Showing posts with label ராமநாதபுரம் அருகில். Show all posts
Showing posts with label ராமநாதபுரம் அருகில். Show all posts

Friday, May 29, 2026

உத்திரகோச மங்கை ஆலயம் 16.05.2026

உத்திரகோச மங்கை ஆலயம்

உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில்தான் அபூர்வமான மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்
சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,
பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய
திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான
அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண
காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்
வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்
என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.
20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த
கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே.
அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர
சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.
26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன
பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.
27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.
28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்
சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை
தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்
நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.
32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.
33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்
தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்
இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் சிவ உற்சவம், ஐப்பசி மாதம்
அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.
41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு 
சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.
44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை உள்ளது.
48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.
51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.
52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்
முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.
53. வேதவியாசரும், பாராசரரும் காகபுஜண்டரிஷி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.
54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா
56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
அப்பா அண்ணாமலையாரே உன் மலர் பாதம் சரணம் 
நன்றி🙏 வலைதளம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
மீள் தரிசனம் 16.05.2026
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம் ஸ்ரீசெளபாக்கிய நாயகி சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம் ஸ்ரீசெளபாக்கிய நாயகி சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம்

நகரின் வெளிப்பட்டினம் பகுதியில் ஊருணி மேல் கரையில் உள்ளது.
ஆலயம் முன்புறம் சுதையால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி ஆலயம் நோக்கி உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் தாண்டியவுடன் பலிபீடம் கொடிமரம் நந்தி உள்ளது வெளி மண்டபம் கடந்து உள்ளே சென்றால் துவாரபாலர்கள் கருவரை மண்டபம் முன்பு அமைக்கப்பட்டுள்ளது கிழக்கு நோக்கிய கருவறையில் ஆதி ரத்தினஸ்வரர் அமைந்துள்ளார் அம்பாள் தெற்கு நோக்கிஅழகிய அமைப்பில் தனி கருவரையில் அமைந்துள்ளார்
நால்வர் சன்னதியும் சிவன் கருவரை முன் மன்டபத்தில் உள்ளார்.
பிரகாரத்தில் தென்புறம் சரஸ்வதி மகாலட்சுமி தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளார்கள் காரைக்கால் அம்மையார் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்
கருவறை கோஷ்டத்தில் விநாயகர் தட்சணாமூர்த்தி லிங்கோற்பவர் துர்க்கை
அமைந்துள்ளார் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது
தனி சன்னதியில் சந்தானக்கிருஷ்ணன்
 ஐயப்பன் வாராகி அம்மன் முதலிய தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர் பைரவர் சூரியன் சந்திரன் ஆகியோருக்கும் தனித்தனிசன்னதிகள் உள்ளது

ஆலயம் சமுதாய மக்கள் நிர்வாகத்தில் உள்ளதால் நல்ல பராமரிப்பில் முறையாக பூசை விழாக்கள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. 

16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம் முத்தாலம்மன் / முத்தால பரமேஸ்வரி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம் முத்தாலம்மன் / முத்தால பரமேஸ்வரி ஆலயம்

ராமநாதபுரம், வெளிப்பட்டனம் பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி ஆலயம்
ஆயிர வைசிய மகாஜன சபைக்கு சொந்தமானது.
அருகில் தர்ம தாவள விநாயகர் ஆலயம் இணைந்து உள்ளது.
இரண்டும் கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது  தனித்தனி ராஜ கோபுரங்களுடன் உள்ளன.

முத்தால பரமேஸ்வரி அம்மனை ஆயிர வைசிய செட்டியார் இன மக்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள் 
ராமநாதபுரம், பரமக்குடி  இளையான்குடி, காரைக்குடி மதுரை முதலிய ஊர்களில் பெரும் ஆலயங்கள் தனியாக உள்ளது மிகச் சிறப்பான பூசைகள் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலய நுழைவில் வாயில் மேல் பகுதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதையில் உள்ளார்.
உட்புறம்  கொடி மர விநாயகர் சிங்க வாகனம் பலிபீடம் உள்ளது
சில படிகள் உயரத்தில் உள் மண்டபமும் கருவறையும் உள்ளன  கிழக்குப் பார்த்த கருவரையில் அம்மன் நின்ற கோலத்தில் மிக அற்புதமாக உள்ளார்

கருவரை பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய அமைப்பில் பாமா ருக்குமனி சமேத கிருஷ்ண பரமாத்மா தனி சன்னதியில் உள்ளனர் முன்புறம் கருடாழ்வார்  தெற்கு நோக்கிய சிறிய ஆஞ்சனேயர் உள்ளனர்

