Sunday, August 30, 2026

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர்
வேதபுரீசுவரர் கோயில்
தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாக பாலகுஜாம்பிகைகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.
மூலவர்:வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன்:இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம்
புராண பெயர்:திருவோத்தூர், திருஓத்தூர்
மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.
இத்தலம், திருஞானசம்பந்தரால் தேவாரப்பதிகங்கள் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி. திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார்.
சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் “செய்யாறு’ என அழைக்கப்படுகிறது.
வழிபட்டோர்: தொண்டைமான், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

தல சிறப்பு:
இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம். ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது. அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. 
இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.
சிவபக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்தி தேவர் படைத்துணையாக சென்றுள்ளார். இதற்காக இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார். சிவனின் 
ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் (தல மரமான) பனைமரங்கள் உள்ளன.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திருஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன.
பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால்பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.
8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.
சண்டேஸ்வரர் - ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒருகையில் மழுவுடன்; ஒரு கையை மடக்கிய காலின் தொடைமீது வைத்தவாறு காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கும், துர்க்கைக்கும் தனிக் கோயிலாக உள்ளது.

இராசாதிராசன், குலோத்துங்கன், இராசேந்திரன், விக்ரமசோழன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இறைவன், 'ஓத்தூர் உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன.

நாகலிங்கம் அபிசேகம் :
கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.
தை மாதம் ரத சப்தமியைத் தேர் திருநாளாக பத்து நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அமைவிடம்
வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
மேலும் சில வலைதல செய்திகள்
வரலாற்று செய்திகள்
புராண வரலாறு:
தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி.

இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். ஓத்து என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது.

திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர்.
இந்த இறைவன் வேதபுரீசுவரர் என்று பெயர்பெற்ற கதை பின்வருமாறு வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.

நத்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தலப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு - விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்கு படைத் துணையாக வருவார், நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும்; "நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோர். நீ போய்ப்பார்; அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்." என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்கு படைத்துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்

கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை :

பனை மரம் :
இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், “”எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர். உடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
நாகநாதர்:
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
11 தலையுள்ள இதை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

ஒரு சமயம் திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டிலே உள்ள திருவோத்தூர் என்னும் இந்தத் தலத்துக்கு வருகிறார். இங்கே சமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பதையே காண்கின்றார். தென்திசையிலிருந்து வந்த ஞானசம்பந்தர், சேயாற்றின் தென்கரையில் இருந்தே, திருவோத்தூர் வேதபுரி நாயகன் கோபுரத்தையும் மதிலையும் தரிசித்து, அந்தக் கரையிலுள்ள திருமடத்தில் தங்குகிறார்.
மதுரையில் ஞானசம்பந்தர் நிகழ்த்தியவைகளைக் கேட்டிருந்த சேயாற்றுச் சமணர்கள், ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த கொடிய பாம்பொன்றை அவர் மீது ஏவுகின்றார்கள். அவரோ பாம்பைச் சமணர்களது 'வேந்தன் வாழ் இஞ்சி சூழ் திருமனைக்கே ஏகென்று உத்தரவு இடுகிறார். அதனால் துயருற்ற அரசன் வந்து, அடிவணங்க, ஞானசம்பந்தர் வேண்டுகோளை ஏற்று இறைவனும் மகுடி ஏந்திப் பாம்பாட்டியாக வந்து, அதைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் சென்று மறைகிறார்.

திருஞான சம்பந்த பெருமான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இங்கு போந்து வேதபுரீசுவரரையும் இளமுலையம்பிகையையும் வழிபட்டு ஆண்பனை பெண்பனையாய்க் காய்க்குமாறு பதினோறு பாசுரங்கள் பாடியருளினார்.

தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் பெற்றி மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.

அனக்காவூர் செய்யாற்றை வென்றான் பெயர் காரணம் :

இதனால் சமணர் பகை வளர, அரசன் விரும்பியபடி புனல் வாதத்திற்கே ஒத்துக் கொள்கிறார். சமணர்கள் எழுதியிட்ட ஓலையைச் சேயாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது. ஆனால் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் ஒரு பாட்டை ஏட்டில் எழுதி, ஆற்றில் இட, அது புது நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறி ஒரு பழம்பதியை அடைகிறது. இவ்வாறு ஏடு எதிர் சென்று நின்று தங்கின இடமே அன்று முதல் சேயாற்றில் வென்றான் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. தற்போது இது செய்யாற்றைவென்றான் என அழைக்கப்படுகிறது. மேலும் அந்த எடுகல் அனுகாமல் சென்றதால் அனுகாவூர் எனவும் தற்போது அனக்காவூர் என அழைக்கப்படுகிறது.

ஆண் பனைகள் குழையீன்றன :
இப்படியெல்லாம் தோற்றாலும் சமணர்கள் மாத்திரம் தங்கள் வாதத்தை விடுபவர்களாக இல்லை. 'இவ்வூர்க் கோயிலிலும் ஆற்றங்கரையிலும் காயாது நிற்கும் ஆண் பனைகள் நிற்கின்றன. அவைகளைக் காய்க்கும் பென் பனைகளாக ஆக்க முடியுமா?' என்று சம்பந்தரிடமே மறுபடியும் சவால் விடுகிறார்கள். அந்தச் சவாலை ஏற்றுக் 'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என்ற பாடலைப் பாட, எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், கோயிலுக்குள் நின்ற ஆண்பனை குலைதள்ளிப் பெண்பனையாக மாறுகிறது. இன்றைக்கும் அந்தப் பனைகளின் வாரிசாகக் கோயில் பிராகாரத்திலேயே குலை ஈனும் ஐந்து பனைகள் நின்று கொண்டிருக்கின்றன.
🔱
திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம்:

குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர்

அழையா மேயருள் நல்குமே.

-திருஞானசம்பந்தர்

ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.
🔱
நன்றி
#திருமுறைதலம்
மீள் தரிசனம் 23.07.2023 மற்றும் 16.8.26
#மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
நன்றி🙏

காஞ்சிபுரம்#திருக்காலிமேடுதிருக்கச்சி நெறிக்காரைக் காடு (புதன்)

#காஞ்சிபுரம்
#திருக்காலிமேடு
திருக்கச்சி நெறிக்காரைக் காடு

தொண்டநாட்டு திருமுறை தலம்.
ஸ்ரீ ஸத்யநாதர், ஸ்ரீ பிரம்மராம்பிகை ஆலயம். புதன் வணங்கி கிரகம் பெற்ற தலம். எனவே புதன் பெரும் விஷேசம். இந்திரன் வணங்கியது. மேற்கு பார்த்த தலம் மூலவர் செம்மன் நிறமான தான் தோன்றி லிங்கம்
காஞ்சீபுரத்தில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. மன்னர் காலத்தில், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனகாஞ்சி என மூன்று பகுதிகளைக் கொண்டு காஞ்சீபுரம் நகரம் விளங்கியது.

இதில் சைவ ஆலயங்களில் திருக்கச்சி ஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்கச்சி நெறிக்காரைக் காடு, திருக்கச்சி அநேகதங்காவதம் என ஐந்து தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், கச்சி மயானம், இடபேஸ்வரம் என இரு வைப்புத் தலங்களும் அமைந்துள்ளன. இதில் திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்ற தேவாரத்தலமே இன்று திருக்காலிமேடு என அழைக்கப்படுகிறது.

இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்
வரலாறு :
காஞ்சீபுரம் பழங்காலத்தில் தற்போதைய திருக்கோவில் இடத்திற்கும் மேற்கே பரந்து விரிந்து இருந்துள்ளது. அதற்குச் செல்லும் வழியில் காரைக் காடுகள் நிறைந் திருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் இத்திருக்கோவில் அமைந்திருந்ததால், இத்தலத்தை காரைக்காடு என திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். அதையொட்டி திருக் கச்சி நெறிக்காரைக்காடு என்ற பெயர் வழங்கலானது.

காஞ்சி புராணம், இத்தலத்தினை ‘சத்ய விரத நாதம்’ என அழைக்கின்றது. காஞ்சி மாநகரின் பன்னிரண்டு பெயர்களில் சத்யவிரதநாதமும் ஒன்றாகும். இங்கு எழுந்தருளிய இறைவன் சத்தியநாதர் என வழங்கப்படுகிறார். இவரே காஞ்சீபுரத்தின் ஆதி நாயகராவார். ஜோதிலிங்கத்தை விஷ்ணு வழிபடுவதற்கு முன்பாகவும், மண் லிங்கமான ஏகம்பனை, அம்பிகை வழிபடுவதற்கு முன்பாகவும் தோன்றியது இந்த ஆலயம் என்று கூறப்படு கிறது. அன்னை போக சக்தியாக (உலோகத் திருமேனியில்) கருவறைக்குள் எழுந்தருளி உள்ளார். அன்னையின் திருப்பெயர் பிரமராம்பிகை என்பதாகும். அன்னை வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப் பட்டுள்ளன.

இறைவன் பெயர் சத்யநாதசுவாமி. செம்மணலால் உருவானவர். செம்மேனி கொண்ட இறைவன், மேற்கு முகமாய் காட்சி தருகிறார். இவரின் திருமேனி பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பு சக்தியுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு முன்புறம் இந்திரன் அமைத்த இந்திர தீர்த்தம் உள்ளது. இதன் கிழக்குக் கரையில் இந்திரன் வழிபட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். தலமரம் காரைச் செடியாகும்.
தனது தவ வலிமையால் விரும்பிய வடிவம் பெறும் வரம் பெற்றவன் இந்திரன். ஒரு முறை கவுதம மகரிஷியின் உருவம் தரித்து, அவரது மனைவி அகல்யாவை அடைந்தான். இதையறிந்த மகரிஷி, இந்திரனுக்கு சாபமிட்டார். அகல்யாவையும் கல்லாக மாற்றினார். அந்த சாபம் நீங்குவதற்காக அகல்யா வழிபட்ட தலம் இது என்று தல புராணம் தெரிவிக்கிறது.

