Showing posts with label முக்திநாத்திருப்பயணம் - 24 Nepal Yatra. Show all posts
Showing posts with label முக்திநாத்திருப்பயணம் - 24 Nepal Yatra. Show all posts

Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் 12 -#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#பசுபதிநாதர்ஆலயம்
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 
12

🕊️பயண அனுபவக் குறிப்புகள்.

🚍24.04.2024 அன்று காலையில் சுனோலியிருந்து புறப்பட்டு, அன்று இரவு தான் காத்மாண்டு வர முடிந்தது. நேப்பாளம் எல்லா முக்கிய சாலைகளிலும்
புதிய அகலப் பாதை வேலை நடைபெற்று வருகிறதால், மிக மிக கடினமான பயனமாக இருந்தது.

🏢Hotel Narayana என்ற இடத்தில் தங்கினோம். 5 வருடங்களுக்கு முன்பு முக்திநாத் பயணத்தின் போதும், இதே Hotel ல் தான் தங்கியிருந்தோம்.
பசுபதிநாதர் ஆலயம் மிகவும் அருகாமையில் உள்ள இடம்.

🌟காட்மண்டு

⛳ நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

⛳நேபாள நாட்டில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது.

⛳காத்மாண்டு சமவெளியில் அமைந்த ஏழு பண்பாட்டு உலக பாரம்பரியக் களங்கள்;

⚡காத்மாண்டு நகரச் சதுக்கம்
⚡பக்தபூர் நகர சதுக்கம்
⚡பதான் தர்பார் சதுக்கம்
⚡பசுபதிநாத் கோவில்
⚡சங்கு நாராயணன் கோயில்
⚡பௌத்தநாத்து
⚡ (சுயம்புநாதர் கோயில்)Amideva Buddha Park
மேலும்,
⚡காத்மாண்டு சமவெளி
⚡திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
⚡திரிபுவன் பல்கலைக்கழகம்
⚡சிங்க அரண்மனை
⚡நாராயணன்ஹிட்டி அரண்மனை

⚡என்று பல இடங்களை முதன்மையாக சுற்றுலா வழிகாட்டிகளில் குறிப்பிட்டு இருந்தாலும்,
பாரதத்திலிருந்து செல்லுபவர்கள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து செல்பவர்கள், ஆன்மீகம் சார்ந்த இடங்களையே விரும்பி தரிசித்து வருகிறோம்.

இவற்றுள், இந்த பயணத்தில் சில இடங்களை மட்டும் ஒரு நாளில் தரிசித்து / சுற்றிப் பார்த்து வர வாய்புக்கிடைத்தது.

1. பசுபதிநாதர் ஆலயம்
2. குஹ்யேஸ்வரி கோவில்
3. சங்கு நாராயணன் கோயில்
4. நாராயணன்ஹிட்டி அரண்மனை
5. காத்மாண்டு நகரச் சதுக்கம்
மற்றும்...
(சுயம்புநாதர் கோயில்)Amideva Buddha Park

✨இந்த இடங்களை பற்றி வலைதளங்களில் காணப்படும் முக்கிய சில குறிப்புகளையும், சென்று வந்த அனுபவக் குறிப்புகளையும் இணைத்து பகிர்ந்து கொள்கிறேன்.

1. பசுபதிநாதர் ஆலயம்.

பசுபதிநாத் ஆலயம் :

💫உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்.

🛕இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார்.  

🛕இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

🛕இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. 

🛐தலபுராணம்:
 
🔱நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி, அஃது, கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார். பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். 

🔱பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.

 🔱திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார்.

 🔱காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் ஆடு அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த ஆடு தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த லிங்கச் சிலை கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.

🔱கறையான்களால் அரிக்கப்பட்டு பாழடைந்ததால் நேபாள மன்னர் பூபேந்திர மல்லா என்பவரால் இக்கோவில் முதன்முதலில் பதினேழாம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டது.

 🔱இதில் 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதிகளில் குறிக்கப்பட்டுள்ள வைணவக் கோவிலாகிய ராமர் கோவிலையும், குஹ்யேஸ்வரி கோவிலையும் உள்ளடக்கிய இரண்டு அடுக்குகள் கொண்ட மேலும் எண்ணற்ற கோயில்கள் இந்தக் கோவிலை சுற்றிலும் நிறுவப்பட்டன.

🛕பாக்மதி ஆற்றின் கரையிலிருக்கும்  பசுபதிநாத் கோவில் பகோடா கட்டடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. 

🛕பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு கோவிலானது கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது. 

🛕இக்கோவில் நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது. இவ்வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். கோவிலின் மேல் ஒரு தங்கத்தால் ஆன கலசம் உள்ளது. 

