அகத்தீஸ்வரர் ஆலயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர் கோயில், அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள சுமார் 1300 ஆண்டுகள் பழமையான சிவஸ்தலமாகும்.
அமைவிடம்: தென்காசியில் இருந்து சுமார் 15 கி.மீ மற்றும் சுரண்டையிலிருந்து 5 கி.மீ தொலைவில் சாம்பவர் வடகரை அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் இதற்கான அலங்கார வளைவு உள்ளது.
அனுமன் நதிக்கரையில் உள்ள மயானத்தை கடந்துதான் கோயிலுக்கான பாதை செல்கிறது.
அகத்தீஸ்வரர்
அனுமன் நதி தீரத்தின் தென்பகுதியில் அகத்தீஸ்வரர் கோவிலுள்ளது.
பழமை வாய்ந்த கோயில் இடைக்காலத்தில் பக்தர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர் கனவில் தோன்றிய அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி செய்ய சொன்னதாகவும் அதன்படி அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். முன்மண்டபத்தில் நந்தியம் பெருமான் காட்சி தருகிறார். கருவறையின் இடதுபுறம் விநாயகருக்கு கருவறையில் மூலவராக சிவலிங்க வடிவில் அகத்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கருவறையை ஒட்டிய இடதுபுறத்தில் அதிகார நந்தி மற்றும் இருவர் காட்சி தருகிறார்கள் சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி யோக நரசிம்மர் பிரம்மா காட்சி தருகிறார் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் வேம்பும் அரசும் சேர்ந்து நிற்க அதன் கீழே ராகு கேதுவுக்கும் இடையில் தவழும் குழந்தையாக கிருஷ்ணன் இருக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த குழந்தை கிருஷ்ணனை வணங்கி வர அருள் பெற செய்கிறார்கள்.
ராமாயணத்தில் வரும் கரடி முகம் கொண்ட மனிதருக்கு பெயர் ஜாம்பவ மூர்த்தி இந்த கோவில் சிவபெருமானை ஜாம்பவமூர்த்தி வழிபட்ட ஸ்தலம் அகஸ்தியரும் வழிபட்டுள்ளார் ஆனால் எப்படி ஆதாம் ஏவாள் முதல் மனிதர் என்று கிறிஸ்தவ மதத்தில் கூறுகிறார்களோ அதே போன்று உலகம் தோன்றிய காலத்தில் கரடி தோன்றியது அதிலிருந்து தான் குரங்கு; குரங்கிலிருந்து தான் மனிதன்; அந்த கரடி மனிதன் தான் ஜாம்பவான் மூர்த்தி என்று அழைக்கப்படும் எனவே தான் இந்த ஊர் சாம்பவன் வடகரை அதாவது அனுமன் நதி வடகறையில் சாம்பவமூர்த்தி தவம் செய்த இடம் என்று அர்த்தம் வடபக்கம் நீர் தடாகம் ஓடும் பாறை அதில் கரடித்தலையுடன் சம்பவமூர்த்தி இருப்பார். அதை தான் இப்ப சிவன் கோயிலாக கட்டியுள்ளார்கள்.
சாம்பவர் மூர்த்தி
ஆற்றின் வடகரையில், இயற்கையான பாறை நிலப்பரப்பிற்கு நடுவே நதியை ஒட்டிய வகையில் சாம்பவர் மூர்த்தியும் எழுந்தருளியுள்ளார். இரு கோயில்களையும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் இணைக்கிறது.
அகத்திய முனிவரால் வழிபடப்பட்ட இந்த ஆலயம், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைதியான குகை போன்ற பாறை அமைப்பில் மூலவரான சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.
குகைக்கோயில் சிறப்புகள்
நதியின் கரையில் அமைந்துள்ள பாறைப் பகுதியின் கீழே ஒரு சிறிய இயற்கையான குகை (Cave) உள்ளது.
இந்தக் குகையினுள் தான் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
குகையின் பாறை அமைப்புகளுக்கு வெளியேயும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு பாறைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு & ஆன்மீக நம்பிக்கை
சிவபெருமானின் உத்தரவின் , உலகை சமநிலைப்படுத்த தென்திசை நோக்கி வந்த அகத்திய முனிவர், இந்த அனுமன் நதிக்கரையில் தங்கி, குகையினுள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கடுமையான தவம் புரிந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
குகையினுள் இருக்கும் லிங்கத் திருமேனியின் முன்னே அகத்திய முனிவர் தவம் செய்யும் கோலத்திலான திருவுருவமும் அமைந்துள்ளது. இதனால் இத்தலத்து ஈசனுக்கு "அகத்தீஸ்வரர்" என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி
இக்கோயிலின் கருவறை வெளிச்சுவர்களில் பழமையான வட்டெழுத்து கல்வெட்டுகள் (Inscriptions) காணப்படுகின்றன.
சாம்பவர் வடகரை பகுதியானது முற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழும், பின்னர் 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (Travancore State) ஒரு பகுதியாகவும் திகழ்ந்துள்ளது.
பிற சன்னதிகள்
குகைக்கோயிலை ஒட்டி விநாயகர், ஐயப்பன், நாகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டுத் திருவுருவங்களும் இத்தலத்தின் பாறை அமைப்புகளில் வழிபடப்படுகின்றன.
திருவிழாக்கள்:
கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கார்த்திகை மாதத்தில் சோமவார பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் மாலையில் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அமாவாசை நாட்களில் சிறப்பு உச்சிகால பூஜையும் அன்னதானமும் நடக்கிறது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
தினந்தோறும் அன்னதானம் நடக்கிறது. மாதசிவராத்திரி நாளில் விசேஷ பூஜைகள் உண்டு. மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.
நன்றி🙏 18.7.2026சுப்ராம்தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் #ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#தென்காசிபகுதி
No comments:
Post a Comment