Friday, July 31, 2026

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை 
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 
 மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். அதோடு திருவாசகத் தலங்களுள் ஒன்று எனும் பெருமையையும் உடையது. இத்தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். பாண்டியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்களுள் இது முதன்மைத் தலமாகும். சைவர்கள் பூசும் திருநீற்றின் சிறப்பைக் கூறும் திருநீற்றுப் பதிகத்தை இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் பாடினார்
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராசகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பாடல்கள்
திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புகள் மாணிக்கவாசகர் தம் திருவாசகத்துள் புகழந்தோதியுள்ளார்.

குமரகுருபரர் இத்தலத்துப் பெருமாட்டி மீனாட்சியம்மை மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

நன்றி🙏 19.7.2026 #சுப்ராம்மீள்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்



மதுரைமலையத்துவசன் காஞ்சனமாலை ஆலயம்

மதுரை
மலையத்துவசன் காஞ்சனமாலை ஆலயம்
அன்னை மீனாட்சியின் பெற்றோர்கள் பெயரில் உள்ள ஆலயம்
மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ளது. சிறிய ஆலயம் கிழக்கு நோக்கியது. காட்சிக்கோபுரம் உள்ளது
சிவன் சன்னதி முன் விநாயகர் மற்றும் முருகர் தெய்வங்களும் உள்ளன. மலைத்துவசன் காஞ்சனமாலைக்கு சுதையால் செய்த அழகிய சிலை உள்ளது
புராணகாலத்தில் சுவாமி 7 கடல்களை உருவாக்கிய இடம் என்பதும் தற்காலத்தில் இந்த இடத்தில் ஒரு குளம் இருந்ததாகவும் வரலாறுகள் உண்டு சிவன் அன்னை மீனாட்சியின் பெற்றோர்களுக்காக குளம் உண்டாக்கியதாகவும் வரலாறு கூறப்படுகிறது.
19.07.2026 #சுப்ராம்தரிசனம்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாராதம்அகிலத்தின்சிகரம்

கள்ளழகர் கோயில் 19.7.26

கள்ளழகர் கோயில்
கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது
தமிழ் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவில், . 6-லிருந்து 9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது. இது திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான், சுந்தரபாஹூ
தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
காட்சி - மாண்டூக முனிவர், தர்மதேவன், மலையத் துவசப் பாண்டியன்
திசை - கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
விமானம் - சோமசுந்தர விமானம்
உற்சவர் - கள்ளழகர்
மூலவர் சிறப்பு
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் பரமசுவாமிக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்
 இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் தாயார் லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது.
கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏழடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயில் ஒரு பெரிய கோட்டையால் சூழப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பாழடைந்துள்ளது.

துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் தென்கலை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறது. 

அழகர் கோயில் என்ற 'திருமாலிருஞ்சோலை' என்று ஆழ்வார்களால் பாடப் பெற்ற அருள்மிகு சுந்தர ராசப் பெருமாள் என்கின்ற கள்ளழகர் திருக்கோவில், . இது உலகளவில் பிரசித்தி பெற்ற ஓர் திருமால் கோவிலாகும். 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் இதுவே ஆகும்.

தமிழ் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், போற்றும் இத்திருத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, பழமுதிர் சோலை, மாலிருங்குன்றம், அழகர்மலை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நங்கள் குன்றம் என்று அழைக்கப்படும் வட்ட வடிவ கருவறையில் (கேரள கோவில்கள் போன்ற அமைப்பு) இறைவனாகிய பெருமாள் ஸ்ரீபரமசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி அழகர் பெருமாள், அல்லது சுந்தரராச பெருமாள் எனப்படுகிறார்.

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகிய பல மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆர்யன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இ. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.

வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

புதிய தேர்
ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.
இந்தக் கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் கிடைத்தது, 15 கைவினைஞர்களைக் கொண்ட குழுவைக் கொண்டு வேங்கை மர மரத்தையும், சிற்பங்களுக்கு பர்மா தேக்கு மரத்தையும் பயன்படுத்திக் கட்டப்பட்டது. சோதனை ஓட்டம் 6 ஜூலை 2015 அன்று நடைபெற்றது.

நாராயண வாவி தெப்பக்குளம் நுபரகங்கை மலைப்பாதை 
கள்ளழகர் ஆலயம் பெரியவாச்சான் நுழைவுவழி வடபுரம் வழியாக அழகர் மலைமேல் 3 கிலோமீட்டர் நடந்து செல்லும் பாதையில் நாராயணவாவி தெப்பக்குளம் மற்றும் மலை மேல் உள்ள பழமுதிர்சோலை ஆலயம், ராக்காயி அம்மன், நுபுர கங்கை முதலிய இடங்களுக்கு காட்டு மலைப்பாதையில் நடந்து சென்றுவரலாம் அற்புத பயண அனுபவங்கள் கிடைக்கும்.

நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பழமுதிர்சோலைபழமுதிர்சோலை முருகன் கோயில் 19.7.26

பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை முருகன் கோயில் 
முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது.மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது.

மதுரைக்கு வடகிழக்கில் சுமார் 25 கி.மீயில் உள்ள அழகர்மலைக்காடுகளின் இடையே அழகர்கோவில் எனப்படும் 108 திவ்விய தேச ஆலயம் அமைந்துள்ள மலை அடிவாரத்திலிருந்து 3 கிலோமீட்டர் நல்ல பாதை வசதிகளுடன் அமைந்து உள்ளது. தற்போது புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்று. மலையும் காடும் சேர்ந்த அற்புதமான இயற்கையோடு கலந்துள்ளது. 
கிழக்கு நோக்கிய ஆலயம் 5 நிலை இராஜ கோபுரம் உடையது.
உள் மன்டபத்தில் பலிபீடம், கொடிமரம் உள்ளது
கருவரை மூன்று பிரிவாக உள்ளது
விநாயகர் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் வேல் வைத்து அமைக்கப்பட்ட ஆலயம். கருவரை அடுத்துள்ள மண்டபத்தில் உற்சவர்கள் அமைத்துள்ளனர்.
அருகில் ராக்காயி அம்மன் மற்றும் நுபர கங்கை தீர்த்தம் சற்று மேலே மலை மீதுள்ளது.
மலைக்கு அழகர் கோவிலின் வட பகுதி லிருந்து மலைப்பாதை வழியாக மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தும் வரலாம்.
அழகர் கோவில் (அடிவாரத்திலிருந்து)
 ஆலய நிர்வாகத்தின் மூலம் சிறிய பேருந்து விடப்படுகிறது. மலைக்கு செல்ல கட்டணம் ரூ 10 மட்டும்.
 (20.02.2020,19.7.2026)

நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் 19.7.26

வண்டியூர் 
மாரியம்மன் திருக்கோயில்
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். கோயில் நகரமான மதுரையின் கிழக்கே அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன. 
வண்டியூர் தெப்பக்குளம் உருவாவதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோவில் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
மதுரையில் எந்த ஒரு பெரிய கோவில் திருவிழா துவங்கினாலும், இந்த வண்டியூர் மாரியம்மனுக்கு முதல் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

முற்காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கு வந்து வழிபட்டு சென்றனர். பருவ மழை பொய்த்து வறட்சி பரவிய பொழுது பக்தர்கள் மழைக்காக இவளை நாடி வந்து பூஜித்தனர். மக்களுக்கு மழையை அருளியதால் அவள் மழையின் தெய்வமான மாரியம்மனாக
கொண்டாடப்பட்டாள். எனவே மாரியம்மன் என்ற பெயர் அவளுக்கு நிலைத்துவிட்டது

கோவில் வாசலில் இரண்டு துவாரபாலகிகள் உள்ளனர். அரசமரத்தின் மரத்தடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மூலவராகிய மாரியம்மனுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.
பொதுவாக மாரியம்மனின் பாதங்களுக்கு அடியில் ஏதேனும் ஒரு அசுரன் காணப்பட்டாலும், இக்கோவிலில் உள்ள அம்பிகை துர்கா தேவி என்பதால், குறிப்பாக மகிஷாசுரன் அவளது பாதங்களுக்கு அடியில் காணப்படுகிறான். கையில் பாசம், அங்குசம் ஏந்தி சிரித்த கோலத்தில் காட்சி தருகிறாள். பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. இரண்டு துவாரகபாலகர்கள் வாயில் நிற்க அம்மன் சன்னதியும், அதற்கு முன்புறம் அகலமான முற்றமும் கொண்டுள்ளது.
திருவிழாக்கள்
தைப்பூசத்தன்று வண்ணமயமான தெப்பத்திருவிழா இதன் தெப்பக்குளத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

மதுரையில் காவல் தெய்வமான வண்டியூர் மாரியம்மன் கோவில், ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள், முளைப்பாரி திருவிழாக்கள், பூச்சொரிதல் விழா மற்றும் அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகங்களால் களைகட்டும். இங்கு அம்மன் சுயம்புவாக அருள்பாலிப்பதுடன் நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தவராகவும் திகழ்கிறார்.
துர்கையாகவும், மாரியம்மனாகவும் தரிசனம் தரும் இந்த வண்டியூர் மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வளையல் அலங்காரம் மற்றும் கூழ் வார்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
1645 ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் காலத்தில் இந்த பிரம்மாண்டமான தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. 
 வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை தோண்டிய பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 7 அடி முக்குருணி விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
சதுர வடிவில் இருக்கும் இந்த கோவில் குளம் 16 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. அதனுடைய நான்கு பக்கங்களிலும் உள்ள 12 நீண்ட கருங்கல்படிகள் மற்றும் சுமார் 15 அடி உயரத்திற்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 1000 அடி நீளமும், 16 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த தெப்பக்குளம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய தெப்பக்குளங்களில் ஒன்றாகும். குளத்தின் நடுவில் விக்னேஸ்வரர் கோவிலைக் காணலாம். திருமலை நாயக்க மன்னர் கோவில் குளத்தையும், கோவிலையும் சுற்றி இந்த நீண்டப் படிகளைக் கட்டினார். திருமலை நாயக்கருடைய பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இங்கு தை மாதத்தில் 'தெப்பத்தோட்ட விழா' கொண்டாடப்படுகிறது.

நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்


தெப்பக்குளம் -முத்தீஸ்வரர் மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில். 19.7.26

தெப்பக்குளம் -முத்தீஸ்வரர் 
மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில்.
மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

மூலவர்: முக்தீஸ்வரர் ✨ மரகதவல்லி
இத்திருக்கோயில் 2000 ஆண்டுகள் பழைமையானது. சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களில், இரண்டாவது திருவிளையாடல் நடந்தது இங்கு தான்.
மதுரையில் உள்ள பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாகவும் உள்ளது.
மதுரையின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து கோயில்களைக் குறிப்பிடுவது உண்டு. நீர்த் தலமாக செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், ஆகாயத் தலமாக சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில், நில தலமாக இம்மையிலும் நன்மை தருவார் கோயில், நெருப்புத்தலமாக தெற்கு மாசிவீதி திருவாலவாயர் திருக்கோயில் மற்றும் காற்றுத்தலமாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலையும் குறிப்பிடுவதுண்டு.

ஆலய அமைப்பு
மதுரை திருமலை நாயக்க மன்னரின் அண்ணன் முத்து வீரப்பன் நாயக்கரால் கோவில் கட்டப்பட்டது.
கிழக்குப்பார்த்த ஆலயம். கருவறையில் உள்ள இறைவன் முக்தீஸ்வரர் ஆவார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்மன்மரகதவல்லியம்மன் சன்னதி தனியாக உள்ளது.
பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஈசனுக்கு 'ஶ்ரீமுக்தீஸ்வரர்' என்றும் அம்பாளுக்கு ஶ்ரீமரகதவல்லி என்றும் திருநாமங்கள். இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்று அம்பிகை, ஈசன் ஆகிய இருவரின் சந்நிதியையும் தரிசனம் செய்யலாம். எழில் கொஞ்சும் திருவடிவுடையாளாகத் திகழும் மரகதவல்லித் தாயாரை வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
பலி பீடம், ரிஷபக்கொட்டில், கொடி மரம் ஆகியவை கோயிலில் காணப்படுகின்றன. முன் மண்டபத்தைத் தொடர்ந்து உள் மண்டபம், கருவறை ஆகியவை காணப்படுகின்றன. கருவறைக் கோஷ்டத்தில் முறையே தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்காம்பிகை ஆகியோர் காணப்படுகின்றனர்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் இசைக்கலையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை

மேலும் இந்தத் தலத்தில் நடராஜப் பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்பிரமண்யர், துர்கை ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். .
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக்குளம் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் முக்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே இருந்ததால், கோயிலை மேலும் விரிவுபடுத்த முடியவில்லை. கோயிலுக்கு ராஜகோபுரம் (பிரதான கோபுரம்) இல்லாததால், குளத்தின் நடுவில் கட்டப்பட்ட கோபுரமானது, கோயிலின் உள்ளிருந்தோ அல்லது கிழக்கு திசையிலிருந்தோ பார்க்கும்போது முக்தீஸ்வரர் கோயிலுக்காகக் கட்டப்பட்ட கோபுரம் போலவே காட்சியளிக்கும்.
இக்கோயிலின் தூண்களில், ரிஷிகளின் தவக் காட்சிகளுடன், சிவபெருமானின் திருவிளையாடல்களும் (அற்புதச் செயல்கள்) மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் வடிவங்களை ஒன்றிணைத்து, இரண்டே பாதங்களுடன் ஏகபாதமூர்த்தியின் சிலையும் இங்கு உள்ளது.

இவ்வாலயத்தில் சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களால் மார்ச் 10 முதல் 21 வரை மற்றும் செப்டம்பர் 17 முதல் 20 வரையில், 24 நாட்கள் தொடரச்சியாக பூஜை செய்கிறார். இதனால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.

ஓவியங்கள்
மதுரைத் திருவிளையாடல்கள் 64இல் இக்கோயில் அமையக் காரணமாக இருந்த ஐராவதம் சாபம் தீர்த்தது, இந்திரன் சாபம் தீர்த்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஓவியங்களாகக் காணப்படுகின்றன
ஒரு சமயம் துர்வாச முனிவர், சிவ பூஜையை முடித்துவிட்டு பிரசாதமான மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த மலர் மாலையை தனது வாகனமான ஐராவதத்தின் (தேவலோகத்தின் வெள்ளை யானை) மீது வைத்தார். ஆனால், அந்த மாலையின் மகிமையை அறியாத ஐராவதம், தன்னுடைய தும்பிக்கையால் அந்த மலர் மாலையை கீழே வீசி காலால் மிதித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், தேவேந்திர பதவியை துறக்கும்படி இந்திரனுக்கும், தெய்வீகத் தன்மையை இழந்து காட்டு யானையாகத் திரியும்படி ஐராவத யானைக்கும் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற ஐராவதம் பல நூற்றாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்தது. பின்பு வில்வ வனமாக இருந்த இவ்விடத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் நேரடியாக காட்சி தந்து ஐராவதத்திற்கு முக்தி அளித்தார் என்பது தலவரலாறு.
இவ்வாறு அநேக சிறப்பு பெற்ற இத்தலத்தில் எம்பெருமான் முக்தீஸ்வரரை வணங்கி மகிழலாம்.
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருமங்கலம்அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் 19.7.26

திருமங்கலம்
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
மூலவர் : சொக்கநாதர்.
அம்மன்: மீனாட்சி.
தல விருட்சம் : வில்வம்.
தீர்த்தம் : ஆகாயகங்கை.
புராண பெயர் : திருமாங்கல்யபுரம்.
ஊர் : திருமங்கலம். மதுரை

தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :
மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்தனர். பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து, அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால் அப்பகுதியை தேவர்கள் "திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் "திருமங்கலம்' என பெயர் மாறியது. பிற்காலத்தில், மன்னர்கள் இங்கு கோயில் கட்டினர்.

ஆலய அமைப்பு 
சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி உள்ளாள். பிரகாரத்தில் வில்வவிநாயகர், உஷா, சாயாதேவியுடன் சூரியன், நாகர், மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர், மங்கள தெட்சிணாமூர்த்தி, மயில் மீது அமர்ந்தபடி வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், காசிவிஸ்வநாதர், அஷ்டபுஜதுர்க்கை ஆகியோர் உள்ளனர்.

பிரார்த்தனை : தடைபட்ட திருமணங்கள் நடக்க அன்னை மீனாட்சியை வழிபடுகிறார்கள்.

தலபெருமை :
யோக சனீஸ்வரர் : இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக் கொண்டால், துன்பங்கள் நீங்கி சுபிட்சம் கிடைக்கும்.

அர்த்தநாரீஸ்வர விருட்சம் : இங்கு வில்வமும், வேம்பும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறது. இதனடியில் வில்வவிநாயகர் உள்ளார் சுவாமி, அம்பாளாக கருதப்படும் விருட்சங்களின் மடியில் இவர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறும்.

இவருக்கு அருகம்புல் மாலையிட்டு, கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம் குடும்ப நலம் உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழா : சித்திரையில் திருக்கல்யாணம் மாசிமகம், மகாசிவராத்திரி.
சிறப்பம்சம் : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

இருப்பிடம் : மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரோட்டில் 20 கி.மீ. தூரம் உள்ள இவ்வூருக்கு அடிக்கடி பஸ்கள் உள்ளன. திருமங்கலம் பஸ்ஸ்டாண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் ரோட்டில் 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

நன்றி🙏 19.7.2026சுப்ராம்மீள்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்பரங்குன்றம்சொக்கநாதர் ஆலயம்திருப்பரங்குன்றம் சன்னதி வீதி 19.7.2026

திருப்பரங்குன்றம்
சொக்கநாதர் ஆலயம்

திருப்பரங்குன்றம் சன்னதி வீதியில் அமைந்துள்ளது கிழக்குப் பார்த்த ஆலயம்
இராஜ கோபுரம் கிடையாது. அழகிய காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது

முன் மன்டபம் நீள அமைப்பில் உள்ளது. தூண்களில் எல்லாம் அழகிய சிலைகள் உள்ளன. 
சொக்கநாதர் சன்னதி கிழக்கு நோக்கியது.
உள் மண்டபத்தில் சிறிய நந்தி கருவரை நோக்கியுள்ளது சுவாமி கிழக்கு நோக்கி அருள் தருகிறார்

கோஷ்ட பிரகாரம் விஸ்தீரமானது.
கன்னிமூலையில் நெல்லி மரத்தின் கீழே நெல்லிமர விநாயகர் அமைந்துள்ளார்.
உயரமான நீண்ட லிங்கம் மேற்கில் உள்ளது. துர்க்கை சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் அமைந்துள்ளன.

அம்பாள் மீனாட்சிக்குத்தனியான சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது.
 உள் மண்டபத்தில் ஒரு சிறிய நந்தி கருவரை நுழைவில் விநாயகர் மற்றும் சிறிய முருகன் வள்ளி தெய்வாணையுடன் உள்ளார்கள் நின்றகோலத்தில் அம்மன் உள்ளார். சிவன் சன்னதிக்கு இடது புறம் தனி ஆலய அமைப்பில் கருவரை சன்னதி அம்பாளுக்கு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

விநாயகர் மற்றும் வள்ளி தெய்வாணையுடன் கூடிய முருகர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

முழுவதும் கற்றளியால் ஆன ஆலயம்
பிரகாரத்தில் மரங்கள் இருப்பதால் நல்ல நிழல் அமைதியான சூழல். ஆலயம் ஆரவாரமின்றி பிரதான சாலையில் இருக்கிறது.

