பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம்
கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ஊர்
அ/மி பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம்
பவானி ஆற்றின் கரையோரம்,
பசுமை சூழ அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில்,
நம் இனிய ஈசன், திருமகழீசராக
(சுயம்பு லிங்க திருமேனியராய்) அருட்காட்சியளிக்கிறார்.
தனி சன்னதியில் யோக பீடம் எனும் சதுர பீடத்தில் நம் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அழகுற அருள்பாலிக்கிறாள். அம்பாளின் மகுடம்
ஜடா மகுடமாக (வரிவரியாக சடை முடிய பெற்றது) அணிந்திருப்பது விசேஷம்.
பவானி ஆற்றின் கரையில்,
துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஐந்து சிவஸ்தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்தின் இறைவனை,
பல சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டு இறையருள் பெற்றுள்ளனர்.
முற்காலத்தில், மகிழ மரங்கள் அடர்ந்து
வளர்ந்திருந்த வனமாக இருந்த இங்கு இறைவன் சுயம்புவாக தோன்றியதால்,
மகிழ வனமுடைய நாயனார் எனும் காரணப்பெயரிட்டு வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
(பாண்டியர்களின் மீன் கொடி சின்னமும், சோழர்களின் கல்வெட்டும் காணப்படுகிறது.
இத்திருத்தலம், உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான சிறப்புமிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும்
நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், மஹா சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொன்னாச்சியம்மன் ஆலயம்
மேலும், இவ்வாலயத்திற்குத் தெற்கில் இவ்வூரில் உள்ள சிறப்புவாய்ந்த அ/மி ராஜராஜேஸ்வரி பொன்னாச்சியம்மன் ஆலயம் மற்றும் பாலமுருகன் ஆலயங்கள் மிகவும் புகழ் பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது
14.06.2026 தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️
No comments:
Post a Comment