திருத்தலையூர் - சப்தபுரீஸ்வரர்
💥திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தலையூர். அ/மி. குங்குமாம்பாள் சமேத சப்தரிஷிபுரிஸ்வரர் ஆலயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் திருத்தலையூர் அமைந்துள்ளது.
⛳அமைவிடம்:
1. திருச்சிக்கு வடக்கில் உள்ள துறையூர் சென்று அங்கிருந்து தண்டலை வழியாக முசிறி செல்லும் சாலையில் உள்ளது. துறையூரிலிருந்து மேற்கில் நாமக்கல் சாலையில் கண்ணனூர் வந்து தெற்கில் திருத்தலையூர் சாலையில் செல்லவேண்டும். துறையூர் - கண்ணலூர் சாலை State Highway. (இவ்வூரிலும் இரண்டு சிவன் ஆலயங்கள் உள்ளது) - கண்ணனூர் - தலையூர் - சாலை குறுகியது.
2. முசிறி - தண்டலை -திருத்தலையூர் - கண்ணணூர் - துறையூர் செல்லும் . சாலையும் திருத்தலையூர் அடையலாம்.
தல சிறப்புகள்:
🪷ராமாயணக் காலத்துக்கு முந்தைய காலத்துக்கோயில் எனக் கூறப்படுகிறது.
🪷சிவபெருமான் நமது நெற்றிக்கண்ணை திறந்து ராவணனுக்கு காட்சியளித்த வரலாறும் இந்த கோயிலுக்கு உண்டு.
🪷சப்தரிஷிகள் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
🪷புரூரவச் சக்கரவர்த்தி என்பவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகவும் இக்கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது.
🪷இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள திருமுறை தேவார வைப்புத் தலமாகும்.
🪷1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.
🪷இது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌼பயணிகள் பேருந்து வசதி துறையூர், மற்றும் முசிறியில் உண்டு. திருத்தலையூர் சிற்றூர்.
🌼திருத்தலையூரில் அறநிலையத்துறை நிர்வாகத்தில் ஓரு மிகப் பழமையான அழகியநாத பெருமாள் ஆலயமும், மிக சிறிய காசிவிஸ்வநாதர் ஆலயமும் - தற்போது உடையவர் கைலாசநாதர் (இரட்டை நந்தி) ஆலயமும் - புனரமைப்பு நிலையில் அங்குள்ள அடியார்களால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது. இவைகள் ஊரின் பிரதான சாலையை ஒட்டி உள்ளன.
🌼இங்கிருந்து மேற்கில் 500 மீட்டர் தூரம் தனி சாலையில் சென்று சப்தரிஷிபுரிஸ்வரர் ஆலயம் அடைய வேண்டும்.
🌼சிறிய ஊர் என்பதால், சிற்றுந்துகள், Auto வசதிகள் கிடையாது; நடந்தும் / சொந்த வாகனத்திலும் செல்லலாம்.
🌼ஆலயம் அருகிலும் கடைகள், வீடுகள் எதுவும் கிடையாது. சில குறிப்பிட்ட விழா நாட்களில் தற்காலிக ஏற்பாடுகள் வசதிகள் இருக்கலாம்.
🌼தலையூரிலிருந்து அருகில் உள்ள திருத்திய மலை மற்றும் தின்னக்கோனம் (வைப்புத் தலம்) செல்லலாம்.
🌼12.03.2020 ல் குடமுழுக்கு நடைபெற்றது தரிசனம் கிடைத்தது. 15.02.2026 சிவராத்திரி அன்று மீள் தரிசனம். ஏராளமான பக்தர்கள் வருகை.
Subbramசுப்ராம்🔱🇮🇳 நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
🛕ஆலய அமைப்பு
🪔இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுக்கள் பல உள்ளன.
🪔கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் நேர் எதிரிலேயே தீர்த்தக்குளம் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது. மேலும் அகோரத் திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
🪔ஆலயம் முன்பு3 நிலை இராஜகோபுரம் மற்றும் முன்புறம் சிறிய முன்மன்டபத்துடன் உள்ளது.
கோவில் முழுவதும் கற்றளியால் ஆனது.
🪔கருங்கல்லால் உள்ள முழு மண்டபத்தில் நந்தியம் பெருமான். வடகிழக்கில் நவகிரகம்.