குன்றத்து முருகனை வேண்டி வருபவர்களுக்கு அவர் சன்னதி தெருவில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒரு தனி சிறப்பு

நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில் 19.7.2016

திருப்பரங்குன்றம் 
அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில்
 🙏 மதுரைக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடல் பெற்ற ஸ்தலம். சிவபெருமான் குன்று வடிவில் காட்சியளிக்கும் இத்தலம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகவும் சிறப்பு பெறுகிறது 🛕✨
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயில், மதுரைக்குத் தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலயம் இராஜகோபுரம் கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
 அடுத்து பெரியகல் மண்டபம் ; தூண்களில் மிக நுனுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள்கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள், நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும். 'முருகன் தெய்வானை திருமணக்கோலம்' போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.
 அடுத்து உள் மன்டபத்தில் பெரிய கல் நந்தி, மயில், மூஷிசன் உள்ளனர் உற்சவருக்கு தனிசன்னதியும் உள்ளது. ஆலயம் கருவரை நோக்கிய வாறு ஒரு உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத் தக்கவையாக உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

அர்த்த மண்டபத்தில், சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. 
'சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள், துயர் களையப் பெற்றனர். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் இந்தத் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா, விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

இக்கோவிலில் வீரபாகு வழித்‌ கோன்றல்கள்‌ என்று அறியப்படும் செங்குந்த முதலியார்‌ மரபை சேர்ந்தவர்கள்‌ இங்குச் சுவாமியைச் சுமந்து செல்லும் சீர்பாத சேவையைத் தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.
பெயர்க்காரணம்
பரம்பொருளான சிவபெருமான், குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்; திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (சிறுமலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்துத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

இக்குன்றமானது, சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால், தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர், தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

 சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் முருகன்–தெய்வானை திருமணம் நடைபெற்ற திவ்ய ஸ்தலமாகும் 💍💖.
 பௌர்ணமி அன்று கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபம் மிக விமரிசையாக நடைபெறும் 🔥🌕. 
வியாபார முன்னேற்றத்திற்காக பக்தர்கள் வழிபடும் பரிகார ஸ்தலமாகவும் இத்தலம் பிரசித்தம் 💼📈. 
திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் பாடல் பெற்ற இந்த தலம் ஆன்மிக மகிமை நிறைந்தது 🎶📿.
நன்றி🙏 19.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சிலார்பட்டி -காளாதேவி(நேரக்கோவில்)மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோவில் 18.7.2026

சிலார்பட்டி -காளாதேவி
(நேரக்கோவில்)
மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோவில். கோவிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ’நேரமே உலகம்.’
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.

புராணங்களில் வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக வணங்குகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகின்றன. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்கள் இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி இந்த காலதேவிக்கு உண்டு
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாகவும் இவை கருதப்படுகின்றன.

கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு போன்ற வேண்டுதல்கள் இல்லாமல், “எனக்கு எது நல்லதோ அதைக் கொடு" என வேண்டினால் போதும்.

இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் சன்னதி கிடையாது. காலதேவி அம்மன் எண்கோண வடிவ கருவறையில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ, காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்

இந்த கால தேவி அம்மன், இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இக்கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. இதற்கு நபருக்கு 50 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
 அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்தால், தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்லா நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

பயன அனுபவக்குறிப்புகள்🕊️
ஆலயம் நூதனமாகக் கட்டப்பட்டுள்ளது. புரான வரலாறு தெரியவில்லை. தனியார் கூட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் மிக அருகில் சுற்றுப்புறங்களில் கடைகள் வீடுகள் எதுவும் இல்லை
சாதாரண நாட்களின் இரவிலும் ஆலயம் திறந்து காட்டுகிறார்கள்.
ஆலயம் பெரிய வளாகம் நடுவில் ஆலயம் உள்ளது அம்பாள் கருவரை சன்னதி ஒரு முன்மன்டபத்துடன் கூடியது.
அம்பாள் அருள் தரிசனம் செய்ய வரிசைமுறை ஏற்படுத்தி உள்ளனர்.
Rs.50/- நுழைவு சீட்டு வாங்கிச் சென்று, ஆலயம் உள் சன்னதியில் அம்பாள் முன் உள்ள சக்கரப்பகுதியில் நின்று வழிபடலாம்.
சற்று நேரம் காலச்சக்கரத்தில் நிற்கும் போது கால் பாதம் வழியாக ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது என்பது ஒரு அனுபவ உண்மை.
ஆலயக்கருவரை மன்டபம் முன்புறம் பெரிய மன்டபம், அன்னதானக் கூடம் பக்தர்களின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தம் கட்டணம் இல்லை
பௌர்ணமியில் அன்னதானம் செய்கிறார்கள்.

நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தென்காசிமேலசங்கர நாராயனர் சுவாமி கோமதி அம்பாள் கோவில் 18.07.2026

தென்காசி
மேலசங்கர நாராயனர் சுவாமி கோமதி அம்பாள் கோவில்

தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு மேற்கில் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது . மேலசங்கர நாராயனர் சுவாமி கோமதி அம்பாள் கோவில். கிழக்குப் பார்த்த ஆலயம்

அடுத்தடுத்து மூன்று கருவரைகள் கொண்டது. சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணர், மற்றும் கோமதி அம்மன் சன்னதிகள்.

முன்புறம் பெரிய மண்டபம் உள்ளது.
பிரதான சாலையை ஒட்டியே ஆலயம் சிவசத்தி விநாயகர் ஆலயம் முன்புறமும்.
சங்கர நாராயணர் ஆலயம் தென்புறம் தனி ஆலயமாக தென்பழனி ஆண்டவர் உள்ளார்
 பிரசித்தி பெற்ற ஆடி தபசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நன்றி🙏18.7.26 சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் 18.07.2026

தென்காசி 
காசி விஸ்வநாதர் ஆலயம்
தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.சிற்றாறு எனும் ஆற்றங் கரையில் ஆலயம் உள்ளது.

1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கியது.
நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடி
அகலம்: தெற்கு-வடக்கு-318 அடி

இராஜகோபுர அமைப்பு

மிகப்பெரிய கிழக்கு ராஜகோபுரம்178 அடி 9 நிலை கொண்டது. 
நீளம்: வடக்கு - தெற்கு -110 அடி
அகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடி
1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, பொ.ஊ. 1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.
(பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பி)

இக்கோபுரத்தின் சிறப்பு " இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.

மொட்டைக் கோபுரம்
பொ.ஊ. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
கோபுர உயரம்: 180 அடி

புராதானமான ஆலயம் தமிழகத்திற்குப் பெருமைதரும் சிவன் ஆலயம்.
சுவாமி - ஶ்ரீகாசிவிஸ்வநாதர், சுயம்புலிங்கம் அம்பாள்ஸ்ரீ உலகம்மை, மற்றும் ஸ்ரீபாலகுமரன் நடுவில், தனித்தனி ஆலய சன்னதிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியது. சோமஸ்கந்தர் அமைப்பில் உள்ள ஆலயம்.
மிகப்பெரிய ஆலயம். முழுவதும் கற்றளி.
தல விருட்சம் - சென்பகம்
உள்பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சகஸ்ரலிங்கம், பைரவர், சூரியன், 4வர், 64 நாயன்மார்கள், சுரதேவர், விநாயகர், ஆறுமுகர், நடராஜர், முதலிய சன்னதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் சகஸ்ரலிங்கம் கிழக்குப் பார்த்த தனி ஆலயம். பைரவர் தனி சன்னதி தெற்கு பார்த்தது.

ஆலய முன்மண்டபத்தில் உலகப்புகழ் பெற்ற சிற்பங்கள் அமைந்துள்ளது.
அகோவீரபத்திரர், அக்னி வீரபத்திரர், மன்மதன், காளிதேவி, சகாதேவன், துவாரபாலகர்கள், கர்ணன், மகாதாண்டவர், ரதிதேவி, மதனகோபாலன், தமிழனங்கு, முதலிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன.

 நவாப் ஆட்சிக் காலத்தில், அரசாங்க ஆவணங்கள் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.

கருவறையில் உள்ள காசி விஸ்வநாதர் நீண்ட தூரத்திலிருந்து தரிசிக்கும் அமைப்பு.
6 கால பூசை. ஆனி அனுஷம் பிரும்மோட்சவம்.
ஐப்பசி உத்திரம் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
அவசியம் தரிசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த ஆலயம்.
16.8.2025 மற்றும் 18.7.26 மீள் தரிசனம்

நன்றி🙏
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பாவூர்சத்திரம்வெண்ணி மலை முருகன்ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் 18.7.2026

பாவூர்சத்திரம்
வெண்ணி மலை முருகன்

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசி - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில், தென்காசிக்குக் கிழக்கே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
பாவூர்சத்திரம், காமராஜ் நகரில் அமைந்துள்ள வெண்ணிமலை சுப்ரமணியசுவாமி கோயில் ஒரு புகழ்பெற்ற முருகன் குன்றாகும். 

