Showing posts with label முசிறி அருகில். Show all posts
Showing posts with label முசிறி அருகில். Show all posts

Monday, March 30, 2026

திருத்தியமலை - ஏகபுஷ்பபிரியநாதர்💥திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தியமலையில் அமைந்துள்ள அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்.

திருத்தியமலை - ஏகபுஷ்பபிரியநாதர்

💥திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தியமலையில் அமைந்துள்ள அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்.

⛳அமைவிடம்
1திருச்சியிலிருந்து சுமார் 35 கி.மீ.தொலைவிலுள்ளது. திருச்சி மத்திய மற்றும் சத்திரம்* பேருந்து நிலையத்தில் இருந்து, நெ.1. டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, மூவானூர், வேங்கைமண்டலம் வழியாக திருத்தியமலைக்கு செல்லலாம்.
2.முசிறியில் இருந்து தண்டலைப்புத்தூர் வழியாகவும் செல்லலாம்.

தல சிறப்புகள்
❄️மனித பிழைகளை திருத்தும் திருத்தியமலை.

❄️ஒருகாலகட்டத்தில் பரந்துவிரிந்து விஸ்தாரமான நிலப்பரப்புடன் மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருந்த ஊர் திருத்தியமலை. 

❄️இத்திருக்கோயிலுக்கு திருதேசமலை, திருத்தேஜோமலை என்று வேறு பெயர்களும் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 

❄️தேவ அர்க்கவல்லி புஷ்பத்தை சிவபெருமான் சூடிக் கொண்டது, பிருகு, அகத்தியர் உள்ளிட்ட எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்டது, சூரியன் தனித்து வழிபட்டது, முருகப்பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிப்பது, தட்சிணாமூர்த்தியின் பாத தரிசனம்,
பிரம்மஹத்தி, சத்ருதோஷம் போக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. 
 பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்துவைத்தல், நட்சத்திர தோஷ நிவர்த்தி போன்ற பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

தல வரலாற்றுச் சிறப்புகள்

☘️ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்திலுள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் 'தேவ அர்க்கவல்லி' என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று கூறினார்.

☘️இதனால் அனைத்து முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைக் காண வேண்டி கேட்டுக் கொண்டனர். அவ்வாறே பிருகு மகரிஷியும் தேவ அர்க்கவல்லி மலரைக் காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்தார். 

☘️இவ்வாறாக சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்தபோது, அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த முனிவருக்கு வழிகாட்டி, இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழைமட்டை மறைந்தது.

☘️அந்த நேரத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்திய முனிவரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். மீண்டும் பிருகு மகிரிஷி சிவலோகத்துக்குச் சென்று, தாம் அம்மலரைக் காண வேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.

☘️சிறிது காலத்துக்குப் பிறகு பிருகு முனிவர், மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அப்போது அங்கிருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில ரகசியங்களையும் அவர் கேட்டறிந்தார். 
☘️அப்போது மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தாம் கிரிவலம் வந்தபோது இதுபோன்ற மரமும் பறவைகளும் இல்லையென்றும், எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக லோபமாதாவிடமும் பிருகு முனிவரிடமும் கூறினார்.

☘️அவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்திலிருந்த பறவைகள் எல்லாம் ஓம் நமச்சிவாய என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.  

☘️அகத்திய மாமுனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர். ஆதலால், தேவ அர்க்கவல்லிப் பூவை அப்பறவைகள் கண்டுகொண்டதால், அவை சிவலோகம் செல்வதாகக் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.

☘️அதைத் தொடர்ந்து அகத்திய முனிவர் முதல் முறையாக பிருகு முனிவரையும், லோபமாதாவையும் திருத்தியமலைக் குன்றின் மீது அழைத்துச் சென்றார். அங்குள்ள சுனைநீரில் தேவ அர்க்கவல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர்.
இதை கண்டு மூவரும் மகிழ்ச்சியுற்றபோது சிவபெருமான், தேவ அர்க்கவல்லி என்ற பூவை சூடிக் கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்ததாகத் தல வரலாற்றுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

🛕ஆலய அமைப்பு
பழமைவாய்ந்த திருக்கோயில்
திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனக் கூறப்படுகிறது. ஆதித்யசோழர், விக்ரமசோழர் மற்றும் இரண்டாம் ராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு, இறுதியாக 1883-ஆம் காலகட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயகர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலிலிலுள்ள கல்வெட்டுகள், சோழர் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோயிலின் சிறப்பு முதலியவை குறித்து எடுத்துரைக்கின்றன.

மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

இத்திருக்கோயில் இறைவனைக் காண நாம் படியேறி மலை மேல் சென்றுதான் வழிபட வேண்டும்.

கருவறை நுழைவுவாயில் பகுதியில் எழுந்தருளியுள்ள துவாரபாலகரான ஸ்ரீமுண்டி உள்ளார்.

இறைவன் ஏகபுஷ்ப பிரியநாதர்
திருத்தியமலையில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஏகபுஷ்ப பிரியநாதர் என்றழைக்கப்படுகிறார். ஏகம் என்றால் ஒன்று பொருள். அதாவது தேவ அர்க்கவல்லி என்ற ஒற்றை புஷ்பத்தைச் சூடிக்கொண்ட இறைவன். சுயம்பு மூர்த்தியாவர். பக்தர்கள் அணிவிக்கும் மலரை விரும்பி ஏற்றுக்கொள்கிறார். அதனாலேயே சற்றுச் சாய்ந்த நிலையில் அவர் எழுந்தருளியுள்ளார். 

இறைவி தாயின் நல்லாள்
இக்கோயிலில் தனிசன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள இறைவிக்குத் தாயின் நல்லாள் எனப் பெயர். இந்த அம்பிகை ஒரு தாயைவிட அதிகம் கருணை காட்டுவதால், தாயின் நல்லாள் என்ற பெயர் சூடிக் கொண்டு இங்கு காட்சியளிக்கிறார். இந்த அம்மனுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, சுருள் குழல் நாயகி என்ற பெயர்களும் உண்டு. 

பாத தரிசன தட்சிணாமூர்த்தி
பாத தரிசன தட்சிணாமூர்த்தியாக திருத்தியமலை கோயிலில் அவர் எழுந்தருளியுள்ளார். இவர் கல்விக்கு அதிபதியாக திகழ்கிறார். 

உமாமகேசுவரர்
கோயிலின் உள்பிரகாரத்தில் உமாமகேசுவரர் தம்பதி சகிதமாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இவ்வாறு ஒரே சிற்பத்தில் தம்பதி சகிதமாக காட்சியளிப்பது சிறப்புக்குரியது.

உள் பிரகாரம் /கோஷ்ட்டம்
இக்கோயில் உள் பிரகார கோஷ்டத்தில் வலம்புரி விநாயகர், செல்வ விநாயகர் எழுந்தருளியுள்ளனர்.  

செல்வ விநாயகரை வழிபடுவதன் மூலம் நிரந்தர செல்வம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பதும் சிறப்புக்குரியது.
மேலும் கோயில் உள் பிரகாரத்தில் மகா விஷ்ணு, ஸ்ரீ பிரம்மா, துர்க்கை, அருள்மிகு வள்ளி - தெய்வசேனா சமேதராய் காட்சியளிக்கும் சுப்பிரமணியர், மற்றும் சண்டிகேசுவர சுவாமிகள் உள்ளார்கள்.

மகாலட்சுமி - காலபைரவர்
மகாலட்சுமிக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாறு காலபைரவர் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு சிவாலயங்களில் எழுந்தருளுவது அரிதான ஒன்று. அதுவும் இக்கோயிலில் மேற்கு நோக்கியவாறு காலபைரவர் தனி ஆகர்ஷ பைவரவராகக் காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது. 

விசாலாட்சி சமேதராய் காசி விசுவநாதர்

இவற்றுக்கு அருகிலேயே நவக்கிரகங்களின் சன்னதியும் அமைந்துள்ளது. 

மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள சூரியன்: நவக்கிரகங்களில் ஒன்றான சூரியன், இக்கோயிலில் மேற்கு நோக்கியவாறு தனித் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். சூரியன் தனித்து வழிபட்ட தலம் என்ற பெருமைக்குரியது இக்கோயில். 