🛕பசுபதிநாத் சிலையானது ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கிறது. பசுபதிநாதரின் கிழக்குப் பகுதியில் 'வாசுகிநாதர்' வீற்றுள்ளார்

🏞️ஆர்ய காட்:
ஆர்ய காட்டில் எரியும் பிணமும் அமர்ந்திருக்கும் உறவினரும்

⛳இக்கோவில் அமைந்துள்ள பாக்மதி ஆற்றங்கரையில் ஆர்ய காட் என்றழைக்கப்படும் சுடுகாடும் உள்ளது.

 🌟இங்கு உயிர் பிரிந்து உடல் எரியூட்டப்படின் நற்கதி கிட்டும் என்பது இந்துக்களிடையே உள்ள ஒரு நம்பிக்கை ஆகும். இந்தியாவில் காசியும் இதே நம்பிக்கையைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

🌼விழாக்கள்

பசுபதிநாத் கோவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் புனிதப் பயணத்திற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 🌟நேபாளத்திலிருந்தும், இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் பசுபதிநாதரை வழிபாடு செய்து வருகின்றனர். 

🌟ஏகாதசி, சங்கராந்தி(தை முதல் நாள்), மகாசிவராத்திரி, தீஜ் அட்சயா, ரட்சா பந்தன், கிரகணம் மற்றும் முழு நிலவு நாள் போன்ற சிறப்பு நாட்களில் மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுவதால் அந்நாட்கள் விழாக்கோலம் காணுகின்றன. மேலும், இக்கோவிலில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா சிவராத்திரி ஆகும்.

 🌟சிவராத்திரி நாளில் இங்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாதுக்களும் (முனிவர்கள்) பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருவதுண்டு. நெய் விளக்குகள் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் இக்கோவில் திறந்தே இருக்கும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் பாக்மதி ஆற்றில் நீராடி, நாள் முழுதும் உண்ணாநோன்பு இருக்கும் புனிதச் சடங்கை மேற்கொள்வர்.

🛐கோவில் பூசாரிகள்

🕉️கடந்த 350 ஆண்டுகளாக அக்கோவிலில் பூசாரிகளாகத் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்திலுள்ள பட்டர்கள் என்ற சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.
பசுபதிநாதரின் பூசாரிகள் 'பட்டர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். கோவிலின் தலைமைப் பூசாரியானவர் 'மூல பட்டர்' என்றும் இராவல் (வட நாட்டு மரபு) என்றும் அழைக்கப்படுகிறார். இவர்களுள் மூல பட்டர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நேபாள மன்னரிடம் கோவில் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவராக இருந்தார்.

🕉️இக்கோவிலின் மூலவரான பசுபதிநாதரை நான்கு வம்சாவளியைச் சேர்ந்த பூசாரிகள் மட்டுமே தொடமுடியும்.

🕉️ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து சமய எழுச்சியைத் தோற்றுவிக்க மூல காரணமாக விளங்கிய ஆதி சங்கரர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோயிலின் நடை முறைகள் கடைபிடிக்கப்பட்டன. இந்நடைமுறைகள் இந்தியா எங்கும் உள்ள, ஆதி சங்கரரால் மேம்படுத்தப்பட்ட மேலும் சில இந்து கோயில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன. பின்னாட்களில் ஆண்ட இந்து சமய 'மல்லா' மன்னர்களும் ஆதிசங்கரரின் இந்தக் கோரிக்கையை விடாது போற்றி வந்தனர்.

🕉️எவ்வாறிருப்பினும் அண்மையில் இந்நடைமுறை மாற்றம் கண்டது. நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி ஏற்பட்ட பின்னர் நேபாள பூசாரிகள் இந்து எதிர்ப்பு மாவோயிச அரசினால் ஆதரிக்கப்பட்டனர்.
ஆனால் நேபாள மக்கள் இதனை தங்கள் மதத்தில் ஏற்பட்ட குறுக்கீடாகக் கருதுகின்றனர்

🌟2009ஆம் ஆண்டு ஏற்பட்ட சச்சரவுகள்

🛐மல்லா சகாப்தத்திலிருந்து தொடர்ந்து தென்னாட்டிலிருந்து வந்த பிராமணப் பூசாரிகள் (பட்டர்கள்) கோவில் நிர்வாகத்தில் நுழைந்தது நேபாளிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. 

