Thursday, July 23, 2026

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் 5.07.26

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது,சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது தேவார வைப்புஸ்தலம்
8 ஆம் நூற்றாண்டு ஆலயம்
5 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ராஜகோபுரம் அடுத்து பலீபீடம், கொடிமரம், நந்தி முன் முக மன்டபத்தில் உள்ளது. இதனை அடுத்து நீண்ட முன்மண்டபம் தாண்டினால் சுவாமி கருவரை உள்ளது.
சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர்
கிழக்கு நோக்கியும் பார்வதிதேவி, பிரம்மசம்பத் கௌரி கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியிலும் இருக்கிறார்கள்
பிரம்மாவின் சன்னதி உள் கோஷ்டத்தில் சிவனுக்கு அருகில் உள்ளது
 தியான நிலையில் இருக்கும் பிரம்மாவுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஜீவ சமாதியான பதஞ்சலி முனிவரும் இருக்கிறார்.
மகிழ மரத்தை ஸ்தலவ்ருக்ஷமாக கொண்டுள்ளது.

சிவன் ஆலய வடக்குப்புரத்தில் தனியாக அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி தனி ஆலயமாக உள்ளது.

அதை அடுத்து பிர்ம தீர்த்தம் உள்ளது. இதை உருவாக்கிய பிரும்மனுக்கு சிலை உள்ளது.
அடுத்து சப்த ரிஷி ஸ்வரர், அண்ணாமலையார் முதலிய லிங்கங்கள் தனித்தனியாக அமைந்துள்ளது.

இதை அடுத்து கைலாசநாதர் ஆலயம் உள்ளது முன்புறம் பிரம்மாண்டமான கல் நந்தி தனி மண்டபத்தில் உள்ளது.

காஞ்சியில் உள்ள கைலாசநாதர் ஆலய கருவரை அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. பிரமிக்க வைக்கும் கலை நுட்பங்கள் நிறைந்த சிலைகள் கோஷ்ட்டத்தில் உள்ளது.
இந்தப் பகுதி ASI கட்டுப்பாட்டில் உள்ளது
அவசியம் தரிசிக்க வேண்டிய பகுதி

திருப்பட்டூர் ஆலயம்
புராணத்தின் படி, சிவன் பிரம்மாவின் பெருமையை அழிக்க, பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டி, பிரம்மாவின் படைக்கும் சக்தியைப் பறித்தார்.
பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்து இத்தலத்தில் சாபவிமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிற்கு படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலையும் வழங்கினார்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.
பிரம்மா தனி சந்நிதி கொண்ட தமிழ்நாட்டில் உள்ள கோவில்,
பிரம்மா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

விதியின் காரணமாக வாழ்க்கையில் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும் நபர்கள் தங்கள் ஜாதகத்துடன் வந்து பிரம்மா முன் வைத்து அர்ச்சனை செய்தால், அவர்களின் விதி சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால், பிரம்ம சன்னதியில் கூட்டம் அலைமோதுகிறது.

இக்கோயிலுக்குச் சென்றால் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இவ்வாலயத்தை அடுத்து வடக்குப் புறத்தில் பெரிய வளாகத்தில் உள்ள பகுதிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

பார்க்கிங் வசதிகள் உள்ளன.
சிறு சிறு கடைகளும் உண்டு .
#நன்றி🙏
5.07.2026 #மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்பட்டூர் - காசிவிஸ்வநாதர் ஆலயம் 5.7.26

. திருப்பட்டூர் - காசிவிஸ்வநாதர் ஆலயம் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்...