Showing posts with label ADIKAILASH OMPARVAT_YATRA_2024. Show all posts
Showing posts with label ADIKAILASH OMPARVAT_YATRA_2024. Show all posts

Monday, July 15, 2024

பதிவு - 15 நாள் - 8 - 02.06.24 - ஞாயிறு Budhi (2740mts.) to #Chaukauri (via Dharchula , DIDIHAT)

பதிவு - 15
நாள் - 8   -   02.06.24 - ஞாயிறு
#Budhi (2740mts.) to #Chaukauri (via Dharchula , DIDIHAT) 211 kms. 8-9 hrs. 
நாள் - 8     -    02.06.24 - ஞாயிறு
காலை 7.00 புந்தி Budhi KMVN yatra Camp ல் காலை டீ, மற்றும் காலை உணவு.
1.00   #Didihat   KMVN TRHல் மதிய உணவு

4.00 #சௌகோரி KMVN Tourist Hotel சென்று இரவு தங்குதல்.

🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

2.06.24 ஞாயிறு

🏖️#Budhi KMVN Camp ல் விடியற்காலையில் எழுந்து Camp ல் சுடுநீர் போட்டு நன்றாக குளித்துவிட்டு, காலை உணவு முடித்துக் கொண்டு #BUDHI யிலிருந்து #தார்ச்சுலா வந்து சேர்ந்தோம்.

🌺#தார்ச்சுலாவில் ஏற்கனவே நாங்கள் தங்கியிருந்த KMVN ன் Hotel வந்து காலை 9.30 மணி அளவில் போய் சேர்ந்ததும், Juice கொடுத்தார்கள். 
நாங்கள் அன்று சேரும்போது எங்களுக்கு அடுத்த Batch No. 7    ஓம் பர்வத் ஆதிகைலாஷ் தரிசிக்க Gunji செல்வதற்கு தயாராக இருந்தார்கள். அவர்கள் புறப்பட்டதும். நாங்கள் அங்கு நாங்கள் முன்பு வைத்து விட்டு சென்ற Bag எடுத்துக் கொண்டோம்.

💮தார்ச்சுலாவிருந்து காலை 11.30 புறப்பட்டு #Didihat  என்ற ஊர் சென்றோம்.
இங்குள்ள  KMVN TRH சென்று சேர்ந்தோம். இங்கும் எங்களை மாலை போட்டு வரவேற்றார்கள்;.பிறகு,  இங்கேயே மதிய உணவு சாப்பிட்டோம்.

🌻மதியம் இங்கிருந்து  ChauKauri என்ற ஊருக்குப் புறப்பட்டோம். அங்கு உள்ள KMVN Hotel சென்று சேர்ந்து இரவு உணவு முடித்து அங்கேயே தங்கினோம்.

#Didihat   (திதிஹத்) நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
 (நன்றி🙏🏻 வலைதளங்கள்)

🏔️திதிஹாட் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் ஒரு நகர்.

🌿 இது பித்தோராகர் மாவட்டத்தின் பதினொரு நிர்வாக உட்பிரிவுகளில் ஒன்றாகும், மேலும் அதன் நிர்வாகத் தலைமையகமாகவும் செயல்படுகிறது.

🍃 6522 மக்கள்தொகையுடன், திதிஹாட் மாநில தலைநகர் டேராடூனில் இருந்து 415 கிமீ (258 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

⛰️ஒரு சிறிய குன்று என்று பொருள்படும் குமௌனி வார்த்தையான 'டாண்ட்' என்பதன் அடிப்படையில் திதிஹாத் என்று பெயரிடப்பட்டது. 

🪨கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லும் பாதையில் திதிஹாட் உள்ளது.  முன்னதாக இது "டிக்டாட்" என்று அழைக்கப்பட்டது. தற்போதைய பெயர் திதிஹாத் இந்த நகரத்தின் மையப்பகுதியான ஹட் தார்ப் கிராமத்திலிருந்து பெறப்பட்டது.

🏞️இமயமலை பனி மூடிய சிகரங்களின் காட்சிகளை திதிஹாட்டில் இருந்து பார்க்க முடியும், குறிப்பாக பஞ்சசூலி மற்றும் திரிசூல் சிகரங்கள் காணலாம்.

🍀திதிஹாத் என்பது ரைக்கா மன்னர்களால் கட்டப்பட்ட மலாய் நாதரின் பண்டைய ஷிராகோட் கோவிலுக்காக அறியப்படுகிறது. இங்கிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் நாராயண் நகரில் உள்ள நாராயண சுவாமி ஆசிரமம் உள்ளது. 

