Showing posts with label சம்பந்தர் அமுதம் - மொழிமாற்று. Show all posts
Showing posts with label சம்பந்தர் அமுதம் - மொழிமாற்று. Show all posts

Tuesday, July 21, 2020

மொழிமாற்று பகுதி: ஆறு

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஆறு  (பாடல் 10, 11 மற்றும் 12)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

 #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 10
அடியிணை கண்டிலன்  தாமரை
             யோன்மால்   முடிகண்டிலன்

கொடியணி   யும்புலி  யேறுகந்து
             ஏறுவர்   தோலுடுப்பர்

பிடியணி   யும்நடை   யாள்வெற்பு
             இருப்பதோர்    கூறுடையர்

கடியணி   யும்பொழில்  காழியுள்
              மேய   கறைக்கண்டரே.

1268.             திருமுறை 01.117.10
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை பொருளுக்கு ஏற்றவாறு இப்படி மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கடி அணியும் பொழில் காழியுள் மேய  கறைக்கண்டர்
அடியிணை    மால்   கண்டிலன்; 
தாமரையோன்  முடி கண்டிலன்; 
கொடியணியும்  ஏறு உகந்து ஏறுவர்; 
புலித்தோல் உடுப்பர்; 
பிடியணியும் நடையாள் கூறுடையர்; 
வெற்பு இருப்பது.

✳️✍️பொருள் குறிப்பு:

🔽 கடி =மணம். 
🔼 ஏறு - ரிஷபம்    
🔹 கொடியணியும்=கொடியை     
      அலங்கரிக்கும், 
🔸 பிடி அணியும் நடையாள் =பெண் 
       யானையையொத்த நடையினைய     
       உடைய பார்வதி. 
🔼  கூறுடையர் = பாகமாக உடையவர்.
 ⏺️ வெற்பு = கைலை.

💠📝பாடல் விளக்கம்:

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும்

 கறைக்கண்டராகிய சிவபெருமானின்
 அடி இணைகளைத் திருமால் கண்டிலன்.

 தாமரை மலரில் எழுந்தருளியுள்ள  
 பிரமன் முடியைக் கண்டிலன்.

 அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். 

புலித்தோலை உடுத்தவர்.

 பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். 
அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

🏔️தலக்குறிப்பு:     காழி:
காளிதன் என்னும் பாம்பும், நடனத்தில் தோல்வியுற்ற காளியும் இத்தலத்துப் பெருமானாரை வழிபட்டதால் இப்பெயர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் : 11

கையது  வெண்குழை  காதது
          சூலம்  அமணர்புத்தர்

எய்துவர்  தம்மை  யடியவர்
           எய்தார்  ஓர்  ஏனக் கொம்பு

மெய்திகழ்  கோவணம்  பூண்பது
           உடுப்பது   மேதகைய

கொய்தலர்  பூம்பொழிற்  கொச்சையுள்
           மேவிய  கொற்றவரே.

1269.            திருமுறை   01.117.11

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

கொய்து அலர் பூம்பொழில் 
மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் 
கையது சூலம்:    
காதது வெண்குழை;
அமணர் புத்தர்   தம்மை  எய்தார்; 
அடியவர் எய்துவர்; 
ஓர் ஏனக்கொம்பு  மெய்திகழ் பூண்பது;
கோவணம் உடுப்பது

✳️✍️பொருள் குறிப்பு:

⏺️ கொய்து அலர் பூம்பொழில் 
       மேதகைய கொச்சையுள்  =   
       சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய   
       மலர்வனவாய அழகிய பொழில்கள் 
       சூழ்ந்த கொச்சையுள்.
 🔸 ஏனக் கொம்பு = பன்றி

💠📝பாடல் விளக்கம்:

சிறந்தனவாய்க்  கொய்யக் கொய்ய மலர்வனவாய் அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார்;  அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் அணியாகக் கொண்டவர்.   திருமேனிமேல் கோவண ஆடையை  உடுத்தி விளங்குபவர். அவரைத் துதிப்பீராக.

