தஞ்சை -அம்மாப்பேட்டை அருகில்.
அம்மாப்பேட்டை -
கீழக்கோவில்பத்து
ஸ்ரீ பூலோகநாதர் - ஸ்ரீ பூலோகநாயகி ஆலயம். - பூமி தலம்
பயண அனுபவக் குறிப்புகள்
சுப்ராம்.அருணாசலம்
8.3.2026
💫தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நகர் மற்றும் சுற்றிலும் சில புராதான தலங்களை பஞ்ச பூத தலங்களாக எண்ணி வணங்குகிறார்கள்.
💫முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த வந்த சிவனடியர் ஒருவர், சிவனடியார்கள் ஒரே நாளில் சமுத்திர நீராடி, பஞ்ச பூத ஸ்தலங்களை கண்டு சிவனை மனமுருகி வணங்கினால், வேண்டிய அருள் பெறலாம். எண்ணியது திண்ணம் பெறலாம். என்பதை உணர்ந்தார். இருந்தாலும், எவ்வாறு ஒரே நாளில் பஞ்ச பூத தலங்கள் சென்று வணங்குவது என்று எண்ணி மயங்கியபோது அடியார் முன் முனிவர் ஒருவர் வந்து வழிகாட்ட, அவ்வாரே சடையான் மேடு என்ற இடம் துவங்கி தஞ்சையின் மாரியம்மன் கோவில் வரை பெரிய ஏரி வெட்டி, அருகிலேயே பஞ்ச பூத தலங்களை அமைத்தார்.
பஞ்சபூத தலங்கள்:
1. கீழக்கோவில் பத்து (அம்மாப்பேட்டை) - பூலோக நாதரை பூமித் தலமாகவும்,
2. அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரரை நெருப்புத் தலமாகவும்,
3. காலஸ்தீஸ்வரன்பட்டி (சாலியமங்கலம்) காலஹஸ்த்திஸ்வரரை வாயு தலமாகவும்
4. நெல்லித்தோப்பு, பிரம்ம ஞானபுரீஸ்வரர் -வான் தலமாகவும்,
5. உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் ஆலயம், - நீர் தலமாகவும் அமைத்து வழிபடத் தெடங்கினார்.
💫இந்த செய்தி சாலியமங்கலம் காலஹஸ்தீஸ்வர் ஆலயத்திலும், வேறு சில ஆலய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும்கூட இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
💫நாங்கள் 8.03. 2026 ஞாயிறு அன்று இவ்வாலயங்களை மையமாக வைத்து, அம்மாப்பேட்டை அருகில் உள்ள மற்ற சில புராதான தலங்களையும் சேர்த்து தரிசிக்கும் வாய்ப்பு பெற்றோம்.
💫💻 இந்த ஆலங்களை தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் சில வலைதள செய்திகளுடன், எமது பயண அனுபவக் குறிப்புகளுடன் தந்துள்ளேன்.
அம்மாப்பேட்டை -
கீழக்கோவில்பத்து
ஸ்ரீ பூலோகநாதர் - ஸ்ரீ பூலோகநாயகி ஆலயம். - பூமி தலம்
⛳ இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், அம்மாபேட்டை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கீழ்க்கோவில்பத்து என்ற பகுதியில் உள்ள பழமையான ஆலயம்.
இறைவன்/இறைவி: பூலோகநாதர் / பூலோக நாயகி.
⭐ஆலய சிறப்பு - பஞ்சபூத தலங்களில் பூமித்தலம்.
ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயம், சொந்த வீடு/நிலம் அமையவும், வாஸ்து தோஷங்கள் நீங்கவும் வழிபடப்படும் சிறப்புமிக்க சிவாலயமாக இத்தலம் போற்றப்படுகிறது.
மேற்கு நோக்கிய ஆலயம்.
ஆயிரம் ஆண்டு பழமையும், புராதனமும் உள்ள ஆலயம். வாஸ்து பரிகார ஆலயம்.
🛕ஆலய அமைப்பு
3 நிலை ராஜகோபுரம் மேற்கில் உள்ளது. உள் நுழைந்தவுடன், ஒரு நந்தி சிறிய மண்டபத்துடன் உள்ளது.
சுவாமி அம்பாள் ஆலய பொது மண்டபம் முகப்பில் கைலாயக்காட்சியுடன் சிவகுடும்பமாக காட்சி தருகிறார்கள்.
சுவாமி மேற்கு நோக்கிய கருவரை, அர்த்த மண்டபம், நிருத்தமண்டபம், சுவாமி உள் மண்டபத்தில் சிறிய நந்தியும் உள்ளது.
அம்பாள் தெற்குநோக்கி உள்ளார்கள்.
அம்பாள் கருவரை உள்ள வெளி மண்டபத்தில் விசாலாட்சி, விஸ்வநாதர், சனிஸ்வரர் ஒரு சன்னதியிலும், பைரவர் மற்றும் சூரியன் ஒரு சன்னதியிலும், அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரத்தில் கன்னி மூலையில் வன்னி விநாயகர் உள்ளார். வட மேற்கு மூலையில் மகாலெட்சுமியும், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்கள்.
வடக்கில் தனி துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
தெற்கில் தட்சினாமூர்த்தி,
அம்பாள் சன்னதி தெற்கு புறவாசல் வழியாக ஆலயம் உள்நுழைவு.
தெற்கு பக்கம் பிரதான சாலையிலிருந்து ஆலயம் செல்லும் வழியில் அம்பாள் சன்னதி நோக்கி ஒரு சிறிய ராஜகோபுரம் ஒன்றும் உள்ளது. பிரதான சாலையில் இருந்து ஆலயம் வரலாம்.
ஆலயம் அடுத்து, தென்திசையில் பெரியகுளம் ஒன்றும் உள்ளது.
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
ஆலயம் வரை சாலை வசதி உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ளது. பூசை காலங்களில், சென்று தரிசிக்கலாம். மற்ற நேரங்களில், முன் தகவல் கொடுத்து தரிசிக்கலாம். ஆலயம் அருகில்
வேறு எந்த கடைகளும் இல்லை. வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
கும்பாபிஷேகம் 2025ல் நடைபெற்றவுடன், உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கடும் முயற்சியால், ஆலயம் புணரமைப்பு செய்யப்பட்டு, புதியராஜகோபுரம் ஏற்படுத்தப்பட்டு, முழுவதுமாக ஆலயம் சீரமைக்கப்பட்டு திருப்பனி வேலைகள் முடிந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு
14.09.2025ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தற்போது பராமரிப்பில், பூசையில் உள்ளது.
18.02.2023 மகாசிவராத்திரியில் தரிசனம்
8.03.2026 ல் மீள்தரிசனம்.
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#பஞ்சபூததலங்கள்அம்மாப்பேட்டை8.3.26
பஞ்சபூத தலங்கள் தஞ்சை -அம்மாப்பேட்டை
No comments:
Post a Comment