுபுறத்தில் பாத விநாயகரை தரிசிக்கலாம்.

விநாயகரை வழிபட்டு விட்டு, மேலே சென்றால் கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதேபோன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இதற்கு அருகில் நவக்கிரகங்கள் சன்னிதியும், விநாயகர் சன்னிதியும் உள்ளன.

இதையடுத்து வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடதுபுறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது. அடுத்ததாக குழந்தை குமரர் சன்னிதி காணப்படுகிறது. இறுதியாக, கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் கொடிமரம் அமைந்துள்ளது.

 கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும், அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. கோவிலின் இடது புறத்தில் தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது. கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறத்தில் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இடதுபுறத்தில் வீரபாகு தேவர் உள்ளார்.

கருவறையில் முருகப்பெருமான், சுமார் நான்கரை அடி உயரத்தில் 'முத்துக்குமார பாலதண்டாயுதபாணி' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண் டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். இவரை வெள்ளிக் கவச அலங்காரத்தில் பார்க்க கண்கோடி வேண்டும் என்ற அளவுக்கு அளவுக்கு அழகு ரூபமாக ஜொலிக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள்.

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.

கோவிலின் சிறப்பம்சங்கள்:
மூலவர்: சுமார் நான்கரை அடி உயரத்தில், பழனி ஆண்டவர் கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இந்த இடம் மலையின் உச்சியில் உள்ளது. 
ஆறுபடை வீடுகள்: முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இங்கு அமைந்துள்ளன. இந்த சன்னதிகள் உச்சியில் உள்ள முருகன் ஆலயத்திலிருந்து சுமார் 20 படிகள் கீழே உள்ளது. இங்கு ஒரு விநாயகர் மற்றும் ஆஞ்சினேயர் வணங்கிய சிவன் சன்னதியும் மற்றும் ஒரு ஆஞ்சனேயர் சிலையும் உண்டு.
சிறப்புகள்:
முழுவதும் நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்
மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கி.பி.1641-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் இக்கோவிலுக்கு திருமலை நாயக்கர் திருப்பணி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்: தமிழ் புத்தாண்டன்று நடைபெறும் சித்திரை கனி அலங்காரம் மற்றும் தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் வழிபாடுகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷமாக நடத்தப்படுகிறது. தைப்பூச திருவிழா ஏழு நாட்கள் அபிஷேகங்கள், ஹோமங்கள் என வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. நிறைவு நாளில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை சாத்தி, தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணத் தடை நீங்கவும், தொழில் விருத்தி அடையவும் இங்கு பக்தர்கள் சிறப்பு பரிகாரங்கள் செய்கின்றனர்.

நன்றி🙏
13.6.2026 Subbram_சுப்புராம் மீள் தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்

அலகுமலை முருகன் கோவில் திருப்பூர் 13.06.26

அலகுமலை முருகன் கோவில் 
திருப்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் கொடுவாய் செல்லும் வழியில் அலகுமலை அமைந்துள்ளது. 900 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் முத்துக்குமார சுவாமி பாலதண்டாயுதபாணி ஆண்டி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அலகுமலைப் பெயர் காரணம்: 
புகழ்விளங்கும் பொங்கலூர் நாட்டில், பூம்பொழில்களுக்கிடையே அமைந்திருக்கும் வானவன்சேரி அலகுமலை’ என்பது சான்றோர் வாக்கு.
மலை அடிவாரத்தில் 'அழகாபுரி அம்மன்' என்ற அன்னை ஊர்க்காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். இதன் காரணமாக அன்னையின் பெயரே மருவி, இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக இருப்பதுபோன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்ட மலை, ஊதியூர் மலை, பழனி மலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை அழகுற காட்சியளிக்கிறது.
 அலகுமலை என்றால் அகன்று உயர்ந்த மலை என்று பொருள். அதேபோன்று, பச்சைப்பசேல் என்று பச்சைப்பட்டு உடுத்திய பாவைபோல் இயற்கை அழகுடன் காட்சி தரும் இந்த மலையை, `அழகுமலை' என்று சொல்வதும் மிகவும் பொருத்தம்தான்.
அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு மலை' எனப் பெயர் பெற்றது.
 இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைக்கோவிலுக்குச் செல்ல 300 படிகளும், உச்சி வரை வாகனத்தில் செல்ல தனி சாலை வசதியும் உள்ளது.