🛐சனவரி 2009-இல் மூல பட்டரின் திடீர்ப் பதவி விலகலைத் தொடர்ந்து மாவோயிச ஆதரவு நேபாள அரசு, ஒரு நேபாளியை உடனுக்குடன் மூல பட்டராக பணியமர்த்தியது. இவ்வாறாகக் கோவிலின் நீண்ட கால தேவைகளுக்கு அவ்வரசு வழியேற்படுத்தியது. நேபாளியின் பணியமர்த்தலுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும் ஆனால் பணியமர்த்தல் ஒரு வரைமுறையின்றி இருப்பதாகவும் கூறி கோவிலின் பண்டாரிகளால் எதிர்க்கப்பட்டது. இவ்விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால், பட்டர் பணியமர்த்தல் நேபாள உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.

🛐ஆனாலும் நேபாளத்திற்கு வெளியிலும் உள்ளும் இருக்கின்ற இந்துக்களின் தொடர் எதிர்ப்பினால் அம்முறை கைவிடப்பட்டு பழைய நிலைமையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

🌟இக்கோவில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தெகதி ஏற்பட்ட பூகம்பத்தில் எந்த வித இடிபாடுகளும் இன்றி தப்பித்தது. ஆனால் அங்கிருந்த அதிகமான அதிசய சின்னங்கள் அழிந்தன.

✨பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள்
அனுமதிக்கப்படுகின்றனர். 

🌟இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். 

🌟மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
கைப்பேசிகள் (off mode) மூடப்பட்டு அனுமதிக்கப்படுகிறோம்.

🕊️பயண அனுபவக் குறிப்புகள்

✨இந்த ஆலயம் இந்துக்களால் போற்றப்பட்டு, மிகவும் புன்னிய தலமாக இது விளங்குவதால், இந்த ஆலயவளாகத்தில் பிரார்த்தனை, தர்பனம், திதி முதலியவைகள் செய்து வருகிறார்கள். இதற்கு தகுந்த பண்டாக்கள் - பூசை செய்பவர்கள் ஏற்பாடுகள் வசதிகள் செய்யப்படுகின்றன.

✨ஆலயம் மிகப் பெரிய வளாகமாக உள்ளது.
பல இடங்களில் மண்டபத்துடன் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூசைகளுடன் வணங்கப்பட்டு வருகிறது. 

✨மூலவர் உள்ள ஆலயம் முன்வாசல் பெரிய அழகிய உயரமான  அமைப்பில் நிலைப்படி உள்ளது.

✨மூலவர் உள்ள கருவரை உள்ள பகுதி
சற்று உயரமானது. மூலவர் 6 அடி உயரம் உள்ளவர்.  நான்கு புறமும் பூசை நேரங்களில் தரிசிக்கக்க கூடியது.

✨ஆனாலும், மேற்கு வாசலே முதன்மையாக பூசிக்கப்படுகிறது.

✨மூலவர் கருவரை மண்டபம் முன்புறம் நல்ல உயர அமைப்பில் பெரிய நந்தி சுவாமியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

🌟அருகில் உயரமான சூலம் ஒன்றும் உள்ளது.
கருவரையில், பசுபதிநாதர் சிவலிங்கம்
உயரம், பருமன் அதிகம் உள்ள சிவலிங்க அமைப்பில், 5 முகம் கொண்டது.

✨நான்கு புறமும் முகமும், ஒரு முகம் மேல் பகுதியிலும் உள்ளது.
(நிர்மான்ய தரிசனத்தில் காணலாம். இறையருளால் எமக்கு நல்ல தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது)

✨மூலவர் கருவரை சுற்றி வரும் போது, கீழ் புறத்தில் 'வாசுகி நாதர் -- ', சிறிய மண்டபத்துடன் சில சன்னதிகள் உள்ளன. மேலும்,  தெற்கு பகுதியில் 'கால பைரவர் ' மிகப்பெரிய உருவத்தில் தனி கருவரையில் உள்ளார்.

✨இதற்கு அடுத்து, சற்று இணைப்பாக வெட்ட வெளி மண்டபத்தில் 1008  சிறிய சிவலிங்கங்கள் உள்ளது. இவற்றை ஸ்வஸ்திக் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் சென்று தரிசனம் செய்யலாம். நடுவில் ஒரு சிறிய மண்டபத்தில் சற்றுப் பெரியலிங்கம் அமைந்துள்ளது.

✨தென்பகுதியில், மூலவரை நோக்கிய வணங்கிய வடியில், இவ்வாலயத்தின் நிர்மான்யம் செய்த நேப்பாள மன்னார்கள் உருவம் அமைத்து உள்ளார்கள்.

🌟இவற்றையும் உடன் வணங்கி மூலவர் ஆலயம் வெளியில் வர வேண்டும்.

✨மூலவர் கருவரையை சுற்றி வந்து வணங்க பெரிய வரிசைகள் உள்ளன.