🪔உள் மண்டபத்தில் சுவாமி அர்த்தமண்டபம், தாண்டி கருவரையில்
🪔சிவலிங்க வடிவில் அருள்மிகு சப்தரிஷீசுவரர் கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தமாகசப்தரிஷிகள் வழிபட்ட சிறிதான சிவலிங்கம். கருவறை மூலவராக எளிமையாகக் காட்சியளிக்கிறார்.
🪔இறைவன் சப்தரிஷீசுவரர் சன்னதி அமைந்த பிரகாரத்திலேயே தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன்.
🪔ஒரே சமயத்தில் சுவாமி அம்பாள் வழிபடலாம்.
சுவாமி கருவரை தென்புறத்தில் உள்பிரகார மண்டபத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதி கொண்டு அமைந்துள்ளது ராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இராவனேஸ்வரர் சிவலிங்கம்.
🪔பத்துத் தலை ராவணன் உருவாக்கிய சிவலிங்கம் என்பதால், சற்று பெரிதாகவே இருக்கிறது. மேலும் ராவணன் வழிபட்ட சிவலிங்கம் கொண்ட கோபுரத்தின் மேல்பகுதியில் பத்துத் தலைகளைக் கொண்டு ராவணன் எழுந்தருளியிருப்பது போன்று சிற்பங்களும் எழுந்தருளப்பட்டிருக்கின்றன.
🪔சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அகோர வீரபத்திரர் உதித்த தலம் இது. அதனாலேயே இறைவன் சன்னதியின் வலதுபுறத்தில் அகோர வீரபத்திரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
🪔சிவபெருமானின் திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்த, தான் அவதரித்த இந்த திருத்தலத்திலேயே முக்தியும் அடைந்த உருத்திர பசுபதி நாயனார், அகோர வீரபத்திரருக்கு அருகிலேயே காட்சியளிக்கிறார்.
கோஷ்ட்டம் / உள்பிரகாரம் | பிற சன்னதிகள்
🍃கோயில் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேசுவரர் எழுந்தருளியுள்ளனர்.
🍃உள் பிரகாரத்தில் தென்மூலையில் - கன்னி மூலையில் மிக அழகிய பெரிய அமைப்பில் விநாயகர் அற்புதகல் அமைப்பு.
அடுத்து,
🍃இராவணனுக்கு வரம் பெற வேண்டிய அளவை குறிக்கும் விதமாக, இத்திருக்கோயிலில் மூன்று விரல்களை மடக்கியபடி திருமால் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார்.
மேலும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும்.
🍃வடமூலையில் ஒரே கல்லால் ஆன ஜேஷ்டாதேவி யும் உள்ளார்.
🍃பிரகார வடமேற்கு மூலையில் மிகப் பழமையான (5000 வருட ) தல விருட்சம் சிறப்புக்குரியதாக இருக்கிறது. இங்கு ஸ்தல விருட்ச பூஜையும் விசேஷமானது என்பர். ராவணனின் உருவத்தைக் கண்டு அஞ்சிய சப்தரிஷிகள், தங்களைக்காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருதமரமாக மாறி நின்றனர்
🍃மேலும் நவக்கிரக சன்னதி, பைரவர் சன்னதி, தூணில் எழுந்தருளிய ஆஞ்சனேயர் சிற்பம் ஆகியவையும் அமைந்துள்ளன.
🍃இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பூசைகள் | விழாக்கள்
🌺இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மாசிமகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருகார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது.
பிரார்த்தனை | வழிபாடுகள்.
🌹இந்தக் கோயிலுக்கு வந்து பிரம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
🌹திருமணத்தில் தடை இருப்பவர்களுக்கு இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தலவரலாறு
💥ராமாயண காலத்துக்கு முந்திய கோயில் என்று இந்த கோயிலுக்கு வரலாறு ஒன்று. ராவணன் தனது தலைகளைத் திருகி யாகத்தில் வீசியதால் ஆதியில் திருகுதலையூர் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி திருத்தலையூர் என்றானது.
💥இலங்கையிலிருந்து ராவணன் கயிலாயம் நோக்கி கிளம்பி வரும் வழியில், இப்பகுதி வனாந்திரமாக இருப்பதைக் கண்டு, இங்கேயே தங்கி விட்டார்.
💥இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவபெருமானையும் வழிபட்டுக் கொண்டிருந்த சப்தரிஷிகள், பத்துத்தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருதமரத்தில் ஐக்கியமாகிவிடுகின்றனர். அந்த மரமே இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக மாறியது. ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை நான் வழிபடுவதா என எண்ணிய ராவணன், உடனடியாக புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான்.