ஆலய அமைப்பு:
அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும், மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்வதற்கு கிட்டத்தட்ட 300 படிகளை ஏறி செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதை தாண்டி படியேறி சென்றால் எட்டு தூண்கள் கொண்ட மண்டபம் காணப்படும். இதை கடந்து சென்றால் இடதுபுறத்தில் பாத விநாயகரை தரிசிக்கலாம்.

விநாயகரை வழிபட்டு விட்டு, மேலே சென்றால் கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதேபோன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இதற்கு அருகில் நவக்கிரகங்கள் சன்னிதியும், விநாயகர் சன்னிதியும் உள்ளன.

இதையடுத்து வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடதுபுறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது. அடுத்ததாக குழந்தை குமரர் சன்னிதி காணப்படுகிறது. இறுதியாக, கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் கொடிமரம் அமைந்துள்ளது.

 கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும், அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. கோவிலின் இடது புறத்தில் தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது. கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறத்தில் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இடதுபுறத்தில் வீரபாகு தேவர் உள்ளார்.

கருவறையில் முருகப்பெருமான், சுமார் நான்கரை அடி உயரத்தில் 'முத்துக்குமார பாலதண்டாயுதபாணி' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண் டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். இவரை வெள்ளிக் கவச அலங்காரத்தில் பார்க்க கண்கோடி வேண்டும் என்ற அளவுக்கு அளவுக்கு அழகு ரூபமாக ஜொலிக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள்.

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.

கோவிலின் சிறப்பம்சங்கள்:
மூலவர்: சுமார் நான்கரை அடி உயரத்தில், பழனி ஆண்டவர் கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இந்த இடம் மலையின் உச்சியில் உள்ளது. 
ஆறுபடை வீடுகள்: முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இங்கு அமைந்துள்ளன. இந்த சன்னதிகள் உச்சியில் உள்ள முருகன் ஆலயத்திலிருந்து சுமார் 20 படிகள் கீழே உள்ளது. இங்கு ஒரு விநாயகர் மற்றும் ஆஞ்சினேயர் வணங்கிய சிவன் சன்னதியும் மற்றும் ஒரு ஆஞ்சனேயர் சிலையும் உண்டு.
சிறப்புகள்:
முழுவதும் நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்
மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கி.பி.1641-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் இக்கோவிலுக்கு திருமலை நாயக்கர் திருப்பணி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்: தமிழ் புத்தாண்டன்று நடைபெறும் சித்திரை கனி அலங்காரம் மற்றும் தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் வழிபாடுகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷமாக நடத்தப்படுகிறது. தைப்பூச திருவிழா ஏழு நாட்கள் அபிஷேகங்கள், ஹோமங்கள் என வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. நிறைவு நாளில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை சாத்தி, தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணத் தடை நீங்கவும், தொழில் விருத்தி அடையவும் இங்கு பக்தர்கள் சிறப்பு பரிகாரங்கள் செய்கின்றனர்.

நன்றி🙏
13.6.2026 Subbram_சுப்புராம் மீள் தரிசனம்,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்