✨சில நேரங்களில் மிக மிகஅதிக கூட்டம் இருந்தாலும், சில நேரங்களில் சுமாரான அளவில் உள்ளது.
குறிப்பாக, மாலை ஆர்த்தி நேரத்தில் மூலவரிடம் அதிக கூட்டம் இருக்காது. குறையும் வாய்ப்புகள் உண்டு.

✨வளாகத்தில் பல்வேறு நிர்வாகக் கட்டடங்கள் தனித்தனியாக உள்ளன.

⚡காலனிகள் வைக்க தனி இடவசதி உள்ளது. மாலை 7 மணிவரை இந்த வசதி பெறலாம்.

✨பாக்மதி என்ற நதி ஆலயத்தின் பின் பகுதியில் உள்ளது. இருபுறமும் அழகிய கல் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு மிகக் குறுகிய அளவில் உள்ளது.
படித்துறையில் ஆற்றின் எதிர்புறம் தினமும மாலை நேரத்தில் 6 மணிக்கு ஆர்த்தி நடைபெறுகிறது. ஏராளமான கூட்டம் வருகிறது.

✨ஆலயத்தின்  தென்புறத்தில் பாக்மதி ஆற்றின் கரையில் உள்ள ஆர்ய காட் என்ற இடத்தில், இறந்து போன உடல்களை வைத்து, பூசை செய்து அடக்கம் / எரியூட்டுதல் நடைபெறுகிறது.

ஆலயம் கிழக்குப் பகுதியும், வடக்குப் பகுதியும் குன்று போன்று இயற்கை அமைப்புடன் உள்ளது.

✨பசுபதீஸ்வரர் ஆலயம் பின்புறம் செல்லும் வழியில் சென்று, பாக்மதி ஆற்றின் பாலத்தின் வழியாக சென்று, சுமார் 1 கி.மீ. தூரத்தில் சென்றால், பிரபலமான குஹயேஸ்வரி ஆலயம் சென்றுவிடலாம்.

🌟நாங்கள் சென்ற முறை பசுபதிநாதரை வணங்கிப்பின், ஆலயம்பின் புறமாக சென்று அம்பாள் ஆலயம் அடைந்து வணங்கி பின் பசுபதிநாதர் ஆலயம் வந்தோம்.

✨25.04.2024 காலையில் ஆலயம் சென்று பசுபதீநாதரை வணங்கி விட்டு, காலை உணவு முடித்துக் கொண்டு, நேப்பாள் காட்மண்டு அருகில் உள்ள ஆலயங்கள் சிலவற்றை தனி வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்று தரிசித்து விட்டு மதியம் Hotel வந்தோம்.

25.04.24 மீள் தரிசனம்

#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - || Nepal Yatra 20.04.2024 - 4.5.2024

#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 -

#Mugling
11

Mugling . A junction point for katmt, sonali,Pokhra.
While proceeding to go Nepal Yatra,this place is very important
Trisuli and Narayan rivers sangam point.
24.04.24,28.04.24 on the way to second time muktinath Yatra.

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்



முக்திநாத்திருப்பயணம் - 7 Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#ஸ்ரீராமஜென்மபூமி 
#பாலராமர் ஆலயம் :
#அயோத்தி
22.04.2024
7
நேப்பால் தல யாத்திரையில் அயோத்தி சென்று மீண்டும் பாலராமர் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

#பயணஅனுபவக்குறிப்புகள்

2024 மார்ச் மாதம் சென்று வந்த பிறகு உள்ள பதிவு - மீள்.

🛐அயோத்தி மாநகர் ஶ்ரீராமஜென்மபூமி ஆலயம் பல வருடங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து இருந்தோம்.

🛐இறைவன் ஆலய தரிசனங்களில் வித்தியாசமான அனுபவம்.
சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு  கடுமையான இரும்புக் கூண்டு வரிசையில் சென்று இரும்பு கூண்டுக்குள் இருந்தவாறு இந்த ஆலயம் வழிபாடு செய்தோம்.

🛐பாரத மன்னிற்கு பெருமை தரும் ஸ்ரீராமர் ஆலயத்தை இரும்புக் கூண்டில் இருந்தவாறு மனம் திருப்தி இல்லாமல் தரிசனம் செய்தோம் .

🕉️நம் பூமி நமது இறைவனை தரிசிக்க கடும் போராட்டம் அன்று இருந்தது.

