Monday, March 30, 2026

தண்டலை -விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம்.

தண்டலை -விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம்.

💥முசிறி -திண்ணக்கோணம் - திருத்தலையூர் - கண்ணனூர் - துறையூர் சாலையில், திண்ணக்கோணம் , தண்டலைப்புத்தூர் தாண்டி வரும் சிற்றூர் தண்டலை - 621 217. (முசிறி ஒன்றியம்)

⛳சிற்றூரின் பிரதான சாலையில் ஆலயம் உள்ளது. தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் உள்ளது.

🛕ஆலயம் கிழக்கு நோக்கிய சிறிய ஆலயம்: சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது. காட்சிக்கோபுரம் கிழக்கு நோக்கியது. உள்ளே நந்தியம்பெருமான் தனி மண்டபத்துடன் ஆலயம் நோக்கியுள்ளார்.

🛕முன் மண்டம் சுவாமி அம்பாள் கருவரைகளுக்குப் பொதுவானது. சுவாமி கிழக்கு ப் பார்த்த அமைப்பு.
அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்.

🛕கல் கோவில். சுற்றுப்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, தட்சினாமூர்த்தி, பிரும்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள்.

🌟நாங்கள் சிவராத்திரியை முன்னிட்டு ஆலயம் வழிபட சென்றபோது, பிரதோஷ மூர்த்திக்கு அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆலயத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது. சுவாமி, அம்பாள் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்தது.

💥ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டிருந்தது. சுற்று பிரகாரம் உள்ள தெய்வ சிலைகள் திருப்பணியில் இருந்தன.

🪷விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்தனை செய்து வழிப்பட்டோம்.

🌟சிவராத்தியை முன்னிட்டு உள்ளூர் மக்கள் ஆர்வம் சிறப்பாக இருந்தது. வணங்கி வழிபாடு செய்து வந்தோம். 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼ஆலயம் சிற்றூரின் உள்ளே பிரதான சாலையில் உள்ளது. ஆலயத்தின் அருகில் வாகனங்கள் செல்லும்.
நடைமுறை பூசையில் உள்ள ஆலயம்.
சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் மக்கள் வழிபாட்டுக்கும், பூசைகளுக்கும் உதவியாக இருந்தார்கள்.
பாலாலயம் செய்யப்பட்டிருகிறது. விரைவில், திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்தித்து வழிபாடு செய்தோம். சிற்றூர் மக்களின் சிவராத்திரி விழா ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது.

சாதாரண நாட்களில் பூசை நேரங்களில் அல்லது முன் தகவல் தந்து வழிபட வேண்டிய ஆலயம்.

சிற்றூர் என்பதால் பெரிய கடைகள், தங்குமிடங்கள் வசதிகள் கிடையாது.

#Subbramசுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏15.02.2026
#சுப்ரம்அருணசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🛕🛐
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🔱
#சிவராத்திரியாத்ரா #லால்குடிவட்டம் 15.02.2026

No comments:

Post a Comment

எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

7.எண்கண் சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் ⛳ இருப்பிடம் திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து...