சத்ரு சம்ஹார மூர்த்தியாய் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு, தேவசேனாவை மணந்தது இத்திருக்கோயிலில்தான் என்பது ஐதீகத் தகவலாகும். மேலும் கையில் வேலுடன் சத்ரு சம்ஹார மூர்த்தியாக கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அவர் காட்சியளிக்கிறார்

பிரதோஷ நந்திகேசுவரர்
நந்தியெம்பெருமான் இல்லாத சிவாலயங்கள் இல்லை. ஒவ்வொரு கோயிலிலும் நந்தி வெவ்வேறு வகையான இடங்களில் எழுந்தருளியிருப்பார். திருத்தியமலை கோயிலில் பிரதோஷ நந்திகேசுவரராக பெரும் உருவம் கொண்டு இங்கு காட்சியளிக்கிறார். 
மாதத்தில் இருமுறை பிரதோஷ காலத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 

கிரிவலம்
தாயின் நல்லாள் என்றழைக்கப்படும் அதீத கருணாம்பிகை உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதரை பௌர்ணமி நாளன்று கிரிவலம் வந்தால் 100 அரசமரம், 1000 வில்வமரம், 10000 வன்னி மரம், 1 லட்சம் வேப்பமரம் சுற்றியதன் பலன் கிடைக்கும்.

இத்திருக்கோயிலில் அகத்திய மாமுனிவர், பிருகு மகரிஷி ஒருகோடி முறை கிரிவலம் வந்து சிவபெருமானை அருளைப் பெற்றதால், இக்கோயிலில் பௌர்ணமி நாளன்று கிரிவலம் சிறப்புக்குரியதாகத் திகழ்கிறது.

சுனை தீர்த்தம்
சிவாலயங்களில் தல விருட்சம், தல தீர்த்தம் சிறப்புக்குரியதாக இருக்கும். அந்த வகையில் இக்கோயிலில் தல தீர்த்தமாக சுனை தீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரப் பகுதியில் வற்றாத தீர்த்தமாக இந்த சுனை தீர்த்தம் அமைந்துள்ளது. வெய்யில் காலம், மழைக் காலம் என எக்காலத்திலும் இங்கு தீர்த்தம் வற்றாது காணப்படுவதுதான் தனிச்சிறப்புக்குரியது.

ஸ்தல விருஷம்
இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. 

திருவிழாக்கள்
ஆனி மாதத்தில் உத்திர தரிசனம், ஆவணியில் மகா சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 9 நாள்கள் நடைபெறும் நவராத்திரி வழிபாடு, ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி வழிபாடு, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் போன்றவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

🌟இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோயில் நடைதிறப்பு
இக்கோயில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 

❄️இம்மலைக்கோயிலின் அடிவாரத்தில் ஒருபுறம் ஆலமரத்தடி அய்யனாரும், மற்றொருபுறத்தில் மாரியம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. சற்றுத் தொலைவில் அக்ரஹார விநாயகரும் அமைந்துள்ளார்கள்.

பரிகாரம் / பூசைகள்
இக்கோயிலிலுள்ள லிங்கத்துக்கு திங்கள்கிழமைதோறும் வில்வ இலைகளைக் கொண்டும், ஆவுடையாருக்குத் துளசியாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலன் பெறலாம் என்பதும் ஐதீகம்.

தொடர்ந்து 11 வாரங்கள் இவ்வாறு செய்தால் பக்தர்கள் உரிய பலனைப் பெறுவர். தீர்வு காணப்படாத பிரச்சனைகளுக்கு இவ்வாறு செய்வதன் மூலம் தீர்வு கிடைக்கும். எண்ணிய செயல்கள் அனைத்தும் நிறைவேறும். 

பெண்களால் ஏற்படும் சாபங்கள் நீங்க இத்திருக்கோயில் இறைவி தாயின் நல்லாளை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும்போது, பெண்களால் விடப்படும் சாபங்கள் அனைத்தும் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இக்கோயிலில் தங்களது தோஷங்கள் நீங்க, பரிகாரமாக கோயில் வளாகத்தில் அரிசி மாவால் கோலமிட்டு, சுவாமி மற்றும் அம்மனை வழிபட வேண்டும்.

மாத சிவராத்திரி அல்லது பௌர்ணமி தோறும் இங்கு சென்று அபிஷேகம் அல்லது ஆத்மார்த்தமான வழிபாடு செய்ய அவரவர் முன் வினை தவறுகள் மற்றும் இப்பிறவி பிழைகள் மன்னிக்கப்பட்டு திருந்தபடுவார்கள். இதை தொடர் வழிபாட்டில் நன்கு உணரலாம். மேலும் பிரம்மஹஸ்தி தோஷம் நீக்கும்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி அந்தந்த கோயில்களின் கோஷ்டத்தில் எழுந்தருளுவார். அதன்படியே இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருந்தாலும், பல்வேறு சிறப்புகளைக் கொண்டவராக உள்ளார்.
எந்தவிதமான தேர்வாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் அவர்கள் சிறப்பு பெறுவர். அத்தகைய சிறப்புடைய தட்சிணாமூர்த்தியை வழிபட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.

🪷மிக அமைதியான கிராமம். எப்போது சென்றாலும் எந்த சப்தமும் இல்லாத ஊர். மிக ரம்மியமான ஆலயம். இறை சாமித்தியம் அதிகம் உள்ள கோவில்.

 🪷சிவராத்திரி விழாவில் சென்று நாங்கள் தரிசித்தோம். விழா ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது.

🪷சாதாரண நாட்களில் பூசை நேரங்களில் அல்லது
முன் தகவல் தந்து வழிபட வேண்டிய ஆலயம்.

🍃சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

🛐சிவ அடியார் ஒருவர் குறிப்பிட்டவாறு, ....
மிக அபூர்வமான ஆலயங்கள் பற்றியும் அதன் அமைவிடம் பற்றியும் அனைவருக்கும் தெரிவதில்லை.... 

🛐ஒருமுறை இது போன்ற ஆலயங்கள் சென்று வழிபட்டால் பிற பெயர்பெற்ற ஆலயத்தில் வழிபடுவதற்கும் இது போன்ற ஆலயத்தில் சென்று வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அனைவரும் நன்கு உணரலாம்.

🛐சில குறிப்பிட்ட ஆலயங்களில் குறிப்பிட்ட ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் தொடர்ந்து வருவார்கள் என்ற முற்பிறப்பு புண்ணிய காரணமும் உள்ளது. ஆகையால் முடிந்தவர்கள் இது போன்ற ஆலயங்கள் அமைந்துள்ள சிற்றூரின் அருகில் உள்ளவர்கள், ஸ்தல யாத்திரை செய்ய விரும்புவார்கள் முடிந்தால் இந்த மாதிரி ஆலயம் சென்று இறையுணர்வு பெறுவீர்..

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026வலைதள தகவல் 💻📡📚 #Subbramசுப்ராம்🔱🇮🇳
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

திருத்தலையூர் - சப்தபுரீஸ்வரர்💥திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தலையூர். அ/மி. குங்குமாம்பாள் சமேத சப்தரிஷிபுரிஸ்வரர் ஆலயம்.

திருத்தலையூர் - சப்தபுரீஸ்வரர்

💥திருச்சி மாவட்டம், முசிறி வட்டம்,  திருத்தலையூர். அ/மி. குங்குமாம்பாள் சமேத சப்தரிஷிபுரிஸ்வரர் ஆலயம். 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் திருத்தலையூர் அமைந்துள்ளது. 
⛳அமைவிடம்: 
1. திருச்சிக்கு வடக்கில் உள்ள துறையூர் சென்று அங்கிருந்து தண்டலை வழியாக முசிறி செல்லும் சாலையில் உள்ளது.  துறையூரிலிருந்து மேற்கில் நாமக்கல் சாலையில் கண்ணனூர் வந்து தெற்கில் திருத்தலையூர் சாலையில் செல்லவேண்டும். துறையூர் - கண்ணலூர் சாலை State Highway.  (இவ்வூரிலும் இரண்டு சிவன் ஆலயங்கள் உள்ளது) - கண்ணனூர் - தலையூர் - சாலை குறுகியது.

2. முசிறி - தண்டலை -திருத்தலையூர் - கண்ணணூர் - துறையூர் செல்லும் . சாலையும் திருத்தலையூர் அடையலாம். 

தல சிறப்புகள்:
🪷ராமாயணக் காலத்துக்கு முந்தைய காலத்துக்கோயில் எனக் கூறப்படுகிறது.

🪷சிவபெருமான் நமது நெற்றிக்கண்ணை திறந்து ராவணனுக்கு காட்சியளித்த வரலாறும் இந்த கோயிலுக்கு உண்டு. 

🪷சப்தரிஷிகள் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. 

🪷புரூரவச் சக்கரவர்த்தி என்பவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகவும் இக்கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது. ‌

🪷இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள  திருமுறை தேவார வைப்புத் தலமாகும்.

🪷1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.