🛐தற்போது, பல்வேறு கடும் முயற்சிகளுக்குப் பிறகு, பாரத மக்களுக்கு, தங்கள் சனாதன தருமத்தின் பெருமை போற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

🛐பலவித கடும் முயற்சிகளுக்குப் பிறகு 2019ம் ஆண்டு நவம்பர் மாதம்  இந்த பூமியை நாட்டின் தலைவரான ஸ்ரீ ராமரின் ஜன்ம பூமியாக ஏற்கப்பட்டு, பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்படத் துவங்கியது.

🛐நமது இறைவனின் ஆலயம் புனரமைப்பு செய்து வழிபடும் காலம் மீண்டும் வந்துள்ளது.

🛐2024 பிப்ரவரி 22 அன்று பாரத மன்னிற்கு பெருமை தரும் நாள்.
நமது பாரத புன்னிய பூமியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் பாரத பிரதமர் ஶ்ரீமான்  நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில், ஏராளமான புன்னிய புருஷர்களின் பெரு முயற்சியால், மீண்டும் ஸ்ரீராமர் ஆலயம் புனருத்தாரனம் செய்து, ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீராமஜென்மபூமி - அயோத்தி - பாலராமர் ஆலயம் :

🙏இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி, உலக இந்து மக்களின் எழுச்சி நாளாகவும், மகிழ்ச்சி நாளாகவும் அமைந்தது.

🛕பலவேறு விஷயங்கள் கடந்து, புதிய ஆலயம் புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

🛕தற்போது உள்ள ஆலய அமைப்பு :

🛕ஆலயம் பாரம்பர்யமிக்க அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

🛕ஆலய நீளம் (கிழக்கு மேற்காக) 390 அடி, அகலம் 250 அடி, உயரம் 161 அடி .

🛕3 தளங்கள் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உள்ளது. மொத்தம் 392 துண்கள், 44 வாசல்கள்

🛕தற்போது, தரை தள கர்ப்பக்ரஹத்தில் பிரபு ஸ்ரீராம பிரானின் குழந்தை வடிவம் உள்ளது. இவரை  பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு, தரிசித்து வணங்கி வருகிறோம்.

🛕முதல் தளத்தில் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக மண்டபம் கட்டி பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

🛕மொத்தம் 5 மண்டபங்கள்,
நாட்டிய மண்டபம், ரங்கமண்டபம், தரிசன மண்டபம், ப்ராத்தனா மண்டபம், கீர்த்தனா மண்டம்.

 🛕தூண்களில் இறைவன் உருவங்கள், மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலைகள். 

🛕நுழைவு வாயில் முன்பு 32 படிகள் உயரம் 16.5 அடி இதன்மேல் ஏறி பிரதான நுழைவு வாயிலை அடையலாம்.

🛕மாற்றுதிறனாளிகள், மற்றும் முதியோருக்கு ரேம்ப் மற்றும் லிப்ட் வசதிகளும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

🛕4 பக்கங்களிலும், கோட்டைச் சுவர்கள் 732 மீ நீளம், 4.25 மீ அகலம்.
கோட்டையின் 4 மூலைகளில், முறையே சூரியன், சிவன், கணபதி, தேவி பகவதி ஆகியோருக்கான ஆலங்கள் கோட்டையின் தெற்கு முகமாக ஹனுமானும், வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்கள். கட்டப்பட்டு வருகின்றன.

🛕ஆலயத்தின் தென் பகுதியில் உள்ள சீதை கிணறு புரைமைத்து கட்டிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

🛕கோட்டையின் வெளியே, தென்திசையில் வால்மீகி, வசிஷ்ட்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி, அகத்திய மகரிஷி, குகன், சபரிமாதா, மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்கள்.

🛕தென்மேற்கில் குபேரன் குடிலில் சிவாலய புனர்பிரதிஷ்டை, மற்றும் ராமபக்த ஜடாயுவின் பிரதிஷ்டைகள் உள்ளன.

ஆலய வளாகம் (முன்பகுதி)

🛕ஸ்ரீராம ஜென்ம பூமி வளாகம் பாதை முழுதும்  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டு  சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு கடைகள், புராதான கட்டிடங்கள், ஆலயங்கள் இவற்றை சீரமைத்துள்ளனர். மேலும் மேலும் அழகு படுத்தும் சீர் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

🛕ஸ்ரீராமஜென்மபூமி ஆலயம் செல்லும் பக்தர்கள் கூட்டம், பெரிய கூட்டம்.

🛕லால் செளக் சென்று, அருகில் உள்ள சராயு நதிக்கரையில் உள்ள, 
வழியிலும், அயோத்தி ரயில் நிலையத்திலிருது நேரடியாகவும் ஜென்மபூமி வரலாம். 

