Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் 33 -#NepalYatra 20.04.2024 - 4.5.24

#DANUSHDHAM
#ஜனக்பூர் 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
33
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.

30.04.24 தரிசனம்
🎋தனுஷாதம் என்பது தென்கிழக்கு நேபாளத்தின் மாகாணம் எண். 2 இல் உள்ள தனுஷா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் .

🚍இந்த இடம் ஜனக்பூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் தனுஷதம் மற்றும் ஜனக்பூரை இணைக்கும் கான்கிரீட் சாலை உள்ளது. கார், மோட்டார் சைக்கிள், பஸ் மற்றும் பலவற்றில் இதை அடையலாம். ஜனக்பூரிலிருந்து பேருந்தில் பயணம் செய்ய 45 நிமிடங்கள் ஆகும்.

 🛕இது நேபாளத்தில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலமாகும். சீதையின் சுயம்வரத்தின் போது ராமரால் உடைக்கப்பட்ட சிவ தனுஷின் (சிவ கடவுளின் வில்) ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதனால்தான் இதற்கு தனுஷதம் என்று பெயர்.

🏵️இப்போது மீதமுள்ள வில் பகுதியைச் சுற்றிலும் கோயில் உள்ளது 

🏵️உலகம் முழுவதிலிமிருந்து இந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். 

🏵️ஒவ்வொரு ஆண்டும் மகர சக்ராந்தியின் போதும் ஒரு திருவிழா நடைபெறுகிறது. மற்றும் பக்தர்கள். கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

புராணம்

💥சத்தியயுகத்தில், சிவபெருமான், திரிபுரா சூரன் என்ற அசூரனை வில்லால் அடித்து வீழ்த்தினார். மகரிஷி தட்சிசி என்ற முனிவரால் பங்களிக்கப்பட்ட மரத்தினால் இந்த வில் உருவாக்கப்பட்டிருந்தது.

💥இந்தவில்லானது பரசுராம முனிவரிடம் கொடுத்து தசரத மகா மன்னனிடம் சேர்ப்பித்து விடுமாறு சிவன் கட்டளையிடுகிறார். 

💥 சிவதனுசு என்ற இந்த வில்லானது தசரத சக்கரவர்த்தியிடம் இருந்து வந்தது.

💥 தசரதர் ஆட்சியில் ஒரு முறை,
மிதுலா ராஜ்யத்தில், தொடர்ந்து மழையின்றி வரட்சி ஏற்பட்ட போது, இறையுணர்வு அறிவுரையைப் பின்பற்றி ஜனகமன்னர் பூமியை கலப்பையால் உழுவ, சீதாமாத குழந்தையாகக் கிடைக்கப் பெற்றாள். 

💥சிவதனுசுவை மாத சீதாவழி பட்டுவர,
மிதுவைக்கு ஸ்ரீ ராமர் வந்த போது, தனுசுவை எடுத்து வளைத்த போது, அது மூன்று துண்டாகியது.

💥வில்லின் வலதுபாகம் ஒரு துண்டு தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடியிலும்,
இடது இடதுபகுதி ஜனக்பூரில் உள்ள தனூஷ் சாகர் என்ற குளத்திலும்,
நடுப்பகுதி தனுஷ் தாம் என்ற இந்த இடத்திலும் விழுந்ததாக புராணம் கூறுகிறது.

💥மேலும், அந்தவில்லின் நடுப்பகுதியானது பிப்பல் (FICUS RELIGIOSA) என்ற மிகப் பழைமையான மரம் (550 வருடம்) உள்ளது. 
ஒவ்வொரு 5,7ம் ஆண்டுகளில், கொட்டை வளருகிறது. மேலும், இந்த இடத்தில் ஒரு குளம் உள்ளது. அதை PATAL GANGA என்று அழைக்கிறார்கள்.

ஆலய சிறப்பு

💥விவசாயிகள் விவசாய அறுவடையை இந்த குளத்தின் நீர் கொண்டு மதிப்பிடுகின்ற வழக்கம் உள்ளது.

💥 தனுஷ்தாம் ஆலயம். பிரதான சாலை ஒட்டி உள்ளது. ராமர் வில்லை ஏந்திக்கொண்டிருக்கும் உருவம் உள்ள நுழைவுவாயில் உள்ளது.

💥ஆலயம் நீள் சதுரம் அமைப்பில் உள்ளது. உள்ளே உள்ள பிரதான பிப்பல் மரத்தின் அடிப்பகுதியே கருவரையாக உள்ளது. இந்த மரத்தின் வேர்பகுதி கல்லாகி மாறி துண்டு துண்டாகக்காணப்படுகிறது.
இதுவே சிவதனுசுவின் பாகமாகக் கருதப்பட்டு பூசைகள் நடைபெறுகிறது. 

💥மரத்தின் அடிப்பகுதியில் உள்ள கற்களுக்கு சிவப்பு ஆடை போர்த்தி, பூசை செய்து வணங்கி வருகிறார்கள்.
கருவரை உள் சுவரில் ஆலய புராதானக் கதை எழுதப்பட்டுள்ளது.

💥மரத்தின் வேர்பகுதி கல்லாக மாறிவிட்டதால் அந்த கல் காணப்படும் நீளத்தில் பாதுகாப்பு வரிசையும் கட்டப்பட்டு உள்ளது.

💥ஆலயத்தின் அடுத்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு சின்ன மண்டபங்களில் சுவாமி சிலைகள் அனுமன், முதலியவைகள் வைத்து வணங்கப்படுகின்றன.

💥முழு வளாகப் பகுதியும் தூய்மையாகவும், இடைவெளிகள் கொண்டதாகவும் உள்ளது.

🎋தனுஷ்தாம் பார்த்துவிட்டு மாதா சீதா அவதாரம் செய்த சீதாமரி சென்று அடைந்தோம். 

நன்றி🙏🏼 30.04.2024

#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்



No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...