🪷இது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼பயணிகள் பேருந்து வசதி துறையூர், மற்றும் முசிறியில் உண்டு. திருத்தலையூர் சிற்றூர்.
🌼திருத்தலையூரில்  அறநிலையத்துறை நிர்வாகத்தில் ஓரு மிகப் பழமையான அழகியநாத பெருமாள் ஆலயமும், மிக சிறிய காசிவிஸ்வநாதர் ஆலயமும் - தற்போது உடையவர் கைலாசநாதர் (இரட்டை நந்தி) ஆலயமும் - புனரமைப்பு நிலையில் அங்குள்ள அடியார்களால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில்  உள்ளது. இவைகள் ஊரின் பிரதான சாலையை ஒட்டி உள்ளன.
🌼இங்கிருந்து  மேற்கில் 500 மீட்டர் தூரம் தனி சாலையில் சென்று சப்தரிஷிபுரிஸ்வரர் ஆலயம் அடைய வேண்டும்.
🌼சிறிய ஊர் என்பதால், சிற்றுந்துகள், Auto வசதிகள் கிடையாது; நடந்தும் / சொந்த வாகனத்திலும் செல்லலாம்.
🌼ஆலயம் அருகிலும் கடைகள், வீடுகள் எதுவும் கிடையாது. சில குறிப்பிட்ட விழா நாட்களில் தற்காலிக ஏற்பாடுகள் வசதிகள் இருக்கலாம்.
🌼தலையூரிலிருந்து அருகில் உள்ள திருத்திய மலை மற்றும் தின்னக்கோனம் (வைப்புத் தலம்) செல்லலாம். 
🌼12.03.2020 ல் குடமுழுக்கு நடைபெற்றது தரிசனம் கிடைத்தது. 15.02.2026 சிவராத்திரி அன்று மீள் தரிசனம். ஏராளமான பக்தர்கள் வருகை.

Subbramசுப்ராம்🔱🇮🇳 நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்

🛕ஆலய அமைப்பு

🪔இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுக்கள் பல உள்ளன.

🪔கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் நேர் எதிரிலேயே தீர்த்தக்குளம்  பிரம்மாண்டமாய் அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது. மேலும் அகோரத் திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

🪔ஆலயம் முன்பு3 நிலை இராஜகோபுரம் மற்றும் முன்புறம் சிறிய முன்மன்டபத்துடன் உள்ளது.
கோவில் முழுவதும் கற்றளியால் ஆனது.

🪔கருங்கல்லால் உள்ள முழு மண்டபத்தில் நந்தியம் பெருமான். வடகிழக்கில் நவகிரகம். 

🪔உள் மண்டபத்தில் சுவாமி அர்த்தமண்டபம், தாண்டி கருவரையில் 

🪔சிவலிங்க வடிவில் அருள்மிகு சப்தரிஷீசுவரர்  கிழக்கு நோக்கிய சன்னதியில்  எழுந்தருளியுள்ளார்.  சுயம்பு மூர்த்தமாகசப்தரிஷிகள் வழிபட்ட சிறிதான சிவலிங்கம். கருவறை மூலவராக எளிமையாகக் காட்சியளிக்கிறார்.

🪔இறைவன் சப்தரிஷீசுவரர் சன்னதி அமைந்த பிரகாரத்திலேயே தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன்.  

🪔ஒரே சமயத்தில் சுவாமி அம்பாள் வழிபடலாம்.
சுவாமி கருவரை  தென்புறத்தில் உள்பிரகார மண்டபத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதி கொண்டு அமைந்துள்ளது ராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இராவனேஸ்வரர் சிவலிங்கம். 

🪔பத்துத் தலை ராவணன் உருவாக்கிய சிவலிங்கம் என்பதால், சற்று பெரிதாகவே இருக்கிறது. மேலும் ராவணன் வழிபட்ட சிவலிங்கம் கொண்ட கோபுரத்தின் மேல்பகுதியில் பத்துத் தலைகளைக் கொண்டு ராவணன் எழுந்தருளியிருப்பது போன்று சிற்பங்களும் எழுந்தருளப்பட்டிருக்கின்றன.

🪔சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அகோர வீரபத்திரர் உதித்த தலம் இது. அதனாலேயே இறைவன் சன்னதியின் வலதுபுறத்தில் அகோர வீரபத்திரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

🪔சிவபெருமானின் திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்த, தான் அவதரித்த இந்த திருத்தலத்திலேயே முக்தியும் அடைந்த உருத்திர பசுபதி நாயனார், அகோர வீரபத்திரருக்கு அருகிலேயே காட்சியளிக்கிறார்.

கோஷ்ட்டம் / உள்பிரகாரம் | பிற சன்னதிகள்
🍃கோயில் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேசுவரர் எழுந்தருளியுள்ளனர். 

🍃உள் பிரகாரத்தில் தென்மூலையில் - கன்னி மூலையில் மிக அழகிய பெரிய அமைப்பில் விநாயகர் அற்புதகல் அமைப்பு. 
அடுத்து,
🍃இராவணனுக்கு வரம் பெற வேண்டிய அளவை  குறிக்கும் விதமாக, இத்திருக்கோயிலில் மூன்று விரல்களை மடக்கியபடி திருமால் தனி சன்னதி கொண்டு  காட்சியளிக்கிறார்.
மேலும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும். 

🍃வடமூலையில்  ஒரே கல்லால் ஆன ஜேஷ்டாதேவி யும்  உள்ளார்.

🍃பிரகார வடமேற்கு மூலையில் மிகப் பழமையான (5000 வருட )  தல விருட்சம்  சிறப்புக்குரியதாக இருக்கிறது.  இங்கு ஸ்தல விருட்ச பூஜையும்  விசேஷமானது என்பர். ராவணனின் உருவத்தைக் கண்டு அஞ்சிய சப்தரிஷிகள், தங்களைக்காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருதமரமாக மாறி நின்றனர்

🍃மேலும் நவக்கிரக சன்னதி,  பைரவர் சன்னதி, தூணில் எழுந்தருளிய ஆஞ்சனேயர் சிற்பம் ஆகியவையும் அமைந்துள்ளன.

🍃இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள் | விழாக்கள்
🌺இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மாசிமகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருகார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது.
பிரார்த்தனை | வழிபாடுகள்.
🌹இந்தக் கோயிலுக்கு வந்து பிரம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

🌹திருமணத்தில் தடை இருப்பவர்களுக்கு இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும்,  குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
தலவரலாறு
💥ராமாயண காலத்துக்கு முந்திய கோயில் என்று இந்த கோயிலுக்கு வரலாறு ஒன்று.  ராவணன் தனது தலைகளைத் திருகி யாகத்தில் வீசியதால் ஆதியில் திருகுதலையூர் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி திருத்தலையூர் என்றானது.

💥இலங்கையிலிருந்து ராவணன் கயிலாயம் நோக்கி கிளம்பி வரும் வழியில், இப்பகுதி வனாந்திரமாக இருப்பதைக் கண்டு, இங்கேயே தங்கி விட்டார். 

💥இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவபெருமானையும்  வழிபட்டுக் கொண்டிருந்த சப்தரிஷிகள், பத்துத்தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருதமரத்தில் ஐக்கியமாகிவிடுகின்றனர். அந்த மரமே இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக மாறியது. ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை நான் வழிபடுவதா என எண்ணிய ராவணன், உடனடியாக புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான். 

💥தனக்குசிவபெருமான்நேரில் தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்துத் தொடர்ந்து வழிபட்டான் ராவணன். ஆனால், சிவபெருமான் தரிசனம் தரவில்லை. நாள்கள் கடந்தும் யாகங்கள் தொடர்ந்தன. மிகவும் வெறுத்துப் போன ராவணன், ஒரு கட்டத்தில் தனது பத்துத் தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீசி, ஒரு தலை மட்டுமே மிஞ்சியது. அப்போதும் சிவபெருமான் காட்சித் தரவில்லை, தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீச முயற்சித்தான் ராவணன்.மனம் கசிந்து போன சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்தபடி ராவணனுக்கு காட்சியளித்தார். அதோடு ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும் சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்டவைத்து, மீண்டும் அவனைப் பத்துத் தலை ராவணனாக உருவாக்கினர். தான் பிடித்து வைத்த புற்றுமண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கயிலாயம் புறப்பட்டுச் சென்றான் ராவணன். இத்தகையை சிறப்புகளைக் கொண்டது. 

💥ராவணனால் உருவாக்கப்பட்டது தான் திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் திருக்கோயில்.

💥சப்தரிஷிகள் வழிபட்ட தலம்: ஏழு ரிஷிகள் தான் சப்தரிஷிகள் என்று கூறப்படுகிறது. இவர்கள் சிவலிங்கத்தை வழிபட்டதால் சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் வந்தது. 