🍀அழகிய இமயமலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள திதிஹாட் அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது. 

🌵இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,725 ​​மீட்டர் (5,659 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

🍁திதிஹாத், அதன் அமைதியான மற்றும் இனிமையான வானிலை காரணமாக, பருவமழை தவிர, ஆண்டின் எந்த நேரத்திலும் செல்லலாம். குளிர்காலம் கடுமையான குளிராக இருப்பதால், வருகை தருபவர்கள் போதுமான கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். கோடைக் காலம் குளிர்ந்த காற்று, சூடான சூரியன் மற்றும் பசுமையான பசுமை ஆகியவற்றுடன் பார்வையிட சிறந்த நேரம்.

🌳இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள குமாவோன் பகுதியின் பிரமிப்பான நிலப்பரப்பில் திதிஹாத் என்ற அழகிய நகரம் அமைந்துள்ளது.

🍂 கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,725 ​​மீட்டர் (5,659 அடி) உயரத்தில் அமைந்துள்ள திதிஹாட், பனி மூடிய இமயமலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அமைதியான சூழலின் மயக்கும் காட்சிகளை வழங்கும் ஒரு ரத்தினமான இடமாகும். 

☘️அமைவிடம்:
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் எல்லைகளுக்கு அருகில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் திதிஹாட் அமைந்துள்ளது. 

🌹இது  நன்கு இணைக்கப்பட்ட சாலை நெட்வொர்க்குகள் வழியாக நகரத்தை அடையலாம், இது பொது மற்றும் தனியார் போக்குவரத்து மூலம் எளிதாக அணுக முடியும்.

☘️தீதிஹாத் ஏராளமான இயற்கை அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, இது இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. இந்த நகரம் பசுமையான காடுகள், அருவிகள் மற்றும் இமயமலையின் பரந்த காட்சிகளால் சூழப்பட்டுள்ளது. 

⛰️நந்தா தேவி, திரிசூலம் மற்றும் பஞ்சுலியின் வலிமைமிக்க சிகரங்கள் நிலப்பரப்பின் பிரமாண்டத்தை கூட்டி, பார்வையாளர்களை மயக்கும் ஒரு பிரமிப்பான காட்சியை உருவாக்குகிறது.

🌋அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

1. பித்தோராகர் கோட்டை:

🏔️திதிஹாட்டில் உள்ள ஒரு முக்கிய ஈர்ப்பு பித்தோராகர் கோட்டை ஆகும், இது ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது மற்றும் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. இந்த கோட்டை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் நகரத்தின் வளமான வரலாற்று முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. 

2. அஸ்காட் வனவிலங்கு சரணாலயம்:

☃️திதிஹாட் அருகே அமைந்துள்ள அஸ்காட் வனவிலங்கு சரணாலயம் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது. 600 சதுர கிலோமீட்டர் (231 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ள இந்த சரணாலயம் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது, இதில் இமயமலை கருப்பு கரடிகள், பனிச்சிறுத்தைகள், கஸ்தூரி மான்கள் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. 

3. சந்தக் மலைக் கோயில்:

🌲2,775 மீட்டர் (9,104 அடி) உயரத்தில் அமைந்துள்ள சந்தக் மலைக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித ஆலயமாகும். இது ஆன்மீக தேடுபவர்களுக்கு அமைதியான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது, பசுமையான புல்வெளிகள் மற்றும் இமயமலையின் பரந்த காட்சிகளால் சூழப்பட்டுள்ளது.

4. திதிஹாத் தேயிலை தோட்டங்கள்:

🌿இந்த நகரம் அதன் தேயிலை தோட்டங்களுக்கும் பிரபலமானது, இங்கு பார்வையாளர்கள் தேயிலை சாகுபடியின் கலையை கண்டுகளிக்கலாம் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை புத்துணர்ச்சியூட்டும் கோப்பையை அனுபவிக்கலாம். தேயிலை தோட்டங்கள் அவற்றின் மொட்டை மாடி சரிவுகள் மற்றும் இயற்கை அழகுடன் தனித்துவமான அனுபவத்தை அளிக்கின்றன.

5. கங்கோலிஹாட்:

🌻திதிஹாட்டில் இருந்து சிறிது தூரத்தில், கங்கோலிஹாட் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு நகரம். ஹட் காளிகா கோயில் மற்றும் மகாகாளி கோயில் உள்ளிட்ட பழமையான கோயில்களுக்கு இது புகழ்பெற்றது. இந்த கோயில்கள் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை திறமையை வெளிப்படுத்துகின்றன மற்றும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க மத அடையாளங்களாக உள்ளன.

கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்:

🌷குமாவோன் பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் திதிஹாட் ஆழமாக வேரூன்றி உள்ளது. உள்ளூர் மக்கள் பெரும்பாலும் பழங்குடி குமாவோனி மக்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் அன்பான விருந்தோம்பல் மற்றும் துடிப்பான மரபுகளுக்கு பெயர் பெற்றவர்கள். உத்தராயணி, பசந்த பஞ்சமி மற்றும் மகர சங்கராந்தி போன்ற பல்வேறு பண்டிகைகளின் போது இந்த நகரம் உயிர் பெறுகிறது. இந்த கொண்டாட்டங்களின் போது, ​​உள்ளூர் மக்கள் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள், இது இப்பகுதியின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.

சாகச மற்றும் மலையேற்றம்:

🪨சாகச ஆர்வலர்களுக்கு, டிடிஹாட் மலையேற்றம் மற்றும் ஆய்வுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மறைக்கப்பட்ட பள்ளத்தாக்குகள், அழகிய ஏரிகள் மற்றும் கம்பீரமான சிகரங்களுக்கு இட்டுச்செல்லும் ஏராளமான பாதைகளால் அருகிலுள்ள பகுதிகள் உள்ளன. பஞ்சுலி பேஸ் கேம்ப், ஆதி கைலாஷ் ட்ரெக் மற்றும் ஓம் பர்வத் ட்ரெக் போன்ற மலையேற்ற பாதைகள் உலகம் முழுவதிலுமிருந்து சாகசப் பயணிகளை ஈர்க்கின்றன, அவர்களுக்கு சிலிர்ப்பான அனுபவங்களையும், இயற்கையின் கச்சா அழகில் மூழ்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

🏖️தங்குமிடம்:
டிடிஹாட் ஒவ்வொரு பட்ஜெட் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தங்குமிட விருப்பங்களை வழங்குகிறது. பட்ஜெட் விருந்தினர் மாளிகைகள் முதல் ஆடம்பர ஓய்வு விடுதிகள் வரை, பார்வையாளர்கள் அமைதியான சூழலுக்கு மத்தியில் தங்குவதற்கு வசதியான மற்றும் வசதியான இடங்களைக் காணலாம்.
KMVN TR H எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது.

நன்றி🙏🏻
🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

Wednesday, July 3, 2024

பதிவு - 12 ஓம்பர்வத் தரிசனம் நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி

பதிவு - 12
#ஓம்பர்வத் தரிசனம்
 0m Parvat  செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் குறித்து முன்பதிவில் குறிப்பிட்டோம். 

இந்த பதிவில், இந்திய எல்லையின், கடைசி இடமாகிய நபிடாங் மற்றும் OMPARVAT தரிசனம் மற்ற அனுபவங்கள்.

நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி
22 + 22 Kms. 6-7 hrs.
31.05.24- வெள்ளி

காலை 7.00 - குன்ஞ்ஜியில் காலை உணவு முடித்து, Bolero/Camper மூலம் புறப்பாடு.
நபிடாங் (4266 mts.)  சென்று ஓம்பர்வத்  தரிசனம்.
மதியம் 12.00 உணவு நபிடாங் 

மாலை - 4.00 மாலை டீ, இரவு உணவு & இரவு தங்குதல் at
KMVN  Yatra Campaign in Gunji.

நாள் - 6
இந்த பயணத்தின் முக்கிய நாள். இன்று ஓம் பர்வத், தரிசனம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐குன்ஞ்ஜியிலிருந்து, காலை 7 மணிக்குள் காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் ஜீப்பில் கிளம்பினோம். நல்ல பருவநிலை. வெய்யில் இருந்தாலும், இமயமலையின் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்ததால், Swetter, மற்றும் கம்பளி உடைகளுடனும் Shoeம் அனிந்து இருந்தோம்.  மேலே செல்ல செல்ல குளிர் இருந்தாலும், இறையருள் துணையிருந்ததால், அருமையான வெய்யிலும், Clear Blue Sky ஆக அமைந்து இருந்ததால், பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது.