சந்திரனும், வியாழனின் பத்தினியான தாரைக்கும் பிறந்தவர் புதன். தன் பிறப்பின் ரகசியம் அறிந்து மனம் வருந்திய புதன், காரைக்காடு சத்திய விரத நாதரை வழிபட்டு நவக்கிரகங்களில் ஒன்றாகும் வரம் பெற்றார். எனவேதான் இந்த தலத்தில் சிவன் சன்னிதியை நோக்கி புதன் சன்னிதி அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு :
கோவிலில் எளிய நுழைவு வாசலில் நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்திதேவரை தரிசிக்கலாம். மூன்று நிலை ராஜகோபுரம் மேற்குநோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் அகன்ற வெளிப் பிரகாரம் உள்ளது. சங்கிலி மண்டபம், புதன் சன்னிதி, சனி பகவான் சன்னிதி இருக்கின்றன. உட்பிரகாரத்தில் நாற்புறமும் திருமாளிகைப் பத்தி அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சபை உள்ளது. அருகே நால்வர், புதன், இந்திரன், பைரவர் வீற்றிருக்கின்றனர்.

கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கிய படி விநாயகர், மூன்று லிங்கங்கள், ஆறுமுகன் சன்னிதி இருக்கிறது. இதையடுத்து இரண்டு சிறிய லிங்கங்கள் உள்ளன. தென்மேற்கு முனையில் பிரதோஷ நாயகரும், திருமாலும், திருமகளும் அருள்புரிகின்றனர். தென் மேற்கு முனையில் உலாத் திருமேனிகள், பஞ்சமூர்த்திகள் அமைந்துள்ளன.

புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
நன்றி
#திருமுறைதலம்
மீள் தரிசனம் 23.07.2023 மற்றும் 16.8.26
#மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம்சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெரு 16.8.2026

#காஞ்சிபுரம்
சித்திரகுப்தர் கோயில் 
காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.
இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை

நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம்நகரீஸ்வரர் கோவில் கிழக்கு ராஜ வீதி, காஞ்சிபுரம் 16.8.26

#காஞ்சிபுரம்
நகரீஸ்வரர் கோவில்
 கிழக்கு ராஜ வீதி, காஞ்சிபுரம்
பெரிய காஞ்சிபுரத்தில் (பெரிய காஞ்சிபுரம்) பரபரப்பான கிழக்கு ராஜா தெருவில் அமைந்துள்ள நகரீஸ்வரர் கோயில், வரலாற்று ரீதியாக நகரத்தின் உருவாக்கத்துடன் தொடர்புடைய ஒரு பழமையான சிவன் கோவிலாகும்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
புராண சங்கமம்: "நகரீஸ்வரர்" என்ற பெயர் "நகரத்தின் இறைவன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்ளூர் நம்பிக்கையின்படி, சிவபெருமான் காஞ்சிபுரம் நகரத்தை உருவாக்க காரணமாக இருந்தார், மேலும் இந்த கோவிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. இந்த லிங்கம் இந்திரனால் நிறுவப்பட்டது என்று மற்றொரு புராணக்கதை கூறுகிறது.
வரலாற்றுச் சூழல்: இந்த தலம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த வேர்களைக் கொண்டிருந்தாலும், தற்போதைய அமைப்பு விஜயநகர காலத்தில் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
தெய்வம் மற்றும் முக்கியத்துவம்: நகரீஸ்வரர் என்று போற்றப்படும் சிவபெருமானே முதன்மை தெய்வம். இக்கோயில் பவ விமோச்சன ஸ்தலம் (பாவங்களிலிருந்து விடுபடும் இடம்) என்று கருதப்படுகிறது.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலயம் என்றாலும், பிரதான சாலை மேற்கில் உள்ளதால் அங்குள்ள காட்சி கோபுரம் உள்நுழைந்து ஆலயம் வரலாம். கிழக்கு நோக்கிய கருவரை அர்த்தமண்டபம் நிருதி மண்டபம் மற்றும் முன் மன்டபம் உள்ளது
கருவரை நுழைவில் சிறிய விநாயகர், மற்றும் பால முருகன் இடது வலது புரங்களில் உள்ளனர் நடராஜர் சுதையில் உள்ளார்
கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் தட்சிணா மூர்த்தி லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பிரகாரத்தில் வண்ணி மரம் சப்தகன்னிகள் விநாயகர், நாகர் உள்ளன

ஜோதிட முக்கியத்துவம்: ராகு-கேது தோஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் (சர்ப்பம் தொடர்பான துன்பங்கள்) ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற பிரார்த்தனை செய்யும் இடமாக இந்த கோயில் குறிப்பாகப் போற்றப்படுகிறது, இது நாகர்களுடன் (பாம்பு கடவுள்கள்) தொடர்பைக் குறிக்கும் பெயர் காரணமாக இருக்கலாம்.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் (100 மீட்டர் தொலைவில்) கோயில் வசதியாக அமைந்திருப்பதால், எளிதில் செல்ல முடியும்
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் (மணிகண்டீசம்) #காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம் காஞ்சிபுரத்திலுள்ள நவகிரகங்கள் வழிபட்ட (சனி) சிவன் கோயில் 16.8.26

#காஞ்சிபுரம் 
மணிகண்டீசுவரர் கோயில் (மணிகண்டீசம்) 
#காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம் 
 காஞ்சிபுரத்திலுள்ள நவகிரகங்கள் வழிபட்ட (சனி) சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் இவ்விறைவனை வழிபட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.
சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பிராந்திய , வரதராசபெருமாள் கோயிலின் மேற்கே இக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் சுமார் 4-வது கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சி நம்பி தெருவில் இத்தலமுள்ளது.

ஆலய அமைப்பு
1200 வருடம் முன் பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயம். தெற்கு நோக்கிய நுழைவு வாயில் மேற்கு நோக்கிய இறைவன். பெரிய விசாலமான ஏகப்பிரகாரம்  
இறைவர்: மணிகண்டீசுவரர் மேற்கு நோக்கிய கருவரையில் உள்ளார் அர்த்த மண்டபம் முன் மண்டபம் உள்ளது
முன்மன்டபத்தில் சனிஸ்வரர், அவரின் காக வாகனம் எதிரில் உள்ளது.
மேலும் சூரியன் உள்ளார்.

மேல் பிரகாரத்தில் தனி விநாயகர் மற்றும் பலிபீடம் அடுத்து பெரிய நந்தி ஈசணை பார்த்தவாறு மன்டபத்தில் உள்ளார்.
கோயிலின் உள்ளே மேற்புறத்தில், வாசுகி தன்னால் விடமெழுந்த குற்றம் தீரச் சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.
வடபுறத்தில் வள்ளி தெய்வாணையுடன் முருகர் சன்னதி, 3 சிவலிங்க சன்னதிகள் -
மார்க்கண்டேஸ்வரர், பானமுடீஸ்வரர், கணிகண்டீஸ்வரர் இணைந்துள்ளது.
வன்னி மரம் சுற்றி நாகர்கள் மற்றும் படவேட்டம்மன் வைத்துள்ளனர்

கோஷ்ட்டத்தில் துர்க்கை பிரும்மா சன்டிகேஸ்வரர் பெருமாள் மற்றும் தட்சினாமூர்த்தி உள்ளனர்
எதிரில் தனிமன்டபத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளது.

ஈசான பாகத்தில் புதிய அமைப்பாக வடக்கு நோக்கிய ஸ்ரீ சுந்தராம்பாள் சன்னதி ஒன்று தனியார் முயற்சியில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.
கீழ்பகுதியில் குளம் ஒன்றும் உள்ளது

தல வரலாறு
திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய நஞ்சுவால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்நஞ்சை இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரமன், திருமால் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனரென்பது தல வரலாறாகும். எனவே இக்கோயில், மணிகண்டீசம் என்றும், சுவாமி மணிகண்டீசுவரர் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது.

மூலாதாரம் அறியப்படாத, தொன்மையான நூலொன்று, இக்கோயில் "விஷகண்டீஸ்வரர்" சந்நிதியாக இருந்ததென்று தெரிவிக்கிறது.
ஈசனை விடமுண்டு செய்த பாவத்தை போக்க பிரம்மன் பிரதிட்டை செய்து திருமால் வழிபட்டது. சனி கிரக பரிகார தலமாக அறியப்படுகிறது.

தல விளக்கம்
மணிகண்டேசம் கூறும் தல விளக்கம் யாதெனில், தேவரும், அசுரரும் பிரமனொடும் சூழ்ந்து திருமாலை வணங்கி இறப்பினை வெல்லும் வழியை அருளவேண்டினர். திருப்பாற் கடலினின்றும் அமுதம் பெற்றுண்டலே உபாயமென மதித்து மந்தரத்தை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு சுராசுரர் கடைந்தபொழுது அங்கு வந்த வாலி, இயலாத அவரை விலக்கி மலை கடலில் அழுந்தாதபடி திருமால் ஆமையாய்த் தாங்கக் கடைந்தனன். வாசுகி வலிபொறாது வாய்நுரையைக் கக்கிப் பெருமூச்செறிந்தனன். அக்கலப்பினால் ஆலாலம் என்னும் கொடியவிட மெழுந்து உலகைக் கனற்றுவதாயிற்று.

