Saturday, May 30, 2026

பரமக்குடி ஸ்ரீவிசாலாட்சியம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகரசுவாமி ஆலயம் 17.05.26

பரமக்குடி ஸ்ரீவிசாலாட்சியம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகரசுவாமி ஆலயம்
நகர் மத்தியில் கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது.
3 நிலை ராஜ கோபுரம் உடையது.
விநாயகர் மற்றும் பால தண்டாயுதபானி இருபுறமும் மாடங்களில் உள்ளார்கள்.
ஆலய நுழைவு அடுத்து உள்ள நீள் மன்டபத்தில் பலிபீடம் கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது
ஆலய உள் மன்டபத்தில் தெற்கு நோக்கிய அமைப்பில் தனிக்கருவறையில் விசாலாட்சியம்மன் உள்ளார்கள்
கிழக்குப்பார்த்த கருவரையில் சந்திரசேகரசுவாமி அருள்பாலிக்கிறார்.
பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் மற்றும் கோஷ்ட தெய்வங்களுடன் அமைந்துள்ளது
கிழக்கில் பைரவர் நவகிரகம் யாகசாலை மண்டபம் உள்ளது சூரியன் சந்திரன் உள்ளது
சிறப்பான முறையில் பராமரிப்பதுடன் பூசைகள் ஆலய விழாக்கள் அணைத்தும் நடைபெற்று வருகின்றது.
பரமக்குடி ஸெளராஷ்ட்ர பிராஹ்மன மகா ஜனங்களுக்கு சொந்தமானது
அருகில் உள்ள ஸ்ரீ கல்யாண ஸெளந்தரவல்லித் தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்த்தானம் இந்த ஆலயத்தையும் இணைத்து நிர்வாகம் செய்கிறது.
பரமக்குடியில் உள்ள முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று
நகரின் மத்தியில் எல்லா ஆலயங்களும் நடைதூரத்தில் இருப்பது சிறப்பு
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 17.05.26 தரிசனம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் , அப்பர் ஆகியோரின் பாடல்...