நல்லூர்: விஸ்வேஸ்வர சுவாமி (விஸ்வநாதர்) திருக்கோயில்திருப்பூர் 13.06.2026

நல்லூர்: 
விஸ்வேஸ்வர சுவாமி (விஸ்வநாதர்) திருக்கோயில்
திருப்பூர் அருகில் நல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி (விஸ்வநாதர்) திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோயிலாகும். 
கோயில் விவரங்கள்:
மூலவர்: விஸ்வேஸ்வர சுவாமி
அம்மன்: விசாலாட்சி (மற்றும் சிவகாமி)சிறப்பம்சங்கள்: இத்திருக்கோயிலின் தூணில் கஜசம்ஹார மூர்த்தியின் உருவம் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள சிலையில் கங்கை நதி பிரவாகம் எடுப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் கிழக்கு நோக்கியது 5 நிலை ராஜகோபுரம் உள்ளது பிரதான சாலையில் ஆலயம் உள்ளது.
ஆலயம் முன் பட்டி விநாயகர் அரசமரத்தின் அடியில் தனியாக உள்ளது
3 தனித்தனி கருவரை சன்னதிகளில் அமைந்துள்ள சுப்பிரமணியர் அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகள் ஒரே மன்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமி சன்னதி முன்புறம் கொடி மரம் நந்தி பலிபீடம் உள்ளது. அடுத்துள்ள அம்பாள் சன்னதி எதிரில் தனி நந்தி மன்டபத்தில் உள்ளது.
ஒவ்வொரு கருவரையும் தனித்தனியாக அதனதன் கோஷ்ட்ட தெய்வங்களுடன் உள்ளது.
பிரகாரத்தில் தனியாக திருவாசக மண்டபம் மற்றும் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது
ஆலயம் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது. 
திருவிழா: தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்: திருப்பூர் பகுதியில் திருப்பூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் நல்லூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
வழிபாட்டு நேரம்:இந்த ஆலயம் தினமும் காலை 07:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்

நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்


சர்கார் பெரியபாளையம் ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில்குரக்குத்தளி -13.06.2026

சர்கார் பெரியபாளையம் 
ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில்
குரக்குத்தளி என்ற பழம் பெயர் உடையது. பழமையான கோவில்களில் ஒன்று. பார்க்க வேண்டிய இடம். தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில், இந்திய தொல்லியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்டபடி, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய செழுமையான வரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ள இந்த பழமையான கோயில் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷமாகும்.
வரலாறு மற்றும் முக்கியத்துவம்
• ராமாயணத்துடனான தொடர்பு: ராமாயண இதிகாசத்தின்படி, தனது சகோதரனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தமாக இங்கு லிங்கம் ஒன்றைக் கட்டிய சுக்ரீவனுடன் கோயில் இணைக்கப்பட்டுள்ளது.
• பாண்டியர்கள் மற்றும் சோழர்கள்: பாண்டிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது, சோழ வம்சத்தின் தாக்கங்களை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள்.
• பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கோவில் அம்சங்கள்
இறைவன் : சுக்ரீஸ்வரர் (லிங்க வடிவில் உள்ள சிவன்), கிழக்கு நோக்கிய தனி சன்னதி
• அம்பாள் : ஆவுடைநாயகி தேவிக்கும் கிழக்கு நோக்கிய தனி சன்னதி
 தனி சன்னதி.
• தனித்துவ அம்சங்கள்: இரண்டு நந்திகள்; பஞ்ச பூதங்களைக் குறிக்கும் ஐந்து சிவலிங்கங்கள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, ஈதர்).
• கட்டிடக்கலை: லிங்கத்திற்கான சதுர வடிவ ஆவுடை தளம்; சிக்கலான கல் சிற்பங்கள்.
ஆன்மீக மற்றும் கலாச்சார சிறப்பம்சங்கள்
• சுந்தரரின் பாடல் பெற்ற வைப்பு ஸ்தலம்: சுந்தரர் பாடிய கோயில்களில் ஒன்று.
• பண்டிகைகள்: மகாசிவராத்திரி மற்றும் பிற குறிப்பிடத்தக்க பண்டிகைகளைக் கொண்டாடுகிறது.
இது 2500 ஆண்டுகள் முன்பான பழமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது.
இரண்டு நந்தி;
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது.

கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார்.
மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்
பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார்.
பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.
சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது.

இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தலம் என கூறப்படுகிறது.