💥புரூரவச் சக்கரவர்த்தி மன்னனின் சாபம் நீங்கிய கதை: புரூரவச் சக்கரவர்த்தி மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த மன்னன் திருவண்ணாமலையில் நீராடி விட்டு இறைவனை வேண்டும்பொழுது திருத்தலையூர் சென்று பிரம்ம குளத்தில் நீராடினால் அங்கு மூலவரை தரிசித்தால் உன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறப்பட்டது அதன் வழியில் மன்னனும் இக்கோவிலுக்கு வந்து நீராடியதால் இவர் தோஷம் நீங்கியது.

ஆலயத்தின் பிற சிறப்புத் தகவல்கள்

இறைவன் சப்தரிஷீசுவரர்
அத்ரி, ப்ருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், மரிசி, ஆங்கிரஸர் என சப்த ரிஷிகள் வழிபட்டதால், இத்திருக்கோயில் இறைவன் சப்தரிஷீசுவரர் என்றழைக்கப்படுகிறார்

பிரும்மஹத்தி தோஷம் நீக்க
திருவண்ணாமலையில் புரூரவச் சக்கரவர்த்தி நீராடி இறைவனை வேண்டியபோது, திருத்தலையூரிலுள்ள பிரம்ம குளத்தில் நீராடி என்னை வந்து தரிசிப்பாயாக, அசீரிரியாக உனக்கு காட்சியளித்து உனது பிரும்மஹத்தி தோஷத்தை போக்குவேன் என சிவபெருமான் கூறியதாகவும், அதன்படி 
பிரும்மஹத்தி தோஷம்போக்க புரூரவச் சக்கரவர்த்தி வந்து வழிபட்டு, தனது தோஷத்தை போக்கியது இக்கோயிலில்தான். இதனால் பிரும்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து, இறைவனையும், இறைவியையும் வழிபட்டுச் சென்றால்,  அவர்களது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இறைவி குங்குமாம்பிகை அம்மன்
தன்னை நாடிவரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித்தரும் சாந்த சொரூபியாக, அழகின் உருவமாய் குங்குமாம்பிகை அம்மன் காட்சியளிக்கிறார்.

மேலும் திருமணத் தடையுள்ளவர்கள் இக்கோயில் இறைவனை வணங்கி வழிபட்டு, அர்ச்சனை செய்து சென்றால் அவர்களது திருமணத் தடை நீங்கி விரைவில் கைகூடும் என்பது பல தன் பெற்ற பக்தர்களின் கூற்று.

ராவணன் வழிபட்ட சிவலிங்கம்
சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த ராவணனுக்கு கடுந்தவத்துக்குப் பிறகு சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தது  இத்திருக்கோயிலில்தான்.

அகோர வீரபத்திரர்
திருத்தலையூர் திருத்தலம் அகோரத் தலமாகும். அகோஸ்தரம் மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானை அழைத்தான் ராவணன்.
ராவணனின் மிகக் கடுமையான தவத்தின் விளைவாக இறுதியில் சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தார். 

உருத்திர பசுபதி நாயனார் அவதாரத் தலம்
🪷அறுபத்து மூவர் என்றழைக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் சோழ மண்டலத்தில்  அவதரித்த ஊர் திருத்தலையூர். இந்த ஊரில் அந்தணர் குலத்தில் பசுபதியார் என்னும் பெயரில் அவதரித்தார். 

🪷இவர்தம் அருந்தவப் பெருமையையும், வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவன், இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கினார்.  உருத்திர பசுபதி நாயனார் தான் அவதரித்த இந்த திருத்தலத்திலேயே முக்தியும் அடைந்தார்.

🪷உருத்திரபசுபதி நாயனார் அவதரித்து முக்தி அடைந்ததாக கருதப்படும் மற்றொரு  திருத்தலையூர்  (நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் வழியில்  திருத்தலையூர் (பாவட்டக்குடி)  என்ற ஒரு ஊர் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கத்து.

🪷புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று உருத்திர பசுபதி நாயனாரின் குருபூஜைவிழா இரு தலங்களிலும் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. 

மூன்று விரல்களை மடக்கியபடி காட்சியளிக்கும் திருமால் 
☘️துளசி செடியைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, கிழவன் தோற்றத்தில் காணப்பட்ட திருமால், ராவணனிடம் உன்னுடைய ஆயுள்காலமான மூன்றரைக்கோடி ஆண்டில் நீ ஏற்கெனவே வரமாகப் பெற்றது மூன்றுகோடி ஆண்டுகளே. மீதமுள்ள அரை கோடி ஆண்டை சிவனாரிடமிருந்து வரமாகப் பெற்று வா என்றார்.

☘️அதையொட்டி ராவணன் கடுந்தவம் மேற்கொண்டான். பிரதட்சணமான சிவபெருமானிடம் தனக்கு அரைக்கோடி ஆண்டு ஆயுள் வேண்டும் எனத் தவறுதலாகக் கேட்டு வரமாகப் பெற்றான். இதனால் ஏற்கெனவே வரமாகப் பெற்றிருந்த மூன்றுகோடி ஆண்டுகளை இழந்தான். 

சிறப்பு வாய்ந்த தல விருட்சம்
🌳மற்ற கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் தல விருட்சம் சிறப்புக்குரியதாக இருக்கிறது.  இங்கு ஸ்தல விருட்ச பூஜையும்  விசேஷமானது என்பர். ராவணனின் உருவத்தைக் கண்டு அஞ்சிய சப்தரிஷிகள், தங்களைக்காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருதமரமாக மாறி நின்றனர். அவர்களுக்கு காட்சியளித்த சிறப்புக்குரிய தலவிருட்சம், மிகப்பெரிய மரமாக அமைந்திருக்கிறது. அடிபாகத்தில் முண்டும், முடிச்சுகளுமாகக்  காணப்படுகிறது. அவை அனைத்தும் ரிஷியின் ஐக்கியமான பாகங்கள் என்று கூறப்படுகிறது.

🌳மற்ற மரங்களின் விதைகளைக் கொண்டு  மற்றொரு இடத்தில் போட்டால் அங்கு மரக்கன்று உருவாகி, மரமாகும் என்பதுதான் பொதுவானது. ஆனால், இந்த திருக்கோயிலில் உள்ள மருதமரத்தை வேறு எங்கு நடவு செய்தாலும், அது மரமாகாது எனக் கூறப்படுகிறது.

கோயில்  தெப்பக்குளம்
பொதுவாக கோயிலுக்குள்ளேயே, வெளிப் பிரகாரம் அல்லது  அருகில்தான் கோயிலின்  தீர்த்தம் அல்லது தெப்பக்குளம் அமைந்திருக்கும். ஆனால், திருத்தலையூரில் கோயிலுக்கு நேர் எதிரிலேயே மிகப் பெரிய அளவில் அமைத்திருக்கிறது தெப்பக்குளம். இந்த குளத்தில் தவளைகளின் சப்தமும் இருக்காது என்பது சிறப்புக்குரியது.

குடமுழுக்கு
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில்,  அதன் பின்னர் நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, பழைமைமாறாமல் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  2020, மார்ச் மாதம் மீண்டும் இக்கோயில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
வலைதள தகவல் 💻📡📚 #Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம்  15.02.2026

திருத்தலையூர் - உடையவர் கைலாசநாதர்(இரட்டை நந்தீஸ்வரர்) திருக்கோவில் .

திருத்தலையூர் - உடையவர் கைலாசநாதர்
(இரட்டை நந்தீஸ்வரர்) திருக்கோவில் .

திருத்தலையூர் 
அமைவிடம்: திருச்சிக்கு வடக்கில் உள்ள துறையூர் சென்று அங்கிருந்து தண்டலை வழியாக முசிறி செல்லும் சாலையில் உள்ளது.
(துறையூர் கண்ணனூர் சாலை State Highway. .
கண்ணனூர் (இவ்வூரிலும் இரண்டு சிவன் ஆலயங்கள் உள்ளது) - தலையூர் சாலை குறுகியது)

துறையூரிலிருந்து மேற்கில் நாமக்கல் சாலையில் கண்ணனூர் வந்து தெற்கில் திருத்தலையூர் சாலையில் செல்லவேண்டும்.

முசிறி - திண்ணக்கோணம் தண்டலை வழியாகவும் வரலாம். 

இந்த ஆலயம் முன்பு காசி விசுவநாதர் என்று இருந்தது. தற்போது ஆலயம் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயம் ஊரின் உள்ளே பிரதான சாலையில் கிழக்குப் பார்த்து அமைந்த ஆலயம்.

ஆலயம் முன் பகுதியில் உள்ள இரட்டை நந்திகள் கொண்ட மண்டபத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
 இரட்டை நந்திகள் கருவரை நோக்கி அமைந்துள்ளது.

மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு பார்த்த அமைப்பில் உள்ளது. ஒரு மண்டப அமைப்பில் உள்ளது. முன் பகுதியில் முகப்பில் சிறிய காட்சி கோபுரம் உள்ளது.

பைரவர் சண்டிகேஸ்வரர் சிறிய அளவில் உள்ளது.

ஆலயம் சுற்றி வரும் பாதை நன்றாக அமைக்கப்படுள்ளது.

அடியார்கள் பூசை செய்கிறார்கள்.

முழு ஆலயமும், சன்னதிகளும் கட்டி முடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. 

 ஆலயம் தற்போது சில அடியார்களின் பெரும் முயற்சியால் புதிய பொலிவு பெற்று வருகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.

நடைமுறையில் அடியார்கள் பூசை செய்யும் ஆலயம்.

சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் மக்கள் வழிபாட்டுக்கும், பூசைகளுக்கும் உதவியாக இருந்தார்கள்.
விரைவில், முழுத் திருப்பணியும் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்தித்து வழிபாடு செய்தோம். 

சிற்றூர் அடியார் பெருமக்களின் சிவராத்திரி விழா ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது.

சாதாரண நாட்களில் பூசை நேரங்களில் அல்லது
முன் தகவல் தந்து வழிபட வேண்டிய ஆலயம்.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

தண்டலை -விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம்.

தண்டலை -விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம்.

💥முசிறி -திண்ணக்கோணம் - திருத்தலையூர் - கண்ணனூர் - துறையூர் சாலையில், திண்ணக்கோணம் , தண்டலைப்புத்தூர் தாண்டி வரும் சிற்றூர் தண்டலை - 621 217. (முசிறி ஒன்றியம்)

⛳சிற்றூரின் பிரதான சாலையில் ஆலயம் உள்ளது. தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் உள்ளது.

🛕ஆலயம் கிழக்கு நோக்கிய சிறிய ஆலயம்: சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது. காட்சிக்கோபுரம் கிழக்கு நோக்கியது. உள்ளே நந்தியம்பெருமான் தனி மண்டபத்துடன் ஆலயம் நோக்கியுள்ளார்.

🛕முன் மண்டம் சுவாமி அம்பாள் கருவரைகளுக்குப் பொதுவானது. சுவாமி கிழக்கு ப் பார்த்த அமைப்பு.
அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்.

🛕கல் கோவில். சுற்றுப்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, தட்சினாமூர்த்தி, பிரும்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள்.

🌟நாங்கள் சிவராத்திரியை முன்னிட்டு ஆலயம் வழிபட சென்றபோது, பிரதோஷ மூர்த்திக்கு அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆலயத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது. சுவாமி, அம்பாள் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்தது.

💥ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டிருந்தது. சுற்று பிரகாரம் உள்ள தெய்வ சிலைகள் திருப்பணியில் இருந்தன.

🪷விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்தனை செய்து வழிப்பட்டோம்.

🌟சிவராத்தியை முன்னிட்டு உள்ளூர் மக்கள் ஆர்வம் சிறப்பாக இருந்தது. வணங்கி வழிபாடு செய்து வந்தோம். 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.
நடைமுறை பூசையில் உள்ள ஆலயம்.
சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் மக்கள் வழிபாட்டுக்கும், பூசைகளுக்கும் உதவியாக இருந்தார்கள்.
பாலாலயம் செய்யப்பட்டிருகிறது. விரைவில், திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்தித்து வழிபாடு செய்தோம். சிற்றூர் மக்களின் சிவராத்திரி விழா ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது.

சாதாரண நாட்களில் பூசை நேரங்களில் அல்லது முன் தகவல் தந்து வழிபட வேண்டிய ஆலயம்.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

திண்ணக்கோனம் பசுபதீஸ்வரம்

திண்ணக்கோனம் பசுபதீஸ்வரம் 

*கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருக்கும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்* .....

இறைவர். :- சுயம்பு பசுபதீஸ்வரர் ;
இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
தட்சிண கேதார்நாத் திருக்கோயில், திருமுறை வைப்புத்தலம், நான்கு வேதங்களும் கருவறையிலுள்ள நான்குத் தூண்களாகக் கருதப்படும் சிறப்பு, முன்னிரு கால்கள் மடிந்த நிலையிலுள்ள நந்தியெம்பெருமான், லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் சிறப்பு வாய்ந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, வசந்த நவராத்திரிப் பெருவிழா,மாத சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் சிறப்பாககொண்டாடப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டிருக்கிறது.

💥தல சிறப்பு
முதல் பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டுகளில் திருவிரற்குன்றம், திருநற்குன்றம் என்றும், சுவாமியின் பெயர் திருமாடத்து கூனனார், சடனாண்டார் என்றும் குறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு அறிஞர்கள் கூறுவர். தற்போது இந்த ஊர் திருநெற்குன்றம், திண்ணக்கோணம் என்றழைக்கப்பட்டு வருகிறது.

🌼திருமுறை வைப்புத்தலம் திருநெற்குன்றம்:

"நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல், நெடுவாயில் குறும்பலாநீடு திரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம், நளிர் சோலையும் சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேந்தி மழை தடுத்த, கடல் வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கு என்றும் தொலைவிலாதான் உறையும், குடமூக்கு என்று சொல்லி குலாவுமினே'' (2-39-9)

என்று திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வைப்புத்தலமான திருநெற்குன்றம் என்றழைக்கப்படுகிறது, திண்ணக்கோணம்.

🌼தட்சிண கேதார்நாத் : பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலை போன்று சிவபெருமான் கேதார்நாத்தில்தான் காட்சியளிக்கிறார். எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், திருநெற்குன்றம் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், இமயமலை கேதார்நாத் தலத்தில் உள்ள கேதாரீஸ்வரரை சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும், இத்திருக்கோயிலை தட்சிண கேதார்நாத் என்றும், பக்தர்கள் கூறுகின்றனர்.
🌼நான்கு வேதங்களும் கோயில் கருவறையிலுள்ள நான்குத் தூண்களாகக் கருதப்படும் சிறப்பு, 

தல வரலாறு

1 கோயிலின் புராண சிறப்பு
முன்பு ஒரு சமயத்தில் கைலாயத்தில் பரமேசுவரன் தன் தேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த ஈசன்,

அம்பிகையை நோக்கி "பூலோகத்தில் திருநெற்குன்றம் என்னும் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக" எனக் கூற, அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, ஈசனை நோக்கி தவமிருந்து பார்வதிதேவி அருள் பெற்ற வரலாறு கொண்ட திருக்கோயில்.

அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோவிலின் சுவாமி கருவறையில் அமைந்துள்ளத் தூண்கள் நான்கும், நான்கு வேதங்களை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகிறது.

2. வரலாற்றுச் சிறப்பு.
இந்த ஊரைச் சேர்ந்த இடையன், குன்றுப் பகுதிக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்று வரும்போது, ஒரு பசு மட்டும் பால் கறப்பதில்லை. அதற்கான காரணத்தை அறியும் போது, மேய்ச்சல் முடிந்து திரும்பி வரும் போது ஒரு குறிப்பிட்ட பசு குன்றின் மேல் பால் பொழிவதைக் கண்ட இடையன், அதைத் தடியால் அடிக்க அந்த பசு இறந்தது.

அன்றிரவு அந்த பகுதியை ஆண்ட பராந்தகச் சோழ மன்னர் கனவில் வந்த இறைவன், குறிப்பிட்ட அந்த இடத்தில் கோயில்கட்ட வேண்டும். கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யும் நாளில் கருவறையில் சுயம்பு மூலவராய் நானே எழுந்தருள்வேன் என்றார்.
அவ்வாறே, லிங்கத் திருமேனியை நிருதி மூலையில் பிரதிஷ்டை செய்தான்; பராந்தகச் சோழ மன்னரால் கட்டப்பட்ட இத்திருக்கோயில், பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. கருவறையில் முகவாயைத் தரையில் வைத்துப் படுத்திருக்கும் பசுவின் திருமேனி (பசுமாடு படுத்திருக்கும் தோற்றத்தில் கர்ப்பகிரஹத்தை) இக்கோயில் 
கொண்டுள்ளது.

🛕 ஆலயஅமைப்பு
பழையக் காலக் கற்றளி.
நுழைவுவாசலுடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. பலிபீடமும், நந்தியும் கருவறையை நோக்கி காணப்படுகிறது.