💥தனக்குசிவபெருமான்நேரில் தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்துத் தொடர்ந்து வழிபட்டான் ராவணன். ஆனால், சிவபெருமான் தரிசனம் தரவில்லை. நாள்கள் கடந்தும் யாகங்கள் தொடர்ந்தன. மிகவும் வெறுத்துப் போன ராவணன், ஒரு கட்டத்தில் தனது பத்துத் தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீசி, ஒரு தலை மட்டுமே மிஞ்சியது. அப்போதும் சிவபெருமான் காட்சித் தரவில்லை, தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீச முயற்சித்தான் ராவணன்.மனம் கசிந்து போன சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்தபடி ராவணனுக்கு காட்சியளித்தார். அதோடு ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும் சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்டவைத்து, மீண்டும் அவனைப் பத்துத் தலை ராவணனாக உருவாக்கினர். தான் பிடித்து வைத்த புற்றுமண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கயிலாயம் புறப்பட்டுச் சென்றான் ராவணன். இத்தகையை சிறப்புகளைக் கொண்டது.
💥ராவணனால் உருவாக்கப்பட்டது தான் திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் திருக்கோயில்.
💥சப்தரிஷிகள் வழிபட்ட தலம்: ஏழு ரிஷிகள் தான் சப்தரிஷிகள் என்று கூறப்படுகிறது. இவர்கள் சிவலிங்கத்தை வழிபட்டதால் சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
💥புரூரவச் சக்கரவர்த்தி மன்னனின் சாபம் நீங்கிய கதை: புரூரவச் சக்கரவர்த்தி மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த மன்னன் திருவண்ணாமலையில் நீராடி விட்டு இறைவனை வேண்டும்பொழுது திருத்தலையூர் சென்று பிரம்ம குளத்தில் நீராடினால் அங்கு மூலவரை தரிசித்தால் உன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறப்பட்டது அதன் வழியில் மன்னனும் இக்கோவிலுக்கு வந்து நீராடியதால் இவர் தோஷம் நீங்கியது.
ஆலயத்தின் பிற சிறப்புத் தகவல்கள்
இறைவன் சப்தரிஷீசுவரர்
அத்ரி, ப்ருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், மரிசி, ஆங்கிரஸர் என சப்த ரிஷிகள் வழிபட்டதால், இத்திருக்கோயில் இறைவன் சப்தரிஷீசுவரர் என்றழைக்கப்படுகிறார்
பிரும்மஹத்தி தோஷம் நீக்க
திருவண்ணாமலையில் புரூரவச் சக்கரவர்த்தி நீராடி இறைவனை வேண்டியபோது, திருத்தலையூரிலுள்ள பிரம்ம குளத்தில் நீராடி என்னை வந்து தரிசிப்பாயாக, அசீரிரியாக உனக்கு காட்சியளித்து உனது பிரும்மஹத்தி தோஷத்தை போக்குவேன் என சிவபெருமான் கூறியதாகவும், அதன்படி
பிரும்மஹத்தி தோஷம்போக்க புரூரவச் சக்கரவர்த்தி வந்து வழிபட்டு, தனது தோஷத்தை போக்கியது இக்கோயிலில்தான். இதனால் பிரும்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து, இறைவனையும், இறைவியையும் வழிபட்டுச் சென்றால், அவர்களது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இறைவி குங்குமாம்பிகை அம்மன்
தன்னை நாடிவரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித்தரும் சாந்த சொரூபியாக, அழகின் உருவமாய் குங்குமாம்பிகை அம்மன் காட்சியளிக்கிறார்.
மேலும் திருமணத் தடையுள்ளவர்கள் இக்கோயில் இறைவனை வணங்கி வழிபட்டு, அர்ச்சனை செய்து சென்றால் அவர்களது திருமணத் தடை நீங்கி விரைவில் கைகூடும் என்பது பல தன் பெற்ற பக்தர்களின் கூற்று.
ராவணன் வழிபட்ட சிவலிங்கம்
சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த ராவணனுக்கு கடுந்தவத்துக்குப் பிறகு சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தது இத்திருக்கோயிலில்தான்.
அகோர வீரபத்திரர்
திருத்தலையூர் திருத்தலம் அகோரத் தலமாகும். அகோஸ்தரம் மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானை அழைத்தான் ராவணன்.