• திறந்திருக்கும் நேரங்கள்: பொதுவாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி, மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்

பெருமாநல்லூர் ஆதிகேசவபெருமாள் ஆலயம் 13.06.2026

பெருமாநல்லூர் ஆதிகேசவபெருமாள் ஆலயம்

சிவன் ஆலயம் எதிரில் உள்ள கிழக்குப் பார்த்த ஆலயம் 
ஆதி கேசவ பெருமாள் கோவில் பெருமாநல்லூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். இது 2006 இல் புனரமைக்கப்பட்டது. கோயிலின் முக்கிய தெய்வம் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஆதி கேசவப் பெருமாள். இக்கோயிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர், ஹயகிரிவர், நரசிம்ம பெருமாள், ஆண்டாள் சன்னதிகளும் உள்ளன. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சத்தியநாராயண பூஜையும், தமிழ் மாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக்கிழமையும் ஆஞ்சநேயர் வட மாலையும் நடைபெறுகிறது.
தமிழ் மாதமான புரட்டாசி (செப்டம்பர்-அக்டோபர்) சனிக்கிழமை மற்றும் தமிழ் மாதமான மார்கழியில் (டிசம்பர்/ஜனவரி) வைகுண்ட ஏகாதசி ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற திருவிழாவாகும்.

நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்

பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் (கோவர்தனாம்பிகை கோவில்), பெருமாநல்லூர், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 13.06.2026

பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் (கோவர்தனாம்பிகை கோவில்), பெருமாநல்லூர், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு

இந்த இடம் பெரும் பழனம் (பெரும் - பெரிய அல்லது மிகுதியான, மற்றும் பழனம் - பசுமையான வயல்கள் அல்லது பச்சை மரங்கள் நிறைந்த) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெரும்பழனம் அல்லது பெரும்பழநல்லூர் என்ற பெயரே மருவி, தற்போதைய பெயரான பெருமநல்லூர் என ஆனது.

மூலவர் : ஸ்ரீ உத்தமலிங்கேஸ்வரர் /சந்திரசேகரர்
துணைவி : ஸ்ரீ கோவர்தனாம்பிகை

இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள்…
சிவன் மற்றும் பார்வதி ரிஷபரூடரின் ஸ்டக்கோ உருவத்துடன் கூடிய நுழைவாயில் வளைவுடன் இந்த கோவில் மேற்கு நோக்கி உள்ளது. கோவிலுக்கு எதிரே ஒரு பீப்பல் மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் நாகர்களுடன் ஒரு தீப ஸ்தம்பம் உள்ளது. பலிபீடம், த்வஜஸ்தம்பம் மற்றும் நந்தி ஆகியவை முக மண்டபத்திற்கு முன் நுழைவாயில் வளைவுக்குப் பிறகு உள்ளன. முக மண்டபத்தின் தூண்களில் ஊர்த்ததாண்டவமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், வீரபாகு மற்றும் பல மூர்த்திகள் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் நடராஜர், ஊர்ச்சவர்கள் உள்ளனர். முக மண்டபத்தில் சண்முகர், நவக்கிரகங்கள் உள்ளன. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் தண்டி மற்றும் முண்டி உள்ளனர். கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி மற்றும் விநாயகர்.
பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சூரியன், நால்வர், சோழீஸ்வரர் (மூலக் கோவிலின் மூல லிங்கம் என்று நம்பப்படுகிறது) மற்றும் விநாயகர்.