பாவூர்சத்திரம் என்ற ஊரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த விமன்மலைக்குன்றின் மீது இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில், சுப்ரமணிய சுவாமியாக வழிபடப்படும் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமான் தனது தேவியர்களான வள்ளி மற்றும் தேவசேனாவுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
 நுழைவாயில் வளைவு :
 கட்டுமானத்திற்காக உள்ளூர் தனவந்தர்களால் உருவான இந்த வளைவில் நாரதர், முருகப்பெருமான், வள்ளி மற்றும் தேவசேனா தேவியர்கள் மற்றும் முனிவர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
இந்த வளைவு, அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான தனவேல் அவர்களால் 1.3.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது. 
இந்த அற்புதமான நகரத்தை நோக்கியவாறு ஒரு குன்றின் மீது அமைந்துள்ள அழகான கோயில். பாவூர்சத்திரத்தில் உள்ள வெண்ணிமலை சுப்ரமணியசுவாமி கோயில். 
இந்தக் கோவில் ஊரில் உள்ள பொது மக்களின் பேருதவியால் கட்டப்பட்டுள்ளது. நிதி உதவி செய்த ஊர் பெருமக்களை கல்வெட்டில் பெயர் பொருத்தியுள்ளார்கள்
மிகப்பெரிய முன் மன்டபம் அடுத்து 7 அடுக்கு ராஜகோபுரம் உள் நுழைவில் ராஜ கோபுரத்தின்கீழ் ஒரு புறம் ராஜகணபதியும் மறுபுறம் மகாலெட்சுமியும் உள்ளார்கள். இராஜ கோபுரம் தொடர்ந்து பெரிய வெளி மண்டபம் அதில் பலிபீடம், கொடிமரம் உள்ளது 
வெளிமண்டபம் மற்றும் உள் மண்டபம் அடுத்த கிழக்கு நோக்கிய கருவரையில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அருள் தரிசனம் தருகிறார். 
கோஷ்ட்டத்தில் தென் பகுதியில் கல்யாண குருதட்சிணா மூர்த்தி, கன்னி மூலையில் தனி கணபதியும், விஷ்ணுதுர்க்கையம்மன் மற்றும் நவகிரகங்கள் உள்ளன.
வடக்குப்பகுதியில் தெற்கு நோக்கிய மகாகால பைரவர் தனி சன்னதியில் உள்ளார்.
ஆலயம் தூய்மையாகவும் சிறப்பாகவும் முறையான பூசைகளுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆலயம் உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் தொலைவில் உள்ள இடங்கள் மிக ரம்யமான காட்சிகள் காணலாம்.
பரபரப்பு இல்லாத தனிமையான இடத்தில் அமைதியும் பக்தியும் நிறைந்த ஆலயமாக விளங்குகிறது.

அனைத்து விஷேச நாட்களிலும் ஆலயம் விழாகாணுகிறது. மாசி மாதத்தில் நடைபெறும் விழா மிகவும் பிரசித்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபடுகிறார்கள்.

நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் சிவகாமி அம்பாள் ஆலயம்கீழப்பாவூர் திருவாலீசுவரர் கோயில் 18.7.26

கீழப்பாவூர் 
 திருவாலீஸ்வரர் சிவகாமி அம்பாள் ஆலயம்
கீழப்பாவூர் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் வட்டம், கீழப்பாவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில்,சுரண்டை - பாவூர்சத்திரம்
பிரதான சாலையிலேயே உள்ளது

கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருவாலீஸ்வரர் ஆலயம் சிவன் கோவில்,இந்த ஆலயம் 11-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் அருகில் முனை எதிர் மோகர்கள் (போர் முனையில் ஆர்வம் கொண்டவர்கள்) கோட்டை உள்ளது.
கோயில் அமைப்பு
ஆலயம் கிழக்குப் பார்த்த அமைப்பு
மிக மிகப் பழமையான ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு 25.3.26 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இராஜகோபுரம் இல்லை மதில்உள்வாயில் மேல் இரண்டு நந்திகள் மட்டும் உள்ளன.
பெரிய மரங்கள் சோலைகளாக இருந்து ஆலய வசதிக்காக சரிபடுத்தப்பட்டுள்ள இடம்.
ஆலயம் தென்பகுதியில் அம்பாளும் சுவாமி வட பகுதியிலும் தனித்தனி அமைப்பில் இரண்டும் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளன. நடுவில் நீண்ட மண்டபம் உள்ளது.
ஆலயம் உட்பகுதியில் பழமையான விநாயகர், சுவாமி சன்னதி முன்புறத்தில் விநாயகர் முருகன் மற்றும் மன்டபத்தில்
அதிகார நந்தி சூரியன் சந்திரன் சனீஸ்வரர் உள்ளனர்.
வடகிழக்கில் பைரவர் தனி சன்னதியில் உள்ளார்.
மிகவும் பழமையான சிலைகள் கொண்டது

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிருவகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சுரண்டைஸ்ரீ சிவகாம சுந்தரீ அம்பிகா ஸமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் சுரண்டை திருநெல்வேலி - தென்காசி 18.7.26

சுரண்டை
ஸ்ரீ சிவகாம சுந்தரீ அம்பிகா ஸமேத ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் 
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 
அனுமன் ஆற்றில் வடகரையில் பாவூர்சத்திரம் பிரதான சாலையில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கியது. இராஜ கோபுரம் இல்லை காட்சி கோபுரம் அழகாக அமைத்துள்ளனர்.
முன் மண்டபத்தில் மகாகணபதி ஒருபுறமும் பாலமுருகன் ஒரு புறமும் அமைத்துள்ளார்கள். ஆலயம் உட்புறத்தில் பலிபீடம் கொடிமரம் உள்ளது. நந்தியம்பெருமாள் தனி மண்டபத்தில் உள்ளார்.
பிரதான மண்டபத்தில் துவாரபாலகர்கள் மேலும், தெற்கு நோக்கிய அம்பிகை சிவகாமி அம்பாள் நின்றகோலத்தில் தனி கருவறையில் நின்று அருள் காட்சி தருகிறார்.
சுவாமி உள் மண்டபத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். கருவறையில் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
தென் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் தனி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளனர். 
கோஷ்டத்தில்தக்ஷிணாமூர்த்தி தனி மண்டபத்துடன் உள்ளார்.
கன்னி மூலையில் விநாயகர் உள்ளார் மேலும் துர்க்கை சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்
மேற்கு புறத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் தனி சன்னதியில் லட்சுமி சரஸ்வதி மகாலட்சுமி
மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் தனித்தனி சந்ததிகளில் உள்ளனர். கிழக்குப்புறத்தில் நவகிரகங்கள் மண்டபத்தில் உள்ளனர். மேலும் சந்திரன், சூரியன் அமைந்துள்ளனர்
ஆலயம் 2022 ஆம் வருடம் புனரமைக்கப்பட்டு பொலிவுடன் இருக்கிறது நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள்.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர் ஆலயம் 18.7.2026

சாம்பவர் வடகரை
 அகத்தீஸ்வரர் ஆலயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர் கோயில், அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள சுமார் 1300 ஆண்டுகள் பழமையான சிவஸ்தலமாகும்.
அமைவிடம்: தென்காசியில் இருந்து சுமார் 15 கி.மீ மற்றும் சுரண்டையிலிருந்து 5 கி.மீ தொலைவில் சாம்பவர் வடகரை அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் இதற்கான அலங்கார வளைவு உள்ளது.

அனுமன் நதிக்கரையில் உள்ள மயானத்தை கடந்துதான் கோயிலுக்கான பாதை செல்கிறது.
அகத்தீஸ்வரர் 
அனுமன் நதி தீரத்தின் தென்பகுதியில் அகத்தீஸ்வரர் கோவிலுள்ளது. 
பழமை வாய்ந்த கோயில் இடைக்காலத்தில் பக்தர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர் கனவில் தோன்றிய அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி செய்ய சொன்னதாகவும் அதன்படி அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். முன்மண்டபத்தில் நந்தியம் பெருமான் காட்சி தருகிறார். கருவறையின் இடதுபுறம் விநாயகருக்கு கருவறையில் மூலவராக சிவலிங்க வடிவில் அகத்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கருவறையை ஒட்டிய இடதுபுறத்தில் அதிகார நந்தி மற்றும் இருவர் காட்சி தருகிறார்கள் சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி யோக நரசிம்மர் பிரம்மா காட்சி தருகிறார் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் வேம்பும் அரசும் சேர்ந்து நிற்க அதன் கீழே ராகு கேதுவுக்கும் இடையில் தவழும் குழந்தையாக கிருஷ்ணன் இருக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த குழந்தை கிருஷ்ணனை வணங்கி வர அருள் பெற செய்கிறார்கள்.
ராமாயணத்தில் வரும் கரடி முகம் கொண்ட மனிதருக்கு பெயர் ஜாம்பவ மூர்த்தி இந்த கோவில் சிவபெருமானை ஜாம்பவமூர்த்தி வழிபட்ட ஸ்தலம் அகஸ்தியரும் வழிபட்டுள்ளார் ஆனால் எப்படி ஆதாம் ஏவாள் முதல் மனிதர் என்று கிறிஸ்தவ மதத்தில் கூறுகிறார்களோ அதே போன்று உலகம் தோன்றிய காலத்தில் கரடி தோன்றியது அதிலிருந்து தான் குரங்கு; குரங்கிலிருந்து தான் மனிதன்; அந்த கரடி மனிதன் தான் ஜாம்பவான் மூர்த்தி என்று அழைக்கப்படும் எனவே தான் இந்த ஊர் சாம்பவன் வடகரை அதாவது அனுமன் நதி வடகறையில் சாம்பவமூர்த்தி தவம் செய்த இடம் என்று அர்த்தம் வடபக்கம் நீர் தடாகம் ஓடும் பாறை அதில் கரடித்தலையுடன் சம்பவமூர்த்தி இருப்பார். அதை தான் இப்ப சிவன் கோயிலாக கட்டியுள்ளார்கள்.

சாம்பவர் மூர்த்தி
ஆற்றின் வடகரையில், இயற்கையான பாறை நிலப்பரப்பிற்கு நடுவே நதியை ஒட்டிய வகையில் சாம்பவர் மூர்த்தியும் எழுந்தருளியுள்ளார். இரு கோயில்களையும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் இணைக்கிறது.
அகத்திய முனிவரால் வழிபடப்பட்ட இந்த ஆலயம், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைதியான குகை போன்ற பாறை அமைப்பில் மூலவரான சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது. 
குகைக்கோயில் சிறப்புகள்
​நதியின் கரையில் அமைந்துள்ள பாறைப் பகுதியின் கீழே ஒரு சிறிய இயற்கையான குகை (Cave) உள்ளது.
 ​இந்தக் குகையினுள் தான் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
 ​குகையின் பாறை அமைப்புகளுக்கு வெளியேயும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு பாறைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

 தல வரலாறு & ஆன்மீக நம்பிக்கை

​சிவபெருமானின் உத்தரவின் , உலகை சமநிலைப்படுத்த தென்திசை நோக்கி வந்த அகத்திய முனிவர், இந்த அனுமன் நதிக்கரையில் தங்கி, குகையினுள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கடுமையான தவம் புரிந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
 ​குகையினுள் இருக்கும் லிங்கத் திருமேனியின் முன்னே அகத்திய முனிவர் தவம் செய்யும் கோலத்திலான திருவுருவமும் அமைந்துள்ளது. இதனால் இத்தலத்து ஈசனுக்கு "அகத்தீஸ்வரர்" என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
 ​
வரலாற்றுப் பின்னணி
​இக்கோயிலின் கருவறை வெளிச்சுவர்களில் பழமையான வட்டெழுத்து கல்வெட்டுகள் (Inscriptions) காணப்படுகின்றன.
 ​சாம்பவர் வடகரை பகுதியானது முற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழும், பின்னர் 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (Travancore State) ஒரு பகுதியாகவும் திகழ்ந்துள்ளது.
 ​பிற சன்னதிகள்
​குகைக்கோயிலை ஒட்டி விநாயகர், ஐயப்பன், நாகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டுத் திருவுருவங்களும் இத்தலத்தின் பாறை அமைப்புகளில் வழிபடப்படுகின்றன.
 
