Showing posts with label திருமுறை தலங்கள். Show all posts
Showing posts with label திருமுறை தலங்கள். Show all posts

Sunday, September 1, 2024

அம்பல்

அம்பல்:

திருமுறை பாடல் பெற்றத் திருத்தலம்


இது ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து சுதையால் ஆன பெரிய நந்தி உள்ளது. திருச்சுற்றில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்பாள், நடராஜர், நவக்கிரகம், நந்தி, விநாயகர், பாலசுப்ரமணியம், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, சரஸ்வதி அம்மன், சனி, முருகன், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறத்தில் சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் பூங்குழலி அம்மன் சன்னதி உள்ளது. தரை தளத்தில் திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து ஜம்புகேஸ்வரர் சன்னதி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வலம் முடித்து, படிகளேறி மேலே சென்றால் மாடக்கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் உயர்ந்த தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி சுகந்த குந்தளாம்பிகை.

இத்தலத்தில் பிரமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 19.7.26

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்   மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை ம...