🛕சாலைகளில் ஆலயம் தரிசிக்க நடந்து செல்லும் வழிதனியாகவும், தரிசித்து வெளியேறும் வழி தனியாகவும் கட்டுப்பாட்டுடனும், கண்காணிப்புடனும் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

 🛕ஆலயம் அருகில் சென்றதும்.
நாம் எடுத்துச் செல்லும் சிறு பைகள், தவிர, பெரிய பொருட்கள் வைப்பதற்கு தனி Cloak Room உள்ளது.  (இருந்தாலும் நாங்கள் எந்த பெரிய பையையும் எடுத்துச் செல்லவில்லை)

🛕முதல்  நுழைவாயில் நுழையும் போது நம்மையும், நமது கைப்பை முதலியவற்றை  சோதனை இடுகிறார்கள் அதன் பின் உள்ளே செல்ல வேண்டும்.

🛕முதல் பகுதியில் தற்காலிக ஏற்பாடாக, நமது காலணிகள் வைப்பதற்கு தனி தனி ஸ்டால்கள் சுமார் ஒரு 20 எண்ணிக்கையில் உள்ளது. 

 🛕செல்போன் வைப்பதற்கு சுமார் 20 தனி கவுண்டர்கள் மிக நேர்த்தியாக வரிசைப்படி  வைத்து உள்ளார்கள் எல்லாம் இலவசம்.

 🛕நாம் நம்முடைய காலனிகளை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் எந்த கவுண்டர் No. மற்றும், ஏ,பி என்ற பிரிவு  உள்ளது.  அந்த நம்பர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
 வழங்கப்படும் இந்த டோக்கனிலும் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 🛕அதேபோல செல்போன் வைப்பதற்கு 20 கவுண்டர்கள் இருக்கின்றன.

 🛕அவற்றிற்கும் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன அந்த கவுண்டர் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும் நமது செல்போனை வாங்கி அதை அவர்கள் உள்ளே சென்று வாக்கரில் வைத்து பூட்டிவிட்டு நம்மிடம் சாவியை கொடுத்து விடுகிறார்கள். அந்த சாவியில் Locker நம்பர் உடன் எந்த கவுண்டர் என்பதற்கான அட்டையும் இருக்கும் பத்திரமாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். 

🛕முக்கிய குறிப்பு : செல்போன் கொண்டு போய் நீங்கள் வைத்தீர்கள் என்றால் டெலிவரி எடுக்கும் பொழுது
cell phone Passward போட்டுத் திறக்க கூறுகிறார்கள். வேறு /மாற்று நபர் மூலம் எடுத்துச் செல்வதை தடுக்க இந்த ஏற்பாடு. எனவே, cell phone யார் Tocken போடுகிறார்களோ, அவர்களே சென்று வாங்குது நல்லது.

ஆலய பகுதி :

🛕சமதளத்திலிருந்து, 10 படிகள் உயரம் ஏறிய பிறகு மேலும் 10 படிகள் உயரம் ஏறி அதற்குப் பிறகு மேலும் ஒரு ஐந்து படி உள்ளது.

🛕முதலில் ஒரு முன் மண்டபம் அடுத்தது நடுமண்டபம் அடுத்து உள் மண்டபம்  அடுத்தடுத்து உள்ளது. 

 🛕கலை அம்சத்துடனும் இந்த மண்டபங்கள் எழிலாக உள்ளன. நாம் பார்த்துக்  வியந்து கொண்டே செல்லலாம். கருவரையில் உள்ள பாலராமர் நமக்கு முதல் மண்டபத்தில் இருந்து நமக்கு காட்சி தருகிறார்.

🛕வரிசை உள் நுழையும் வழியில் செல்லும் பொழுது நான்கு வரிசை பிரிவு இருக்கும். அதில் நடுவில் உள்ள இரண்டு வரிசைகளில் ஏதேனும் ஒன்றில் செல்வது மிகவும் நல்லது; அதில் அதிக கூட்டம் இருக்கும்; மேலும்,  மிக மெதுவாக நகரும். ஏனென்றால்; இந்த நடு வரிசைகளில் செல்பவர்களுக்கு கருவறையில் உள்ள பாலராமர் சிலை நன்றாகத் தெரியும்.
கடைசியில் உள்ள இரண்டு  பக்கமும் உள்ள வரிசை பாதையில் சென்றால் கூட்டம்  விரைவாக செல்லலாம். கருவரை உள் மண்டபம் சென்ற பிறகே பெருமாள் தெரிவார். 

🛕 வரிசைகளின் இடையில் இரும்புக் குழாய் பதித்து பிரித்து விட்டு இருப்பார்கள்.  