வாலி ஓட்டெடுப்பப் பொன்னிறம் போய்ப் புகைநிறமுற்ற பிரமனும், வெண்ணிற மிழந்து கரிய நிறமுற்ற மேலும் நிறமாறிய பிறர் பிறரும் கயிலையைச் சரணடைந்தனர். ‘அஞ்சலீர்’ என்றருள் செய்த சிவபிரானார் திருவுளக் குறிப்பின்படிவிடம் யாண்டும் பரவிச் செறிந்து நின்றநிலை நீங்கி நீட்டிய மலர்க் கரத்தில் மலரில் வண்டுபோலத் தங்கித் திருக் கண்ணோக்குற்றுச் சிற்றுருவாய் மெய்யன்பர் திருமனம் இறைவன் ? திருவடிக்கீழ் ஒடுங்குமாறுபோல அடங்கியது. திருவடித் தொண்டராகிய தமிழ் முனிவர் திருக்கரத்தில் உழுந்தளவாகக் கடல்நீர் சுருங்குமேல் இந்நிகழ்ச்சி புகழ்ந்துரைக்கும் பொருளதோ? இறைவன் சங்கற்பப்படி அம்மையார் திருக்கண்களால் ஆலமுண்டு அமுதம்பொழிந்த அந்தவிடத்தைப் பிறரால் நிறுத்தலாகாத கண்டத்தில் நிறுத்தித் திருநீலகண்டர் ஆயினர். அருளைப்பெற்று மீண்டு எழுந்த விடத்தை இறைவனுக்காக்கிய பிழைதீரக் காஞ்சியில் சிவலிங்கம் தாபித்துத் திருமால் முதலானோர் தொழுது நீலமணியை ஒக்கும் கண்டம் உபகரித்த செய்ந் நன்றியை நினைந்து மணிகண்டேசர் என வழங்கினர். பின்பு கடலைக் கடைந்து அருளாற்பெற்ற அமுதத்தை அசுரரை வஞ்சித்துத் தேவர் உண்டு நோய் நீங்கி இறவாமையை எய்தினர். அமுதம் விடமும் போல அனைத்திலும் விரவி நிற்கும் இன்பம் தலைதூக்கித் துன்பம் தொலைய மணிகண்டேசர் வழிபடற் பாலர் ஆவர். இத்தலம் திருக்கச்சிநம்பி தெருவில் மணிகண்டேசர் ஆலயம் எனச் சிறப்புற்று விளங்கும்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்பணாமணீசுவரர் கோயில் (பணாமணீசம்)#காஞ்சிபுரம்நவக்கிரகஸ்தலம்அருள்மிகு பணாமுடிஸ்வரர் (பணாமணீசுவரர்) திருக்கோயில் ராகுகேது பரிகாரம் 16.8.2026

#காஞ்சிபுரம்
பணாமணீசுவரர் கோயில் (பணாமணீசம்)
#காஞ்சிபுரம்நவக்கிரகஸ்தலம்
அருள்மிகு பணாமுடிஸ்வரர் (பணாமணீசுவரர்) திருக்கோயில் பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவத்தலமாகும். சிறப்பம்சங்கள்: ராகு-கேது பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகும். இது நாக தோஷம் நீக்கும் ராகு-கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் பிரதான சாலையில் 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே ஒரு சிறிய வளைவுடன் மதில் சுவரும் உடையது அடுத்து பலிபீடம் மற்றும் மண்டபத்துடன் நந்தி உள்ளது 
சுவாமி கருவரை உள்நுழைவு தென்புறம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே மகா மண்டபம் உள் மண்டபம் அர்த்தமன்டபத்துடன் கிழக்கு நோக்கிய கருவரையில் ஈசன் உள்ளர்
பிரகாரத்தில் மேற்குபுரத்தில் வரசித்தி விநாயகர் சித்தீஸ்வர் தனித்தனியான சன்னதிகள் மற்றும் கோஷ்ட்டத்தில் நடனவிநாயகர், தட்சினாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர்

தல வரலாறு
திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்கி உலகைத் துன்புறுத்திய தன் தோசத்தைப் போக்கிக் கொள்ள, அனந்த தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் கரையில் சிவலிங்கத்தை நிறுவி, தன்னிடத்துள்ள மாணிக்கத்தைச் சுவாமிக்குச் சார்த்தி வழிபட்டு தன் தோசத்தைப் போக்கிப், பேறு பெற்றது. பாம்பின் மணியாகிய மாணிக்கத்தை கொண்டு வழிபட்டமையால், இவ்விறைவர் "பணாமணீசர்" என்று பெயர் பெற்றாரென்பது இத்தல வரலாறாக அறியப்பட்டது.
தல பதிகம்
பாடல்: (1) (பணாமணீச வரலாறு)
அத்த லத்திடைத் தன்பிழை அகலவா சுகியும்
பத்தி யிற்பணா மணீசனைப் பண்புற இருத்திச்
சுத்த நீர்நிறை அனந்ததீர்த் தத்தடந் தொட்டு
நித்தம் அக்கரைக் கண்இருந் தருச்சனை நிரப்பி.
பொழிப்புரை: (1)
அத்தவத்தின்கண் தனது பிழைதீர வாசுகி என்னும் பெரும் பாம்பும்
பேரன்பிற் பணாமணீசனை விதிப்படி தாபித்துத் தூயநீர் நிறைந்த அனந்த
தீர்த்தத் தடம் வகுத்து நாடொறும் அக்கரையிலிருந்து அருச்சனை முற்றுறச் செய்து,
பாடல்: (2)
பணாம ணீசனைத் தன்பண மணிகளாற் பரவி
நணாவ கத்தமர் நம்பனே நலிவுசெய் விடத்தை
உணாவெ னக்கொளும் உத்தமா எனத்துதித் துமையாள்
மணாளன் மேனியில் இழையெனப் பயில்வரம் பெற்றான்.
பொழிப்புரை: (2)
பணாமணீசப் பெருமானைத் தன்னுடைய படத்தின் இரத்தினங்களால்
பூசனை செய்து திருநணா என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
விரும்பியடையத்தக்கவனே! வருத்தம் செய்த விடத்தை உணவு போலக்
கொண்டு பருகும் தலைவனே! எனத் துதி செய்து உமையம்மை மணவாளன்
திருமேனியில் அணிகலமாகத் தங்குகின்ற வரத்தினைப் பெற்றனன்.
வாசுகி பாலில் விடம் பெய்த பிழையுந் தவிர்ந்து அணிகலனாக
இறைவன் திருமேனியில் விளங்கவும் பேறு பெற்றனன்.
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் தென்கிழக்கு பகுதியில் (சிறிய காஞ்சிபுரம் (விஷ்ணுகாஞ்சி) திருவள்ளுவர் தெருவருகே உள்ள ஐயங்கார்பாளையத் தெருவில் கிழக்கு பார்த்த சந்நிதியாக இச்சந்நிதி உள்ளது. மேலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ தொலைவில், உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ளது.

மிக மிகப் பழமையான ஆலயம் முழுதும் புனரமைக்கப்பட்டுவருகிறது சுவாமிமட்டும் தனி சன்னதி அமைப்பில் தென்மேற்குப் பகுதியில் பூசைகளுடன் உள்ளார்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் (காயாரோகணம்)#காஞ்சிபுரம் நவக்கிரகத்தலம் (குரு) 16.8.2026

#காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் (காயாரோகணம்)
#காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழமையான நவகிரக தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேசுவரர்
கும்பகோணம், நாகப்பட்டிணம் அடுத்து இங்கு காஞ்சியில் மட்டுமே காயாரோகணர் உள்ளார் என்பது சிறப்பு.
மேலும் வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்ற இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்
அமைவிடம்
 காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் பிள்ளையார்பாளையத்தில் தாயார் குளம் தெருவில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. 
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புலத்தில் இத்தலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தல விளக்கம்
காயாரோகணம்: காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.

இலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.

இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.
தல வரலாறு
பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் "காயாரோகணம்" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.
இறைவர், வழிபட்டோர்
இறைவர்: காயாரோகணேசுவரர்.
வழிபட்டோர்: குரு பகவான் (வியாழன்), மகாலட்சுமி.
ஆலய அமைப்பு
முதல் பிரகாரம்
கட்டமைப்பு பெயர் - பிற்கால பல்லவர் மற்றும் சோழன் காலம் வரஅரசன் பெயர் - பிற்கால பல்லவர் மற்றும் சோழன் காலம்
நூற்றாண்டு - 5th நூற்றாண்டு
கட்டமைப்பு விவரம் - இத்திருக்கோயில் மாடக்கோயில் எனவும் தூங்கானை மாடம் எனவும் வழங்கப்படும் அமைப்பில் உள்ளது கஜபிருஷ்ட்ட கருவரை அமைப்பு உடையது.
தேவகுரு, பிரகஸ்பதி, வியாழன் என்று கூறப்படுபவரும்,. நவக்கிரகங்களில் ஒருவருமான குருபகவான் தனிச்சன்னதியில் கைகளை கூப்பி யிறைவனை வழிபடும் நிலையில் அமர்த்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளி உள்ளார்
கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது.
முன்புறம் மிகப்பெரிய சுதை நந்தி மண்டபத்துடன் உள்ளது
ராஜகோபுரம் முன்னாக ஒரு நுழைவு வளைவு அமைக்கப்பட்டு அதில் தல குறிப்பு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்துள்ள ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில் பலிபீடம் அடுத்து,
கல்நந்தி மண்டபத்துடன் உள்ளார்.
நந்தி மண்டபம் அடுத்து வடபுறம் தனி சன்னதியில் குரு உள்ளார்.
 தென்புறம் வழியாக ஈசன் சன்னதிக்கு உள்ளே செல்ல முடியும்
உள்ள உள்ள முன் மண்டபத்தில் நடராஜர் மற்றும் ஒரு சிறிய நந்தி கிழக்குப்புறத்தில்
நிருதி மண்டபம் அர்த்த மண்டபம் தாண்டி கருவறையில் கிழக்கு நோக்கி ஈசனார் காயாரோகணா ஸ்வாமி அருள் தருகிறார்.

சுவாமி ஆலயம் அடுத்துள்ள தென்புறத்தில் தனி சோமஸ்கந்தர் கமலாம்பாள் சன்னதியும் உண்டு.
பிரகாரத்தில் நால்வர் மற்றும் வழிபட்ட நாகங்கள், மாவிரத லிங்கங்கள், பாலமுருகன், கஜபிருஷ்ட அமைப்பில் கருவரை இதன் கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் அமைப்புடன் தனி தட்சினாமூர்த்தி, பிரகாரத்தில் தென்மேற்கில் நாகத்துடன் விநாயகர் தனி சன்னதி கோஷ்ட்ட மேல் பகுதியில் ஸ்ரீவிஷ்ணு உள்ளார். வடக்கில் பிரும்மா அடுத்து துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர்
மேல் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மற்றும் மகாலட்சுமி தனி சன்னதிகள்,
வடக்கில் பைரவர், நவகிரகங்கள், கிழக்கில் சூரியன் மற்றும் தனி சுதை அமைப்பில் குரு சன்னதிகள் உள்ளன.
ஆலயம் அடுத்து வடபுறத்தில் சித்தர் வழிபட்ட லிங்கபேஸ்வர் தனி சன்னதி ஆலயத்தில் உள்ளார்.
மேலும், காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பிற பகுதிகள் பெரிய இடமாகக் காணப்படுகிறது. ஆலயம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு 2013ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் நல்ல பராமரிப்பில் தூய்மையாக உள்ளது சிறப்பு
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்சந்திரேசுவரர் கோயில் (#காஞ்சிபுரம்நவகிரகத்தலம்)சந்திரன் வழிபட்ட தலம் 16.8.2026

#காஞ்சிபுரம்
சந்திரேசுவரர் கோயில் 
(#காஞ்சிபுரம்நவகிரகத்தலம்)
சந்திரன் வழிபட்ட தலம்

காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் (சந்திரேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் அமைந்துள்ள நவகிரக பரிகார தலங்களில் சந்திரன் வழிபட்டது

மேலும், சந்திரனுக்கு சோமன்
என்ற மற்றொரு பெயருடனும் விளங்குவதால்; காஞ்சிப் புராணத்தில் இக்கோயில் சோமேச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.

