Friday, May 29, 2026

ராமநாதபுரம் முத்தாலம்மன் / முத்தால பரமேஸ்வரி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமநாதபுரம் முத்தாலம்மன் / முத்தால பரமேஸ்வரி ஆலயம்

ராமநாதபுரம், வெளிப்பட்டனம் பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி ஆலயம்
ஆயிர வைசிய மகாஜன சபைக்கு சொந்தமானது.
அருகில் தர்ம தாவள விநாயகர் ஆலயம் இணைந்து உள்ளது.
இரண்டும் கிழக்குப் பார்த்த அமைப்பில் உள்ளது  தனித்தனி ராஜ கோபுரங்களுடன் உள்ளன.

முத்தால பரமேஸ்வரி அம்மனை ஆயிர வைசிய செட்டியார் இன மக்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள் 
ராமநாதபுரம், பரமக்குடி  இளையான்குடி, காரைக்குடி மதுரை முதலிய ஊர்களில் பெரும் ஆலயங்கள் தனியாக உள்ளது மிகச் சிறப்பான பூசைகள் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலய நுழைவில் வாயில் மேல் பகுதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதையில் உள்ளார்.
உட்புறம்  கொடி மர விநாயகர் சிங்க வாகனம் பலிபீடம் உள்ளது
சில படிகள் உயரத்தில் உள் மண்டபமும் கருவறையும் உள்ளன  கிழக்குப் பார்த்த கருவரையில் அம்மன் நின்ற கோலத்தில் மிக அற்புதமாக உள்ளார்

கருவரை பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய அமைப்பில் பாமா ருக்குமனி சமேத கிருஷ்ண பரமாத்மா தனி சன்னதியில் உள்ளனர் முன்புறம் கருடாழ்வார்  தெற்கு நோக்கிய சிறிய ஆஞ்சனேயர் உள்ளனர்

பிரகாரத்தில் தனி சன்னதியில் நாகலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாள்
மற்றும் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. பைரவர் சன்னதியும் உள்ளது.
 தர்ம தாவள விநாயகர் ஆலயம்
முத்தாலம்மன் ஆலயத்துடன் இணைந்து வலது புறம் கிழக்கு நோக்கி தனி கருவரையில் தர்ம தாவள விநாயகர் உள்ளார் 
கருவரை முன்பு பலிபீடம் வாகனம் உண்டு.
எண்கோண வடிவில் முன்புறம் மன்டபமும் உள்ளது
முன்புறம் அநுக்கை விநாயகர் தண்டபாணியும் உள்ளனர்
மூலவிநாயகர் தனி அமைப்பில் சற்று உயரமான கருவரையில் உள்ளார்.

சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட ஆலயம் என்பதால் சிறந்த முறையில் பூசை விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
16.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...