Monday, March 30, 2026

சிறுகாம்பூர் - கைலாசநாதர் - லோகநாயகிதிருச்சி மாவட்டம், நொச்சியத்திலிருந்து, முசிறி செல்லும் சாலை

சிறுகாம்பூர் - கைலாசநாதர் - லோகநாயகி

திருச்சி மாவட்டம், நொச்சியத்திலிருந்து, முசிறி செல்லும் சாலையில் திருவாசி, துடையூர் தாண்டி வரும் ஊர். பிரதான சாலையிலிருந்து வடக்கில் செல்லும் சாலையில் சென்றால் சிறுகாம்பூர் என்ற சிற்றூரில் ஆலயம் உள்ளது.

சிறிய சிவன் ஆலயம் சுவாமி: கைலாசநாதர் அம்பாள் லோக நாயகி.

கிழக்கு நோக்கிய ஆலயம். ராஜகோபுரத்தில், சுவாமி அம்பாள் காட்சி அமைப்பு உள்ளது.
தனித்தனி கருவரைகளில் கிழக்கு நோக்கி சுவாமியும், தெற்கு நோக்கி அம்பாளும் உள்ளார்கள். ஏகமண்டப இணைப்பு.
பிரகாரத்தில் மேதா தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், விஷ்ணுதுர்க்கை, சரஸ்வதி, சண்டிகேஸ்வரர், பிரம்மா, கிருஷ்ணர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் , பைரவர், நாகர், சந்திர சூரியன் ஒரே சன்னதி,
உள்ளார்கள்.

பழமையான கற்கோவில், முழுவதும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது
நல்ல பராமரிப்பு, பூசை வழிபாடுகளில் உள்ளது.
தனியார் பொறுப்பில் உள்ள ஆலயம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼வாகனங்கள் ஆலயம் அருகில் செல்லும். 
சாதாரண நாட்களில், பூசை நேரங்களில் மட்டும் சிவாச்சாரியார் பூசை காலங்களில் தான் ஆலயம் திறப்பு. முன் தகவல் கொடுத்து தரிசிப்பது சிறப்பு. 

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

No comments:

Post a Comment

பெருங்குடி : அருள்மிகுஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேதஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 5.06.26

பெருங்குடி : அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்) அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்குடி கிராமம்,...