இறைவர்: சந்திரேஸ்வரர்.
வழிபட்டோர்: சந்திரன் (திங்கள்)
தல வரலாறு
சந்திர தீர்த்தக் கரையிலிருந்த சந்திரன் வழிபட்ட இச்சிவலிங்க மூர்த்தம் தற்போது அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலில் பின்புறம் தனி ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இதன் அருகில் சந்திரன் திருமேனியுள்ளது.
இவ்விறைவரை சந்திரன் வழிபட்ட மூர்த்தியாகும். ஆதலின் இக்கோயில் சந்திரேசம் என்று வழங்குகிறது.
சந்திரதீர்த்தம் என்பது தற்போது வெள்ளைக்குளம் என்றழைக்கப்படுகிறது.
தல பதிகம்
பாடல்: (சந்திர தீர்த்தம்)
வீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன்
தேங்கமல முகைஅவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின்
ஆங்கண் நறுஞ்சுவைத்தெள்ளாரமுதத்தடந்தொட்ட தன்கோட்டி
பாங்குபெறப்பிஞ்ஞகன் தாள் அருச்சித் தேத்திப்பயன்பெற்றான்.
பொழிப்புரை:
பேரிருளை நீக்கி ஒளியைப் பரப்பிப் பயிரை வளர்க்கும் சந்திரன்
தேன் மருவிய தாமரை அரும்பை மலர்த்துஞ் சருவ தீர்த்தத்திற்குத் தெற்கில்
நறிய சுவையையுடைய தெள்ளிய அரிய அமுத மயமான நீர் நிலையை
அகழ்ந்ததன் கரையில் நற்பண்பமையச் சிவபிரான் திருவடிகளை அருச்சனை
செய்து பயனைப் பெற்றனன்.
ஆலய அமைப்பு 
காஞ்சி மடத்தார்கள் அருளினால்
புராதனமான ஆலயம் புனருத்திரானம் செய்யப்பட்டு நூதனமாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி
 ஆலயம் உள்ளது. முன்புறம் நீண்ட மன்டபம் அமைத்துள்ளனர் கருவரை முன் நந்தி உள்ளது. விநாயகர் மற்றும் சந்திரன் தனி சன்னதியும் கட்டப்பட்டுள்ளது கருவரை கோபுரத்தில் பழங்காலத்தில் இருந்தவாரே முனிவர்கள் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திராஷ்ட்டம தினங்களில் பௌர்னமி தினங்களில் வழிபடுவது மிகச்சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.
2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அமைவிடம்
காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிற்கு அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலுக்கு அருகில் பின்புரம் உள்ள சிறிய தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம்பரிதீஸ்வரர் கோயில்(#காஞ்சிபுரம்நவகிரகஆலயம் )சூரியன் வழிபட்ட தலம் 16.8.26

#காஞ்சிபுரம்
பரிதீஸ்வரர் கோயில்
(#காஞ்சிபுரம்நவகிரகஆலயம் )
சூரியன் வழிபட்ட தலம்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நவகிரக பரிகார தலங்களில் சூரியன் பரிகார தலமாக கருதப்படுவது பரிதீஸ்வரர் திருக்கோவில்.

காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில்
சூரிய பகவான் சாபம் நீங்க வேண்டி தீர்த்தக்குளம் அமைத்து ஈசனை பூஜித்து ராஜயோகம் பெற்ற தலம் இது. இத்தலத்தில் சூரிய பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்
மேலும், சூரியன் (ஞாயிறு) பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.
இறைவர்: பரிதீசர், பருத்தீசர்.
வழிபட்டோர்: சூரியன் (ஞாயிறு)
தல வரலாறு
சூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும். மேலும், இப்பகுதி பரிதிக்குளம் ( என்பது மருவி தற்போது 
முற்காலத்தில் 'பரிதிக்குளம்' (பரிதி என்றால் ஞாயிறு, (சூரியன்) என்பதாகும்.)
என்றும், 'பருத்தீசம்' என்றும் அழைக்கப்பட்ட இப்பகுதி, தற்போது மருவி 'பருத்திக்குளம்' எனப்படுவதால் இவ்விரைவர்க்கு பருத்தீசுவரர் எனும் பெயருமுண்டு.

தல பதிகம்
பாடல்: (பரிதிக் குளம்)
மருத்தேத்துஞ் செவ்வந்தீச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்
திருத்தேத்துக் கதிர்ப்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்
கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதார்ஊர்
உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுதுவரம்பெற்றான்.
பொழிப்புரை:
வாயு வழிபாடு செய்த செவ்வந்தீச்சரமாம் பெருமை பொருந்திய
சூழலின் வடமேற்காகும் அழகிய இடத்தில் கதிர்களையுடைய சூரியன் தன்
பெயரால் சூரிய தீர்த்தம் வகுத்துப் பிறவி நோயைப் போக்கி வீடு பேற்றினை
வழங்கும் அந்நீரால் திருமுழுக்காட்டிப் பகைவருடைய முப்புரங்களை
வெகுண்டழித்துப் போற்றுந் தேவர்க்கருள் செய்யும் பரஞ்சுடரைத் தொழுது
வேண்டும் வரங்களைப் பெற்றனன்.

கோவில் அமைப்பு
 சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்டதாக கருதப்படும் இத்தலம், தற்போது சிறிய அளவில் காட்சி தருகிறது.
கிழக்கு நோக்கிய இத்தலத்தில் சூரிய பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு சூரிய பகவான் தனது கதிர்களால் சிவலிங்கத்தை வணங்குவதாக கூறப்படுகிறது. 
இக்கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இன்றி ஒரு நுழைவு வாசலோடு காட்சி தருகிறது. கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் ஒரு சிறிய பீடத்தில் அக்னி விநாயகர் அருள்புரிகிறார். எதிரில் ஒரு தனி சன்னிதியில் சூரிய பகவான் புன்னகை தவழும் திருமுகத்தோடு நான்கு திருக்கரங்களுடன் பத்மபீடத்தின் மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
சூரிய பகவானின் சன்னிதிக்கு பின்புறத்தில் ஒரு சன்னிதியில் வல்லப கணபதி காட்சி தருகிறார். கருவறையின் வலது புறத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் நவகிரகங்களுக்கு சன்னிதி இல்லை. கருவறைக்குள் ஈசன், பரிதீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி லிங்க சொரூபமாய் அருள்கிறார். கருவறையின் வெளியே துவார பாலகர்கள் அமைந்துள்ளனர். எதிரில் நந்தியம்பெருமான் உள்ளார். அருகில் பலிபீடம் அமைந்துள்ளது.

பொதுவாக காஞ்சியில் அனைத்து சிவத்தலங்களுக்கும் காமாட்சி அம்மனே அம்பாளாக அமைந்து அருள்வதால் இத்தலத்தில் அம்பாளுக்கு தனி சன்னிதி இல்லை. இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. 'பரிதி தீர்த்தம்' என்கிற சூரிய தீர்த்தம் இத்தலத்தின் தீர்த்தமாகும்.

பிரார்த்தனை

சூரிய பகவானுக்கு ஏழு நெய் தீபம், ஈசனுக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக ஐதீகம். அரசு பதவி மற்றும் திருமண வரம் வேண்டுபவர்கள் சூரிய பகவான் சன்னிதியை ஏழு முறை வலம் வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.

மாதப்பிறப்பு, மாத சப்தமி, ரத சப்தமி, தை மாத மகர சங்கராந்தி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலான உற்சவங்கள் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.

இக்கோவில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

அமைவிடம்
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ளது செவ்வந்தீஸ்வரர் கோவில். அதை கடந்து சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கு அருகில் உள்ள பருத்திக்குளத்தின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று


காஞ்சிபுரம் #நவகிரகதலங்கள்செவ்வந்தீசர் கோயில்(காஞ்சிபுரம் நவகிரக ஆலயம் )செவ்வாய்தலம்செவ்வந்தீசர் கோயில் (செவ்வந்தீசம்)16.8.26

#காஞ்சிபுரம் #நவகிரகதலங்கள்
செவ்வந்தீசர் கோயில்
(காஞ்சிபுரம் நவகிரக ஆலயம் )
செவ்வாய்தலம்
செவ்வந்தீசர் கோயில் (செவ்வந்தீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இது ஏகதள (ஒரு தளம்) விமான அமைப்புடைய செவ்வாய் பரிகார கோயிலாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. 
இறைவர்: செவ்வந்தீசர்.
வழிபட்டோர்: வாயு பகவான் (செவ்வாய்)
தல வரலாறு
வாயு பகவா 1ன் சிவலிங்கப் பிரதிட்டை செய்து செவ்வந்தி மலர்கள் கொண்டு வழிபட்டு, நறுமணம் வாய்க்கப்பெற்றான் என்பது தல வரலாறு. ஆதலின் இது செவ்வந்தீச்சரம் என்றும் பெயர்பெற்றது.
தல பதிகம்
பாடல்: (செவ்வந்தீச்சரம்)
தென்புலத்தோர் கடன்செலுத்தில் அனையர் துறக்கஞ்
சென்றெய்தி, இன்புறுவார் அதன்கரைக்கண் இலிங்கம் அமைத்து
மருத்திறைவன், மென்பனிநீர் செவ்வந்தி வேரிச் செழும்பூப்
பலகொண்டு, வன்பகல வழிபட்டுக் கந்த வாகன் எனப் பெற்றான்.
பொழிப்புரை: 
பிதிரர்க்கு நீர்க்கடனாற்றில் முன்னோர் சுவர்க்கம் புக்கு இன்பமடைவர்.
அத்தீர்த்தக் கரையில் சிவலிங்கம் நிறுவி வாயுதேவன் மெல்லிய பனி
நீரையும் தேன் பொருந்திய செவ்வந்தியின் செவ்விய மலர்கள் பலவும்
கொண்டு தீமை நீங்க வழிபாடு செய்து நறுமணத்தைச் சுமந்து வருவோன்
எனப் பெற்றனன்.
அமைவிடம்
 காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் அரக்கோணம் செல்லும் சாலையின் அருகே பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள தமிழக அரசின் விதைப் பண்ணையின் உட்புற வளாகத்தில் இக்கோயில் உள்ளது. மேலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்மேற்கில் சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, வல்லப கணபதி, வாயு பகவான், சிவதுர்கை, காலபைரவர் உள்ளிட்ட சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர்
செவ்வாய் துணைவியருடன் தனி சன்னதியாக தெற்கு நோக்கியுள்ளார்
புதியதான புனரமைப்பு செய்யப்பட்டு பொலிவுடன் ஆலயம் 
பூசை காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் செல்ல, முன்தகவல் தந்து தரிசிக்க விரு வேண்டிய ஆலயம்

நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம் மகாகாளேஸ்வரர் ஆலயம் 16.8.26

#காஞ்சிபுரம்
மகாகாளேஸ்வரர் ஆலயம்

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் மேல் புறம்  இந்த ஆலயம் உள்ளது.  காஞ்சிபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளின் படி, ஸ்ரீகாளகஸ்த்தியில் வசித்த மகாகாளன் என்ற பாம்பரசன் ஈசன் இட்ட சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டு இடர் நீங்கி சென்றார் என்பது புராணம்

முன் மண்டபம் அடுத்து உள்ள கருவரையில் நடுத்தர அளவில் லிங்க அமைப்பில் ஈசன் மகாகாளேஸ்வரர் உள்ளார். கருவறையின் சுவாமியுடன் ராகுவும் கேதுவும் சேர்ந்துள்ளது; 
கருவரை சுற்றி நவகிரகங்களும் தங்கள் துணைவியர்களுடன்  தனித்தனி சிற்றாலய சன்னதியுடன் சூழ்ந்து உள்ள அமைப்பு, வேறு எங்குமில்லாத அமைப்பு.
இத்துடன் விநாயகர் சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வாணயுடன் சுப்பிரமணியர், திருமண தடையை நீக்கும், கல்யாணதுர்க்கை மற்றும் பைரவர்
தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
சிறப்பு நாட்களில் ஹோமம் பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.
அருகில் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் (ஆதி காமாட்சி) மற்றும் குமரக்கோட்டம் அமைந்துள்ளது.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் (ஆதி காமாட்சி) 16.8.26

#காஞ்சிபுரம்
ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் (ஆதி காமாட்சி)
காமாட்சியம்மன் ஆலயம் பின்புறம் மேற்குப்பகுதியில் அமைதியான சூழலில்குமரன் கோட்டம் தெப்பக்குளம் மேல்புறம் அமைந்துள்ள சிறிய ஆலயம் ஆதி பீட பரமேஸ்வர காளிகாம்பாள் (ஆதிகாமாட்சி ஆலயம்) கிழக்கு நோக்கிய ஆலயம். முன்புறம் 5 நிலை ராஜகோபுரம், உள்நுழைவில் பலிபீடம் கொடிமரம் மற்றும் சிங்க வாகனம் அமைந்துள்ளது.
ராஜகோபுரம் அடுத்து முன்மன்டபம் மற்றும் கிழக்கு நோக்கிய அம்பாள் கருவரை சன்னதி கொண்டது.
ஏகப்பிரகாரம் பெரிய ஆலமரம் தலமரமாகப் பிரகாரத்தில் உள்ளது 
சமீபத்தில் புனருத்திராணம் செய்யப்பட்டு ஆலயம் பொலிவுடன் அமைந்துள்ளது
அம்பாள் அலங்காரம் பூசைகள் சிறப்புடன் உள்ளது.
 மகாகாளேஸ்வர் ஆலயம் அடுத்து உள்ளது
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்கச்சபரேஸ்வரர் ஆலயம்

16.08.2026 ஞாயிறு
#காஞ்சிபுரம்
கச்சபரேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீசுந்தராம்பிகை உடனுரை கச்சபேசுவரர் ஆலயம், காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கும் புகழ்பெற்ற குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கும் இடையில் நடை தூரத்தில் உள்ளது. இது திருக்கச்சூர் பகுதியில் அமைந்துள்ள தனித்துவமான புராணக் கதையுடன் ஒரு அற்புதமான மற்றும் பழமையான கோயிலாகும்.
புராணங்களில் விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகளைக்
கொண்டுள்ளது. மகாவிஷ்ணு, தனது கூர்ம (ஆமை) அவதாரத்தில், சமுத்திர மந்தனின் (அண்டப் பெருங்கடலைக் கலக்கும்போது) மந்தார மலையைத் தாங்குவதற்குத் தேவையான வலிமையைப் பெறுவதற்காக இங்கு சிவனை வழிபட்டார்.
ஆமை, மலையை முதுகில் தூக்கியபோது, ​​அதன் ஆணவம் பன்மடங்கு அதிகரித்தது, சிவன் அதன் ஆணவத்தை அழித்து, அதன் ஓட்டை தனது மாலையில் அணிந்தார், எனவே கச்சபேஸ்வரர் (சமஸ்கிருதத்தில் கச்சபம் என்றால் ஆமை) என்று அழைக்கப்பட்டார்.
இந்த தெய்வீக நிகழ்வு கோயிலுக்கு "கச்சபேஸ்வரர்" என்ற பெயரைக் கொடுக்கிறது, மேலும் இது சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களால் போற்றப்படும் அரிய யாத்திரை தலமாக ஆக்குகிறது. கோவிலின் வரலாறு, பல்லவ வம்சத்திற்கு முந்தையது, பின்னர் சோழர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் பங்களிப்புகளுடன், அதன் ஈர்க்கக்கூடிய திராவிட கட்டிடக்கலை மற்றும் சிக்கலான கல் சிற்பங்களில் பிரதிபலிக்கிறது. இந்த கோயில் ஒரு பழங்கால அதிசயமாகும். திராவிட கட்டிடக்கலை பிரமிக்க வைக்கிறது, சிக்கலான கல் சிற்பங்கள் மற்றும் பல நூற்றாண்டுகளின் மத பக்தி மற்றும் கலை கைவினைத்திறனை வெளிப்படுத்தும் பிரமாண்டமான கட்டமைப்புகள்.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்து இருந்தாலும், வடக்கு ராஜ கோபுரம் 5 நிலை கொண்டது. இதன் வழியில் உள் நுழைந்தால் எதிரில் பஞ்சசந்தி விநாயகர் தனி சன்னதியில் உள்ளார் மேற்குப்புரம் அழகிய முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இஷ்ட்டசித்தி தீர்த்தம் உள்ளது. இது மிகவும் புராதானமான புண்ணிய தீர்த்தம்
வடகிழக்குப் பகுதியில் மேற்குப்பார்த்த விஷ்ணு துர்க்கை தனி சன்னதி அடுத்து திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளுக்கு சிலையுடன் கூடிய தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது அடுத்து பைரவர் சன்னதியும் உள்ளது.
கிழக்கு நுழைவுவாயில் உட்புறம் யாகசாலையும் சூரிய பகவானுக்குத் தனி சன்னதியும் உள்ளது.
கிழக்கு நுழைவாயில் வழியில் பலிபீடம் கொடிமரம் நந்தி கடந்தால் ஆலயம் மற்றும் பதினாறு தூண்கள் கொண்ட மண்டபம் இது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட கோயிலின் தனித்துவமான கட்டிடக்கலை சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 
கிழக்கு உள் நுழைவில் 5 நிலை ராஜகோபுரம் ஒன்றும் உள்ளது. அடுத்து உள் மண்டபம்,
மைய சன்னதியில் கிழக்கு நோக்கிய கச்சபேஸ்வரரின் உருவம் லிங்க வடிவில் உள்ளது. லிங்கத்தின் பின்புறம் காட்சி கோலத்துடன் சோமஸ்கந்தராக இறைவன் இறைவியும் உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ளது போல், இங்கும் அம்மனுக்கு தனி சன்னதி இல்லை, மேலும் இறைவன் கச்சபேஸ்வரர் மற்றும் சுந்தராம்பிகை என இருவரும் வழிபடப்படுகிறார்.
பிரகாரத்தில் யோக சித்தீஸ்வரர், பெருமாள், பொல்லாப்பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், வீரபாகு அடுத்து நவவீரர்கள், 
விநாயகர், 108 லிங்கம், பஞ்ச லிங்கங்கள் இடம் வலம்புரி விநாயகர்கள், 63 நாயன்மார்கள் உள்ளனர். பெரும்பாலான ஆலயங்களில் காரைக்கால் அம்மையார் தவிர அனைத்து நாயன்மார்களும் நின்ற கோலத்தில் இறைவனை வணங்கிய நிலையில் தான் காணப்படும் இங்கு மட்டும் பல நாயன்மார்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளார்கள்.
தனி நடராசர் சன்னதி பைரவர் உள்ளனர்
கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர், பிரும்மா சன்டிகேஸ்வரர் உள்ளனர்.
வெளிப்பிரகாரத்தில் பொல்லப்பிள்ளையர், சதுர்யுகேஸ்வரர், மார்த்தாண்டேஸ்வரர், லிங்கப் பேசுரர்
என்றவாறு பழம்பெரும் சிவலிங்க சன்னதிகள் தனித்தனியாகஉள்ளனர்
ஆலயம் வடபுறம் இஷ்ட்ட சித்தீஸ்வரர் தனி சன்னதியும் மற்றும் தலபுராண வரலாற்றுப்படியான முருக்கடி சன்னதியும் 
மேலும் தலமரமாக வன்னி முதலிய மரங்களும் அதைச் சுற்றி நாகர்களும் உள்ளது
இதையடுத்து இஷ்ட்ட சித்தி தீர்த்தகுளம் நன்கு பராமரிப்பில் உள்ளது.
 இவ்வாலயம் காஞ்சிநகர செங்குந்த மகாஜன சங்கம் நல்ல பராமரிப்பில் வைத்து உள்ளது
கோவில் வளாகம் விசாலமானது, அழகான குளம் மற்றும் பசுமையுடன், அமைதியான சூழலை சேர்க்கிறது. சிலைகள் சுத்தமாகவும், நன்கு பராமரிக்கப்பட்டதாகவும் உள்ளன.
கோவில் பொதுவாக தினமும் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், பின்னர் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இருப்பினும், நேரங்கள் மாறுபடலாம், 

சிவராத்திரி மற்றும் பிரதோஷம் உட்பட பல முக்கிய திருவிழாக்களை இக்கோயில் சிறப்பாக கொண்டாடுகிறது.
பிரம்மோற்சவ விழாவும் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். கிரக தோஷங்கள் நீங்கவும் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

கோவிலை சுற்றிலும் அடர்ந்து போக்குவரத்து நிரம்பி வழிகிறது. வாகனம் நிறுத்த இடம் கிடைப்பது சற்று கடினம். இருப்பினும், இது காஞ்சிபுரத்தின் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் அதன் தனித்துவமான புராண முக்கியத்துவத்திற்காக தரிசிக்க வேண்டிய தலமாகும்.
#மீள்தரிசனம்
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்




காஞ்சிபுரம்கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆலயம்பிள்ளையார்பாளையம் 16.8.26

#காஞ்சிபுரம்
கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆலயம்
பிள்ளையார்பாளையம்
காஞ்சிபுரம் பஞ்சபூதத்தலங்களில் பூமித்தலம். இந்தத்தலத்தில் அமைந்திருக்கும் சிவத்தலங்கள் விஷ்ணு தலங்கள் எனப் பலநூறு கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தைக் காக்கும் காவல் தெய்வமாகத் திகழும் ஓர் அம்மன் ஆலயம் ஒன்று உண்டு.