🛕ராமர் சிலை மிக அற்புதமாக அழகாக பக்தி பரவசத்துடன் இருக்கிறது.  நாம் தரிசித்து கொண்டே செல்லலாம்.  கருவறை முன் மண்டபங்கள் வரை நம்மை அனுமதிக்கின்றார்கள்.
கூட்டம் எவ்வளவு இருந்தாலும் மெதுவாக சென்று கொண்டே இருப்பதால் நாம் விரைவாகவும், மிக நன்றாகவும் தரிசனம் செய்து விடலாம்.

🛕தரிசனம் செய்துவிட்டு அந்த கருவறை மண்டபம் முன் உள்ள மண்டபத்தில் உள்ள அலங்கார வளைவுகளை வேலைப்பாடுகள் நுணுக்கங்களை ரசித்துக் கொண்டே ராமர் பகவானையும் வேண்டிக் கொண்டே நாம் உள்ளே சென்று தரிசித்து மண்டபத்திற்கு வெளியில் வரவேண்டும். மெதுவாக படி இறங்கி கீழ்ப்பகுதிக்கு வந்து விடலாம்.

🛕ராமர் ஆலயம் உள்ளே சென்று தரிசித்து வெளியில் வர சுமார் 30 - 40 நிமிடங்களில் ஆகிறது. அவ்வளவு கூட்டமும் வேகமாகவே நகர்ந்து செல்கிறது. தரிசித்த பின் வெளியில் வந்து கொண்டேயிருக்க வேண்டும்,

🛕வளாகத்தின் பல பகுதிகள் ஆலயக் கட்டிடப்பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

🛕வெளியில் வரும் பொழுது நமக்கு ஒரு வெயிட்டிங் ஹால் இருக்கிறது அங்கே காத்திருந்து நம் உடன் வந்தவர்களை இணைத்துக் கொள்ளலாம். அங்கு தூய்மையான கழிப்பறை வசதிகள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கு தகுந்தார் போல் உட்காருவதற்கு நாற்காலிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 🛕அங்கேயே அந்த பகுதியிலேயே நாம் செல்போன் திரும்ப பெற்றுவிடலாம் நாம் எந்த கவுண்டரில் கொடுத்தோமோ அந்த கவுண்டர் உடைய இன்னொரு பகுதி இந்த பகுதியில் வரும் எனவே அந்த பகுதிக்கு உரிய கவுண்டரில் கொண்டு சென்று நமது டோக்கனை கொடுத்தால் சாவியை கொடுத்தால் அவர்கள் செல்போனை எடுத்துக் கொண்டு நம்மிடம் தந்துவிடு திருப்பித் தந்து விடுவார்கள்.  இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

 🛕இந்தக் கட்டிடத்தில் ஒரு மெடிக்கல் சென்டர்  வைத்திருக்கிறார்கள். இலவச தூய்மையான கழிப்பறை வசதிகள் இங்கு உண்டு. 

🛕இந்த கட்டடத்தை விட்டு வெளியில் வந்து நமது காலணிகளையும் எடுத்துக் கொள்ளலாம்;  அதற்கும் சற்று வெளியில் நடந்து, வெளியில் வந்தால் கிளாக் ரூம் வந்துவிடும் அங்கு வைத்திருக்கும் நமது பெரிய பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறும் வழியில் நாம் சுமார் ஒரு 50 மீட்டர் தூரம் வெளியில் நடந்து வரவேண்டும்.

🛕வெளியில் வரும் வழியில்  தமிழக கோயில் போல் கட்டப்பட்டுள்ள ஒரு வெங்கடாஜலபதி  சீனிவாச ஆலயம் ஒன்றும் உள்ளது.

 🛕அது சற்று உயரமான மாடி படிக்கட்டுகள் கொண்டதாக  இருப்பதால் முடிந்தவர்கள் சென்று தரிசனம் செய்து திரும்பலாம்.

 🛕தனியார் ஆலயமாக இருப்பது திறந்திருக்கும் நேரம் விசாரித்து அல்லது திறந்திருக்கும் பொழுது தரிசிக்கலாம்.

🛕வெளியில் உள்ள பிரதான சாலையில் எப்பொழுதும் அதிக கூட்டமாக உள்ளது.

🛕ஜென்ம பூமி ஆலயம் வெளி சாலையில் இருந்து நேரடியாக  ரயில்வே நிலையம் செல்வதற்கு ஒரு பிரதான வழி இருக்கிறது.

🛕மேலும் நாம் கிழக்கு புறம் சென்றால் அகலப்படுத்தப்பட்ட சாலையில் லால் செளக் என்ற இடத்தை அடையலாம் வழியில் ஹனுமன் ஆலயம் உள்ளது.  நடந்து மட்டுமே செல்ல முடியும். 

