Showing posts with label திருமுறை தலம். Show all posts
Showing posts with label திருமுறை தலம். Show all posts

Sunday, May 3, 2026

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்,

 சம்பந்தர் மற்றும் அப்பர் பாடல் பெற்ற தேவாரத் தலம். சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான இது, அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய சிறப்பைப் பெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சங்கள்:மூலவர்: வாய்மூர்நாதர் (சுயம்பு மூர்த்தி).
அம்மன்: பாலினும் நன்மொழியம்மை.
தல விருட்சம்: பலா.
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்.

சப்த விடங்கத் தலம்: தியாகராஜருக்குரிய 7 விடங்கத் தலங்களில் இது மூன்றாவது தலம்.

பரிகாரம்: கண் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாகப் போற்றப்படுகிறது.

தனிச்சிறப்பு: பங்குனி மாதத்தில் சூரிய ஒளி இறைவனின் மீது படுவது தனிச்சிறப்பு.

அமைவிடம்:திருவாரூர் - வேதாரண்யம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது

அமைப்பு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன.

இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள்.

வழிபட்டோர்
பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார்.

🔱🇮🇳
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திருக்குவளை / திருக்கோளிலி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

திருக்குவளை / திருக்கோளிலி 
பிரம்மபுரீஸ்வரர் கோயில்

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருளில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை. இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். 
பிரமபுரீசுவரர், கோளிலி நாதேசுவரர், (புற்றிடங்கொண்ட மூர்த்தியாக அமைந்துள்ளார்) 

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம். இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர்,ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது

சிறப்பு
குண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.
நவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன
வழிபட்டோர்
பிரமன், திருமால், முசுகுந்த சக்கரவர்த்தி,பஞ்ச பாண்டவர்கள், அகத்தியர், நவக்கிரகங்கள்

🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...