Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 14 #NepalYatra 20.04.2024 - 4.5.2024

#பூதநீலகண்டர்கோயில்
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 
14
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
25.04.2024

✨25.04.2024 காலையில் ஆலயம் சென்று பசுபதீநாதரை வணங்கி விட்டு, காலை உணவு முடித்துக் கொண்டு, நேப்பாள் ஆலயங்கள்காட்மண்டு மற்றும் அருகில் உள்ள  சிலவற்றை தனி வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்று தரிசித்து விட்டு மதியம் Hotel வந்தோம்.

⛳ஆலயங்களைப் பற்றிய வலைதளக் குறிப்புகளும் எமது அனுபவ குறிப்புகளும்
தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி🙏🏻

ஸ்ரீபுத்த நீலகண்டர் கோவில்
பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple), 
#ஜலநாராயணர்

🕉️பூதநீலகண்டம் (Budanilkantha), நேபாள நாட்டின் மாநில எண் 3ல் உள்ள காத்மாண்டு மாவட்டத்தின் சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் அமைந்த நகரம் ஆகும். தேசியத் தலைநகர் காட்மாண்டிற்கு வடக்கே 8 கிமீ தொலைவில் பூதநீலகண்டம் நகரம் உள்ளது. 

🕉️திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். 

 🕉️பூதநீலகண்டம் ஆலயம் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

🛐நீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும்.

🛐கோயில் மூலவரான பூதாநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச் சிலை ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட பூதாநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே, ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார்

🌼 சுற்றிலும்,ஆலய வளாகக் கட்டிடங்களுடன், நடுவில் அமைந்துள்ள
ஒரு குளத்தின் நடுவில், வெட்ட வெளியில், 4 கருங்கல் தூன்கள் கொண்ட விதானத்துடன், நீண்ட உருவமாக நாகத்தின் மீது பள்ளி கொண்டிருக்கும் அமைதியான, அற்புதத் திருக்கோலத்தில் மேற்கு நோக்கியவாறு  ஸ்ரீமன் ஜலநாராயணர்  உள்ளார். 

🌟 குளம் உள் சுற்று வெளி சுற்று வருவதற்கு படிகள் அமைப்புகள் உள்ளன.
குளத்தின் மேற்கு கரையின் சுவற்றுப் பகுதியில் பல்வேறு தெய்வ உருவங்கள் காணப்பெறுகின்றன.  இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதி. வரிசையில் நின்று, மேற்குப்புரம் உள்ளே நுழைந்து ஸ்ரீஜலகண்டரை அருகில் சென்று வணங்கி வரலாம். சென்றசென்ற முறை மாலை நேரத்தில் வந்து தரிசனம் கண்டோம்.

🌼கரைப்பகுதியில் தெற்குப் புறத்தில், சில சிறிய கருவரை மண்டபத்துடன், சிவலிங்கம்,  முதலிய தெய்வ உருவங்கள் கொண்டவை அமைக்கப்பட்டுள்ளது.

🌼ஹோமம், பூசைகள் செய்யவும் வசதி செய்து தரப்படுகிறது.

🌟வடக்குப்புறம் தனி சன்னதியில், அம்பாள் சன்னதியும் உண்டு.

🛐நீரில் தெரியும் ஜலகண்டரின் முழு உருவம் கவனித்து தரிசனம் செய்வது சிறப்பு.

25.4.24 #மீள்தரிசனம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...