🛕 இந்த பகுதியில் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் எந்த பெரிய வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை காவல்துறை கண்காணிப்பு அதிகம் உண்டு. 

🛕இரண்டு புறங்களும் ஏராளமான கடைகள் உள்ளன.   ஒரு சில இடங்களில் அன்னதானம் எல்லா வேளைகளிலும் நடைபெற்று வருகிறது. 

🛕தனியார் அமைப்பு மூலமாக நாம் வரும் வழியில் உள்ள பல்வேறு சிறிய பெரிய  மிக புராதனமான கட்டிடங்கள் / ஆலயங்கள்  இப்பொழுது புனரமைக்கப்பட்டு வருகின்றன. அவைகள் இன்னும் சில ஆண்டுகளில் அந்த புராதானமான கட்டிடங்கள் கோயில்கள் ஆலயங்களும் பிரபலமாகி வழிபட செல்வார்கள் என்று தோன்றுகிறது.

22.04.2024 - மீள் தரிசனம்

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் 3-#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -

#அயோத்தி
#சரயுநதி
3.
23.04.2024

LAL CHOWK 

💫அயோத்தி மாநகரின் தற்போதைய மிக முக்கிய இடம்.
பாரதத்தின் புகழ்பெற்ற திருமதி லதா மங்கேஷ்வரி அவர்கள் நினைவின் பெயரில் இந்த இடம் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

💫அனைவரின் முக்கிய கவனத்தைக் வரும் வகையில் ஒரு பெரிய வீணை சிலை வைக்கப்பட்டுள்ளது.

💫இந்த இடம்  நகரின் முக்கிய பகுதியாக இருப்பதால் வரும் வழி மிகவும் அகலப்படுத்தி இருபுறமும் இராமாயண கதை நிகழ்வுகளை 3D வடிவத்தில் காட்டி, . சிலைகளாக அமைத்து வருகின்றனர்.
இராமர் சூரியவம்சத்தை சார்ந்தவர் என்பதால், சூரியனின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 

💫மேலும், பிரதான சாலை நெடுகிலும், 9 அடி உயரமுள்ள சூரிய வடிவ
புதிய மின்னொளி விளக்குகள் உள்ள  20க்கு மேற்பட்ட விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

💫சாலையின்  சுமார் 2 கி.மீ.க்கு, நடைபாதைகள் அமைத்தும், அழகுபடுத்தியும், வருகிறார்கள்.
இந்த இடத்திற்கு அப்பால் எந்த பெரிய வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

💫எனவே மக்கள் இங்கிருந்து நடந்து அல்லது ரிக்க்ஷாவில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
இந்த இடத்திலிருந்து 1.8. கி.மீ. தூரத்தில் ராமர் கோயில் உள்ளது 1.5 கிலோமீட்டர் தூரத்தில் ஹனுமான் ஆலயம் உள்ளது.

💫நாம் இங்கிருந்து ஷேர் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் இந்த இடங்களுக்கு  சென்று வரலாம்.

சரயு நதி

💦சரயு நதி மிகவும் புண்ணியம் பெற்றது, இராமர், மற்றும் அவருடன் இணைந்து நதியில் இறங்கி சொர்க்கம் சென்றதாக புராணம்.

💦லால் சவுக் என்ற  இடத்திற்கு மிக அருகாமையில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் சரயு நதிக்கரை (நயாகாட், சூரியா காட்)  உள்ளது. பெரும்பாலோர் அங்கு சென்று நீராடி பின் ஆலயம் தரிசனம் மேற்கொள்கிறார்கள்.

 💦இந்த பகுதியில் உள்ள ஆலயங்கள், விஷேச படித்துறைகள், லெட்சுமணன் ஆலயம் முதலிய பல புரான கட்டிடங்கள்  உள்ளன;
 அதையும் தரிசித்துக் கொண்டு பிறகு அனுமன் மந்திர் மற்றும் ராமர் கோயில் சென்று வருகிறார்கள்.

💦மேலும் சரயு நதியில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஆர்த்தி நடைபெறும் அற்புதக் காட்சி பார்ப்பதற்காக மக்கள் மாலையில் இங்கு அதிகம் கூடுகிறார்கள்.

💦ஆர்த்தி நடைபெறும் இடங்கள், மற்றும் சரயு நதிக்கரை படிகள் முழுவதும் மிகவும் புதிய வடிவில் மாற்றி பல்வேறு விதங்களில் வசதிகள் செய்து வைத்துள்ளார்கள்.

💦சரயு நதியில் நீராடுதல், மற்றும் போட்டிங் வசதிகள், மற்றும் பூசைகள் செய்யவும் மிக அதிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...