🏔️தலக்குறிப்பு:  
               கொச்சைவயம்:
பராசர  முனிவர்  தமது  உடலின்
தூர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் சீர்காழி தலத்திற்கு இப்பெயர்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல்: 12

கல்லுயர்  கழுமல  விஞ்சியுள்
        மேவிய  கடவுள்தன்னை

நல்லுரை  ஞானசம் பந்தன்
         ஞானத்  தமிழ்  நன்குணரச்

சொல்லிடல்  கேட்டல்  வல்லோர் 
தொல்லை
          வானவர் தங்களோடும்

செல்குவர்   சீரரு  ளாற்பெற
          லாம்சிவ   லோகமதே.

1270.           திருமுறை   01.117.12.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கல்லுயர் கழுமல விஞ்சியுள்
மேவிய  கடவுள்தன்னை
நல்லுரை  ஞானசம் பந்தன்
ஞானத்  தமிழ்  நன்குணரச்
சொல்லிடல்  கேட்டல்  வல்லோர் 
தொல்லை வானவர்
தங்களோடும் செல்குவர்  
சீரருளாற்பெறலாம் 
சிவலோகமதே.

✳️✍️பொருள் குறிப்பு:

⏺️கல்லுயர் (கல் + உயர்) கழுமல (= 
     கல்லால் ஆன மதில்களை உடைய 
     கழுமல நகரில்)
🔸கழுமலநகர்க் கடவுளை 
     ஞானசம்பந்தன் சொன்ன 🔹ஞானத்தமிழ் நல்லுரைகளைச் 
     சொல்லவும் கேட்கவும் வல்லார் 
     தேவரோடு சிவலோகம் பெறுவர்
      என்கின்றது. 
🔼புண்ணியஞ் செய்து தேவராய்ப்    
     பதவியில் நிற்பாரை விலக்கத் 
     தொல்லை வானவர் என்றருளினார்.
🔹சீர் அருள் = கடவுள் அருள், 
     ஞானசம்பந்தர் அருளால் தேவர்    
      உலகும், பின்னர் கடவுள் அருளால் 
      சிவலோக வாழ்வும் கிடைக்கும் 
      என்பதாம்.

💠📝பாடல் விளக்கம்:

உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

🏔️தலக்குறிப்பு:  
                      கழுமலம்:
🌟உரோமச முனிவர் பூசித்து  ஞானோபதேசம் பெற்று, உலகில் உள்ள உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்றதால் சீர்காழி தலத்திற்கு இப்பெயர்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, தமிழ் மொழிக்கு புத்துணர்வு ஏற்படுத்தி
புதிய எழுச்சியை ஊட்டியவர்.
இருண்ட காலத்திலிருந்து மீட்டவர். தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று - பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு - பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
பதிவு : மூன்று - பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
பதிவு : நான்கு - பாடல் 6,7 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4031282306946996&id=100001957991710
பதிவு: ஐந்து - பாடல் 8, 9 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4036563763085517&id=100001957991710

மொழிமாற்று பகுதி: ஐந்து

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஐந்து  (பாடல் 8, 9)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

 #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 8

நெருப்புரு  வெள்விடை  மேனியர்
                  ஏறுவர்  நெற்றியின்கண்

மருப்புறு  வன்கண்ணர்  தாதையைக்
                  காட்டுவர்   மாமுருகன்

விருப்புறு  பாம்புக்கு  மெய்த்தந்தை
                  யார்விறன்  மாதவர்வாழ்

பொறுப்புறு  மாளிகைத்   தென்புற
                  வத்தணி   புண்ணியரே.