ராவணனின் மிகக் கடுமையான தவத்தின் விளைவாக இறுதியில் சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தார்.
உருத்திர பசுபதி நாயனார் அவதாரத் தலம்
🪷அறுபத்து மூவர் என்றழைக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் சோழ மண்டலத்தில் அவதரித்த ஊர் திருத்தலையூர். இந்த ஊரில் அந்தணர் குலத்தில் பசுபதியார் என்னும் பெயரில் அவதரித்தார்.
🪷இவர்தம் அருந்தவப் பெருமையையும், வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவன், இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கினார். உருத்திர பசுபதி நாயனார் தான் அவதரித்த இந்த திருத்தலத்திலேயே முக்தியும் அடைந்தார்.
🪷உருத்திரபசுபதி நாயனார் அவதரித்து முக்தி அடைந்ததாக கருதப்படும் மற்றொரு திருத்தலையூர் (நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் வழியில் திருத்தலையூர் (பாவட்டக்குடி) என்ற ஒரு ஊர் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கத்து.
🪷புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று உருத்திர பசுபதி நாயனாரின் குருபூஜைவிழா இரு தலங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மூன்று விரல்களை மடக்கியபடி காட்சியளிக்கும் திருமால்
☘️துளசி செடியைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, கிழவன் தோற்றத்தில் காணப்பட்ட திருமால், ராவணனிடம் உன்னுடைய ஆயுள்காலமான மூன்றரைக்கோடி ஆண்டில் நீ ஏற்கெனவே வரமாகப் பெற்றது மூன்றுகோடி ஆண்டுகளே. மீதமுள்ள அரை கோடி ஆண்டை சிவனாரிடமிருந்து வரமாகப் பெற்று வா என்றார்.
☘️அதையொட்டி ராவணன் கடுந்தவம் மேற்கொண்டான். பிரதட்சணமான சிவபெருமானிடம் தனக்கு அரைக்கோடி ஆண்டு ஆயுள் வேண்டும் எனத் தவறுதலாகக் கேட்டு வரமாகப் பெற்றான். இதனால் ஏற்கெனவே வரமாகப் பெற்றிருந்த மூன்றுகோடி ஆண்டுகளை இழந்தான்.
சிறப்பு வாய்ந்த தல விருட்சம்
🌳மற்ற கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் தல விருட்சம் சிறப்புக்குரியதாக இருக்கிறது. இங்கு ஸ்தல விருட்ச பூஜையும் விசேஷமானது என்பர். ராவணனின் உருவத்தைக் கண்டு அஞ்சிய சப்தரிஷிகள், தங்களைக்காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருதமரமாக மாறி நின்றனர். அவர்களுக்கு காட்சியளித்த சிறப்புக்குரிய தலவிருட்சம், மிகப்பெரிய மரமாக அமைந்திருக்கிறது. அடிபாகத்தில் முண்டும், முடிச்சுகளுமாகக் காணப்படுகிறது. அவை அனைத்தும் ரிஷியின் ஐக்கியமான பாகங்கள் என்று கூறப்படுகிறது.
🌳மற்ற மரங்களின் விதைகளைக் கொண்டு மற்றொரு இடத்தில் போட்டால் அங்கு மரக்கன்று உருவாகி, மரமாகும் என்பதுதான் பொதுவானது. ஆனால், இந்த திருக்கோயிலில் உள்ள மருதமரத்தை வேறு எங்கு நடவு செய்தாலும், அது மரமாகாது எனக் கூறப்படுகிறது.
கோயில் தெப்பக்குளம்
பொதுவாக கோயிலுக்குள்ளேயே, வெளிப் பிரகாரம் அல்லது அருகில்தான் கோயிலின் தீர்த்தம் அல்லது தெப்பக்குளம் அமைந்திருக்கும். ஆனால், திருத்தலையூரில் கோயிலுக்கு நேர் எதிரிலேயே மிகப் பெரிய அளவில் அமைத்திருக்கிறது தெப்பக்குளம். இந்த குளத்தில் தவளைகளின் சப்தமும் இருக்காது என்பது சிறப்புக்குரியது.
குடமுழுக்கு
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, பழைமைமாறாமல் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2020, மார்ச் மாதம் மீண்டும் இக்கோயில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
வலைதள தகவல் 💻📡📚 #Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026
No comments:
Post a Comment