அதுதான் 'அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்' ஆலயம்.

பெயர்க் காரணம்: மகிஷாசுரனை அழிக்க அனைத்து சக்தி தெய்வங்களும் ஒன்று சேர்ந்து உருவெடுத்த தலம் இது. பனை மரத்தை 'கருக்கு மரம்' என்றும் அழைப்பர்; 
அதேபோல், நள்ளிரவு நேரத்துக்கு 'கருக்கு நேரம்’ என்று பெயர். பனைமரத்தின் கீழே நடு இரவில் தாமரைப் பீடத்தின் மீதமர்ந்து மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால் அம்பாளுக்குக் 'கருக்கினில் அமர்ந்தவள்’ என்கிற திருநாமம் ஏற்பட்டது. இந்தக் கோயிலின் தல விருட்சமாகப் பனைமரம் திகழ்கிறது

தாமரைப் பீடத்தில் அமர்ந்தவண்ணம் சூரனை வதம் செய்வது போலவே மூல சந்நிதியில் அம்மன் காட்சியளிக்கிறாள். வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் இந்த அம்மன், தன் திருவடியை மகிஷாசுரனின் தலையிலும், அவன் காலின் மீதும் வைத்தபடி அருள்காட்சி தருகிறார். தலையை சற்றே இடதுபுறம் சாய்த்தபடி, கையில் திரிசூலம் ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கிறாள் அன்னை. இந்தத் திருக்கோலமே தரிசிப்பவர்களை பரவசப்படுத்தும். அன்னையின் பராக்கிரமம் விளங்கும். மனதின் பிணிகள் ஓயும்.

ஒரே பெயரில் இரண்டு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
முதலாவது
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், கணிகண்டேஸ்வரர் தெருவில் புதுப்பாளையம் தெருமுனையில் 
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன், ஆலயம் வடக்கு நோக்கி உள்ளது.

 உள் நுழைவில் நீண்ட மன்டபமும், அதில் பலிபீடம் மற்றும் ஒரு சிங்க வாகனம் அமைந்த வடக்கு நோக்கிய கருவரை சன்னதியில் கருக்கினில் அமர்ந்த அம்மன் வித்தியாசமான கோலத்தில் காளி ரூபத்தில் உள்ளார்கள்.
(திருவெண்காட்டில் உள்ள சுவேத காளி போன்ற அமைப்பு)

பிரகாரத்தில் விநாயகர், 
அன்னன்மார்கள் சுவாமி காத்தவராயன் சுவாமி வீரபத்ரசுவாமி சிறிய உருவகாளிகாம்பாள், நாககன்னிகள் வீர ஆஞ்சனேயர், வள்ளி தெய்வானை முருகர்
சன்னதிகள் சிறிய அளவில் உள்ளனர்.

1999ம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆலயம் நன்கு பராமரிப்பில் உள்ளது.
🔱🛕🔱🛕🔱🛕
இதே பெயரில் இன்னொரு பெரிய ஆலயமும் இந்தப்பகுதியில் உள்ளது.
காஞ்சிபுரம் தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர்ந்துள்ளது இந்த ஆலயம்.
 மகேசனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன், முனிவர்களையும் பக்தர்களையும் பயமுறுத்தி அழிக்க நினைத்ததால், அவனை சம்ஹாரம் செய்ய அனைத்து சக்தி தெய்வங்களும் சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.
இந்த மூலவர் கருவறை, 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்கிறது கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று. அந்த அளவுக்குப் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் இது. இந்த ஆலயத்தில் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு. எனவே இதை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் சொல்கிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் சூரிய தசை நடப்பவர்களின் வாழ்க்கை நலமாகும். அரசு வேலை தேடுபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் தேடிவரும் என்பது நம்பிக்கை.
ஈசன் இங்கே வேதபுரீஸ்வரராக சந்நிதிகொண்டு அருள்கிறார். இந்த ஈசனை வணங்க கல்வி கேள்விகளில் மேன்மை உண்டாகும்.
மகிஷாசுரமர்த்தினி
கோயிலின் உள் பிராகாரத்திற்குள் செல்லும் வாசல் பகுதியில் அழகிய யானை மற்றும் சிம்மத் தூண்கள் அமைந்துள்ளன. அவை பல்லவ காலக் கட்டிடக்கலையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

வெளிப்பிரகாரத்தில் பல்வேறு சந்நிதிகளும் கோஷ்டச் சிற்பங்களும் அமைந்துள்ளன. கிழக்கு சுவரில் இடம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். மேலும் மகிஷாசுரமர்த்தினி, விஷ்ணு துர்கை சிவதுர்க்கை மற்றும் தட்சிணாமூர்த்தி திருக்கோலங்களுடன் கோஷ்டத்தில் அருள்கின்றனர்.!

விழாக்கள்: இத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்சதீப பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இதர சன்னதி: இங்கு ஈசன் வேதபுரீஸ்வரராக சன்னதி கொண்டு அருளுகிறார்.
மேலும் ஆரோக்கியம் அருள்பவரும் சூரியனே என்பதால் இங்கு வந்து கருக்கினில் அமர்ந்த அம்மனையும் சூரியபகவானையும் வழிபட்டால் நோய்களில் இருந்து நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்
ஆடி மாதத்தில் ஆடிப் பூரம் விழா இங்கே விமர்சையாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் வீதி உலா வருகிறாள். ஆடியில் ஐந்து வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் படுவதுடன், ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து பம்பை, உடுக்கை, சிலம்பம் இசைத்து, பூஜைகள் நடத்தப்பெறும்.

இந்தக் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஜேஷ்டாதேவி அம்மனுக்கு கறுப்பு ஆடை சாற்றி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். இங்குள்ள புற்று நாகம்மனுக்குப் பால் வைத்து வழிபட, நாக தோஷம் நிவர்த்தியாகும். மேலும் திருமணத்தடை உள்ளோர், குழந்தை வரம் வேண்டுவோர், நாகதோஷம் உள்ளவர்கள் மற்றும் மனச் சஞ்சலம் கொண்டோர், இந்த அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சென்று தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட, நினைத்தவை கைகூடும் என்பது ஐதிகம்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம்சந்தைவெளி மாரியம்மன் 16.8.2026

#காஞ்சிபுரம்
சந்தைவெளி மாரியம்மன் 
பெரியகாஞ்சிபுரம் வெள்ளைக் குளம் தெருவில் இருக்கிறது
தல வரலாறு
சான்றோர் உடைத்து தொண்டைநாடு அத்தொண்டை நாட்டின் திலகம் போன்றதே காஞ்சியம்பதி அன்னை காமாட்சி இருநாழி நெல் பெற்று 32 அறங்கள் செய்ததினால் புகழ் பெற்ற பூமி இப்புண்ணிய பூமியில் வெள்ளை குளம் என்று வழங்கும் வெண்டரைக் குளத்தின் கரையில் ஆயிரம் கண்ணுடையால் என அகிலமே போற்றும் மகா சக்திபீடமாய் அல்லலையும் ஆராப்பிணியையும் அண்டவொட்டாது அருள்பலிக்கும் அன்னையாய் கட்சி தரும் அம்மனின் திருகோயிலே சந்தைவெளி அம்மன் திருக்கோயில் சந்திர பகவான் வழிபட்ட அவனது பூரண ஒளிபட்ட இடமாதலின் சந்திர ஒளி அம்மன் என்ற பெயரினை பெற்றது அப்பெயர் பிறகு மருவி சந்தைவெளியம்மன் என்று வழங்கலாயிற்று.
ஆலயஅமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது
3 நிலை ராஜகோபுரம் உள்ளது. உள் நுழைந்தவுடன் பலிபீடம் அடுத்து முன் மண்டபம் அதில் உற்சவர் வைத்துள்ளார்கள் அடுத்துள்ள உள் மண்டபம் மற்றும் அர்த்த மன்டபத்துடன் கிழக்கு நோக்கிய கருவரையில் இருந்து அருள் தரும்
சந்தை வெளி மாரியம்மன் ஆடி ஞாயிறு விஷேசமாக புற்று அலங்காரத்தில் காட்சி பெற்றோம். பிரகாரத்தில் உள்ள பிரசன்னதிகள் :
1 நவக்கிர சன்னதி
2 பாப்பாத்தியம்மாள் சன்னதி
3 மகிஷாசூரமா்த்தினி சன்னதி
4 மதுரை வீரனும் கன்னியம்மனும் (பின்புறம் உள்ளது)
5 சந்திரேசுவரர் சன்னதி

பல்வேறு பிரார்த்தணைகள் வழிபாட்டு முறைகள் நடைபெறுகின்றன ஏராளமான பெண் பத்தர்கள் குழுமி அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தும் மாவிளக்கு போட்டும் வேப்பில்லை ஆடை உடுத்தியும் ஆலயத்தை வலம் வருகிறார்கள். ஞாயிறன்று பக்தர்கள் கூட்டம் ஏராளம்

ஆடி மாதத்தில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் கூழ் வார்த்தல் விழாக்கள் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.வீதியுலா: ஆடித் திருவிழாக்களின் போது உற்சவர் சந்தவெளி அம்மன் ஏழு கன்னியா்களுடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம்
ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்கள் கூட்டமும் நிறைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மிக அருகில் பின்புறம் உள்ள தெருவில் காஞ்சியின் நவகிரக ஆலயங்களில் ஒன்றான சந்திரன் வழிபட்ட தலமான சந்திரேஸ்வரர் ஆலயம் உள்ளது.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம்ஓணகாந்தன்தளி 16.8.26