சுவாமி பசுபதீஸ்வரர்
சுவாமி கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது; 
இறைவன் சுயம்பு பசுபதீசுவரர்

பசு - பதி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்று பொருளாம். 
மற்ற திருக்கோயில்களில் லிங்கத் திருமேனியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 
ஆனால், திண்ணக்கோணம் கோயிலில் இறைவன் சுயம்பு பசுபதீசுவரர், முகவாயைத் தரையில் வைத்துப் படுத்திருக்கும் பசுவின் திருமேனியாய் (அதாவது யானை படுத்திருக்கும் நிலையில் பின்பகுதியில் உள்ளது போன்று) எழுந்தருளி, 
சுயம்பாக கிழக்கு மேற்காக 7.5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது. பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள், உடலை சுற்றி வஸ்திரங்கள் சாத்தி படுத்திருந்தால் எப்படி இருக்குமோ, அது போல் தான் பசுபதீஸ்வரர் சுயம்புவாக பசு உருவில் காட்சி தருகிறார். அருகில் லிங்க திருமேனியும் உள்ளது.

இறைவன் பசுபதீஸ்வரரின் வலது பக்கத்தில் நான்கு தூண்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இப்படி மூலவரின் பக்கத்தில் தூண்கள் அமைந்திருப்பதை வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச்சிறப்பாகும். 

கோவிந்தவல்லி அம்மன்
கோவிந்தவல்லி அம்மன் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். அன்னை சிவகாம சுந்தரி, கோவர்த்தனாம்பிகை போன்ற திருநாமங்களிலும் அழைக்கப்படுகிறார்

பிரகாரம்
கருவறை சுவரை சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கோஷ்ட மூர்த்திகளாக காட்சி அளிக்கின்றனர்.

நந்தி:
முன்னிரு கால்களும் மடிந்த நிலையில், இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும்.

லிங்கோத்பவ வலம்புரி விநாயகர்
தன்னுடைய தந்தையின் உருவமான லிங்கத்தைக் கொண்டு, விநாயகர் இக்கோயிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். 4 அடி உயரத்தில் புடைப்புச் சிற்பத்தில் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் காட்சியளிக்கிறார். இவைத் தவிர, கோயிலின் கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன கணபதியும், சுவாமி சன்னதிக்கு அருகிலும் கணபதியும் எழுந்தருளியுள்ளனர்.

மேலும், சங்கரநாரயணர், லட்சுமி நாராயணர், சிவசக்தி வேலன், வள்ளி, தெய்வானை, சிறப்பு வாய்ந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி , சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன.

இக்கோவிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

பிரார்த்தனை

பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. 

பசுவுக்கு ஏதாவது தீங்கு இழைத்து அதனால் சாபம் பெற்றவர்கள், இக்கோவிலுக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்குகிறார்கள். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். 

பூசைகள் / விழாக்கள்
பரிகாரம் / பூசைகள்
மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இறைவன், இறைவிக்கு அபிஷேக, அர்ச்சனைகளும், மற்ற சன்னதிகளில் அர்ச்சனைகளும் செய்து, தங்களது பரிகாரத்தை நிவர்த்தி செய்து, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்குகின்றனர்.

கோவிந்தவல்லி அம்பாள் என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்ஸவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கோவிந்தவல்லி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வசந்த நவராத்திரி உற்ஸவம் இக்கோயிலில் தொடர்ந்து வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீஓமாம் சித்தர் அவதாரத் திருக்கோயில்
திண்ணக்கோணம், கன்னிகோணம், பரிதிகோணம் என்பவை சூரியபகவான் இந்த பூ மண்டலத்தில் வர்ஷிக்கும் மூன்று முக்கிய கோணச் சக்திகளாகும்.

கன்னிகோண சக்திகள் காலையில் சூரியன் உதிக்கும் போது பூமியைத் தழுவும். திண்ணக்கோணம் என்பது நண்பகலில் சூரியன் தலைக்கு நேராக செங்குத்தாக இருக்கும் போது தோன்றும் ஆதவ சக்திகளாகும். பரிதிகோணம் என்பது சூரியபகவான் பகல் பொழுதின் நிறைவாக மீளூம் கோண சக்திகளாகும். இதில் திண்ணக்கோண சக்திகள் பொங்கிப் பெருகும் நேரமே அபிஜித் முகூர்த்தம் எனப்படுகிறது. இத்தகைய மங்கள சக்திகள் நிறைந்த அபிஜித் முகூர்த்தத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீஓமாம்சித்தர். இந்த சித்தர் தோன்றிய அவதாரத் திருக்கோயில் திண்ணக்கோணம்

ஓமாம் சித்தர் திண்ணக்கோணம் அருகிலுள்ள ஆமூர் ஸ்ரீரவீசுவரர் திருக்கோயிலில் கன்னி மூலையில் சிவலிங்க மூர்த்தியில் ஐக்கியம் அடைந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்
ஒவ்வொரு கோயிலுக்கும் ஏற்றவாறு பைரவர் எழுந்தருளியிருப்பர். இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன

அகத்தியர் சன்னதி
இக்கோயிலில் பல ஆண்டுகள் அகத்தியர் தவமிருந்து, இறைவனை வழிபட்டிருக்கிறார். இறைவனும், இறைவியும் அவருக்கு காட்சியளித்திருக்கின்றனர். இக்கோயிலில் சிவசக்தி வேலவன் சன்னதிக்கு அருகில் அகத்தியர் சன்னதி அமைந்துள்ளது.

சிவசக்தி வேலவன்
தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமான், வள்ளி - தெய்வசேனா சமேதராய் சிவசக்தி வேலவன் என்ற திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் வேலவனை ஏராளமான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.

வீணா தட்சிணாமூர்த்தி
குருவுக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தி, கோயிலின் கோஷ்டத்தில் அமைந்துள்ளார். அவருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் கோயிலின் உள்பிரகார மண்டபப் பகுதியில் வீணையுடன் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பதும் தனி சிறப்புக்குரியது. நின்ற கோலத்தில் வீணா தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கும் நிலையில், அவர் யோக குரு என அழைக்கப்படுகிறார்.

துர்க்கை அம்மன்
இக்கோயிலின் கோஷ்டத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேறக் கோரி வணங்கிச் செல்கின்றனர்.

லட்சுமியுடன் லட்சுமி நாராயணர்
கருவறை சன்னதியின் வலதுபுறத்தில் சங்கர நாராயணர், லட்சுமியுடன் லட்சுமி நாராயணர், சாஸ்தா, வீணா தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

சாமரக்கன்னிகா
சுயம்பு பசுபதீசுவரர் சன்னதி கருவறை முன்புள்ள கோபுரத்தின் இடதுபுறத்தில் சமயக் குரவர்கள் நால்வரும், ஆதிலிங்கேசுவரர், சாமரக் கன்னிகாவும் எழுந்தருளியுள்ளனர். ராஜாக்களுக்கு சாமரம் வீசும் பணிப்பெண்கள் போல, இறைவனுக்கு சாமரம் வீசும் கோலத்தில் இவர் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவர் சாமரக்கன்னிகா என அழைக்கப்படுகிறார்.

கோயிலில் சப்தமாதாக்கள், நவக்கிரகங்கள் சன்னதி அமைந்துள்ளன. இவைத் தவிர சனிபகவான் தனி சன்னதி கொண்டும், சூரியன், சந்திரப் பகவான்கள் தனித்தனி சன்னதி கொண்டும் இக்கோயிலில் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்புக்குரியது.
சனிக்கிழமைகளில் சனீசுவர பகவானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

பிச்சாடன மூர்த்தி
வழக்கமாக சிவாலயங்களின் கோஷ்டத்தில் பிரம்மா எழுந்தருளுவதுதான் வழக்கம். ஆனால், திண்ணக்கோணம் கோயிலின் கோஷ்டத்தில் பிச்சாடன மூர்த்தி மட்டுமே எழுந்தருளியிருப்பதும் தனி விசேஷம். மேலும், இறைவன் சன்னதியின் பின்பகுதியில் அர்த்தநாரீசுவரரும் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் தல விருட்சமாக வில்வம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளும் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்
வசந்த நவராத்திரி உற்ஸவம் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தவிர அகத்தியர் பூஜை ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மாசி மகம், விஜயதசமி வழிபாடு, கார்த்திகைத் தீபத் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மாதந்தோறும் பிரதோஷ, பௌர்ணமி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு, சங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை, கிரிவலம் போன்ற வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றன. இவைத் தவிர 108 கோ பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.

நடை திறப்பு:
இக்கோயிலில் இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்குத் திறக்கப்படும் கோயிலின் நடை இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

⛳அமைவிடம்

திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 46 கி.மீ. தொலைவு.
1.திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவு.
திருவானைக்கா, நெ.1 டோல்கேட், நொச்சியம், சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், ஏவூர் வழியாக திண்ணக்கோணம் அமைந்துள்ளது.

2. திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, 
மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி வந்து, அங்கிருந்து திண்ணக்கோணத்துக்கு வேளகாநத்தம், ஏவூர் வழியாக வரலாம். 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். 
ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.
நல்ல பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் ஆலயம். தூய்மையாகவும், பராமரிப்புடனும் உள்ளது. 
சுவாமி கருவரை அமைப்பு, நந்தி,மிகவும் வித்யாசமானது. லிங்கோத்பவ வலம்புரி விநாயகர், முற்றிலும் வேறுபட்ட அமைப்பு. அம்பாள் தனி சன்னதி சிறப்பு. பெரும்பாலும், கற்றளியாக இருப்பதால், ஆலயம் பூரணத்துவத்துடன் நல்லவழிபாட்டில் உள்ளதால், சிறப்பாக உள்ளது.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

முசிறி - அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்

முசிறி - அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்  

முசிறி தொட்டியம் நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு பர்லாங் தொலைவில் காவிரி ஆற்றின் அருகே உள்ளது.

காவிரி வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பூரவள்ளி சமேத ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் ஆலயம் சந்திரனுடைய சாபத்தினை நீக்கும் பொருட்டு சந்திரனால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்தலம் ஆகும்

மிகவும் பழமையான கோவில் புணரமைப்பு செய்து மிகவும் அழகாக உள்ளது.

இறைவனின் திருநாமம் சந்திரமவுலீஸ்வரர்
இறைவியின் திருநாமம் கற்பூரவல்லி.

சிவபெருமானை சந்திரன் வந்து வழிபட்டமையால், மூலவரை சந்திரமௌலீசுவரர் என்று அழைக்கின்றனர்.

தலவரலாறு.
ஒருமுறை சந்திரன் விநாயகரிடம் சாபம் பெற்றார். சந்திரன் தனது சாபம் நீங்க முசிறியில் அருள்பாலிக்கும் சந்திரமவுலீஸ்வரரை ஆராதித்து, தனது சாபம் நீங்கப்பெற்றார். சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்ததால் இத்தல இறைவன் 'சந்திரமவுலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அத்துடன் மூன்றாம்பிறை சந்திரனை தனது தலையிலும் சூடியுள்ளார்.

🛕ஆலய அமைப்பு

ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம்,
 ராஜகோபுரம் கடந்ததும், உள்ளே நுழைந்ததும் நீண்ட நடைபாதை, அடுத்து வாத்திய மண்டபம், கொலுமண்டபம், உற்சவ மண்டபம் அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் ஒரு நீண்ட சுரங்க பாதை இருந்து, பின்னர் அதை அடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

முன் மண்டபம் தாண்டி, வீரபத்திரர் சிலை மகாமண்டபத்தில் அமைந்துள்ளது. 
கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் ஒரு அழகிய பெண் சிலை இறைவனை வணங்குவதைப் போல அமைந்துள்ளது. 

அடுத்துள்ள அர்த்த மண்டபம் நுழைவாயிலில்
இச்சிவாலயத்தில் உய்யக்கொண்டார் மற்றும் ஆட்கொண்டார் ஆகியோர்கள் துவாரபாலகர்களாக உள்ளார்கள். துவார பாலகர்களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க உள்ளே கருவறையில்
இறைவன் சிவலிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஆலய திருச்சுற்றில்நால்வர், விநாயகர், முருகன், வள்ளி , தெய்வானை விசுவநாதர் விசாலாட்சி ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சுற்றுப் பிரகாரத்தில், நவக்கிரக சன்னதி, சனீசுவரன், பைரவர், நால்வர் சன்னதி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகப்பெருமான் மற்றும் காசிவிசுவநாதர் சன்னதிகள் உள்ளன.

வடக்குப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இறைவியின் ஆலயம் தனியாக உள்ளது. அன்னை கற்பூரவல்லி நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் அருள்புரிகிறாள். அன்னை மேல் இரு கரங்களில்தாமரை மலரையும், கீழ் இருகரங்களில் அபயவரத ஹஸ்த முத்திரைகளுடன் கீழ் திசைநோக்கி காட்சி தருகிறாள்.

பூசைகள்
ரோகிணி அஸ்தம் திருவோணம் மற்றும் மிதுன ராசி மிதுன லக்ன காரர்கள் வழி விட வேண்டிய சிவ ஸ்தலம் 

மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது இந்தநட்சத்திரக்காரர்கள் பலன் பெறவும், பரிகாரம் பெறவும் அன்னையை வணங்க வேண்டிய முறை உள்ளது தாமரைப்பூவில் அகல் வைத்து தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறைவலம் வரவேண்டும். பின்.அந்த அகல் விளக்கை அன்னை சன்னிதியில் வைத்து வாசனை மலர்களால் அன்னையை அர்ச்சனை செய்து வணங்க, நல்லபரிகாரம் பெற முடியும் என்கின்றனர் பக்தர்கள்.

பூசைகள் / விழாக்கள்
பைரவர் சன்னதியில் அஷ்டமி தினத்தில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.
பைரவருக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றால் அபிசேகங்கள் செய்யப்பட்டு மிளகுசாதம், தயிர் சாதம் படைக்கப்படுகின்றன. வெண்பூசணி மற்றும் தேங்காய் மூடிகளில் வேப்ப எண்ணெய் வைத்து விளக்குகள் போட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

 பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள்.நடைபெறுகின்றன.

 வைகாசி விசு, ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், ஆவணி மூலம், சஷ்டி,கார்த்திகை தீபம் ஆருத்ரா, தை பூசம், மாசிமகம் போன்ற நாட்களில் இறைவன் வீதியுலா வருவதுண்டு.

2005 ல் ஒரு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நகர்புறத்தில் ஆலயம் இருப்பதால், ஆலயம் எல்லா பூசைகளுடனும், பொலிவுடனும் உள்ளது.

அனைத்து நாட்களிலும் மிகவும் சௌகரியமாக தரிசனம் செய்யலாம்.

அண்ணாமலையார் ஆலயம். 
மகாமாரியம்மன் ஆலயம்.

பிரதான சாலையில் அண்ணாமலையார் ஆலயம்
சிறியது. பெரியலிங்கம் கிழக்குப் பார்த்து உள்ளது.
கருவரை மண்டபம் பெரியது. அகலமான முன்முண்டம் உள்ளது.  
அண்ணாமலையார் ஆலயம் மிக அருகில் மகாமாரியம்மன் ஆலயமும் உள்ளது. ராஜகோபுரம் மண்டபத்துடன் தனிக் கருவரையில் மகாமாரியம்மன் கிழக்கு நோக்கியுள்ளார்.

பூசைகள், விழாக்கள் உண்டு. அனைத்து ஆலயங்களும் நல்ல பராமரிப்பில் உள்ளன.

 பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் பிரதான சாலையில் நிறுத்தலாம். ஆலயம் அமைந்துள்ள தெரு குறுகிறது.

நல்ல பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் ஆலயம். தூய்மையாகவும், பராமரிப்புடனும் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதால் பொலிவுடன் உள்ளது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

வெள்ளூர் -திருக்காமேஸ்வரர், சிவகாமசுந்தரி -மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

வெள்ளூர் -திருக்காமேஸ்வரர், சிவகாமசுந்தரி -
மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

⛳திருச்சியில் இருந்து முசிறி வழி நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். முசிறி - 7, நாமக்கல் 50, திருச்சி 37 கி.மீ தூரம். இந்த கோயில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் குணசீலம் அருகில் உள்ளது.

🌟இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர், சுயம்பு லிங்கம் இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.
இவரை மன்மதனும், ரதியும், திருமகளும் வழிபட்டுள்ளனர்.

🌼மிகவும் பழமையான தொன்மையான கோயில். இச்சிவாலயத்தினை கி.பி ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழன் புணரமைத்து குடமுழுக்கு செய்தாக. செய்தி கல்வெட்டில் உள்ளது.

🌟மகாலட்சுமிக்கு பிரத்தியேகமான திருச்சி அருகில் உள்ள கோயில் 

ஆலய அமைப்பு:
இக்கோயிலுக்கு தெற்கு ராஜகோபுர வாசல், கிழக்கில் 5 நிலை ராஜகோபுர வாசல் என இரு நுழைவுவாயில்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. தனி சண்டிகேஸ்வரர் உண்டு.

கோயிலின் பிரகாரத்தின் தென் மேற்கில் போஷகணபதி சன்னதி, மேற்கில் வள்ளி-தேவசேனா உடனுறை சண்முகர் சன்னதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்களின் சன்னதி போன்றவை அமைந்துள்ளன.

வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் ரதியுடன் மன்மதன் ஈசனை வணங்கியவாறு உள்ளனர். இதன் அருகே கோயில் தல மரம் வில்வம் அமைந்துள்ளது. 

பக்தர்கள் வில்வ மரத்தினை திருமகளாக வழிபடுகின்றனர். ஆலயத்தின் வடக்கே திருமகள் சன்னதி உள்ளது.

வாளாசுரனை அழிக்க முற்பட்ட முசுகுந்தனுக்கு வெற்றியை அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் இக்கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் அருகில் தரிசிக்கலாம்.

சிறப்புகள்

இறைவன் : திருக்காமேசுவரர்

இத்திருக்கோயில் இறைவன் திருக்காமேசுவரர் என்றழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.

இத்தல இறைவன் தன் மீது கோபம் கொண்ட மகாலட்சுமியைச் சாந்தப்படுத்தி, மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்ததால் லட்சுமிபுரீசுவரர்

மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர்,  

மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதர் 

மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அளித்ததால் ஐஸ்வர்யேசுவரர்

முசுகுந்த சக்கரவர்த்திக்கு வாளாசுரனை வெல்லக்கூடிய ஆற்றலை அளித்தது.
வில்வாரண்யேசுவரர்

மேலும், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்ற திருநாமங்களும் உண்டு.

சிவபோக சக்கரம்:
சிவன் கருவரை உள்மன்டபத்தில் உள்ள சிவபோக சக்கரம்:
போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு, அதில் சரியான திதியும், நட்சத்திரமும், ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்;
அதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின இதை அறிந்த பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர்; 

ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!

போகர் உள்ளிட்ட பலகோடி சித்த மகான்களுக்கு அஷ்டமாசித்தி அளித்த திருக்கோயில் என்பதால், இன்றளவும் ஆண்கள் சட்டை, பனியன் போன்ற மேலாடைகளின்றி இறைவன் திருக்காமேசுவரைத் உள் மண்டபத்தில் சென்று தரிசனம் செய்வது தொன்று தொட்டுத் தொடரும் வழக்கமாக உள்ளது.

திருக்காமேசுவரப் பெருமானின் பார்வை நமது சரீரத்தில் பட வேண்டும். அவ்வாறு படும்போது எவ்வளவு மனக் கஷ்டங்கள், நமது முயற்சிக்கான தடைகள் இருந்தால் அவை அனைத்தும் விலகி, எண்ணங்கள் சரியாகி விரைவில் கைகூடும் என்பது அனுபவபூர்வமான நிகழ்வாகும்.

இறைவி : சிவகாமசுந்தரி

தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அம்மனாக சிவகாமசுந்தரி அம்மன் தெற்கு நோக்கிய எழுந்தருளி, காட்சியளித்து வருகிறார். தன் மீது விழுந்த காமபாணத்தால் சிவபெருமானுடன் கூடியதால், பார்வதி தேவிக்கு சிவகாமசுந்தரி எனப் பெயர் வந்தது இக்கோயிலில்தான்.

ஐஸ்வர்ய மகாலட்சுமி

வேறெங்கும் காண இயலாத வகையில், தட்சிண பாகம் என்று கூறப்படும் வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரத்தையும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.

கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில், அபய, வரதம் கூடிய திருக்கரங்களோடு, மேலிரு கரங்கள் தாமரை மலர்கொண்டு காட்சியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் - ஐஸ்வர்ய மகாலட்சுமி. 

இங்கு லட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வமரத்துக்கு முதலில் பூஜை செய்கின்றனர்.
மேலும் சிறப்பான சன்னதிகள்:

போகர் சன்னதி
🔱திருக்காமேசுவரர் திருக்கோயிலிலின் மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தைத் தரிசனம் செய்யலாம். திருக்கோயிலின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள பாதாள சுரங்கத்தில் கம்பீரமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்தியர் நாடியிலும், வசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்புக்குரியது.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

🌟குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. 

🌟முப்பத்து முக்கொடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. 

🌟இராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். 

🌟காமனை நெற்றிக் கண்ணால் சுட்டாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள்.

ஞான பைரவர்
மன்மதன் திருக்காமேசுவரப் பெருமானிடம் காமபாணத்தைப் பெற்று, அதை உயிரினங்கள் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாசாரம் தெரியாமல் திகைத்தார். உடனடியாக பைரவரை தியானித்து, அவரது பாதங்களில் காமபாணத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராகக் காட்சி தந்து, காமபாணத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்கு கொடுத்தார் அதனால் இத்திருக்கோயிலில் காணப்படும் பைரவர் ஞானபைரவாகக் காட்சியளித்து வருகிறார்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனது.

முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும் வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து, வெற்றியைக் கொடுத்தது இத்திருக்கோயில்தான். அதனால்தான் இவ்வூர் வெள்ளூர் எனப் பெயர் பெற்றது. மேலும் காலபைரவரை வழிபட்டு வாளாசுரனை வென்றதாக வரலாறு. 

தல விருட்சம் 
வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. அந்த வில்வமரத்தின் நிழலில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி எழுந்தருளியிருப்பது அதிலும் சிறப்பானதாகும். மேலும் இக்கோயில் தீர்த்தத்துக்கு ஐஸ்வர்ய தீர்த்தம் என்றும் பெயர்.

தலபுராணத்தை எடுத்துரைக்கும் முகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.

கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரம் சுற்றிலும் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:
🪷கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ராகுகால நேரத்தில் செவ்வரளி மாலை அணிவித்து 
ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி கிட்டும்.

🪷தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மகாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🪷தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். 
சுக்கிர தோஷம் உடையவர்கள், வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் (காலை 6 முதல் 7 மணி வரை), அருள்மிகு ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு 16 வகை திருமுழுக்கு செய்து, 16 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி அம்பாளை 16 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், 16 வகைச் செல்வங்களும் கிடைக்கும். செல்வச் செழிப்புடன் திகழலாம்; கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் 
🪷 சகல தோஷங்களும் நீங்கும், கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது தொன்நம்பிக்கை.

🪷 இத்தல சிவனை வழிபட திங்கள் கிழமை, 7 முறை சுற்றி வந்து வழிபடுதல் வழக்கம்.

🪷 இத்தல அம்மனை (மகாலட்சுமி) வழிபட்ட வெள்ளிக்கிழமை, 16 முறை சுற்றி வந்து வழிபடுதல் வழக்கம்.

🪷திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
🪷கணவன்- மனைவி ஒற்றுமை, மாங்கல்ய பலம், ஐஸ்வர்ய யோகம் கிடைக்க இத்திருக்கோயில் இறைவனைப் பிரார்த்தனை செய்து, பலன் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
🪷தம்பதி ஒற்றுமை, மாங்கல்ய பலம் அளிக்கும் பரிகாரத் தலத்தின் இறைவியாக சிவகாமசுந்தரி திகழ்வதால், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை இத்திருக்கோயில் இறைவி நிறைவேற்றித் தருவதாகக் கருதி, அவரை மனமுருக வழிபட்டுச் செல்கின்றனர். 
🪷குழந்தை பாக்கியத்துக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும், அமாவாசையன்று இறைவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து, இறைவன் திருக்காமேசுவரர், இறைவி சிவகாமசுந்தரி ஆகிய இருவரையும் வலம் வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்

நடை திறப்பு .
வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12.00மணி வரையிலும், மாலை 4.00 - 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். 
ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் தென்புறம் வாகனங்கள் நிறுத்தலாம்.
நல்ல பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் ஆலயம். தூய்மையாகவும், பராமரிப்புடனும் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதால் பொலிவுடன் உள்ளது.
சுவாமி அர்த்தமண்டபத்தில் தரையில் போகர் சக்கரம், மேல் விதானத்தில் உள்ள சக்கரம் உள்ளதால், மிகவும் சக்திவாய்ந்த இடமாக கருதப்படுகிறது. அங்கே சென்று வழிபட ஆண்கள் மேலாடை இன்றி உள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஐஸ்வர்ய மகாலெட்சுமி தனி சன்னதி சிறப்பு.
போகர் ஈசான மூலையில் பாதாள அறையில் வீற்றிருக்கும் கோலம் சிறப்பான ஈர்ப்புடையது.

பெரும்பாலும், கற்றளியாக இருப்பதால், ஆலயம் பூரணத்துவத்துடன் நல்லவழிபாட்டில் உள்ளதால், சிறப்பாக உள்ளது.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #வெள்ளூர் -திருக்காமேஸ்வரர், சிவகாமசுந்தரி -
மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம் 15.02.2026

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் செங்கல்பட்டு மாவட்டம்

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும...