Tuesday, July 21, 2020

மொழிமாற்று பகுதி: ஆறு

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : ஆறு  (பாடல் 10, 11 மற்றும் 12)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

👂மொழிமாற்று என்றால் என்ன?  அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️ நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து வந்தோம்.

 #மொழிமாற்று  என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்

🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும்  வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 10
அடியிணை கண்டிலன்  தாமரை
             யோன்மால்   முடிகண்டிலன்

கொடியணி   யும்புலி  யேறுகந்து
             ஏறுவர்   தோலுடுப்பர்

பிடியணி   யும்நடை   யாள்வெற்பு
             இருப்பதோர்    கூறுடையர்

கடியணி   யும்பொழில்  காழியுள்
              மேய   கறைக்கண்டரே.

1268.             திருமுறை 01.117.10
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை பொருளுக்கு ஏற்றவாறு இப்படி மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கடி அணியும் பொழில் காழியுள் மேய  கறைக்கண்டர்
அடியிணை    மால்   கண்டிலன்; 
தாமரையோன்  முடி கண்டிலன்; 
கொடியணியும்  ஏறு உகந்து ஏறுவர்; 
புலித்தோல் உடுப்பர்; 
பிடியணியும் நடையாள் கூறுடையர்; 
வெற்பு இருப்பது.

✳️✍️பொருள் குறிப்பு:

🔽 கடி =மணம். 
🔼 ஏறு - ரிஷபம்    
🔹 கொடியணியும்=கொடியை     
      அலங்கரிக்கும், 
🔸 பிடி அணியும் நடையாள் =பெண் 
       யானையையொத்த நடையினைய     
       உடைய பார்வதி. 
🔼  கூறுடையர் = பாகமாக உடையவர்.
 ⏺️ வெற்பு = கைலை.

💠📝பாடல் விளக்கம்:

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும்

 கறைக்கண்டராகிய சிவபெருமானின்
 அடி இணைகளைத் திருமால் கண்டிலன்.

 தாமரை மலரில் எழுந்தருளியுள்ள  
 பிரமன் முடியைக் கண்டிலன்.

 அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். 

புலித்தோலை உடுத்தவர்.

 பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். 
அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

🏔️தலக்குறிப்பு:     காழி:
காளிதன் என்னும் பாம்பும், நடனத்தில் தோல்வியுற்ற காளியும் இத்தலத்துப் பெருமானாரை வழிபட்டதால் இப்பெயர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் : 11

கையது  வெண்குழை  காதது
          சூலம்  அமணர்புத்தர்

எய்துவர்  தம்மை  யடியவர்
           எய்தார்  ஓர்  ஏனக் கொம்பு

மெய்திகழ்  கோவணம்  பூண்பது
           உடுப்பது   மேதகைய

கொய்தலர்  பூம்பொழிற்  கொச்சையுள்
           மேவிய  கொற்றவரே.

1269.            திருமுறை   01.117.11

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

கொய்து அலர் பூம்பொழில் 
மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் 
கையது சூலம்:    
காதது வெண்குழை;
அமணர் புத்தர்   தம்மை  எய்தார்; 
அடியவர் எய்துவர்; 
ஓர் ஏனக்கொம்பு  மெய்திகழ் பூண்பது;
கோவணம் உடுப்பது

✳️✍️பொருள் குறிப்பு:

⏺️ கொய்து அலர் பூம்பொழில் 
       மேதகைய கொச்சையுள்  =   
       சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய   
       மலர்வனவாய அழகிய பொழில்கள் 
       சூழ்ந்த கொச்சையுள்.
 🔸 ஏனக் கொம்பு = பன்றி

💠📝பாடல் விளக்கம்:

சிறந்தனவாய்க்  கொய்யக் கொய்ய மலர்வனவாய் அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார்;  அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் அணியாகக் கொண்டவர்.   திருமேனிமேல் கோவண ஆடையை  உடுத்தி விளங்குபவர். அவரைத் துதிப்பீராக.

🏔️தலக்குறிப்பு:  
               கொச்சைவயம்:
பராசர  முனிவர்  தமது  உடலின்
தூர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் சீர்காழி தலத்திற்கு இப்பெயர்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல்: 12

கல்லுயர்  கழுமல  விஞ்சியுள்
        மேவிய  கடவுள்தன்னை

நல்லுரை  ஞானசம் பந்தன்
         ஞானத்  தமிழ்  நன்குணரச்

சொல்லிடல்  கேட்டல்  வல்லோர் 
தொல்லை
          வானவர் தங்களோடும்

செல்குவர்   சீரரு  ளாற்பெற
          லாம்சிவ   லோகமதே.

1270.           திருமுறை   01.117.12.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

கல்லுயர் கழுமல விஞ்சியுள்
மேவிய  கடவுள்தன்னை
நல்லுரை  ஞானசம் பந்தன்
ஞானத்  தமிழ்  நன்குணரச்
சொல்லிடல்  கேட்டல்  வல்லோர் 
தொல்லை வானவர்
தங்களோடும் செல்குவர்  
சீரருளாற்பெறலாம் 
சிவலோகமதே.

✳️✍️பொருள் குறிப்பு:

⏺️கல்லுயர் (கல் + உயர்) கழுமல (= 
     கல்லால் ஆன மதில்களை உடைய 
     கழுமல நகரில்)
🔸கழுமலநகர்க் கடவுளை 
     ஞானசம்பந்தன் சொன்ன 🔹ஞானத்தமிழ் நல்லுரைகளைச் 
     சொல்லவும் கேட்கவும் வல்லார் 
     தேவரோடு சிவலோகம் பெறுவர்
      என்கின்றது. 
🔼புண்ணியஞ் செய்து தேவராய்ப்    
     பதவியில் நிற்பாரை விலக்கத் 
     தொல்லை வானவர் என்றருளினார்.
🔹சீர் அருள் = கடவுள் அருள், 
     ஞானசம்பந்தர் அருளால் தேவர்    
      உலகும், பின்னர் கடவுள் அருளால் 
      சிவலோக வாழ்வும் கிடைக்கும் 
      என்பதாம்.

💠📝பாடல் விளக்கம்:

உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

🏔️தலக்குறிப்பு:  
                      கழுமலம்:
🌟உரோமச முனிவர் பூசித்து  ஞானோபதேசம் பெற்று, உலகில் உள்ள உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்றதால் சீர்காழி தலத்திற்கு இப்பெயர்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

திருஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, தமிழ் மொழிக்கு புத்துணர்வு ஏற்படுத்தி
புதிய எழுச்சியை ஊட்டியவர்.
இருண்ட காலத்திலிருந்து மீட்டவர். தமிழுக்கு புதிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டார் என்பது மிகச் சிறப்பு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று - பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
பதிவு : இரண்டு - பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
பதிவு : மூன்று - பாடல் 4, 5 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4027196434022250&id=100001957991710
பதிவு : நான்கு - பாடல் 6,7 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4031282306946996&id=100001957991710
பதிவு: ஐந்து - பாடல் 8, 9 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4036563763085517&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...