#காஞ்சிபுரம்
ஓணகாந்தன்தளி 
காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று.
ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.
அமைவிடம்
இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
அமைப்பு
வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட இத்தலத்தில் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன. சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது. இவ்வகையில் ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன. அணைத்தும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது

ஓணகாந்தேஸ்வரர்
ஓணகாந்தேஸ்வரர் (ஓணேஸ்வரர்) சன்னதியின் கோஷ்டத்தில் பாலவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்புறத்தில் பலி பீடம் மற்றும் நந்தி உள்ளன. இங்கு வயிறுதாரி விநாயகர், குமார வேலன், பைரவர், சூரியன் நவக்கிரகம், அகோர வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

காந்தேஸ்வரர்
காந்தேஸ்வரர் சன்னதியின் வலது புறத்தில் ஓம்கார கணபதி, இடது புறத்தில் சுப்ரமணியர் ஆகியோர் உள்ளனர். முன்புறம் நந்தி மண்டபம் உள்ளது.
சலந்தரேஸ்வரர்
இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது; இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
சலந்தரேஸ்வரர் சன்னதிக்கு மேற்கண்ட இரு சன்னதிகளின் வலது புறத்தில் உள்ள திருச்சுற்றில் உள்ள வாயில் வழியாகச் செல்ல வேண்டும். வெளியிலிருந்து நேரடியாக உள்ளே வரமுடியாது. சலந்தரேஸ்வரர் சன்னதியின் திருச்சுற்றில் கணபதி சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. முன் புறத்தில் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.
தல சிறப்பு
இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் சிவபெருமானாரின் திருப்பாதம் உள்ளது.
இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.மேற்படி பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 'வயிறுதாரிப் பிள்ளையார் ' சந்நிதி உள்ளது.மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் 16.8.26

#காஞ்சிபுரம்
குமரக்கோட்டம் 
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்
மேற்கு நோக்கிய ஆலயம்.
காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் குமரகோட்டம் - புராணப் பெயர் இத்தலத்தின் நுழைவாயிலில் காட்சிதரும் விநாயகப் பெருமானின் பேர்ருவத்தை தரிசித்து ஆசிபெற்ற பின்பு ஆலயத்திற்குள் செல்கின்றனர். மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். அனந்தசுப்ரமண்யர் என்கிற நாகசுப்ரமண்யரின் உலாத் திருமேனி இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாகும். மேலும், இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது.

நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது. மேலும், சந்தான கணபதி திருவுருவமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமஸ்கந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

தல சிறப்பு
தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்விக்கப்படுகிறது (தேன் அபிசேகம் பிரியமானதாம்).
முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர்.
முருகன், கச்சியப்ப சிவாசாரியாரைக் கொண்டு, "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுதப் பணித்த தலம்.
நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.
வள்ளலாருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.) மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது
ஏதுவாகிய குமரக்கோட்டத்துள் முனிவரர் போற்றத் தேவசேனாபதீசர் திருமுன்பு மேற்கு நோக்கிய திருக்கோலத்துடன் நின்றருள் புரிவர். அவர்தம்மை வணங்குவோர் இன்பமுத்தியை எளிதிற் பெறுவர். அடியவரை மயக்கும் குற்றத்தினின்றும் எஞ்ஞான்றும் தவிரவும் மார்க்கண்டேயரை வஞ்சகப் படுத்த முயன்ற பிழை தீரவும் தேவசேனாபதீசப் பெருமானை வணங்கி ‘உருகும் உள்ளக்கோயிலான்’ என்னும் திருப்பெயருடன் திருமால் குமரகோட்டத்தில் முருகப்பெருமான் அருளையும் பெற்று விளங்குகின்றனர். குமரகோட்டம் என்னும் இத்தலம் காஞ்சிக்கு நடுநாயகமாய் விளங்குகின்றது.
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு இராசவீதியில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி கச்சபேசுவரர் கோயில் வழியாக காஞ்சி சங்கர மடம் செல்லும் வழியிலும், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் தென்மேற்கு திசையிலும், அருகிலும் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது திருப்பணிகள் முடிந்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது

இவ்வாலயத்தின் உள் நுழைந்து வடபுறம் உள்ள ஆதி காமாட்சி ஆலயம் மற்றும் மஹாகாலேஸ்வரர் ஆலயமும் தரிசிக்கலாம். மகாகாலேஸ்வரர் ஆலயம் கிழக்கில் காமாட்சியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயம் 15.08.26

#காஞ்சிபுரம்
ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயம்

காமாட்சி அம்பாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயில் ஆகும்.
தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி (தொப்புள்) விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
கோயில் வரலாறு
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், விஸ்வப்ராஹ்மணர்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோவில் பொற்கொல்லர்களின் பாரம்பரியத்தை காக்கின்ற குலதெய்வமாக இருக்கிறது. விஸ்வகர்மா மக்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது. இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை. 
காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம்.

பண்டாசுரன் எனும் கொடிய அசுரனை வதைத்து, பின் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். ஆதிசக்தியாக விளங்கும் காமாட்சியின் இந்த வடிவம் லலிதா சஹஸ்ரநாமத்தில் குறிப்பிட்ட படி உள்ளது.

கோயில் அமைப்பு
கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 இக் கோயிலின் கருவறையில் காமாக்ஷியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் திரித்துவத்தால் சூழப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோயிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.

திருக்கள்வனூர் திவ்ய தேசம் காமாட்சி அம்மனின் கருவறைக்கு அருகில், 7–10-ஆம் நூற்றாண்டின் ஆழ்வாரால் மகிமைப்படுத்தப்பட்ட விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இருந்தது. இக்கோயில் சிதிலமடைந்ததால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மேல் சிற்பங்கள் உள்ளன.
தலவரலாறின்படி, அரூபலட்சுமியாக காட்சி தரும் மகாலட்சுமியைத் தேடி வந்த திருமாலை, அவள் ‘கள்வா’ என்று அழைத்ததால் பெருமாளுக்கு இந்த திருநாமம் ஏற்பட்டது.

உற்சவ விழாக்கள்
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.
காமாட்சியம்மன் ஆலயம் சுற்றிலும் நடைதூரத்தில் வேறு சில புராதான ஆலயங்களும் உள்ளன
நன்றி🙏🏼
  #மீள்தரிசனம்
#சுப்ராம்தரிசனம் 23.07.2023 மற்றும் 15.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம் - கச்சி ஏகம்பம்ஸ்ரீ ஏகாம்பரநாதர்ஸ்ரீஏலவார்குழலி அம்மன் ஆலயம் 15.8.2026

#காஞ்சிபுரம் - கச்சி ஏகம்பம்
ஸ்ரீ ஏகாம்பரநாதர்ஸ்ரீஏலவார்குழலி அம்மன் ஆலயம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்பெற்றது.
முக்தி அளிக்கும் 7 தலங்களில் ஒன்று.
தல மாமரம் 3600 ஆண்டுகள் பழமை கொண்டது
அம்பாள் காஞ்சியில் ஓடும் கம்பையாற்றங்கரையில் மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபட, கங்கைநீரை எடுத்து வெள்ளம் ஓட செய்ய ,மணல் லிங்கம் நீரால் கரையாமல் இருக்க, மணல் லிங்கத்தை ஆலிங்கணம் செய்தார்.
மாமரத்தின் கீழ் இறைவர் எழுந்தருள ஏகம் + ஆம்பரம் : ஏகாம்பரநாதரானார்.

பார்வை இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண் பெற்ற தலம்.
சாக்கிய நாயனார்
திருக்குறிப்பு தொண்ட நாயனார்,
ஐயடிகள் காடவன் கோவன் நாயனார் வாழ்ந்து முத்திபெற்ற தலம்.
பஞ்சபூத தலங்களில் இது புவி.

பெரிய ஆலயம் முன் பகுதியில், மேற்கு பார்த்து ஒரு சிவலிங்கம் உள்ளது. அது கட்சி மயாணம் என்றும் 4 மயான தலங்களில் ஒன்றும் என்றும் கூறுவர்.
நன்றி🙏🏼

#திருமுறைதலம் #மீள்தரிசனம்
#சுப்ராம்தரிசனம் 23.07.2023 மற்றும் 15.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்கைலாசநாதர் ஆலயம் 15.08.26

#காஞ்சிபுரம்
கைலாசநாதர் ஆலயம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (ராஜசிம்மன்) மணற்கற்களால் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயிலாகும். இது திராவிடக் கலைப்பாணியின் மிகச்சிறந்த தொடக்ககால வடிவமாகவும், சுற்றுச்சுவர்களில் பல சிறிய சன்னதிகள் மற்றும் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகவும் விளங்குகிறது. 
கோயிலின் சிறப்புகள்
காலம்: கி.பி. 700-ஆம் ஆண்டு வாக்கில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது.
கட்டடக் கலை: முழுக்க முழுக்க மணற்கற்களாலும், அடித்தளம் மட்டும் கருங்கல்லாலும் ஆன தனித்துவமான அமைப்பு.
சிற்பங்கள்: சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் மற்றும் சோமஸ்கந்தர் திருமேனி சுவர்களில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
அதிசயப் பாதை: மனித பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியைக் குறிக்கும் வகையில் சிறியதாக ஒரு சுற்றுப்பாதை உள்ளது.
 புனர் ஜனனி
கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும். மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது.
பல்லவர் கால ஓவியங்கள்
பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன.
பட்டடக்கல்
இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (பொ.ஊ. 740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் கர்நாடகாவில் உள்ள பட்டடக்கலுக்கு கொண்டு சென்றார். அங்கு விருப்பாட்ஷா கோயிலைக் கட்டினார். அரசி லோகமாதேவியின் தெய்வமான விருப்பாட்ஷாவை அங்கு அமைத்தார். அக்கோயில், கைலாசநாதர் கோயிலுக்கும், அதைக்கட்டிய ராஜசிம்மனுக்கு அவருடைய எதிரி உருவாக்கிய நினைவுச்சின்னமாக இப்போதும் திகழ்கிறது. அக்கோயில் லோகமாதேவிசபுரம் என்றும் விருபார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

விழாக்கள்
தொல்பொருள் ஆய்வுத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரத்தில், நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் புத்தேரி தெரு வழியாக சென்று சற்றுத் தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம்.

