2.அம்மாப்பேட்டை - புத்தூர்
புற்றிடம் கொண்டீஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் ஆலயம்
⭐அப்பர் பாடிய வைப்புத்தலம்.
⛳இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், அம்மாபேட்டை அருகில் அம்மாப்பேட்டையின் தென்புறத்தில் புத்தூர் என்ற இடத்தில் உள்ளது.
அம்மாப்பேட்டை - புத்தூர்-
அம்மாப்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில், உள்ள சாலை வழியாக வந்தால் உட்புறம் உள்ள பெரிய ஏரி கரையில், ஏரியின் தென்புறத்தில் உள்ள ஆலயம்.
அல்லது
அம்மாப்பேட்டை நகரிலிருந்து தென்புறம் வடுவூர் செல்லும் சாலையில் வந்து கிழக்கில் திரும்பி பின் ஆலயம் சென்று அடையலாம்.
🛕 ஆலய அமைப்பு:
ஆலயம் வடபுறத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. ஆலயத்திற்கு இராசேந்திர சோழர் காலத்தில் திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் உள்ளது.
ஆலயம் முன்புறம் ஒரு விநாயகர் ஆலயம், ஏரிக்கரை முன் புத்தூர் படியரிசி மாரியம்மன் முதலிய ஆலயங்கள் உள்ளன.
புற்றிடம் கொண்டீஸ்வரர் - செளந்தரநாயகியம்மன் ஆலயம்
முன்புறம் 3 நிலை ராஜகோபுரம் உள்ளது.
மேற்கு நோக்கிய ஆலயம்.
ஆலய முன் பகுதி பெரிய மண்டபத்தில், தென்மேற்குப் பகுதியில் தனி விநாயகர் உள்ளார். கொடிமரம், பலிபீடம், நந்தி அடுத்து, காட்சி கோபுரத்துடன் கூடிய சுவாமி அம்பாள் கருவரைகள் கொண்ட உள் மண்டபம். நுழைவாயிலில் துவர பாலகர்கள்; சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனிக் கருவறையில் உள்ளார்கள். உள் மண்டபத்திலேயே கிழக்கு நோக்கிய வள்ளி, தெய்வானையுடன் முருகன் சன்னதியும் உள்ளது.
பிரகாரத்தில், துர்க்கை, தனி சன்டிகேஸ்வரர், கிழக்கில், நவகிரகங்கள் அமைத்துள்ளனர்.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026
ஆலயம் வரை சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்கள் தவிர மற்ற நேரங்களில், தகவல் கொடுத்து சென்று தரிசிக்கலாம்.
வேறு எந்த கடைகள், வீடுகள் அருகில் இல்லை. வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
தெய்வத்திரு ஸ்ரீமான் சா.காசிநாத பாண்டியர் அவர்களால், இக்கோவில் முதல் கும்பாபிஷேகம் 1946 ல் செய்யப்பட்டுள்ளது. அவர் படமும் தகவலும் உள் மண்டபத்தில் உள்ளது.
1960ல் உயர்திரு A. உத்தண்டராமப் பிள்ளை, சென்னை மாநில இந்துமத அறநிலையப் பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களால் குடமுழுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.
24.01.2011ல் கிராமப் பெரியோர்களால் சிறப்பான முறையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பில் உள்ள ஆலயம்
ஆலயம் அமைதியான சூழ்நிலையில் உள்ளது. பக்தி பூர்வமான சூழலில் வணங்கலாம்.
சுப்ராம் தரிசனம் 18.02.2023 (மகாசிவராத்திரி / சனி மகாபிரதோஷம்) மற்றும் 8.3.26 ல் ஆலயம் மீள் தரிசனம்
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள் அம்மாப்பேட்டை பகுதி 8.3.26
No comments:
Post a Comment