கட்டிடக்கலை:
கோயில் கருவறை, அந்தரளம், அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சன்னதியானது 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் கொங்கு சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டது. முக மண்டபம் விஜயநகர காலத்தில் அவர்களின் கையெழுத்துச் சிற்பங்களுடன் கட்டப்பட்டது. முக மண்டபத்தின் தூண்களின் தலைநகரங்கள் சிம்ம / சிங்க வகையைச் சேர்ந்தவை, அவற்றின் வாயில் உருளும் பந்துகள் உள்ளன. கருவறை, திரிபட்ட குமுதத்துடன் கூடிய பாதபந்த அதிஷ்டானத்தில் உள்ளது. பிரஸ்திரம் கபோத பாணியில் கர்ணகூடம் மற்றும் வலபியில் பூத வரி உள்ளது. கருவறைக்கு மேல் இரண்டு அடுக்கு நாகர விமானம் உள்ளது. அம்பாள் ஸ்ரீ கோவர்தானாம்பிகை சன்னதி, அந்தரளம், அர்த்தமண்டபம் போன்ற தனி ஆலயத்தில் உள்ளார். அம்பாள் சந்நதிக்கு எதிரே ஒரு நந்தி உள்ளது.

வரலாறு மற்றும் கல்வெட்டு
கல்வெட்டின் படி இத்தலம் பெரும்பழனில் என்றும், பெரும்பழனம் ஓதனூர் என்றும் அழைக்கப்பட்டது ( வடபரிசாரநாட்டு ஒத்தனூரான பெரும்பழனம்) , சிவபெருமான் உத்தமச்சோழிச்சுரமுடைய நாயனார் என்றும் அழைக்கப்பட்டார். திருக்கண்டியூர் விளக்குத்தரையன் அம்பலவன் பொன்னம்பல கூத்தன் என்ற ஒரு தலைவனும் இந்த சிவன் கோயிலுக்கு தாராளமாகப் பங்களித்ததால், இத்தலம் கூத்தனூர் என்றும் அழைக்கப்பட்டது.

கோயில் சுவர்கள் மற்றும் ஆதிஸ்தானத்தில் சோழ மன்னர்கள் வீரராஜேந்திரன் (கி.பி. 1224), பாண்டிய மன்னர்கள் வீரபாண்டியன் (கி.பி. 1262) ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.

அபிஷேக பாத்திரம், தோட்டம்/நந்தவனம், தீபம் எரிக்க நிலம், சந்த்யதீபம், தூபதீபம், நன்கொடை அளித்த நிலம், நந்தவனம் அமைத்தல், க்ஷேத்திரபாலப் பிள்ளையார் குளம், குளம், குளம், தூர்வாருதல் போன்றவைகளை கல்வெட்டுகள் கூறுகின்றன. கொட்டை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வளர்க்க அனுமதி. பேரூர் செவப்பநாத முதலியாரின் மகன் உத்தண்டியப்ப முதலியார் சண்டிகேஸ்வரர் சன்னதியைக் கட்டினார்.
17 ஆம் நூற்றாண்டு ஸ்ரீராமப்பையனின் அதிகாரபூர்வ சிதம்பரநாதப் பிள்ளை காலக் கல்வெட்டு, தீபஸ்தம்பத்தின் முன் உள்ள கல்வெட்டு, வாரசந்தை/வாரச்சந்தையிலிருந்து வரும் வரிகளை பூஜை, நைவேத்தியம், அபிஷேகம், சந்தியா தீபம் எரித்தல், நித்திய தீபம் போன்றவற்றுக்கு நன்கொடையாக அளிப்பது பற்றி கூறுகிறது.
(நன்றி A Wandering Heritager)

கோவில் நேரங்கள்:
கோயில் காலை 7 மணி முதல் 13 மணி வரையிலும், மாலை 17 மணி முதல் 20 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்
இக்கோயில் பெருமனல்லூர் சந்திப்பிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பெருமநல்லூர், கோயம்புத்தூர் - ஈரோடு மற்றும் திருப்பூர் - கோபிசெட்டிபாளையம் ஆகிய சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது.
பெருமநல்லூர், அவிநாசியிலிருந்து சுமார் 15.8 கி.மீ., திருப்பூரிலிருந்து 16 கி.மீ., கோயம்புத்தூரிலிருந்து 60 கி.மீ., மற்றும் ஈரோட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள் ⛳


பெருமாநல்லூர்: கொண்டத்து காளியம்மன் கோயில் 13.06.26

பெருமாநல்லூர்:  
கொண்டத்து காளியம்மன் கோயில்
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெருமாநல்லூரில் பிரசித்திப் பெற்ற இந்த ஆலயம் உள்ளது.
பெருமாநல்லூரின் வடமேற்குப் பகுதியில் வடக்கு நோக்கி இந்த கோயில் அமைந்துள்ளது.