திருவிழாக்கள்:
கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கார்த்திகை மாதத்தில் சோமவார பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் மாலையில் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அமாவாசை நாட்களில் சிறப்பு உச்சிகால பூஜையும் அன்னதானமும் நடக்கிறது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. 
தினந்தோறும் அன்னதானம் நடக்கிறது. மாதசிவராத்திரி நாளில் விசேஷ பூஜைகள் உண்டு. மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#தென்காசிபகுதி

ஆய்குடிஅருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 18.7.2026

ஆய்குடி
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தென்காசி மாவட்டம்.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது இத்தலம்.
வழிபாடு: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், திருமணத் தடை உள்ளவர்களும் இக்கோவிலை முக்கிய வழிபாட்டுத் தலமாக கருதுகின்றனர்.
தலபுராணம்
திரேதா யுகம் - ராமாயணக் காலம். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்தார். அப்போது அவர் இருந்த பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் போக, தன் வால் நுனியின் கூர்மையால் பூமியை அகழ்ந்து சிற்றாறு ஒன்றை உருவாக்கித் தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

பின்னாளில் இலங்கைக்குச் செல்லும் வழியில் ராமபிரானும் இந்த நதியில் தாகம் தணித்தாராம். இந்த நதிக்கு அனுமன் நதி என்றே பெயர். இதன் நீர், பிணிகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். அற்புதமான இந்த அனுமன் நதிக் கரையில்தான் அழகுற கோயில்கொண்டிருக்கிறார் ஆய்க்குடி முருகன்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம் 'ஆய்' என்னும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி.

இந்தப் பகுதியில் மல்லபுரம் என்றோரு கிராமம். அங்கே வசித்த மல்லர் என்ற சந்நியாசி சிறந்த முருகபக்தர். அவர் ஆய்க்குடியில் அனுமன் நதிக்கரையிலேயே ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் அரச மரம் ஒன்றை நட்டு, அவரின் குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தினரும் முறைப்படி வழிபட்டு வந்தார்களாம்.
இந்த நிலையில், மல்லபுரம் - நஞ்சைப்புரவு ஏரிக்கரையில் தூர்வாரும் போது நான்கு திருக்கரங்களுடன் கூடிய குழந்தை வடிவ முருகன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. முருகப்பெருமானின் விருப்பப்படி அந்தச் சிலை, ஆய்க்குடியில் உள்ள மல்ல சித்தரின் ஜீவசமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறார்கள். தொடக்கத்தில் சிறு ஓலைக் குடிலாக இருந்த கோயிலை, 1931-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசக் குடும்பத்தினர் புனரமைத்துக் கற்றளிக் கோயிலாக எழுப்பி வழிபட்டார்களாம்.
ஆலய அமைப்பு
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அனுமன்நதிக்கரையில் அமைந்துள்ளது கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது.
 இங்கு மூலவராக பாலசுப்பிரமணியர் மற்றும் உற்சவராக முத்துக்குமாரர் வடிவில் இறைவன் காட்சி அளிக்கிறார். 

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலகனாக ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் பத்மபீடத்தில் தாமரைப் பூவின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் அருகில் உள்ள மயிலின் முகம் இடப்புறம் பார்த்தபடி உள்ளது.
வேம்பு, கறிவேப்பிலை, அரச மரம், மாதுளை, மாவிலங்கு ஆகிய பஞ்ச விருட்சங்களின் கீழும் விநாயகர், சூரியன், மகாவிஷ்ணு, அம்பிகை, மகேஸ்வரர் ஆகிய பஞ்ச தெய்வங்கள் சூழவும் அருள்கிறார்
இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பு என்கிறார்கள் பக்தர்கள்.
 மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. 
மூலவரைப் போலவே அமைந்த உற்சவர் முத்துக்குமார சுவாமி மயில் வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

ஸ்தல விருட்சம்: சிவனும் சக்தியும் குடியிருக்கும் வகையில் அரசு, வேம்பு, மாதுளை, மா, கறிவேப்பிலை ஆகிய ஐந்து மரங்கள் இணைந்த பஞ்சவிருட்சம் உள்ளது.

கோவிலின் சிறப்பம்சங்கள்:
படிப்பாயசம் நிவேதனம்
 இங்கு தினமும் 'படிப்பாயசம்' நைவேத்தியம் செய்யப்படுவது முக்கிய சிறப்பாகும்.
ஆய்க்குடி முருகன் கோயிலின் படிப்பாயசம் பிரசித்தி பெற்ற பிரசாதம் ஆகும். இத்தலத்தின் முருகன் குழந்தைப் பருவத்தினன். ஆகவே இதை அனுமன் நதிக்கரையின் படித்துறையில் அமர்ந்து அருந்தினால், குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
குழந்தை பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் மழலை பேறு கிட்டும். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு, சுக்கு, சீரகம் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் இந்தப்
பாயாசத்தை நிவேதனமாக படைத்து அதனை கோவிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி சிறுவர்களை அருந்த சொல்கிறார்கள். இதனை படிப்பாயாச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயாச நிவேதனத்தை ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை

‘குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டி, முருகனை தரிசித்து வழிபட்டு, படிப்பாயசம் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்தப் பாயசத்தைப் பக்தர்களுடன் இணைந்து முருகப்பெருமானும் அருந்துவதாக ஐதிகம்.

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார்.

விழாக்கள்
கந்த சஷ்டி, தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம் ஆகியவை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும் தலம் இது. தீபாவளிக்கு மறுநாள் கொடி ஏற்றப்பட்டு 7 நாள்கள் கந்தசஷ்டித் திருவிழா கோலாகலமாக நடை பெறும். விழாவின் 5-ம் நாளன்று பொட்டு குழைக்கும் வைபவம் நடக்கும். அப்போது முருகப்பெருமானின் வேலாயுதம் தலைகீழாக வைக்கப்பட்டு, சூரபத்மனுக்குத் தன் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக `போரிட நான் தயார்’ என்று முருகன் அறிவிப்பதைக் குறிக்கும் வைபவம் இது என்கிறார்கள் பக்தர்கள்.

திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி விசேஷம். அதேபோன்று இங்கே தரப்படும் அரச இலை விபூதி மகத்துவமானது. இங்கே சூர சம்ஹார வைபவத்தின்போது மனிதர்களே சூரபத்மனைப் போன்று வேடமிட்டுக் களம் இறங்குகிறார்கள். இது இத்தலத்தின் தனிச் சிறப்பு.

ஆய்க்குடி முருகன் கோயில்
இங்கே புனித நதியை உருவாக்கிய ராம பக்தரான அனுமன் மீதும் பாலசுப்ரமணிய சுவாமி மீதும் கொண்ட பக்திமிகுதியால், இங்குள்ள மக்க ளில் பலரும் தங்கள் குழந்தைக்கு `ராம சுப்பிரமணியன்’ என்றே பெயர் சூட்டுகின்றன. நீங்களும் ஒருமுறை ஆய்க்குடி முருகனைத் தரிசித்து அருள் பெற்று வாருங்கள்.

கல்யாண வேண்டுதல், உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் மேன்மை, பொருளாதார வளம், குடும்பச் செழிப்பு... என என்ன வேண்டுதலாக இருந்தாலும் ஆய்க்குடிக்கு வந்து முருகப்பெருமானை மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். தங்கள் வேண்டுதல் பலித்ததும் மணி எடுத்து வைத்தும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
அமைவிடம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில், குற்றாலத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் ஆய்க்குடி என்னும் பேரூராட்சியில் தென்காசியிலிருந்து சுரண்டை செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது
செங்கோட்டையில் இருந்து கிழக்கில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
நன்றி🙏 18.7.2026சுப்ராம் மீள்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

குற்றாலம்திருகுற்றாலநாதர் கோயில் 18.7.26

குற்றாலம்
திருகுற்றாலநாதர் கோயில் 
தேவாரப் பாடல் பெற்ற தலம் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சிவன் கோயிலாகும். இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.
கோயில் தகவல்கள்
மூலவர்: திரிகூடநாதர் திருக்குற்றாலநாதர்
அம்பாள் : குழல்வாய்மொழி அம்மன்,
குழல்வாய் மொழியம்மை மற்றும் பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம்:குறும்பலா
தீர்த்தம்: சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகமம்: மகுடாகமம்

இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.

கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம்.
கிழக்குப் பார்த்த ஆலயம், 
அம்பாள் தனி சன்னதி

உள்பிரகாரத்தில் - வல்லப கனபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், பஞ்சபூத லிங்கங்கள், அகத்தியர், ஆனந்தக் கூத்தர், 63 நாயன்மார்கள் முதலிய சன்னதிகள் முழுவதும் கற்றளி . 