🛐குன்ஞ்ஜி பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல உயரம் சென்றோம். சில இடங்கள் சாலை மிக நன்றாகவும், சில இடங்கள் மிக மிக மோசமாகவும் இருந்தது.  சாலைப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

🕉️குன்ஞ்ஜியிலிருந்து நடைபாதையாக மட்டுமே இருந்த மலைப் பாதையை, அரசாங்கம், BRO மூலம் சிறிது சிறிதாக மலைக்கற்களை வெட்டி அகற்றியும், மன் சரிவுகளை கெட்டிப்படுத்தியும், தற்போது Bolero /Camper /ஜீப் செல்லும் வழியாக்கி சவால் நிறைந்த பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். மிகவும் போற்றத்தக்க காரியங்கள்.

💥வழியில் இரு இடங்களில் INNER PERMIT Check செய்து பயணம் தொடர அனுமதி தருகிறார்கள்.

 🕉️ஒரு புறம் காளி நதி நம்மோடு கூட வந்து கொண்டே இருக்கிறது. காளி என்ற சாரதா நதி பாரதத்திற்கும், நேப்பாள நாட்டிற்கும் எல்லைப்பகுதியாக உள்ளது.

🕉️செல்லும் வழியிலேயே கனேஷ்பர்வத்,ஷீஷ் நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி, வியாசர் குகை  இருந்தாலும், OM Parvat தரிசித்துப் பிறகு திரும்ப வரும் போது காளி ஆலயம் தரிசித்தோம். 

🕉️நபிடாங் அருகில் உள்ள 0m Parvat View point சென்றோம். ஒரு தனியார் Tent Shop ல், Tea, சமோசா சாப்பிட்டோம். சிறிய கடையில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.
வேறு மக்கள் வசிப்பிடங்கள் அருகில் எங்கும் கிடையாது. தற்காலிக வசிப்பிடங்கள் தான் ஒன்றிரண்டு உள்ளன. பருவநிலை மாறியதும், கீழே வந்து விடுகிறார்கள். 

🕉️அருகில் சில தங்கும் இடங்கள் உள்ளன. எங்களைப் போன்று ஒம்பர்வத் யாத்தாரா, சில தனியார் அமைப்பின் மூலம், சுற்றுலா வந்து இருந்தனர், தனி நபர்கள், இருசக்கர வாகனம் மூலம் இங்கெல்லாம் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

🕉️ நபிதாஸ் பகுதியில், ஓம்பர்வத் மலைக்காட்சி மிகவும் அற்புதமாகத் தெரிந்தது.  நல்ல கால சூழல் இருந்ததால், எல்லோரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் பிரார்த்தனை செய்து நல்ல தரிசனம் செய்தோம்.

🕉️நபிதாங் என்ற இடம், மலைகளுக்கு இடையில் ஒரு திருப்பமான இடத்தில் உள்ள பகுதியாக இருக்கிறது.
பாதை மேற்கிலிருந்து கிழக்கு சென்று வளைந்து வடக்கில் திரும்புகிறது. இந்த முனையில் இருந்து om Parvat தரிசனம் காணலாம்.
🕉️கிழக்குப் புறத்தில் ஓம்பர்வத்மலை சிகரம் இந்திய பகுதியில் இருந்துப் பார்த்தால் இந்தி எழுத்து ஓம் போன்று மிக அற்புதமாகத் தெரிகிறது.

🕉️எதிர்புறமலையின் அடுத்த பகுதி நேப்பாள் நாட்டிற்கு சொந்தம் என்று கூறுகிறார்கள். அங்கிருந்து பார்த்தால் சாதாரண உயரமான மலையாக மட்டுமே காட்சியளிக்கிறது.

🕉️இந்த இடம், பாரதம், நேப்பாள், திபெத் மூன்றுக்கும் இடையில் எல்லைப்பகுதியாக உள்ளது.

🛐#நபிதாங்

🗻கைலாஷ் - மாசைரோவர் பயண சாலையில், இந்தியா பகுதியின் கடைசி Camp உள்ள நபிதாங் சென்றோம்.

🏔️வடக்கில், நபி பர்வத் என்ற மலை சிகரம் தெரிகிறது. முன்புறம் உள்ள இந்த கனவாய் பாதை வழியே சென்று, இந்த மலையைக் கடந்தால், திபெத்தில் உள்ள தார்ச்சன் - புறாங் என்ற நகர்  வந்துவிடும். அங்கிருந்து, மானசரோவர் ஏரியும் கைலாச மலையின் தென்புறம் சென்று அடையலாம்.

