திருமுறை வைப்புத்தலம்.
🔱திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது லால்குடி. இங்குள்ளது பழம்பெருமை வாய்ந்த சப்தரிஷிஸ்வரர் கோயில் உள்ளது .
🔱மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சித் தருகிறார். அம்பாள் பெயர் பெருந்திருப்பிராட்டியார்.
🔱சப்தரிஷிகளான அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால் இறைவனுக்கு சப்தரிஷிஸ்வரர் எனப்பெயர் ஏற்பட்டது. இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.
🔱திருமகள் தவம் இருந்து சிவன் அருள் பெற்று விஷ்ணுவை மணந்தார் என்பதால், திரு - தவத் துறை என்பதாக புராணம்.
🔱ஏழு ரிஷி முனிவர்களால் தவம் இருந்து வழிப்பட்ட தலம்.
🔱மார்கழி ஆருத்ரா தரிசனத்திற்கு பெயர் பெற்ற சிறப்பான தலங்களுள் ஒன்று.
🔱இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் லிங்கத்தின் தலையில் வெடிப்பு ஏற்பட்டு, வரிவரியாக இருக்கிறது.
🔱திருமால், இலக்குமி, முருகன், பைரவி, பராராசரர் வழிபட்டது. காளி பைரவியாக வந்து சிவனுடன் நாட்டியத்தில் போட்டியிட்டு தோற்றார்.
🔱 திருமால், சக்ரம் பெற்றது. மாளவ நாட்டு மன்னன் குட்ட நோய் நீங்கியது.
🔱சம்பந்தர் திருப்பதிகம் பாடப்பெற்றது என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். எனினும், பதிகம் கிடைக்கவில்லை
🔱அப்பர் வைப்புத் தலமாக பாடியுள்ளார். .
🔱அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளது.
🔱மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் உள்ளது.
🔱அழகிரிசாமிப்பிள்ளை அவர்களால் அந்தாதி நூல் மேலும், பழுவூர் குமாரசாமி முதலியார் இயற்றிய பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ் உடையதலம்.
🔰கல்வெட்டுகள்
🔱பல உண்டு முற்கால மன்னர்கள் செய்த தொண்டுகள் கட்டளைகள், நிலங்கள் விபரங்கள் உள்ளன. விளக்கு எறிக்க நிலங்கள், மூன்று காலங்களும் பிராமினர்கள், வேதியர்கள் வேதம், பதிகம் ஓத நிலங்கள். வருமாணம் குறைந்தபோது மேலும் நிலங்கள் விலைக்கு வாங்கி தானம் செய்த விபரங்கள் உள்ளன.
🔱3ம் நந்திவர்மன், வரகுணன், பராந்தக சோழன் முதலியோர் திருப்பணிகள் செய்து தரப்பெற்ற ஆலயம்.
மேலும், நிருதுபங்கள், விக்ரமன், பரகேசரி, ராஜகேசரிவர்மா, முதலியோரும் ஆலயம் வளர பராமரிக்க பொற்காசுகள், நிலங்கள், தானம் அளிக்கப்பட்டுள்ளது. என்ற குறிப்புகள் கல்வெட்டுகளில் உள்ளன.
🔱மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இந்த ஊர் பக்கம் வந்தபோது திருவத்துறை சப்தரிஷிஸ்வரர் ஆலய கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இதனைக் கவனித்த மாலிக்காபூர், அருகிலிருந்த தளபதியிடம் உருது மொழியில், "அது என்ன லால் (சிவப்பு) குடி (கோபுரம்)? என்றான். அச்சொற்றொடரே "லால்குடி' என்று மாறி விட்டது என்கிறார்கள்.
🔰தல வரலாறு:
தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன்பொருட்டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான். அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனை கொண்டுவந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையை பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்கு மேலும் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கி பரிவோடு, தாலாட்டி பாலூட்டினார்கள்.
வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததை கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே! அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழை கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.
தாரகாசூரனைக் கொன்றுபோட்டு, வெற்றி வீரராய் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, சப்த ரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார் முருகன். முனிவர்கள் நடுங்கினார்கள். குற்றம் செய்ததை அறிந்து, நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கி தவம் செய்தனர். பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தனர்.
கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்கு பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு தவமிருந்தனர். சுயம்புலிங்கமான சிவன், முனிவர்கள் தவத்தினை ஏற்று, அவர்களுக்கு சாப விமோசனம் தந்தார். தன் தலைப்பகுதி வெடிக்க அதிலே தீயினை உண்டாக்கினார் லிங்கமூர்த்தி. அந்தத் தீப்பிழம்புகள் ஏழு முனிவர்களையும் உள்வாங்கிக் கொண்டது.