1266.             திருமுறை 01.117.08
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை பொருளுக்கு ஏற்றவாறு இப்படி மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

நெருப்புரு      மேனியர், 
வெள்விடை   ஏறுவர், 
நெற்றியின்    கண்ணர், 
மருப்புருவன்    தாதை(யை)க், 
மா முருகன் விருப்புறு    தந்தையார்,
பாம்புக்கு மெய் (யைக்)   காட்டுவர் 

விறல் மாதவர்வாழ் 
பொருப்புறு மாளிகைத் 
தென்புறவத்து அணி புண்ணியர், 

✳️✍️பொருள் குறிப்பு:

🔸மருப்புறு  வன்கண்ணர்  தாதையைக் =
கொம்புடைய விநாயகர்
🔹தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை எனப்பொருள் கொள்க. 
இது உருபு பிரித்துக் கூட்டல்.

🔽விறல் மாதவர்வாழ் = பெருமையும், வீரமும் மிக்க சிறந்த தவமுனிவர்கள்

⏺️பொருப்புறு மாளிகைத் = மலை போன்று உயர்ந்த மாளிகை

🔼புறவத்து அணி புண்ணியர் = அழகிய புறவம் என்னும் நகரில் அணியாக விளங்கும் புண்ணியராகிய ஈசன்.

🔹மருப்புருவன்    தாதை = யானையின் தந்தம் உடைய விநாயகரின் தந்தை.

💠📝பாடல் விளக்கம்:

வீரர்கள் மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் 

மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு

அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் 

நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர்.

வெண்மையான விடைமீது ஏறி வருபவர்.

நெற்றியின் கண் விழி உடையவர்.

தந்தத்தை உடையவராகிய   விநாயகருக்குத் தந்தையாராவார்.

பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். 

சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.

🏔️தலக்குறிப்பு:      புறவம்:  சிபிச்சக்கரவர்த்தியிடம் இந்திரன் பருந்தாகவும், அக்கினி தேவன் புறாவாகவும் சென்று சோதித்தார்கள்.
சிபி புறாவின் எடைக்குத் தனது உடல் தசையை அறுத்து ஈடு செய்தான். 

 இப்பாவம் நீங்கப்  புறவாகிய அக்கினி தேவன் இத்தலத்தை வழிபட்டதால் புறவம் எனப்பட்டது
பேறு பெற்றதால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் :09

இலங்கைத்   தலைவனை  யேந்திற்று
             இறுத்தது  இரலையின்னாள்

கலங்கிய  கூற்றுயிர்   பெற்றது
              மாணி   குமைபெற்றது

கலங்கிளர்  மொந்தையின்  ஆடுவர்
               கொட்டுவர்  காட்டகத்துச்

சலங்கிளர்   வாழ்வயல்   சண்பையுள்
                மேவிய   தத்துவரே.

1267.            திருமுறை   01.117.09.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

சலம் கிளர் வாழ் வயல் சண்பையில் 
மேவிய தத்துவர் 
இலங்கைத் தலைவனை இறுத்தது; 
இரலை    ஏந்திற்று; 
கலங்கிய   இல் நாள்   மாணி
கூற்றுயிர்   குமை பெற்றது; 
இல் நாள் மாணி உயிர்பெற்றது; 
மொந்தை யின் கொட்டுவர்; 
காட்டகத்து ஆடுவர்.

✳️✍️பொருள் குறிப்பு:

🔹சலம் கிளர் வாழ் வயல் =
      நீர் நிறைந்து விளங்கும் வயல்களை   
      உடைய சண்பைப் பதியில்.
🔸இரலை =மான். 
🔹இல் நாள் மாணி = வாழ்நாள் இல்லை      
     எனும் மார்க்கண்டன், 
🔸கூற்றுயிர் = காலன்
🔹குமை பெற்றது = அளிந்தழிந்தது.
🔸மொந்தை யின் கொட்டுவர் =
       வாத்தியமாக இலங்கும் மொந்தை      
        என்ற தோற்கருவி

💠📝பாடல் விளக்கம்:

நீர் நிறைந்து விளங்கும் வயல்களை  
உடைய சண்பைப் பதியில்          எழுந்தருளிய இறைவர் 

இலங்கைத் தலைவனாகிய     
இராவணனை நெரித்தவர். 

மானைக் கையில் ஏந்தியவர். 

