#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஐந்து (பாடல் 8, 9)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🙏🏻
👂மொழிமாற்று என்றால் என்ன? அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.
👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்
💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்
#சம்பந்தர்தூது
#எண்ணலங்காரம்
#ஏகபாதம்
#மடக்கணி
என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.
#மொழிமாற்று என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?
👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.
❇️பதிகத்தின் சிறப்பு:
☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்
🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.
🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும் வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பாடல் - 8
நெருப்புரு வெள்விடை மேனியர்
ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக்
காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை
யார்விறன் மாதவர்வாழ்
பொறுப்புறு மாளிகைத் தென்புற
வத்தணி புண்ணியரே.
1266. திருமுறை 01.117.08
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
🔰இதை பொருளுக்கு ஏற்றவாறு இப்படி மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்
நெருப்புரு மேனியர்,
வெள்விடை ஏறுவர்,
நெற்றியின் கண்ணர்,
மருப்புருவன் தாதை(யை)க்,
மா முருகன் விருப்புறு தந்தையார்,
பாம்புக்கு மெய் (யைக்) காட்டுவர்
விறல் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத்
தென்புறவத்து அணி புண்ணியர்,
✳️✍️பொருள் குறிப்பு:
🔸மருப்புறு வன்கண்ணர் தாதையைக் =
கொம்புடைய விநாயகர்
🔹தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை எனப்பொருள் கொள்க.
இது உருபு பிரித்துக் கூட்டல்.
🔽விறல் மாதவர்வாழ் = பெருமையும், வீரமும் மிக்க சிறந்த தவமுனிவர்கள்
⏺️பொருப்புறு மாளிகைத் = மலை போன்று உயர்ந்த மாளிகை
🔼புறவத்து அணி புண்ணியர் = அழகிய புறவம் என்னும் நகரில் அணியாக விளங்கும் புண்ணியராகிய ஈசன்.
🔹மருப்புருவன் தாதை = யானையின் தந்தம் உடைய விநாயகரின் தந்தை.
💠📝பாடல் விளக்கம்:
வீரர்கள் மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும்
மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு
அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர்
நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர்.
வெண்மையான விடைமீது ஏறி வருபவர்.
நெற்றியின் கண் விழி உடையவர்.
தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார்.
பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர்.
சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.
🏔️தலக்குறிப்பு: புறவம்: சிபிச்சக்கரவர்த்தியிடம் இந்திரன் பருந்தாகவும், அக்கினி தேவன் புறாவாகவும் சென்று சோதித்தார்கள்.
சிபி புறாவின் எடைக்குத் தனது உடல் தசையை அறுத்து ஈடு செய்தான்.
இப்பாவம் நீங்கப் புறவாகிய அக்கினி தேவன் இத்தலத்தை வழிபட்டதால் புறவம் எனப்பட்டது
பேறு பெற்றதால் சீர்காழிக்கு இப்பெயர்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பாடல் :09
இலங்கைத் தலைவனை யேந்திற்று
இறுத்தது இரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது
மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையின் ஆடுவர்
கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள்
மேவிய தத்துவரே.
1267. திருமுறை 01.117.09.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்
சலம் கிளர் வாழ் வயல் சண்பையில்
மேவிய தத்துவர்
இலங்கைத் தலைவனை இறுத்தது;
இரலை ஏந்திற்று;
கலங்கிய இல் நாள் மாணி
கூற்றுயிர் குமை பெற்றது;
இல் நாள் மாணி உயிர்பெற்றது;
மொந்தை யின் கொட்டுவர்;
காட்டகத்து ஆடுவர்.
✳️✍️பொருள் குறிப்பு:
🔹சலம் கிளர் வாழ் வயல் =
நீர் நிறைந்து விளங்கும் வயல்களை
உடைய சண்பைப் பதியில்.
🔸இரலை =மான்.
🔹இல் நாள் மாணி = வாழ்நாள் இல்லை
எனும் மார்க்கண்டன்,
🔸கூற்றுயிர் = காலன்
🔹குமை பெற்றது = அளிந்தழிந்தது.
🔸மொந்தை யின் கொட்டுவர் =
வாத்தியமாக இலங்கும் மொந்தை
என்ற தோற்கருவி
💠📝பாடல் விளக்கம்:
நீர் நிறைந்து விளங்கும் வயல்களை
உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர்
இலங்கைத் தலைவனாகிய
இராவணனை நெரித்தவர்.
மானைக் கையில் ஏந்தியவர்.
கலக்கத்தோடு வந்த காலனை உயிரைக் கவந்தது.
வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர்.
வாத்தியமாக இலங்கும் மொந்தை
என்ற தோற்கருவியைக் கொட்டுபவர்.
இடு காட்டின்கண் ஆடுபவர்.
அப்பெருமானை வணங்குக.
🏔️தலக்குறிப்பு:
சண்பை:
கபிலர் சாபத்தால் யாதவன் ஒருவன் வயிற்றில் உதித்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டினான். அத்தூள்கள் சண்பைப் புற்களாய் முளைத்தன. அப்புற்களைக் கொண்டு யாதவர்கள் சண்டையிட்டு மாய்ந்தனர். இப்பழி நீங்கும் பொருட்டுக் கண்ணனும் கபில முனிவரும் இந்தத் தலத்தை வழிபட்டு உய்ந்தார்கள். இதனால் சீர்காழி, சண்பை எனப் பெயர் பெற்றது.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, தமிழ் மொழிக்கு புத்துணர்வு ஏற்படுத்தி
புதிய எழுச்சியை ஊட்டியவர்.
இருண்ட காலத்திலிருந்து மீட்டவர். தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம்.
வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
பதிவு: ஒன்று - பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு - பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
பதிவு : மூன்று - பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
பதிவு : நான்கு - பாடல் 6,7 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4031282306946996&id=100001957991710
No comments:
Post a Comment