#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஒன்று (பாடல் 1)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🙏🏻
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அதன் அமைப்புக் குறித்து
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
⚜️இதுவரை நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்
#சம்பந்தர்தூது
#எண்ணலங்காரம்
#ஏகபாதம்
#மடக்கணி
என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களை ப்பற்றி சிந்தித்து வந்தோம்.
தற்போது #மொழிமாற்று என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி சிந்திக்கலாம்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
👂மொழிமாற்று என்றால் என்ன? அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.
👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்படுகின்றன. இவற்றை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றில் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்
💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?
👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.
❇️பதிகத்தின் சிறப்பு:
சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்.
அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்திக்க, சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்
அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.
🏔️மொத்தம் 12 பாடல்கள்.
சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும் வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பாடல் - 1.
காடது அணிகலம் காரர
வம்பதி காலதனில்
தோடது அணிகுவர் சுந்தரக்
காதினில் தூச்சிலம்பர்
வேடது அணிவர் விசயற்கு
உருவம் வில்லும் கொடுப்பர்
பீடது அணி மணி மாடப்
பிரம புரத்தாரே.
🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றக் கொண்டு பொருள் காண வேண்டும்
காடு அது பதி
கார் அரவம் அணிகலம்
கால் அதனில் தூச்சிலம்பர்
சுந்தரக் காதினில் தோடது அணிகுவார்
வேடது உருவம் அணிவார்
விசயற்கு வில்லும் கொடுப்பர்
பீடது அணிமணி மாடப் பிரமபுரத்தாரே.
✳️பொருள் குறிப்பு:
காடு = சுடுகாடு
பதி = தலம்
கார் அரவம் = கருநாகம்
தூச்சிலம்பர் = துய சிலம்பு அணிந்தவர்.
வில்லும்= பாசுபத அத்திரம்
பீடது = பெருமை உடைய
❇️விளக்கம்:
பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர்.
வேட்டுவன் உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியவர்.
🏔️தலக்குறிப்பு: பிரமபுரம் :
படைப்புத் தொழில் வேண்டி முன்னை நாளில் பிரமன் இத்தலத்தில் தங்கி வழிபட்டு இறையருள் பெற்றதால் இப்பெயர்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம்.
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
No comments:
Post a Comment