கலக்கத்தோடு வந்த காலனை உயிரைக் கவந்தது.

வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர்.

வாத்தியமாக இலங்கும் மொந்தை 
என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். 

 இடு காட்டின்கண் ஆடுபவர்.

அப்பெருமானை வணங்குக.

🏔️தலக்குறிப்பு:   
                     சண்பை:
கபிலர் சாபத்தால் யாதவன் ஒருவன்  வயிற்றில்  உதித்த இருப்பு  உலக்கையைப்  பொடியாக்கிக் கொட்டினான்.   அத்தூள்கள்  சண்பைப் புற்களாய் முளைத்தன.  அப்புற்களைக் கொண்டு யாதவர்கள் சண்டையிட்டு  மாய்ந்தனர்.  இப்பழி  நீங்கும் பொருட்டுக்  கண்ணனும் கபில முனிவரும்  இந்தத் தலத்தை  வழிபட்டு உய்ந்தார்கள்.  இதனால்  சீர்காழி, சண்பை எனப் பெயர் பெற்றது.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, தமிழ் மொழிக்கு புத்துணர்வு ஏற்படுத்தி
புதிய எழுச்சியை ஊட்டியவர்.
இருண்ட காலத்திலிருந்து மீட்டவர். தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று - பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு - பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
பதிவு : மூன்று - பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
பதிவு : நான்கு - பாடல் 6,7 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4031282306946996&id=100001957991710

மொழிமாற்று பகுதி : நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : நான்கு  (பாடல் 6, 7)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻
⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 6

சாத்துவர்  பாசம்   தடக்கையில்
      ஏந்துவர்   கோவணம்தம்

கூத்தவர்  கச்சுக்குலவி  நின்று
       ஆடுவர்   கொக்கிறகும்

பேர்த்தவர்   பல்படை   பேயவை
        சூடுவர்    பேரெழிலார்

பூத்தவர்    கைதொழு   பூந்தராய்
         மேவிய   புண்ணியரே.

1264.             திருமுறை 01.117.06
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

பாசம் தடக்கையில் ஏந்துவர்; 
கோவணம் சாத்துவர்; 
தம்கூத்தவர்; 
கச்சு குலவி நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்;
பல்படைபேய் பேர்த்தவர்; 
பேர் எழிலார் 
தவர் பூ கைதொழுபூந்தராய் மேவிய புண்ணியர்

✳️✍️பொருள் குறிப்பு:

🔹கச்சு குலவி நின்று ஆடுவர் - அரையில்   
      கச்சு விளங்க நின்றாடுவர். 
🔹குலவி: குலவ எனத்திரிக்க. 
🔹பேர்த்தவர் - அடி பெயர்த்தாடல் 
      செய்தவர்  (காரணமாதல்)

💠📝பாடல் விளக்கம்:

மாதவ  முனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினராகிய பரமன்;

கோவணம் உடுத்தவர். 
நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். 
கச்சணிந்து ஆடுபவர். 
கொக்கிறகு சூடுபவர். 
பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். 
மிக்க அழகுடையவர்.

அவரைத் துதிப்பீராக.

🏔️தலக்குறிப்பு: பூந்தராய்: சங்கநிதி, பதுமநிதி என்னும் இரு நிதிகளின் அதிதேவதைகள் பூந்தாராய் இருந்து
 (தார் = மாலை) இத்தலத்தை வழிபட்டுப் பேறு பெற்றதால் சீர்காழிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் : 7
 
காலது   கங்கை  கற்றைச்
          சடையுள்ளார்  கழல்சிலம்பு

மாவது   ஏந்தல்    மழுவது
          பாகம்  வளர்கொழுங்  கோட்டு

ஆலது   ஊர்வர்   அடலேற்று
          இருப்பர்   அணிமணி  நீர்ச்

சேலது  கண்ணியோர்  பங்கர்
           சிரபுர   மேயவரே.

1265:      திருமுறை   01.117.07

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

காலது  கழல் சிலம்பு, 
கற்றைச்சடை உள்ளாற் கங்கை, 
மாலது   பாகம், 
ஏந்தல் மழுவது, 
வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், 
அடல் ஏறு  ஊர்வர்
அணிமணி நீர்ச் 
சேலது கண்ணி  ஓர் பங்கர்
சிரபுரம் மேயவர்

✳️✍️பொருள் குறிப்பு:

🔹அணிமணி நீர்ச் சேலது கண்ணி =
     அழகிய நீலமணியின் நிறத்தையும்     
     சேல்மீன் போன்ற கண்களை உடைய       
      உமையம்மையை.
🔹ஓர் பங்கர் = ஒரு பாகம்
🔹மாலது பாகம் = திருமாலை ஒரு
      பாகமாகக் கொண்டவர்.
🔹வளர் கொழுங்கோட்டு ஆல்= வளர்ந்த 
     செழுமையான (கல்லால) கல்+ ஆல 
     மரம்
🔹அடல் ஏறு= இடபம்
🔹கோடு - மேருமலைத் தென் சிகரம். 
🔹ஆலது, சேலது, என்பனவற்றுள் அது
      பகுதிப்பொருள் விகுதி.

💠📝பாடல் விளக்கம்:

அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான்;

கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். 
கற்றைச் சடையில் கங்கையை உடையவர். 
திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். 
வளர்ந்த செழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். 
இடபத்தில் ஏறுபவர்

அவரை வணங்கி மகிழ்க.

🏔️தலக்குறிப்பு:   சிரபுரம் :  சிலம்பன் என்னும் அசுரன் வேற்று உருவுடன் அமுதம் பெற வந்தபொழுது திருமால் அவனது தலையை வெட்டினார்.  அவனது தலை (சிரம்) இராகுவாக நின்று பூசித்ததால் சீர்காழிப் பதிக்கு இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று    பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
பதிவு : மூன்று, பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710

மொழிமாற்று பகுதி : மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : மூன்று (பாடல் 4, 5)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️இதுவரை நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்
🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 4
உரித்தது  பாம்பை   உடன்மிசை
              இட்டதோர்    ஒண்களிற்றை

எரித்ததொர்  ஆமையை  இன்புறப்
             பூண்டது    முப்புரத்தைச்

செருத்தது    சூலத்தை   யேந்திற்றுத்
             தக்கனை  வேள்விபன்னூல்

விரித்தவர்   வாழ்தரு  வெங்குரு
            வில்வீற்   றிருந்தவரே.

1262. திருமுறை 01.117.04
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

உரித்தது    ஓண்களிற்றை
உடன்மிசை  பாம்பை   இட்டதோர்
எரித்ததொர்   முப்புரத்தைச்
ஆமையை   இன்புறப்   பூண்டது
தக்கன்   வேள்வி   செருத்தது
சூலத்தை    யேந்திற்று
பண்ணூல்   விரித்தவர்   வாழ்தரு வெங்குருவில்   வீற்றிருந்தவரே.

✳️✍️பொருள் குறிப்பு:

🔹களிறு - யானை. 
🔹செருத்தது - வருத்தியது. 🔹பன்னூல்விரித்தவர் - பல நூல்களையும் விரித்துணர்ந்த அந்தணர்

💠📝பாடல் விளக்கம்:

பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர்

 ஒப்பற்ற சிறந்த யானையை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல்
அணிந்தவர்.
முப்புரங்களை எரித்தவர். 
ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் அழித்தவர்.
சூலத்தைக் கையில் ஏந்தியவர்.
வேதங்களை விரித்தவர்

🏔️தலக்குறிப்பு: வெங்குரு: அசுர குருவாகிய சுக்கிரன் இத்தலத்தை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இயமன் வழிபட்டு பழி நீக்கிக் கொண்டதாலும் இப்பெயர் சீர்காழிக்கு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் 5.

கொட்டுவர்  அக்குஅரை  ஆர்ப்பது
                தக்கை  குறுந்தாளன

விட்டுவர் பூதம்  கலப்பில
               ரின்புகழ்   என்புலவின்

மட்டுவ  ருந்தழல்   சூடுவர்
              மத்தமும்    ஏந்துவர்வான்

தொட்டுவ   ருங்கொடித்  தோணி
              புரத்துறை   சுந்தரரே.

1263.  திருமுறை   01.117.05

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காணவேண்டும்.

அக்கு அரையார்ப்பது;
 தக்கை கொட்டுவர்;
 குறுந்தாளன பூதம் இன்புகழ் விட்டுவர்; என்பு கலப்பிலர்; 
உலவின்மட்டு வருந்தழல் ஏந்துவர்
மத்தம் சூடுவர்; 

வான்தொட்டு வருங்கொடித் தோணிபுரத்துறை சுந்தரர்.

 எனக்கூட்டிப் பொருள்காண்க. 

✳️✍️பொருள் குறிப்பு:.

🔸அக்கு - சங்கு மணி. 
🔸அரை - இடை
🔸தக்கை - ஒரு வாத்தியம். 
🔸உலவின் மட்டு வருந்தழல் -     
     உலகத்தையழிக்குமளவு வரும்     
     காலாக்கினி.
🔸மத்தம்- ஊமத்தம்

💠📝பாடல் விளக்கம்:

வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்சுந்தரராகிய இறைவர்;

தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். 
இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். 
குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். 
இனிய புகழை ஈட்டுபவர். 
எலும்பையும், 
உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். 
தீயை ஏந்துபவர். 

🏔️தலக்குறிப்பு:  தோணிபுரம் : ஊழிக்காலத்தில் உலகமெல்லாம் நீரில் மூழ்கினாலும் இத்தலம் மட்டும் அழியாமல் பிரணவ உருவாகத் தோணி போல் மிதந்ததால் சீர்காழிக்கு இப்பெயர்

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம் 

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று    பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710

மொழிமாற்று பதிவு : இரண்டு

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : இரண்டு  (பாடல் 2, 3.)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️இதுவரை நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

❄️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.

❄️அப்படியே படித்தால் பொருள் விளங்காது.

❄️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்.
அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 2.

கற்றைச்  சடையது  கங்கண
             முன்கையில்   திங்கள் கங்கை

பற்றித்து  முப்புரம் பார்படைத்
              தோன்றலை  சுட்டதுபண்டு

எற்றித்துப்  பாம்பை  அணிந்தது
               கூற்றை எழில் விளங்கும்

வெற்றிச்  சிலைமதில்  வேணு
                புரத்தெங்கள்  வேதியரே

1260.  திருமுறை 01-117.02
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

கற்றைச் சடையது திங்கள் கங்கை
முன்கையில் கங்கணம் பற்றித்து
முப்புரம் சுட்டது
பார்ப்  படைத்தோன் தலை பற்றித்து
பாம்பை அணிந்தது
கூற்றை எற்றித்து
எழில் விளங்கும் வெற்றிச் சிலை மதில்
வேணுபுரத்தெங்கள்  வேதியரே.

💠📝பொருள் குறிப்பு:

⚛️வேணுபுரத்து வேதியரின் சடையது திங்களும் கங்கையும்;
⚛️முன்கையிற் கங்கணமாக அணிந்தது பாம்பு; 
⚛️கையில் பற்றியது பிரமன் தலை;
⚛️சுட்டது முப்புரம் என்கின்றது.
⚛️பண்டு கூற்றை எற்றித்து என மொழிமாற்றிக் காண்க.
⚛️பற்றித்து எற்றித்து என்பன பற்றிற்று எற்றிற்று என்பதன் மரூஉ.
⚛️எற்றித்து - உதைத்து

❇️🗣️ விளக்கம்:

கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர்;

கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். 
முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர்.
கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர்.
முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். 
பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.

🏔️தலக்குறிப்பு: வேணுபுரம் :
இத்தலத்தில், சூரபன்மனுக்கு அஞ்சிய இந்திரன் மூங்கில் (வேணு) உருவம் கொண்டு தவம் செய்ததால் இப்பெயராம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் 3.

கூவிளம்   கையது   பேரி
           சடை முடிக்  கூட்டத்தது

தூவிளங் கும்பொடிப்  பூண்டது
          பூசிற்றுத்   துத்திநாகம்

எவிளங்   கும்நுத   லாளையும்
          பாகம்  உரித்தனரின்

பூவிளம்  சோலைப்  புகலியுள்
         மேவிய  புண்ணியரே

1261.  திருமுறை 01-117.03

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது; 
பேரி கையது; 
தூவிளங்கும் பொடி பூசிற்று; 
துத்திநாகம் பூண்டது 

ஏவிளங்கும்  நுதலாளையும்
பாகம் உரித்தனரின்
பூவிளம் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே.

என மொழிமாற்றிப் பொருள்கொள்க. 

💠📝பொருள் குறிப்பு:

🔷கூவிளம் - வில்வம். 
🔷பேரி - உடுக்கை.
🔷தூ - தூய்மை. 
🔷பொடி - விபூதி. 
🔷துத்தி - படப்பொறி.
🔷ஏவிளங்குநுதல் - வில்போல் விளங்கும் நெற்றியையுடையாள் என்றது உமாதேவியை.
 🔷ஏ என்றது ஆகுபெயராக வில்லை உணர்த்திற்று.
 🔷உரித்தனர் - தோலைத் தனியாக     உரித்துப் பூண்டனர். 
🔷புகலி - சீகாழி.

💠📝பாடல் விளக்கம்:

இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர்,

அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். 
கையில் பேரி (உடுக்கை) என்னும் தோற்பறையை உடையவர். 
தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். 
படப் பொறிகளோடு கூடிய நாகத்தை அணிகலனாக் கொண்டவர்.
ஆனையை உரித்தவர்.
அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். 

🏔️தலக்குறிப்பு: புகலி : சூராதி அவுணர்கட்கு  அஞ்சிய தேவர்கள்
இத்தலத்தில்  புகலடைந்ததால்  இப்பெயர் (புகல் = அடைக்கலம்). (சீர்காழி).

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710

மொழிமாற்று பதிவு : ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஒன்று  (பாடல் 1)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அதன் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️இதுவரை நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களை ப்பற்றி சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்படுகின்றன. இவற்றை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றில் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்.
அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்திக்க, சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்
அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். 
சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

பாடல் - 1.

காடது  அணிகலம்   காரர 
             வம்பதி   காலதனில்

தோடது அணிகுவர்  சுந்தரக்
               காதினில் தூச்சிலம்பர்

வேடது  அணிவர்   விசயற்கு
          உருவம்  வில்லும் கொடுப்பர்

பீடது அணி மணி மாடப்
           பிரம  புரத்தாரே.

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றக் கொண்டு பொருள் காண வேண்டும்

காடு அது பதி
கார் அரவம் அணிகலம்
கால் அதனில் தூச்சிலம்பர்
சுந்தரக் காதினில் தோடது அணிகுவார்
வேடது உருவம் அணிவார்
விசயற்கு வில்லும் கொடுப்பர்
பீடது அணிமணி மாடப் பிரமபுரத்தாரே.

✳️பொருள் குறிப்பு:

காடு = சுடுகாடு
பதி = தலம்
கார் அரவம் = கருநாகம்
தூச்சிலம்பர் = துய சிலம்பு அணிந்தவர்.
வில்லும்= பாசுபத அத்திரம் 
பீடது = பெருமை உடைய 

❇️விளக்கம்:

பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். 
வேட்டுவன் உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியவர்.

🏔️தலக்குறிப்பு: பிரமபுரம் :
படைப்புத் தொழில் வேண்டி முன்னை நாளில் பிரமன் இத்தலத்தில் தங்கி வழிபட்டு இறையருள் பெற்றதால் இப்பெயர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...