இப்பகுதி வயல்வெளிகள் நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் 'பெரும்பழனம்" என்றும் 'பெரும்பழனாபுரி" என்றும் வழங்கப்பட்டு, காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் பெற்றது.

மூலவர் - கொண்டத்துக்காளியம்மன் (குண்டத்தம்மன்)
தல விருட்சம் - வேப்பமரம்
தீர்த்தம் - கிணற்று நீர்
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - பெரும்பழனம்

தல வரலாறு :
சேரமன்னர்கள் அப்பகுதியை ஆண்டபோது, போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு குருநாதர், போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருளும் வேண்டும் எனக் கூறினார். எனவே, அவளுக்கு கோவில் அமைத்து களப்பலி கொடுத்து போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார்.

அதன்படி மன்னர்கள் அந்த இடத்தில் காளிதேவிக்கு கோவில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

தலபெருமை :

மன்னர் காலத்திற்கு பின்னர், மக்கள் தொடர்ந்து கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குண்டம் திருவிழாவின்போது இந்த கோயிலுக்கு ஆங்கிலேய அதிகாரி தனது சேனையுடன் வந்திருந்தார். மேள வாத்தியங்கள் முழங்க ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வந்த வீரமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

அதனைப் பார்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி '" இது அறிவற்ற செயலாக இருக்கிறது. அம்மனை வணங்க வேண்டும் என்றால் இப்படியெல்லாம் தீயில் இறங்கக் கூடாது. இங்கு பக்தர்கள் தீ மிதிப்பதை அனுமதிக்க முடியாது " என்றார். அதன் பின்னர், குண்டத்தில் பக்தர்கள் இறங்க முடியாத வகையில் நெருப்பில் உருகிப் பொங்கும் குங்கிலியத்தை கொட்டினார்.
குங்கிலியம் உருகி கொதித்து பொங்கி நின்றது. கோயில் பூசாரி பூஜைகள் செய்தார். அப்போது தீபஸ்தம்பத்திலிருந்து இறங்கி வந்த பல்லி குண்டத்தின் மீது ஊர்ந்து அம்மன் கருவறையைச் சென்று அடைந்தது. அதை தொடர்ந்து பூசாரியும், வீரமக்களும் குண்டம் இறங்கினார்கள். குண்டத்தில் மண்டியிட்டபடி ஒரு பெண், தெய்வ குண்டம் இறங்கும் வீரமக்களின் பாதங்களை தனது இரண்டு கைகளாலும் ஏந்தி தாங்கிக் கொண்டு இருப்பதை ஆங்கிலேய அதிகாரி தனது பூதக்கண்ணாடியின் மூலம் பார்த்தார்.
அப்படிப் பார்த்த அந்த ஆங்கிலேய அதிகாரியின் பார்வை மங்கியது. அவர் மிகவும் திகைத்து துடித்தார். ஊர் பெருமக்கள் அவருக்கு காளியம்மனின் பெருமையை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் அறிவுறுத்தியபடி அம்மனை வணங்கி மன்னிப்புகேட்டு வேண்டினார். பிறகு சிறிது நேரத்தில் அவருக்கு பார்வை திரும்பியது.

அம்மனின் அருளைக் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயில் திருவிழாவின்போது தீபம், தீவட்டி ஆகியவற்றை எடுக்க ஆறு குடம் எண்ணெய் வழங்க உத்தரவிட்டார். இதுவே அம்மனின் அருளுக்கு அத்தாட்சி ஆகும்.
 ஆலய அமைப்பு :
கருவறையில் காளியம்மன் அமர்ந்த நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். கோயிலின் முன்பு திறந்த வெளியில் அறுபது அடி நீளமுள்ள குண்டம் உள்ளது.