இறைவனின் கருணைச் செயலால் இன்றும் லால்குடி சிவலிங்கத்தின் மேல்பகுதியில் வரிவரியாய் பள்ளம் இருப்பதைக் காணலாம். சிவனின் முழு அருளுக்கும் உரியவர்களாக ஏழு முனிவர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இறைவனின் பெயர் அன்றுமுதல் "சப்தரிஷிஸ்வரர்' என்று வழங்கப்பட்டது. சுவாமி கருவரை நுழைவாயில் அருகே ஏழு ரிஷிகளும் அருள் பாலிப்பதை நாம் இன்றும் காணலாம்.
💥ஆலய அமைப்பு :
🔱ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்
மேற்குப் பார்த்த ஆலயம். 5 நிலை ராஜகோபுரம் உடையது.
🔱ஆலயம் உள் சிவகங்கைத்தீர்த்தம் உள்ளது. கங்கையின் சிறப்புடையது.
மன்னன் வழிபட்டு, நோய் நீக்கம் பெற்ற தீர்த்தம்.
🔱 ஸ்வாமியையும் அம்பாளையும் பிரதக்ஷிணம் செய்யும் போது ஓம் வடிவில் வருவது மிகச் சிறப்பு.
🔱விநாயகர், பிரகாரத்தில் வட பகுதியில் அலங்கார மண்டபம் உள்ளது.
கொடி மரம், பலி பீடம் தாண்டி ஆலயம்
🔱நுழைவில் சுதை வடிவில் விதானத்தில் சப்தரிஷிகளுக்கு காட்சி தரும் சிற்பம்.
மேல்விதானத்தில் நவகிரக அமைப்பு சிறப்பு.
🔱வெளி மண்டபத்தின் வடக்குப் பகுதியில், அழகிய பெரிய நடராஜர் தனி மண்டபத்துடன் சன்னதியில் உள்ளார்.
🔱மகாலெட்சுமி சுதை வடிவம் அழகு
🔱சப்தரிஷிகளும் சுவாமி கருவரை நுழைவில் மேற்குப் பார்த்து உள்ளனர்.
நான்கு வேதங்களும் கருவரையில் நான்கு தூண்களாக உள்ளது.
🔱சுவாமி மேற்கு நோக்கிய தனி கருவரை, அர்த்தமண்டபம், நிருத்த மண்டபம், உள் மண்டபத்துடன் உள்ளது.
🔱கோஷ்ட்டத்தில் அமைந்திருக்கும், பிக்ஷாண்டவர், அர்த்தநாரீஸ்வரர், வீனா தெட்சிணாமூர்த்தி, அற்புதசிலை அமைப்புகள்.
🔱சுவாமி பிரகாரத்தில், சண்டிகேஸ்வரர், சப்த நாகர்கள், மாங்கல்ய மகரிஷி, சப்த கணபதிகள், சூரியன், பைரவர், சனிஸ்வரர், மற்ற தெய்வங்களும் உண்டு.
🔱சுவாமி இடது புறம் அமிர்தகடேஸ்வரர் தனி சன்னதியில் முக்கிய ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
அருகில், ஜூரகரேஸ்வர் அருவுருவமாக இருந்து அருள்பாலிக்கின்றார்.
🔱சுவாமி தென் பிரகாரத்தில் 63 மூவர் மற்றும் , தனி நால்வர், தனி சந்தான குரவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
🔱அம்பாள் தனி சன்னதி கிழக்குப் பார்த்து, சுவாமிக்கு இடது புறம் தனி அமைப்புடன் கூடிய கருவரை, மண்டபங்களுடன், தனி பிரகாரத்துடன் அமைந்துள்ளது.
💥பிரார்த்தனை: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
💥விழாக்கள்
ஆண்டின் அனைத்து மாதங்களிலும் சிறப்பு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருக்கார்த்திகை, மாசி கொள்ளிடம் தீர்த்தவாரி, மகா சிவராத்திரி, பங்குனி 10 நாள் விழாவில், சப்தஸ்தானம், மார்கழி திருவாதிரை தில்லைக்கு அடுத்த சிறப்பு மிகு விழா.
(வலைதள தகவல் 💻📡📚)
#பயணஅனுபவகுறிப்புகள்🕊️.
💥திருச்சி - அன்பில் பிரதான சாலையில் இந்நகருக்கு நிறைய பேருந்து வசதிகள் உண்டு. ஆலயம் பிரதானசாலைக்குத் தென்புறம் புகைவண்டி சாலைத்தாண்டி 500 மீட்டரில் உள்ளது.
💥ஆலயம் பிரதான நகரில் உள்ளது. ஆலயம் அருகில் சுற்றி வாகனங்கள் நிறுத்தவும் வசதிகள் உண்டு.
நகர்புறமாகவும், புகழ் பெற்ற தலமாகவிருப்பதால் ஏராளமான பக்தர்கள் கூட்டம் வந்து வணங்கி அருள்பெற்று செல்கிறார்கள்.
நன்றி🙏
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#Subbramசுப்ராம்🔱🇮🇳 #லால்குடிவட்டம் #சிவராத்திரியாத்ரா 15.02.2026
No comments:
Post a Comment