பிரகாரத்தில் தனி சன்னதியில் நாகலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாள்
மற்றும் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. பைரவர் சன்னதியும் உள்ளது.
 தர்ம தாவள விநாயகர் ஆலயம்
முத்தாலம்மன் ஆலயத்துடன் இணைந்து வலது புறம் கிழக்கு நோக்கி தனி கருவரையில் தர்ம தாவள விநாயகர் உள்ளார் 
கருவரை முன்பு பலிபீடம் வாகனம் உண்டு.
எண்கோண வடிவில் முன்புறம் மன்டபமும் உள்ளது
முன்புறம் அநுக்கை விநாயகர் தண்டபாணியும் உள்ளனர்
மூலவிநாயகர் தனி அமைப்பில் சற்று உயரமான கருவரையில் உள்ளார்.

சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட ஆலயம் என்பதால் சிறந்த முறையில் பூசை விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில். 16.05.26 தரிசனம்

ராம நாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில்.
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.

பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
முருகன் குன்றின் மீது அமர்ந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் அரிய காட்சி
சுவாமிமலை ஞானம் வழங்கும் ஆலயம். அங்கு தந்தைக்கு மகன் சுவாமியாய் நின்று போதித்த காட்சி இடம் பெற்றுள்ளது. முருகப்பெருமான் அந்த ஞானமூர்த்தியாகவே இங்கும் எழுந்தருளியிருக்கின்றார். ஆனால், மற்ற ஆலயங்களில் முருகப்பெருமான் சிவன் மடியில் அமர்ந்து, தந்தைக்கு போதிப்பது போன்ற சிலை அமைந்திருக்கும்.
ஆனால் இந்த தலத்தில் அந்த காட்சிக்கு மாற்றாக தகப்பன் சுவாமியான முருகப்பெருமான் ஒரு குன்றின் மேல் அமர்ந்து, தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளுக்கு விளக்கம் அளிக்க, அதை சிவபெருமான் கீழே நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு.

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.

ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.

ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்

மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் செய்யும்.
ஆலயத்தின் முன்பு ராஜகோபுரம் அழகுற காட்சியளிக்கிறது. ஆலயம் நுழைவு பகுதியில் நந்தியும், வேல், மயில், பாம்புடன் கொடிமரம் ஆகியவை பக்தர்களைக் கவரும் அம்சமாகக் காணப்படுகின்றன. ஜெயதுர்கா தேவி அம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், வீரபாகு ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்து விநாயகர் 12 கரங்களுடன் மடியில் சித்தி புத்தியுடன் காட்சியளிக்கிறார்.

இந்த ஆலயத்தில் அஷ்ட கஜபுஜ மகாலட்சுமியாக காட்சியளிக்கும் 7 அடி உயரமுள்ள துர்க்கை 18 திருக்கரங்களைக் கொண்டு பிரமாண்டமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப் படுகிறது. தைப் பொங்கல் தினத்தன்று, துர்க்கா தேவிக்கு ‘சாகம்பரி’ என்று அழைக்கப்படும் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்மன், காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்படுகிறார். சித்திரை முதல் தேதி அன்று இந்த துர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும்.
திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு இந்தக் கோவில்தான் பெயர் பெற்றது. மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பார்ப்போரை பரவசம் அடையச் செய்யும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.
நவராத்திரி விழாவும், வெள்ளிக்கிழமை குடும்ப நலனுக்காக நடைபெறும் வழிபாடும் வெகுவிசேஷம்

தடைபெறும் சுபநிகழ்வுகள் தடை நீங்கப்பெறவும், குழந்தைகள்
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்
இத்தல இறைவனை
வழிபடுகிறார்கள்

முருகனுக்கு அபிஷேகம் செய்தல், ஆடைகளை வழங்குதல் மற்றும் உண்டியலில் காணிக்கை செலுத்துதல் மூலம் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். மனக்குழப்பம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் மனக்குழப்பம் நீங்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிந்தை தெளிவடையும் என்கிறார்கள் பக்தர்கள், இந்த முருகப்பெருமானை வேண்டுவதும், வேண்டியது நிறைவேறிய பின் முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை அளித்தல் உள்ளிட்டவற்றை செய்வதும் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோவில், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

நன்றி 🙏ஆலயத் துளிகள் மற்றும் பல இணையதளங்கள்
16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமநாதபுரம்மீனாட்சி சொக்கநாத சுவாமி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம்
மீனாட்சி சொக்கநாத சுவாமி ஆலயம்
இராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்டது.