இங்கு வீற்றிருக்கும் கொண்டத்துக்காளியம்மன் ஏழு பேராக அவதரித்த அம்பாள்; சகோதரிகளில், ஒருவராக, எட்டு கைகளில் ஆயுதங்களையும் ஏந்தி, லட்சுமி, காளி, சரஸ்வதி என மூன்று அன்னையர்களின் அம்சமாக அருள்பாலிக்கிறாள்.

இத்தல விநாயகர் பால விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சப்தகன்னியர், குதிரைகளுடன் முனியப்பன், கருப்பராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் முத்துக்குமரன், தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத இத்தல சிறப்பாகும்.

பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாளையொட்டி சில நாட்கள் முன்பின்னாக இந்த கோயில் குண்டம் திருவிழா நடைபெறும். குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியையொட்டியே இந்த அம்மன் குண்டத்து காளியம்மன் என அழைக்கப்பட்டாள்.

பிரார்த்தனை :

குடும்ப பிரச்சனை தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

குண்டம் இறங்குதல், அக்னிச்சட்டி, பால்குடம், அங்கபிரதட்சணம், குண்டத்தில் உப்பு, மிளகு, கரும்பு போடுதல் போன்றவற்றை பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக செய்கின்றனர். தோல் நோய் தீர்ந்திட காளிக்குரிய சிங்க வாகனத்தின் மீது வெற்றிலை, பாக்கு வைத்து வணங்கப்படுகிறது.

நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள் ⛳

அவிநாசி அவிநாசியப்பர் கோயில் 13.06.2026

அவிநாசி அவிநாசியப்பர் கோயில் (திருப்புக்கொளியூர்) (Tiruppukkozhiyur Avainasiappar temple) என்பது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முதலையுண்ட பாலகனை, சுந்தரர் பதிகம் பாடி மீட்டார்.
அவினாசியப்பருக்கு வலது புறம் அம்பாளின் கோயில் உள்ளது, பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது. திருக்கோவிலின் கொடிமரத்தின் இடதுபுரத்தில் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.
தலவரலாறு
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிராத்தனை செய்தார். அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்கு கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்பு பெற்று இருக்கிறது.
இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது.
இத்தலத்தில் உள்ள இறைவனை பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.

 அவிநாசி அவிநாசியப்பர் கோவில் கிபி 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த அவிநாசி அவிநாசியப்பர் கோவில். இந்த அவிநாசியின் பழைய பெயர்(திருப்புகோளியூர்) என்று அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு
கிழக்குப் பார்த்த ஆலயம். இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர் சுயம்பு லிங்கமாவார். அம்பிகை கருணாம்பிகையின் சந்நிதி மூலவரின் வலதுபுறத்தில் கிழக்கு நோக்கிய தனி ஆலய அமைப்பில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் உள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.[ இதனால் விச ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விச ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது.

ராஜ கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன கணபதி சிலைகள் உள்ளன. மண்டபத் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்த தாண்டவர் மற்றும் தில்லை காளியின் சிலைகள் உள்ளன. உள்பிரகாரத்தில் கன்னி கணபதியும், வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வட கிழக்கில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் உள்ளன. இவற்றோடு 63 நாயன்மார் சிற்பம், காலபைரவர் சன்னதி ஆகியவையும் உள்ளன. தெற்கு நோக்கிய காலபைரவர் சன்னதியில் அதிக மக்கள் வழிபடுகின்றனர்.
நடராசர் மண்டபத்தில் ஐம்பொன்னாலான நடராசர் உள்ளார். பஞ்ச தாண்டவ தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
தல அதிசயம்
இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்ச காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது இருப்பது அதிசயமாகும்.
சில முறைகள் தரிசனம் செய்து உள்ளோம். 13.06.2026 மீள் தரிசனம்
நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#கொங்குத்தலங்கள்
https://www.facebook.com/share/p/1R4T7Byap4/

பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் - பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ...