திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், மிகவும் பழமையான பிரபலமான கோயில் ஆகும். திருமுறையின் குறிப்பில் உள்ள எச்சில் என்ற வைப்புத்தலம் என்றும் அறியப்படுகிறது.
வாஸ்து தோஷம் நீங்க மன்னன் ஒருவன் கட்டியது. வீடு, நிலம் சம்பந்தமான பிரார்த்தனை ஆலயம்.
🔱பஞ்சபூதங்களுள் பூமிக்கான தலமாக விளங்கும் இக்கோவில்2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முற்காலத்தில் மண்ணக்கண் என்றும் அரக்கன் சுவாமியை பூசித்து பேறு பெற்றவன். அவன் அடிமை திறன் சிறப்பு புலப்பட அவனது பெயரால் அறியப்படும் தலம்.
🌟மண் அரக்கநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பின்னர் மருவி மண்ணச்சநல்லூர் என்றானது.
🔰அரிசி அரைவை ஆலைகளுக்குப் பிரசித்தி பெற்ற ஊர். கொள்ளிடம் ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது இப்பகுதியிலிருந்து மண்ணைக் கொண்டு சென்று, அணைப்பு ஏற்படுத்தியதால் ஊரின் பெயர் மண் அணைத்தநல்லூர் என்றிருந்ததாகவும், காலப்போக்கில் அது மருவி மண்ணச்சநல்லூர் என்று ஆனதாகவும் கூறுவர்.
🛕கோயில் அமைப்பு
🛕கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் லிங்கத் திருமேனியில் பூமிநாத சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
🛕கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமர விநாயகரும், நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து கொடிமர பலிபீடம் உள்ளது.
🛕கொடிமரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் மிகவும் சிறப்புக்குரியவை:
இங்கு சூரியன் துணைவியர்களுடன் நடுநாயகமாக இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்த நிலையில் உள்ளன.
அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்துள்ளன. சூரிய பகவான் சனியைப் பார்த்தவாறு உள்ளார். ராகு, கேது கிரகங்கள் முழு உருவ அமைப்புடன் எழுந்தருளியிருப்பதும் விசேஷமானது.
🛕மற்ற கிரகங்களைக் காட்டிலும் சனி பகவான் சற்று உயரத்துடன் எழுந்தருளி, பொங்கு சனீசுவரராகக் காட்சியளிக்கிறார். செவ்வாய் பகவான் கையில் கதாயுதத்துடன் எழுந்தருளி அனைத்து சத்ருக்கள், மண் சம்பந்தப்பட்ட பயங்களை நீக்குபவராகவும், குரு பகவான் ஞான முத்திரையுடனும் காட்சியளிக்கின்றனர்.
🛕மகாமண்டப நுழைவுவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறத்தில் முருகனும் காட்சியளிக்கின்றனர்.
🛕கோயிலின் மகா மண்டப நுழைவுவாயிலின் வலதுபுறத்தில் தனி சன்னதியில் அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் தர்மசம்வர்த்தினி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இந்த அன்னையின் முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
🛕 மகா மண்டபத்தின் கிழக்குத் திசையில் காலபைரவரும் சந்திரனும் நுழைவுவாயில் பகுதியில் துவாரபாலகர்களும் எழுந்தருளியுள்ளனர். அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்துள்ள கருவறையில் சுவாமி பூமிநாத சுவாமி காட்சியளிக்கிறார்.
🛕இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறத்தில் நல்வழி காட்டிய நால்வர் சன்னதியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. மேலும் அவர்களுக்குரிய குருபூஜை நட்சத்திரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த பிரகாரத்திலேயே அருள்மிகு தட்சிணாமூர்த்தியும் உள்ளார்.
இதைத் தொடர்ந்து திருக்கோயில் விநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், காசி விசாலாட்சி, வள்ளி, தெய்வசேனா சுப்ரமணியசுவாமி, கஜலட்சுமி சன்னதிகளும் அமைந்துள்ளன.
🛕 கருவறை சன்னதியின் பின்பகுதியில் லிங்கோத்பவரும், வடக்கு பிரகாரப் பகுதியில் பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் திருமேனிகளும் அமைந்துள்ளன. நடராஜர் தெற்கு புறத்தில் வடக்குப் பார்த்து வைத்துள்ளார்கள். மேலும், நாகபரண விநாயகர், சப்த கண்ணிகை, மத்தளத்துடன் நந்தி குறிப்பிடத்தக்கவை.