ஆலயத்தின் உள்பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்திலிருந்து , விநாயகர், லிங்கம், , கோபுரம், மலை, அருவி ஆகிய பஞ்ச தரிசனம் செய்யலாம்.
இக்கோயிலில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி சன்னதிகளும், செண்பக விநாயகர், அம்பல விநாயகர். ஆறுமுக நயினார். தட்சணாமூர்த்தி, கன்னி விநாயகர். சந்திரன். வான்மீகிநாதர். சம்புகேஸ்வரர், அண்ணாமலைநாதர். திருமூலநாதர், ராமலிங்கர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கைலாசநாதர், துர்க்கை, பராசக்தி, சைலப்பர், வல்லப விநாயகர், நன்னகர பெருமாள், பாபநாசர்-உலகம்மாள், நெல்லையப்பர்-காந்திமதியம்மாள், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், சகஸ்ரலிங்கம், பால்வண்ணநாதர், சொக்கலிங்கர்-மீனாட்சி, சாஸ்தா, மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, சோமலிங்கர், அகஸ்தியர், வாசுகி, மகாலிங்கம், சங்கரலிங்கம், காசிவிஸ்வநாதர், பெரிய ஆண்டவர் சாஸ்தா, சிவாலய முனிவர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன.
 இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

சிவ தலங்களுள் பஞ்சசபைகளில் இது சித்திரசபை எனப்படும்.
தனி ஆலயமாக சித்திரசபை 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
தற்போது பராமரிப்பு பணியை முன்னிட்டு உள்ளேசென்று தரிசிக்க அனுமதி இல்லை

திருமுறை தலம் 13வது பாண்டி தலம்
சம்பந்தர் 2 பதிகம், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடியது
கபிலர், பட்டினத்தார். அருணகிரிநாதர், திருப்புகழ் பாடல் பெருமையுடையது.
திரிகூடராசப்பகவி பாடியது.
86 கல்வெட்டுக்கள் உண்டு
மிகப் பழமையான ஆலயம்.
பராசக்திபீடம்
குற்றாலநாதர் மூலவரின் வடதிசையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம் எனப்படும் பராசக்தி பீடம் சிறுகோயிலாக உள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்கு பராசக்தி அரி, அயன், அரன் மூவரையும் பயந்தாள். இவள் சன்னிதானத்தில் தானுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது
திருமால் சிவன் ஆனது திருவிளையாடல் புராணம்
கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார். அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தையும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது.

நன்நகரப்பெருமாள்
வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே. வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார்.
தைலமுழுக்கு
அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது. 
இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.
பூசைகள்
பங்குனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் சித்திரை விசு, அமாவாசை, ஆவணி மூலம், நவராத்திரி, ஐப்பசி விசு, திருக்கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை. ஐப்பசி. மார்கழி மாதம் சித்திரை 5ம் திருநாள் ஐப்பசி 5ம் திருநாள். மார்கழி 5ம் திருநாள் தேரோட்டம் நடைபெறுகிறது. தை மாதம் தை மகம் திருவிழாவாக நடைபெறுகிறது.
நாள்தோறும் 6 கால பூசை நடைபெறுகிறது.
அர்த்தஜாமம் பள்ளியரை பூசை இரவு 8.00 மணி அளவில் நடைபெறுகிறது.

நன்றி🙏 18.7.2026சுப்ராம் மீள் தரிசனம்
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#தென்காசிபகுதி

Thursday, July 23, 2026

பெருங்குடி : அருள்மிகுஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேதஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 5.06.26

பெருங்குடி : அருள்மிகு
ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத
ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)
அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்,
பெருங்குடி கிராமம்,
ஸ்ரீரங்கம் (திருச்சி, சோமரசம்பேட்டை) வட்டம்,
திருச்சி மாவட்டம்.

சுந்தரசோழரால் 969-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, இந்த பழமைமிகு ஆலயத்தின் கருவறையில்,அகத்திய மாமுனிவரால்வழிபடப்பட்ட ஆதிகாலத்தினைச்சார்ந்த,
நம் இனிய சுயம்புலிங்க ஈசனார்,வடக்கு திசை நோக்கி சற்றே சாய்ந்த நிலையில் 'ஆனந்த சயன' திருக்கோலத்தில்அருட்காட்சியளிப்பது காண்பதற்கு இனியதிருவருள்தரிசனமாகும்.

அம்பிகை
நின்ற திருக்கோலத்தில்,
சாந்த சொரூபினியாய்
தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள்.

(அகத்திய மாமுனிவர் பூஜைசெய்த சிவத்தலங்களில் இத்தலமும் ஒன்று என்பது தலச்சிறப்பு)

கூத்தனின் மகள் நல்லமங்கைக்கு
பார்வை கிடைக்கப்பெற
செய்த தலமாதலால்,
பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை பயக்குமாம்.

ஶ்ரீ வள்ளி அரூபமாக காட்சிதருவதாக கூறப்படும் இத்தலத்தில்,
ஶ்ரீ தேவசேனாவுடன் மட்டும் வீற்றிருக்கும்
எம்பெருமான் முருகனைப்பற்றி
அருணகிரிநாதர்
தன் திருப்புகழில்
போற்றிப்பாடியுள்ளார்

969-ஆம் ஆண்டில்
சுந்தர சோழ மன்னரால்
கட்டப்பட்டு, தற்போது சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருத்தலத்தின் கருவறையில்,
நம் இனிய ஈசன்
(சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக)
சுயம்பு லிங்க திருமேனியராய், வடக்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குதிசை பார்த்து
ஆனந்த சயனத்திருக்கோலத்தில் அருட்காட்சியளிப்பது தலவிசேஷம்.

தனி சன்னதியில்,
நம் அம்பிகை
நின்ற திருக்கோலத்தில்
சாந்த சொரூபியாக
திருவருள்புரிகின்றாள்.

(திருச்சி to வயலூர் சாலையில், சோமரசம்பேட்டைக்கு
அருகில், சிறப்புமிக்க இச்சிவன் கோயில் உள்ளது)

அகத்திய மாமுனிவர்
நம் ஈசனை எண்ணி வழிபட்ட சில சிவத்தலங்களுள் இத்திருத்தலமும்
ஒன்று என்பது தலச்சிறப்பாகும்.

(மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
இத்திருக்கோயில்,
இரண்டாம் ஆதித்தசோழர்,
போசள மன்னர்,
வீரராமநாதன், விஜயநகர மன்னர் விருப்பணன் மற்றும்
பாண்டிய மன்னர்கள் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக
கல்வெட்டு பதிவுகள் கூறுகின்றன)

பிரதோஷ வழிபாடும், வியாழக்கிழமை நாட்களில் நடைபெறும்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடும் தலச்சிறப்புக்களில் சிலவாகும் .

செவ்வாய், சனி தோஷங்கள் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினை தீர்க்கும் பரிகார தலமாக போற்றப்படும்

5.07.26 தரிசனம்
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருச்செந்துறை,ஸ்ரீ சந்திரசேகர சுவாமி கோவில் 5.07.26