இக்கோயில் காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தகவல் வலை தளங்கள் & விக்கிபீடியா 
நன்றி🙏
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பழையனூர் (திருவலங்காடு) கைலாசநாதர் ஆலயம் 15.08.26

பழையனூர்
கைலாசநாதர் ஆலயம்

பழையனூரில் கிழக்குபாகத்தில் அமைந்துள்ளது
கிழக்கு நோக்கிய ஆலயம்
தென்புறம் நுழைவு வாசல் உள்ளது
கீழ்புரம் பலிபீடம் நந்தி தனி மண்டபத்துடன் ஆலயம் நோக்கியுள்ளார்.
தென்புறம் நுழைவு முன்மண்டபம் அடுத்து உன்மன்டபம் உள்ளது.
கிழக்கு நோக்கிய கருவரையில் கைலாச நாதரும், தெற்கு நோக்கிய தனி கருவரை சன்னதியில் பர்வதவர்த்தினியும் உள்ளனர்
பிரகாரத்தில் தனித்தனியாக விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு சன்னதிகள் உண்டு.

கிராம சூழலில் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. தரிசிக்க முன் தகவல் அவசியம்.

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பழையனூர் #திருவலங்காடு

பழையனூர்தழுவக் குழைந்த ஈஸ்வரர் 15.8.26

பழையனூர்
தழுவக் குழைந்த ஈஸ்வரர்

2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருவலங்காடு பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 1 கிமீ. அ | மீ ஆனந்த வள்ளி சமேத தழுவிக் குழைந்தீஸ்வரர் ஆலயம்.
மேற்கு நோக்கிய ஆலயம் 

முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜாதி ராஜன் மூன்றாம் ராஜாதிராஜன் ஆகியோர் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் செப்புபட்டையங்கள் உள்ளன.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கருவிகள் கிடைக்கப்பெற்றன. இந்தக்குறிப்புகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அம்மையார் ஆலங்காடு வழி கேட்க இறைவர் மேற்கு நோக்கி காட்டியருளிய இடமாகும். 

பிரதோஷத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு

ஆலயம் முன்பு  மூர்த்தி விநாயகர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி உள்ளார் தனி முன்மன்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் தென்புறம் உள் நுழைவில்  தனியாக ஒரு பெருமாள் சன்னதியும் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ஒரு சிறிய விநாயகர் நந்தி இருக்கிறது.

மேற்கு புறம் சிவன் சன்னதி நோக்கி தனியாக சற்று நடுத்தரமான அளவில் ஓரு நந்தி தனி மன்டபத்தில் உள்ளார்.

ஆலய முன்மன்டபத்தில் ஒரு நந்தியும்
இறைவன் கிழக்கு நோக்கியும் அம்மன் ஆனந்தவள்ளியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்  கோஷ்ட்டத்தில் பிரும்மா  துர்க்கை விநாயகர் உள்ளனர். 

2007ல் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டுள்ளது
திருவாலங்காட்டு ஈசன் திருவாதிரை விழாவில் இவ்வூருக்கு எழுந்தருளி அருகில் உள்ள சாட்சி நாதர் ஆலயம் கைலாசநாதர் ஆலயம் வந்து மன் எடுத்து செல்லும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

கிராம அமைதியான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது.

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#பழையனூர்-திருவலங்காடு

பழையனூர் சாட்சி பூதேஸ்வரர் ஆலயம் 15.8.26

பழையனூர்
சாட்சி பூதேஸ்வரர் ஆலயம்

திருவலங்காடு பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 1 கிமீ தூரத்தில் உள்ளது. 
கிழக்கு நோக்கிய ஒரு சிவலிங்கம் மட்டும் உள்ள சன்னதி சிறிய ஆலய அமைப்பு.
ஆலயம் எதிர்ப்புறம் நீலி புரானத்தில் வரும் நீதி வழுவாத 70 வேளாளர்கள் உயிர்நீத்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது 
நீலி புராணம்
காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் இங்குள்ள இறைவன் மீது ஆணையாக சாட்சி அளித்து இறைவன் திருமுன்பாக தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

இவ்வாறு சாட்சியாக இருந்த இறைவன் மீது செய்த சத்தியத்தை காப்பாற்ற 70 பேர் இக்கோவிலின் முன்பு உயிர் நீத்தார்கள்

#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#திருவலங்கடு #பழையனூர்

திருவாலங்காடு பத்ராகாளியம்மன் ஆலயம் 15.8.26

திருவாலங்காடு 
பத்ராகாளியம்மன் ஆலயம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் (ஆலவன காளி கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது) ஆழ்ந்த புராண முக்கியத்துவம் வாய்ந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் (சிவன்) கோவிலின் முதன்மை வளாகத்திற்கு சற்று வெளியேயும் சற்றுப் பின்புறமும் உள்ளது.
இந்த குறிப்பிட்ட சன்னதியைச் சுற்றியுள்ள வரலாறு, புனைவுகள் மற்றும் முக்கிய விவரங்கள் அதன் தனித்துவமான ஆன்மீக நிலையை வரையறுக்கின்றன:
தெய்வீக நடன சண்டையின் புராணக்கதை
திருவாலங்காடு பற்றிய முதன்மையான புராணக்கதை முழுவதும் பத்ரகாளி தேவி மற்றும் சிவபெருமானை மையமாகக் கொண்டது. ஸ்தல புராணத்தின் படி 
அசுர அச்சுறுத்தல்: சும்பன் மற்றும் நிசும்பன் ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த அரக்கர்கள் இப்பகுதியை அச்சுறுத்தி வந்தனர். அவர்களின் சித்திரவதையை தாங்க முடியாமல் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வேண்டினர். சக்தி தேவியின் கடுமையான பார்வையில் இருந்து, பத்ரகாளி அவர்களை அழிக்க வெளிப்பட்டார்.
போர் மற்றும் பின்விளைவுகள்: காளி பேய்களை எதிர்த்துப் போராடினார், அவர்கள் பெருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் பிடித்துக் குடித்தார். அவளுடைய வெற்றிக்குப் பிறகு, பேய் இரத்தத்தாலும், அவளுடைய சொந்த கடுமையான சக்தியாலும் போதையில், அவள் கட்டுப்படுத்த முடியாத கோபத்தை வளர்த்து, பிரபஞ்சத்தை பயமுறுத்த ஆரம்பித்தாள்.
நடனப் போட்டி: வன்முறையின்றி அவளைச் சமாதானப்படுத்த, சிவபெருமான் காளியை முஞ்சிகேசா (சுனந்தா) மற்றும் கார்கோடகப் பாம்பு போன்ற முனிவர்களின் மேற்பார்வையில் ஒரு பிரபஞ்ச நடனப் போட்டிக்கு அழைத்தார்.
ஊர்த்துவ தாண்டவம்: மிகவும் சிக்கலான தோரணைகள் மூலம் இருவரும் ஒருவரையொருவர் படிப்படியாகப் பொருத்தினர். அவளை அழகாக அடக்க, சிவன் வேண்டுமென்றே தனது இடது காதணியை (மேனி) கைவிட்டு, அதைத் தன் இடது கால்விரல்களால் தடையின்றி எடுத்தார், மேலும் அதை மீண்டும் வைப்பதற்காக தனது காலை முழுவதுமாக காதுக்கு நேராக உயர்த்தினார் - இது ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் தோரணை. பாரம்பரிய அடக்கத்தால் (ஸ்திரீ தர்மம்) கட்டுண்ட காளி, இந்த குறிப்பிட்ட தோரணையை பிரதிபலிக்க மறுத்து தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
பத்ரகாளி சன்னதியின் முக்கியத்துவம்
முதல் வழிபாட்டின் வரம்: காளி போட்டியில் தோற்றாலும், இந்த புனிதமான ஆலங்காட்டில் (ஆலங்காடு) அவளது சக்தி முழுமையானது என்று சிவபெருமான் அறிவித்து அவளுடைய கோபத்தை தணித்தார். பிரதான வடாரண்யேஸ்வரர் சிவன் கோவிலுக்குள் நுழையும் முன் பக்தர்கள் முதலில் பத்ரகாளியை வழிபட வேண்டும் என்று அவர் அவளுக்கு வரம் அளித்தார்.

 இன்றுவரை, பாரம்பரிய யாத்ரீகர்கள் அவரது ஆசீர்வாதத்தைப் பெற முதலில் அவரது ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.

தெய்வ விவரம்: அம்மனின் பல அமைதியான அல்லது அமர்ந்த வடிவங்களைப் போலல்லாமல், இந்த சன்னதியின் உள்ளே இருக்கும் முக்கிய தெய்வம் ஒரு மாறும், வெளிப்படையான தோற்றத்தில் செதுக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தைக் காணும் போது அவளது மேல்நோக்கிய பார்வையும் தோரணையும் வியப்பு மற்றும் பிரமிப்பு ஆகியவற்றின் சரியான புராண தருணத்தைப் படம்பிடிக்கிறது.

ஜோதிட முக்கியத்துவம்: பரணி நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு, அமைதி, பாதுகாப்பு மற்றும் தடைகளை நீக்குவதற்காக அடிக்கடி வருகை தரும் ஒரு குறிப்பிடத்தக்க பரிஹார ஸ்தலமாக இந்த கோவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூஞ்சி கேஸ்வரர் ஆலயம் வடக்கு வீதியி லேயே உள்ளது

இந்த ஆலயம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

நேரம்: கோயில் பொதுவாக தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 7:45 மணி வரை திறந்திருக்கும் (நேரங்கள் சில நேரங்களில் பிரதான கோவிலின் அட்டவணையைப் பின்பற்றலாம், காலை 6:00 - 12:00 மணி வரை மற்றும் மாலை 4:00 - இரவு 8:00 மணி வரை திறக்கப்படும்). 

மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் தமிழ் மாதங்களான ஆடி மற்றும் தை பண்டிகைகளின் போது இது அதிக கூட்டத்தை ஈர்க்கிறது.

இருப்பிடம் : இது திருவள்ளூரில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ள திருவாலங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாலங்காடு இரயில் நிலையம் (சென்னை-அரக்கோணம் புறநகர்ப் பாதையில்) அருகிலுள்ள இரயில் இணைப்பு ஆகும், இது கோயில் தளத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...