மற்ற கிரகங்களைக் காட்டிலும் சனி பகவான் சற்று உயரத்துடன் எழுந்தருளி, பொங்கு சனீசுவரராகக் காட்சியளிக்கிறார். செவ்வாய் பகவான் கையில் கதாயுதத்துடன் எழுந்தருளி அனைத்து சத்ருக்கள், மண் சம்பந்தப்பட்ட பயங்களை நீக்குபவராகவும், குரு பகவான் ஞான முத்திரையுடனும் உள்ளார்கள்.
🛕வில்வம் - தல விருக்ஷம். என்ற குறிப்பு இருந்தாலும், மற்ற திருக்கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் மாறுபட்டிருப்பது தல விருட்சத்தில்தான். இக்கோயிலில் வில்வ, வன்னி மரங்கள் தல மரங்களாக உள்ளன.
மரங்கள் பூமி சம்பந்தமான தோஷங்களை நீக்குவதற்காக நடைபெறும் மண் வழிபாட்டு முறையில் தல விருட்சம் முக்கியத்துவத்தை பெறுகிறது. மேலும் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் மகா ருத்ரயாகத்தின்போது பயன்படுத்தப்படும் மூலிகைகள், தானியங்களின் சாம்பல் இங்குதான் கொட்டப்படுகின்றன.
📚கல்வெட்டு
🔰மானிய கல்வெட்டு படி, திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தப்பட்டு, பூசை, விழாக்கள் நடைபெறுகிறது.
🔱கோயில் புதுப்பிக்கும் பணி முடிந்து சமீபத்தில் 2026 ல் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கோவில் புணரமைப்பு செய்து மிகவும் அழகாக உள்ளது.
🪷பூசை / விழாக்கள்
ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். நடராஜர் புறப்பாடும் நடத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கும், சஷ்டி, கிருத்திகையன்று சுப்ரமணிய சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் மிகுந்த சிறப்புடன் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பர். இதில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விசேஷமானது.
மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று மகா ருத்ரயாகம் நடைபெறும். உலக நன்மைக்காகவும், அனைத்து சௌந்தர்யங்களும் கிடைக்க வேண்டியும், இயற்கை செழிக்கவும், அனைத்து ஜீவராசிகளும் பசி, பட்டினியின்றி வாழவும், எல்லா நன்மைகள் பெறவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. 1008 மூலிகைகள், தானியங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் மகா ருத்ரயாகத்தில் நடைபெறும்.
🪷அறம்வளர்த்த நாயகி சன்னதியில்
வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சன்னதி முன்பு 8 குத்துவிளக்குகளுடன் நடைபெறும் லலிதா சகஸ்ரநாமத்தில் பங்கேற்கும் பெண்கள், 1008 முறை அதை உச்சரித்து குங்குமார்ச்சனை செய்தால் அதற்குரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகவுள்ளது.
⛳அமைவிடம்
கோயில் திருச்சி துறையூர் செல்லும் சாலையில் மண்ணச்சநல்லூர் நுழையும் பிரதான சாலையில் உள்ளது உள்ளது. பேருந்துகள் மற்றும் வாகனங்களில் எளிதாக சென்று வரலாம்.
1 சமயபுரத்திலிருந்தும் டவுன் பஸ் உள்ளது.
2. திருச்சி - சென்னை சாலையில் வரும் டோல்கேட் வழியாக திரும்பி, துறையூர் செல்லும் சாலையில் நொச்சியம் தான்டினால், மனச்சநல்லூர்.
திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
💥பரிகாரத் தலம்
நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் பரிகார தலம்.
🌼மனை தோஷம்.
வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய வீடு கட்டும் யோகம், வீட்டு எண் யோகம், வீடு, மனை, நிலம் விற்கும் யோகம், பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தோஷம், தென்மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்னை, ஜன்ம சாப - பாப தோஷம், வாஸ்து தோஷம், வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம், பழைய வீடு புதுப்பிக்கும் யோகம், வீடு கண் திருஷ்டி தோஷம் ஆகிய 16-ம் முக்கியம்.
இந்த 16 விதமான தோஷங்களையும் இத்திருக்கோயில் பூமிநாத சுவாமி நீக்குவதாக மாமுனிவர் அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளன.
🔱பூமிநாதர், 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
🔱வீடு மணை சம்பந்தமான பிரச்சினைகள் தீர வீடு/ மணையின் சனி மூலையில் மண் எடுத்து வந்து சுவாமிக்கு வைத்து நிலத்து மண்ணை சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்யும் வித்தியாசமான பரிகார பூஜை இங்கு பூமிக்குரிய நாயகனாக இத்தலத்து இறைவன் பூமிநாதசுவாமி இருப்பதால், மண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அனைத்து குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இங்கு மண் சம்பந்தப்பட்ட பிரச்சனை நீங்க நடத்தப்படும் பரிகார பூஜை சற்று வித்தியாசமானது.
🔱அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
💥பரிகார பூஜை
🌟மண் வழிபாட்டு முறை
பத்திரதாரர்கள், ரத்த சம்பந்தம் உடையவர்கள் தாங்கள் வாங்க, விற்க விரும்பும் வீடு, நிலம், மனை உள்ள இடத்திலிருந்து ஒரு நல்ல நாளில் புதன் ஹோரையில் வடகிழக்கு ( ஈசானிய, ஜல, சனி) மூலையிலிருந்து மூன்று கைப்பிடி அளவு மண்ணைப் புது மஞ்சள் துணியில் முடிய வேண்டும்.
அந்த மண் முடிப்பை மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு எடுத்து வந்து,
கொடி மரத்து விநாயகருக்கு விளக்கேற்றி, பிறகு அம்பிகைக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்து பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி யிடம் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
திருக்கோயில் குருக்களால் அர்ச்சனை செய்யப்பட்ட பின்னர்,ஒருமுறைபிரகாரத்தை வலம் வந்து கொடுக்கப்பட்ட மண்ணைத் தல விருட்சமான வில்வ மரத்தடியில் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு இட வேண்டும்.
இரண்டாவது முறையாக பிரகாரத்தை வலம் வந்து, தல விருட்சமான வன்னி மரத்தடியில் குலதெய்வத்தை வணங்கி, தங்கள் வேண்டுதலை மனதுக்குள் கூறி வன்னி மரத்தடியிலுள்ள மண்ணில் ஒரு கைப்பிடியை எடுத்து புது மஞ்சள் துணியில் முடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூன்றாவது முறையாக பிரகாரம் வலம் வர வேண்டும்.
முதல் முறை கோயில் பிரகாரத்தை வலம் வரும் போது பிரம்மா, இரண்டாவது முறை வலம் வரும் போது விஷ்ணு, மூன்றாவது முறை வலம் வரும்போது சிவனின் ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம். பிறகு, அருள்மிகு காலபைரவருடன் சந்திரன்
நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து, கம்பத்தடியில் வணங்கி வன்னி மரத்தடியிலிருந்து எடுத்த மண் முடிப்புடன் வீட்டுக்குச் சென்று பூஜை அறையில் வைக்க வேண்டும்.
புதன் அல்லது குரு ஓரையில் இந்த மண் முடிப்பைப் வீட்டின் நம் நிலத்தில் மண் எடுத்த இடத்தில் /வடகிழக்கு மூலையில் மண்ணைப் போட்டு தூப தீபம்
சூடமேற்றியும் வழிபட வேண்டும். அந்த புது மஞ்சள் துணியில் ரூ. 5 நாணயத்தை வைத்து முடி போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும்.
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறியதும், ரூ.5 நாணயம் உள்ள மஞ்சள் துணி முடிப்புடன் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத
சுவாமி திருக்கோயிலுக்கு வந்து, முடிப் பையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். குறைந்தது 3 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்குள் பூமி சம்பந்தமான தோஷங்கள் நீங்கி, தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது இத்திருக்கோயில் மண் வழிபாட்டு முறை செய்து பலன் பெற்றவர்களின் கூற்றாகவுள்ளது.
மண், மனை, வீடு இல்லாதவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற "பூமிக்கே நாதனாக விளங்குபவனே, என்னுடைய பிரார்த்தனையை மனதில் உள்ளதை மாலையாக சாத்திவிட்டேன்'' என்று கூறி, மூன்று அமாவாசை தினங்களிலோ, பிறந்த 3 கிழமைகளிலோ, மூன்று பௌர்ணமிகளிலோ, பிறந்த 3 தேதிகளிலோ வந்து வழிபட வேண்டும். அர்ச்சனை செய்து வழிபட்டால் சில மாதங்களில் பிரச்சினை தீர்க்கப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும், திருமணப் பாக்கியம், குழந்தைப் பேறு உண்டாகுதல் போன்ற பலன்களையும் பக்தர்கள் பெறுவர்.
🪷பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
(வலைதள தகவல் 💻📡📚 )
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும்.
ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது.
பிரார்த்தனை செலுத்தவும், வழிபாடுகள் செய்யவும் பத்தர்கள் விஷசே காலங்களில் அதிகம் வருகிறார்கள்.
#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026
No comments:
Post a Comment