திருச்செந்துறை,ஸ்ரீ சந்திரசேகர சுவாமி கோவில்
திருச்சி அருகே அந்தநல்லூருக்கு அருகில் திருச்செந்துறை என்ற ஊரில் இப்போது “சந்திர சேகர ஸ்வாமி கோயில்“ என்று அழைக்கப்படும் இக்கோயிலானது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இக்கோயில் பல்லவர் காலத்தில் இருந்த போது மண் தளியாக இருந்திருக்கலாம். இதை கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியின் மகளும், அரிஞ்செயன் மனைவியாகிய ஆதிச்ச பிடாரியால் கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது கல்வெட்டுகளில் ஆதித்தன் காலத்தில் திருச்செந்துறை பரமேஸ்வர் என்றும் முதலாம் பராந்தகன் காலத்தில் திருச்செந்துறை கற்றளி பரமேஸ்வர் , “திருச்செந்துறை கற்றளி பெருமானடிகள்“ ,திருச்செந்துறை மகாதேவர் என்றும் ராஜேந்திரன் காலத்தில் திருச்செந்துறை உடைய மஹாதேவன் என்றும், குலோத்துங்கன் காலத்தில் திருச்செந்துறை மஹாதேவர் என்றும் விக்ரம சோழன் காலத்தில் திருச்செந்துறை உடையார் என்றும், இரண்டாம் ராஜராஜன் காலத்தில் திருச்செந்துறை தேவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள இறைவன் சந்திரசேகரர் ஆவார். இறைவி “மானேந்தியவல்லி“ ஆவார். மானும் மழுவும் ஏந்தி இருப்பதால் இப்பெயர். மூலவர் சுயம்பு வடிவானவர்.
இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லூர் வாய்க்கால் இன்றும் இருப்பது சிறப்புக்குரியதாகும். இக்கோயில் இருக்குமிடத்தை ‘உறையூர் கூற்றத்து பிரம்மதேயம் ஈசானமங்கலம்’ என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இக்கோயிலின் சுவர்ப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. அக்காலத்தில் நிலமளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ஒன்று கருவறையின் தென்சுவரில் செதுக்கப்பட்டு அதன் அருகிலேயே ‘நிலமளந்த கோல்‘ என்று கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் பற்றி இவ்வூருக்கு அருகில் உள்ள அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் கல்வெட்டில் ‘திருச்செந்துறை ஸ்ரீ் விமானத்து வெட்டிக்கிளடக்கும் பெருங்கோலால் நிலம் மூன்று மாவும்‘ என்று குறிப்பிடுவதால், இப்பகுதியில் நிலமளக்க இந்த அளவுகோலே பயன்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
செம்பியன் இருங்கோவேளான் என்ற பூதி ஆதித்தன் பிடாரன் என்பவன் இக்கோயிலில்“பஞ்ச மகா சப்தம் “ என்ற இசை வழி பாட்டிற்குத் தானம் அளித்துள்ளான். கரடிகை, சங்கு, மத்தளம், காளம், வாய்ப்பாட்டு என்ற ஐந்தும் இக்கோயிலில் இசைக்கப்பட்டு உள்ளதை கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
#கோயிலமைப்பு
கருவறை, பிரதி பந்த அதிட்டானத்துடன், சுவர்பகுதியில் தேவ கோட்டத்துடன் உள்ளது. இதில் பழமையான ரிஷபாந்திகர் சிற்பம் உள்ளது. தூண்கள் பிரம்ம காந்தமாகவும், வலபியில் பூத வரியும், கபோதத்தில் நேத்ர நாஸியும் உள்ளது.
இரு தள விமானமாக ஏறு சாலையும், விருத்தஸ்புடிதமும், கர்ண கூட்டின் நடுவேயும், அஹாரை, சாலையின் நடுவேயும், கிரீவம் மற்றும் கிரிவ கோட்டங்களில் சிற்பங்கள் மற்றும் நாட்டிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவ்விமானம் நாகரமாக அமைந்துள்ளது.நான்கு புறமும் இடபங்கள் அமர்ந்த நிலையில் உள்ளது.
அர்த்த மண்டபம், மஹா மண்டபம், இறைவிக்கு சன்னதி என்றும், முன்னால் ராஜகோபுரமும் கொண்டு இக்கோயில் அழகுற அமைந்துள்ளது. இக்கோபுர சிற்பங்கள் அழகானவை.
#கல்வெட்டுகள்
முதலாம் ஆதித்தனின் நான்கு கல்வெட்டுகள்,அதில் மூன்றாம் ஆண்டில் பூதி ஆதிச்ச பிடரி ஐந்து கழஞ்சு பொன் கொடுத்து ஈசான மங்கலத்து சபையாரிடம் இடம் வாங்கி இசைக்கருவிகள் வாசிப்பவரின் நலனுக்காக தானமளித்துள்ளார். இதுவே காலத்தால் முந்தியது.
முதலாம் பராந்தகனின் இருபத்தியொரு கல்வெட்டுகள் உள்ளன. இவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் பூதி ஆதிச்ச பிடாரியால் இக்கோயில் கற்றளியாக எடுப்பிக்க பட்ட செய்தி உள்ளது.
பூதி ஆதிச்ச பிடாரி, இக்கோயிலுக்கு அமுது படைக்கவும், நொந்தா விளக்கெரிக்கவும், திருவிழா மற்றும் சூரிய கிரகணத்தின் பொது திருவிழா நடத்தவும் நிலங்களும், பொன்னும் தானமாக அளித்துள்ளார்.
செம்பியன் இளங்கோ வேளார் 7 வேலி நிலமும் வரி நீக்கி கொடுத்துள்ளார்.
இந்நிலம் 4 நொந்தா விளக்கிற்கும், இவர் பிறந்த உத்திராடம் ஒவ்வொரு மாதத்திலும் இறைவனுக்கு நெய்யால் அபிஷேகம் செய்யவும் அப்போதேல்லாம் பயிற்று போனகம் படைக்கவும் , பஞ்ச மாசப்தம் செய்யவும் தந்துள்ளார். இவர் மனைவியும் 20 கழஞ்சு பொன்னை தானமளித்துள்ளார்.பூதி கலிச்சி தன கணவனின் நன்மைக்காக விளக்கெரிக்க தானமளித்துள்ளார் .
முதலாம் ராஜேந்திரனின் 21 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இவ்வூரை சேர்ந்த வாச்சியன் கண்டனும் அவன் தாயும் சேர்ந்து நிலமளித்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வேதம் வல்ல பிராமணருக்கு உணவளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
குலோத்துங்கனின் 16,46 ஆட்சியாண்டின் இரண்டும் கல்வெட்டும் உச்சிப்போதில் அமுதளிக்க சட்டி சோறு இரு நாழி அரிசியால் அளிக்கப்பட்டுள்ளது.
விக்ரம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டும், இரண்டாம் ராஜராஜனின் 6, 14 ஆட்சியாண்டு கல்வெட்டும் விளக்கெரிக்க பசு முப்பதும், எருமை பன்னிரெண்டு, வெள்ளாடு நூறும் கொடுக்கப்பட்டுள்ளது.

 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுயம்பு லிங்கம், சோழர் கால கோவில். 

மூலஸ்தான தெய்வம் சந்திரசேகர ஸ்வாமி என்றும், தாயார் மானேந்திய வல்லி/மிருகதாரம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருச்செந்துறை தற்போது ஜீயபுரம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர்: சந்திரசேகரர்
அம்பாள்: மிருத்ராம்பிகை

கிழக்கு நோக்கிய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது.

சூரியன் மற்றும் பைரவர் சிலைகள் கருவறையை நோக்கி காணப்படுகின்றன. அவை ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. தட்சிணாமூர்த்தியின் உபசன்னதி வ்ருஷபந்திகா மூர்த்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஒரு புதிய தேவையற்ற சேர்க்கையாகத் தோன்றுகிறது. ஸ்தல விருட்சம் என்பது பலா மரமாகும். இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் காவிரி நதியாகும்.

இக்கோயில் சோழர் காலக் கோயில். இக்கோயிலில் சுமார் 50 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் பராந்தக சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, ராஜாதிராஜ சோழன், விக்ரம சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன், கோனேரி தேவராயா மற்றும் விஜயநகரத்தின் ஸ்ரீ ரங்க தேவ மகாராயா உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் மோட்டார் அல்லது செங்கல்லைப் பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இது பின்னர் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குந்தவையால் கற்கோயிலாக மீண்டும் கட்டப்பட்டது.

இக்கோயில் HR & CE தமிழ்நாடு அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

கோவில் காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மீள் தரிசனம் 5.7.26
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஆலந்துறை வடதிருத்தளிநாதர் வைப்புத் தலம் 5.07.26

ஆலந்துறை
தேவார வைப்புத்தலம்
வடதிருத்தளிநாதர், வட தீர்த்தநாதர். ஆலந்துறையார், திருச்சி - கருவூர் ரோடு, காவிரி தென்கரையில் பிரதான சாலையில் உள்ளது
இது திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில். கிரானைட் கோவிலான இந்த கோயில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது, பின்னர் ராஜராஜ சோழன் கோயிலுக்கு பல நன்கொடைகள் மற்றும் சேவைகளை செய்தார். சண்டிகேஸ்வரர் மூல சோழர் கால சிலை போல் தெரிகிறது. ஸ்தல விருட்சம் என்பது ஆலமரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
மீள் தரிசனம் 5.7.26
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வயலூர் முருகன் ஆலயம் 5.07.26

வயலூர்
ஒவ்வொரு முருக பக்தரும் தரிசிக்க வேண்டிய ஆழமான ஆன்மீக மற்றும் பழமையான கோவில். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சோழர் காலக் கோயில், முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அருள்பாலித்து, திருப்புகழ் இயற்றும்படி அருளிய தலமாகப் புகழ் பெற்றது.
தனிச்சிறப்பு: இங்குள்ள நடராஜர் சிலை மிகவும் அரிதானது, ஏனெனில் அவர் ஒரு காலில் நிற்காமல் இரு காலிலும் நிற்கிறார்.
நவகிரகங்கள்: சுவாரஸ்யமாக, அனைத்து கிரக தெய்வங்களும் இங்கு முருகப்பெருமானை எதிர்கொள்கின்றன, இது அவர்கள் மீது அவர் கட்டளையிட்டதைக் குறிக்கிறது.
புனித குளம்: முருகப்பெருமானின் வேள்வியால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் சக்தி தீர்த்தக் குளத்தைத் தவறவிடாதீர்கள்.
முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு' 'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன. அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு. காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ மன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோயிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழைமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் மறப்பிலி நாதர் என்றும் அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரன் என்றும், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. இங்கே வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி என்பர். கைத்தல நிறைகனி... எனத் துவங்கும் அருணகிரிநாதரின் விநாயகர் ஸ்தோத்திரப் பாடல் உருவானதும் இவரால்தான்.

வயலூர் முருகப்பெருமான் என்று உலகெங்கும் பிரசித்தமான இந்த ஆலயத்தில் தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் வயலூர் முருகப்பெருமான். முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர், முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம், வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சட்டத்தேர் விழா என இந்த ஆலயத்தில் அதிசயங்கள் அநேகம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணிகள் செய்து வழிபட்ட திருத்தலம் இந்த வயலூர் முருகன் கோயில். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து கூடி முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடு தண்டமும், அடிப் பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர். நாக தோஷம் மற்றும் குழந்தை வரம் இல்லாதோர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் அடைவர் என்பது நம்பிக்கை.

நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஊட்டத்தூர். ஸ்வர்ணாம்பிகை சமேத சோழீஸ்வரர் ஆலயம்5.7.26 தரிசனம்

ஊட்டத்தூர். ஸ்வர்ணாம்பிகை சமேத சோழீஸ்வரர் ஆலயம்
5.7.26 தரிசனம்
இரண்டாம் குலோத்துங்கனால் 10 நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழீஸ்வரர் ஆலயம்
சிறிய குன்றின்மேல் உள்ளது. வேன் கார் மேலே செல்லும்
2025 கும்பாபிஷேகம் ஆகி உள்ளது.
கிழக்கு நோக்கியது.
அமைதியும் பக்தியும் நிறைந்தது தகவல் தந்து பின் சென்று தரிசிக்கலாம்.
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஊட்டத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் 5.7.26

ஊட்டத்தூர்
ஆசிய கண்டத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அபூர்வ நடராஜர் கோவில்

சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளை அவரால் குணப்படுத்த முடியும். இந்திரன் பதவி இழந்த பிறகு, இந்த நடராஜப் பெருமானைத் தரிசித்து மீண்டும் இந்திரன் பதவியைப் பெற்றார். பதவி இழந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் (தேவார வைப்பு ஸ்தலம்),
திரு ஊட்டத்தூர் (உத்தத்தூர்),
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

பஞ்சநாத நடராஜ ஸ்தலம்

இடத்தின் வரலாறு.......
பழமை வாய்ந்த உத்தத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோவில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கல்வெட்டில் ஊத்தத்தூர் என்று முன்பு குறிப்பிடப்பட்ட இந்த இடம் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழன் ஊட்டத்தூரின் மேற்குப் பகுதியில் சோழேசுவரர் என்ற கோயிலைக் கட்டினான். காடாக இருந்த இப்பகுதிக்கு மன்னர் ராஜராஜ சோழன் அவ்வப்போது சென்று வருவார்.

ஒரு காயம்பட்ட சிவலிங்கம்.......... ஒருமுறை, அவரது வருகையின் காரணமாக, மன்னன் செல்லும் வழியில் உள்ள தடைகளை அகற்ற புல் வெட்டப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ ரத்தம் கொட்டியது. உடனே சேவகர்கள் அரசனுக்குத் தகவல் தெரிவித்தனர். மன்னன் வந்து பார்த்தபோது, ​​இரத்தப்போக்கு நின்று, தழும்புடன் சிவலிங்கம் தென்பட்டது.
சிவலிங்கம் கிடைத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. இதன் காரணமாக, ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் கட்டப்பட்டது ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோவில். இன்றும் லிங்கத் தலையைப் பார்த்தால் மண்வெட்டியால் ஏற்பட்ட காயம் தெரியும். கோயிலின் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடத்தப்படும்போது, ​​கற்பூர ஒளி லிங்கத்தில் பிரதிபலிக்கிறது. இக்கோயிலின் தெய்வம் சுடர் வடிவில் உள்ளது, சுத்தராத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும் மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

தீர்த்தத்தின் சிறப்பு......... உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்ததாக ஐதீகம், இந்த தீர்த்தம் மேலும் சிறப்பு பெற்றது. ராஜராஜ சோழன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஊட்டத்தூருக்கு வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வணங்கி குணமடைந்து ஆயுட்காலம் நீடித்ததாக கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறியமுடிகிறது.
ஆன்மிகப் பயணத்தின் போது, ​​ஊத்தத்தூர் செல்ல நினைத்த அப்பர் பெருமான், 5 கிலோமீட்டர் தூரத்தில் நின்று திகைத்து மகிழ்ந்தார். காரணம், அந்தக் குறியிலிருந்து பார்த்தபோது வழியெங்கும் சிவலிங்கங்கள் இருப்பதை உணர்ந்தார். சிவலிங்கங்களை மிதிப்பது சிவபெருமானுக்குக் குற்றமாக எண்ணிய அவர், குறியில் நின்று உத்தத்தூர்ப் பெருமானைப் போற்றிப் பாடினார். குறியில் இப்படிப் பாடியதால் அந்த ஊர் பாடலூர் என்று அழைக்கப்பட்டது.

பாறைகளின் சிறப்பு....... ஆலிங்க நாதனம், பஞ்ச நாதனம், சிங்க நாதனம், யானை நாதனம், யாழி நாதனம் என்று 5 வகையான பாறைகள் உள்ளன. அவற்றுள் பஞ்ச நாதனம் என்னும் பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனரால் கூறப்பட்டுள்ளது. நவராத்திரி மோதிரம் ஒளியால் நம் கவனத்தை ஈர்ப்பது போல், இந்த பஞ்ச நாதனக் கற்களும் சிறப்பு பெறுகின்றன.

இந்த கிராமத்தில் உள்ள நடராஜர் சிலை (அபூர்வ நடராஜா) சூரிய ஒளியைக் கொடுக்கும் பஞ்ச நாதனம் பாறைகளால் ஆனது. நடராஜர் சிலைக்கு அருகில் சிவகாம சுந்தரி சிலை உள்ளது. சிவகாம சுந்தரி தேவியின் திருவுருவம் வணங்கத்தக்கது மட்டுமல்ல சுவையானதும் கூட. பஞ்ச நடராஜரைப் பார்ப்பது போல் தேவி தன் முகத்தைச் சாய்த்துக் கொள்கிறாள்.

இக்கோயிலில் துர்க்கை கோரைப்பற்கள் தெரியும்படி காட்சியளிக்கிறாள். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் சாற்றி வழிபட்டால், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

சிறப்புகள் நிறைந்த ஊட்டத்தூர் அகிலாண்டேஸ்வரி உடனாய சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில்
திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்தக் கோவில், பிரம்மதேவனால் வழிபாடு செய்யப்பட்டது என்று ஆலய வரலாறு சொல்கிறது.
திருச்சியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடலூர். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், ஊட்டத்தூரை அடையலாம். இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
பிரம்மன் வழிபட்ட தலம்
ஒரு முறை பிரம்மனுக்கு சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மதேவன் இந்தத் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவபெருமானை வழிபாடு செய்து, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்மனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம், ‘பிரம்ம தீ்ர்த்தம்’ என்றே அழைக்கப்படுகிறது.
இந்த தீர்த்தத்தில் நீராடினால் பல்வேறு வியாதிகள் நீங்குவதாக நம்பப்படுகிறது. மூலவர் முன்பாக உள்ள மகா மண்டபத்தின் எதிரில் இருக்கும் பிரம்ம தீர்த்தம்,
கோடை காலத்திலும், மழை இல்லாத காலத்திலும் வற்றாமல் இருப்பது இறைவனின் திருவருளால் நடக்கும் அற்புதமாகும். இந்த தீர்த்தமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சநதன நடராஜர்
இந்த ஆலயத்தில் சுமாா் 8 அடி உயரம் கொண்ட நடராஜர் திருமேனி உள்ளது. கல்லால் ஆன மிகப்பெரிய நடராஜ உருவத்தில் இதுவும் ஒன்று. இவருக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடைபெறும். ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று ஐவகையான நதனக் கற்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த பஞ்ச நதனக் கல்லால் ஆனது, இந்த நடராஜர் திருமேனி. சாபம் காரணமாக, தான் இழந்த இந்திரலோக பதவியை, இந்த நடராஜரை வழிபட்டுதான் இந்திரன் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

நந்தியாறு நந்திகேசுவரர்
சிவாலயங்களில் இருக்கும் நந்தி, பெரும்பாலும் மூலவரைப் பார்த்து மேற்கு நோக்கித்தான் காட்சியளிப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியாறு நந்திகேசுவரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். ஒரு முறை கங்கை, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளுக்குள், ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது.
அதனால் சிவபெருமான், நந்தியெம்பெருமானிடம் ‘அனைத்து நதிகளின் நீரையும் குடித்துப் பார்க்க வேண்டும். குடிக்க முடியாத நதிதான் பெரிய நதி’ என்று கூறினார்.
அதன்படி ஒவ்வொரு நதியின் நீரையும் குடித்த நந்தியெம்பெருமானால், கங்கை நதியின் நீரைக் குடிக்க முடியவில்லை. அந்த வகையில் கங்கையே பெரிய நதி என்று அறிவிக்கப்பட்டது.
இறந்தவரின் அஸ்தியை இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள ஆற்றில் கரைத்த போது, அது புஷ்பமாக மாறியது. அதன்படி கங்கையை விடவும் சக்தி வாய்ந்தது நந்தியாறு என்று ஈசன் அருளினாா்.
இதன் காரணமாகவே நந்தியாறு செல்லும் கிழக்கு திசை நோக்கி நந்தியம்பெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. நந்தியின் பெயரும் ‘நந்தியாறு நந்திகேஸ்வரர்’ என்றானது.

இந்த சிவாலயத்தை ஒருமுறை வழிபடுபவர்களுக்கு ஒரு கோடி புண்ணியங்கள் கிடைக்கும் என அகஸ்தியர் பெருமான் கூறியுள்ளார். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் கோவிலாக விளங்கும் இக்கோயில் திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புள்ளம்பாடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் பாடாலூர்-புள்ளம்பாடி வழித்தடத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

தேனூர் - நந்திகேஸ்வரர் சிவன் ஆலயம்: 5.07.26

தேனூர் - நந்திகேஸ்வரர் சிவன் ஆலயம்:

வயிற்று நோய்களுக்கு அருமருந்தாகும் அம்பிகையின் அபிஷேக சந்தனம்

திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில்,திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தேனூர். இறைவன் திருநாமம் நந்திகேஸ்வரர். இறைவியின் திருநாமம் மகா சம்பத் கௌரி. திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் போற்றப்பட்ட தேவார வைப்பு தலம். தேவலோக பசுவான காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால், இத்தலம் காமதேனூர் என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி தேனூர் என்றானது.

நந்திதேவர் தவமியற்றிய தலம் இது. தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் நந்திகேஸ்வரர் என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார்.

இத்தலத்து அம்பிகை மகா சம்பத் கௌரி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள். எழிலார்ந்த அம்பிகையின் திருமுகம் தரிசிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் உள்ளவர்களுக்கு இத்தலத்து அம்பிகையின் அபிஷேக சந்தனம் அருமருந்தாக விளங்குகின்றது. நோயுற்றவர்கள் அம்பிகைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை பயன்படுத்தினால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இது இருக்கின்றது
கிழக்குப்பார்த்த ஆலயம் 3 நிலை யும்
தென்புறத்தில் 5 நிலையும் ராஜகோபுரம் உள்ளது
நந்தி வித்தியாசமான அமைப்பில் பெரிய அளவில் உள்ளது.
அம்மன் சன்னதி தென்புறம் நோக்கியது
உள் முன் மன்டப மேல் விதானத்தில் சரபேஸ்வரர் சிற்பம் சிறப்பானது.
அகத்தியர் வழிபட்ட ஆலயம்

நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

எதுமலை அருணாசலேசுவரர் ஆலயம் 5.07.26

எதுமலை அருணாசலேசுவரர் ஆலயம்
சிறுகனூர் - திருப்பட்டூர் - புத்தனாம்பட்டி செல்லும் முன் உள்ள சிற்றூர்

இங்குள்ள பழமையான சிவன்கோயில். கிழக்குப்பார்த்த ஆலயம் தென்புறத்தில் நுழைவு வாசல்
விசய நகர மன்னர்களால் கட்டப்பட்டது. ஈசனின் திருப்பெயர் அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையம்மை. இங்கு ஈசனின் எதிரே மூன்று நந்திகள் உள்ளது தனிச்சிறப்பு.
நன்றி🙏
5.07.2026 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...