கிழக்குப்பார்த்த அமைப்பில் ஆலயம் உள்ளது. ராஜகோபுரம் பதிலாக காட்சிக் கோபுரம் உள்ளது. ஒரு புறம் வல்லபை விநாயகர் மறுபுறம் பால தண்டாயுதபானி தனித்தனி சன்னதிகளில் ஆலய முகப்பு ஒட்டி அமைக்கப்பட்டுள்ளார்கள்.

உள்நுழைவில் நீண்ட பெரிய அகல மண்டபத்தில், பலிபீடம் கொடிமரம் நந்தி அமைந்துள்ளது. 
மன்டபம் கடந்தால் சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளில் முன்மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனி
நடராஜர் சபை உள்ளது.
பிரகாரத்தில் தெட்சினாமூர்த்தி கன்னிமூலை விநாயகர் லிங்கோத்பவர்
துர்க்கை சன்டேஸ்வரர், சன்னதிகள் அமைந்துள்ளது மேலும் வள்ளி தெய்வாணையுடன் முருகன், மற்றும் சரஸ்வதி மகாலெட்சுமி தனி தனி சன்னதிகள் உள்ளன
பைரவர், சூரியன் சந்திரன் கிழக்கில் உள்ளனர்

கோதண்டராமர் ஆலயம்
சிவன் ஆலயம் ஒட்டி தென்புறத்தில் தனியாக கோதண்டராமர் தனி ஆலயம் உள்ளது.
ராஜகோபுரம், நந்தவனம்,கருடாழ்வார்
உள்ளனர். நீண்ட வெள்வால் நெற்றி முன் மண்டபம் கடந்து சுமார் 10 படிகள் ஏறினால் கிழக்கு நோக்கிய தனி கருவரையில் கோதண்டராமர் உள்ளார். சிறிய மாடக்கோவில் அமைப்பில் உள்ளது
பிரகாரத்தில் சிறிய அளவில் சக்கரத்தாழ்வார் உள்ளார். வடக்குப் பிரகாரத்தில் பெருமாள் அவதாரங்கள் படங்கள் உள்ளன.
இரண்டு ஆலயங்களும் அரண்மணை தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்டது.
முறையான பூசைகளுடன் தூய்மையாக ஆலயங்கள் நல்ல பராமரிப்பில் உள்ளன.

16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம்
இராமாயண காலத்திற்குச் சமமான பழமையான திருத்தலமான இராமேஸ்வரம், இந்தியாவின் மிகப் புனிதமான சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ ராமபிரான், இராவணனை சம்ஹரித்த பின் ஏற்பட்ட தோஷத்தை நீக்க சிவபெருமானை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. சீதாதேவி மணலில் உருவாக்கிய சிவலிங்கமே இங்குள்ள மூலவர் ராமநாதசுவாமி.

இந்தத் தலம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், நான்கு முக்கிய புண்ணிய தலங்களில் தெற்குத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு அக்னிதீர்த்தத்தில் நீராடி, 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது மிகப் புனிதமாக கருதப்படுகிறது.
865 அடி நீளமும், 657 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கோவில், உலகப்புகழ் பெற்ற 1212 தூண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரத்தால் சிறப்பு பெறுகிறது. மேலும், பித்ரு தோஷ நிவர்த்திக்கான முக்கிய பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

காசி யாத்திரை முடிவடைய, இராமேஸ்வரம் தரிசனம் அவசியம் என்று கருதப்படுகிறது.

கிழக்குப்பார்த்த ஆலயம் 
முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி பின் வடக்கு வாசல் வழியாக நுழைந்து 25 ரூபாய் கட்டனம் செலுத்தி 22 தீர்த்தங்களில் புனித நீர் தெளித்துக்கொண்டு 
ஈரஆடை நீக்கி உலர்ந்த ஆடைகளை அனிந்து கிழக்கு வாசல் வழியாக ஆலயம் உள் செல்ல வேண்டும்.
உள் நுழையும் வழியில் காசி ஹனுமான் சன்னதி மற்றும் விநாயகர் சுப்பிரமணியர் சன்னதிகள் தரிசிக்க வேண்டும். அதன் பின் ஆலயம் உள் சென்று சீதாபிராட்டி பிரதிஸ்ட்டை செய்த மனல் லிங்கமாகிய ராமநாதர் வணங்கி பின் அனுமான் கொண்டு வந்து வைத்த விஸ்வநாதர் லிங்கம் மற்றும் விசாலாட்சி பர்வதவர்த்தினி சன்னதிகள் தரிசனம் செய்து வரவேண்டும்.
மேலும் பிரகாரத்தில் உள்ள சேது மாதவர் சன்னதியும் வணங்கி வர வேண்டும்.
வாழ்நாளில் ஒருமுறை கண்டே ஆக வேண்டிய தெய்வீகத் திருத்தலம் இதுவே!
  நன்றி.
16.05.2026 மீள் தரிசனம்
என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...