தஞ்சை புன்னைநல்லூர் மகாமரியம்மன் ஆலயம்.
⛳ இருப்பிடம்
தஞ்சை - நாகை பிரதான சாலையில் உள்ள புகழ் பெற்ற ஊர்.
🏵️ஆலய சிறப்பு.
புன்னை வனம் என்ற புன்னை நல்லூர் என்னும் கிராமத்தில் முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் புராதான புகழ் பெற்ற அம்மன் கோவில் வரிசைகளில் முதன்மையானது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
📚ஆலய வரலாறு.
சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் வழிபட்ட மராட்டிய மன்னர்கள் நேரடியாக அருள் . பெற்றளால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது.
தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது.
சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.
சிறப்பு திருவிழாக்கள்:
ஆடி முத்துப்பல்லக்கு, ஆவணி தேர், புரட்டாசி தெப்பம் திருவிழாக்கள் சிறப்பானவை.
தல விருட்சம் : வேம்பு, புன்னை மரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
உற்சவர் முத்து மாரியம்மன்
🛕ஆலய அமைப்பு
பிரதான சாலைக்கு வடபுறம் சிவன் கோவில் அடுத்து ஒரு பெரிய குளம். அதை அடுத்து
கிழக்கு நோக்கிய ஆலயம்.
5 நிலை ராஜகோபுரம் மற்றும் நீண்ட மண்டபம், நிலை கோபுரம்
ஆலயம் உள்பகுதியில் ஒரு சிறிய குளம்
அதையடுத்து நீண்ட உள் மண்டபமும், கிழக்கு நோக்கிய கருவரையும் உடையது.
முத்துமாரியம்மன் அழகு தரும் கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அருள் தருகிறார்.
கருவரை முன் பகுதியில்,
மூலவர், முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி, தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு.
அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் தனி சன்னதியாக பிரகாரத்தில் உள்ளது. கோயிலின் கருவரை பிரகாரம் தவிர மேலும் 2 பிரகாரங்கள் உள்ளன. வெளிப் பிரகாரமேற்கு பகுதியில் தல மரங்களும் உள்ளன.
வழிபாடு
சோழ தேசமக்களுக்கு மட்டுமல்லாது பொதுவான குல தெய்வக் கோவிலாக இன்றும் இருந்து வருகிறது.
வேண்டுபவர்களுக்கு அருளும் நோய்தீர்க்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெய்வம்.
எந்த காரியத்தையும் செய்யும் போது அம்மனை எண்ணி செயல்படும் பழக்கம் தொன்று தொட்டு உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தவர். எளிமையான வேண்டுதல்கள் ஏராளமான பக்தர்கள்.
வழிபாட்டு முறைகள்
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது.
⭐குடமுழுக்கு
பொ.ஊ. 1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது.
பொ.ஊ. 1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் குடமுழுக்கு நடைபெற்றது. இறுதியாக 27.06.2004இல் குடமுழக்கு நடத்தப்பட்டது . அதனை தொடர்ந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து 10-02-2025 அன்று குடமுழக்கு நடைபெற்றது.
விழாக்கள்
ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.
ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.
ஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.
புரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026
தஞ்சை நாகையின் பிரதான சாலையின் வடபுறம் ஆலயம். வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வு அறைகள், கடைகள் உள்ளன. வருடம் முழுதும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், விழாநேரங்களில் அதிகரிக்கும்.
தற்போது ஆலய பிரகாரங்கள், புறப் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு, பக்தர்களுக்கான வசதிகளும் செயல்பட்டு வருகின்றன.
காலையிலிருந்து இரவு வரை ( 6-8 )நடை சாத்தப்படாமல் தரிசிக்கும் வகையில் அமைந்த திருக்கோவில்களில் ஒன்று.
வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
#Subbram🔱சுப்ராம்🇮🇳 8.3.2026
No comments:
Post a Comment