🗻பாரதப் பகுதியில் உள்ள நபியாங், நேப்பாள் பகுதியில் உள்ள ஹில்சா,  திபெத் பகுதியில் உள்ள தக்லாகோட் என்ற புறாங் இந்த மூன்று இடங்களும்  ஒரு Triangle போல உள்ளன. இயற்கையான மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

🏔️நாங்கள், 2018 ல் கைலாச யாத்திரையில் நேப்பாளின் சிமிகோட் பகுதி வந்து, அங்கியிருந்து மேற்கில் சிறிய ஹெலிகாப்டர் மூலம் 
எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் உள்ள  சிறிய பகுதியான ஹில்சா என்ற இடம் வந்து அங்குள்ள நதியைக் கடந்து திபெத் பகுதிக்கு வந்து, தக்லாகோட் - தார்ச்சன் அடைந்து கைலாஷ் அடைந்தோம்.

🗻 திபெத் தனித்துவும் பெற்று விட்டால்,  நாம் வாகனத்திலேயே நபியாங் கனவாய் வழிப்பாதையிலேயே, தக்லா கோட் - தார்ச்சன் சென்று பின், மானசரோவர், மற்றும், கைலாயம் சென்று தரிசித்து வரும் காலம் விரைவில் வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. திபெத் - சீனா அரசியல் சூழல் தற்போது உலக நாடுகள் பக்கம் கவனம் பெற்றுள்ளது. இதின் பாரதத்தின் பங்கு மிகக் கனிசமானது. 

🏔️நல்ல பாதை வசதி இந்திய பகுதிகளில் செய்யப்பட்டு வருகிறது. மிக உயரமான, நபிதாங் மலையின் அடுத்த பகுதி சென்றால், கைலாய மலை மிக நன்றாகத் தெரியும்.

🗻நாம்,  நபிதாங் பகுதியில் இருந்து ஓம்பர்வத் மலை தரிசனம் நன்றாக செய்ய முடிகிறது. மேலும், நம் பகுதியில் உள்ள மலையில் உயரம் சுமார் 200 mts  தூரம் treking சென்றால், கைலாய மலையின் சிகரம் தெரியும் என்று கூறுகிறர்கள். அங்கு வாகனங்கள் செல்ல தனிப் பாதை வசதிகளும் ஏற்படுத்தும் வேலைகள் நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.  இது அமைக்கப்பட்டால் கூட, நம் பாரத பூமீயில் இருந்து கொண்டே கைலாயமலையின் சிகரத்தைத் தரிசனம் செய்து விடலாம் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றும் கூறுகிறார்கள்.

🏔️நபிதாங் பகுதியில் பாரத ராணுவப் பிரிவான ITB Camp உள்ளது.  

🛕Camp பகுதியின் முன்புறம் ஒரு சிறிய குன்று போல உள்ள இடத்தில், ஒரு கோவில் உள்ளது. கல்கட்டிடம் ஆன்மீக குரு ஒருவரின் அமைப்பின் மூலம் பூசை நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் இந்த ஆலயம் சென்று வணங்கி வந்தோம். கருவரையும், ஒரு முன் மண்டபமும் உள்ளது.
கருவரையில், சிவன் - பார்வதி ஒரு சிறிய லிங்கம் உள்ளது.

🏔️ நபியாங் ரானுவ Camp தாண்டி கைலாஷ் பாதை இருந்தாலும்,   நாம் போக அனுமதி கிடையாது.

🏔️சுமார் 14400 அடி உயரத்தில், 
நபிதாங்கில், KMVN சார்பில் ஒரு Tent Camp அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சென்று சிலர் தங்கி ஓய்வு எடுத்தார்கள். எங்களுக்கு, ஜூஸ், காபி / டீ வழங்கப்பட்டது. மதிய உணவும் இங்கே எங்களுக்கு கிடைத்தது.

🏔️நாங்கள் KVMN சார்பில், Pithoragarh என்ற இடத்தில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை இங்கே நட்டோம்.

🕉️ நபி தாங் பகுதியில் இருந்து
Om Parvat மலை தரிசனம்; நபி பர்வத் மலை தரிசனம், மற்றும், வழியில் இருந்த  கனேஷ்பர்வத், (ஷீஷ்)நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி - காளி ஆலயம் - ,  வியாசர் குகை  இவையெல்லாம், தரிசித்தோம். அருமையான,  அற்புதமான வானிலையில் இந்தக் காட்சிகள்  கிடைத்தது இறைவரின் பேரருளே.

🎆மாலை குன்ஞ்சி திரும்பி KMVN Camp வந்து,  மாலை டீ, மற்றும் இரவு உணவு முடித்து, TENT ல் தங்கிக் கொண்டோம். மறுநாள் ஆதிகைலாஷ் தரிசனம் என்ற உற்சாகத்தில் இரவுப் பொழுது கழிந்தது.

🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...