அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - தென் காளஹஸ்தி ராஜபதி கேது தலமாகப் போற்றப்படுகிறது.
அமைவிடம்⛳
இந்தத் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்ற ஊரில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில்.
இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் 8வது தலம்.
தலவரலாறு📚
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டபோது அவர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார். உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோமச முனிவரால் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர்
4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம்
7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி
9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆலய அமைப்பு🛕
ராஜபதி ஆலயம் சிதலமடைந்து விட்டது தற்போது முழு அளவில் புனருத்திரானம் செய்யப்பட்டு புதிய 5 நிலை ராஜ கோபுரத்துடன் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலய முன்பகுதியில் 5 நிலை
ராஜகோபுரம் கடந்து ஆலயம் உள் நுழைவில் சூரியன் சந்திரன் அடுத்துள்ளது
கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன
கிழக்கு முன் பகுதியில் கண்ணப்ப நாயனாருக்கு 4.5 அடி உயரத்தில் தனிச் சன்னதி
குடுமித் தேவர் உள்ளார். மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று இவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
ஆலயம் முன்பகுதி முழுமையும் அழகிய கூரையால் மூடப்பட்டு உள்ளது
நவகிரகலிங்கம் தனி மண்டபத்துடன் உள்ளது
சுவாமி கருவரை முன் முன் மன்டபத்தின் முகப்பில் திருக்கல்யாண காட்சிக் கோலம் சுதை வடிவத்தில் உள்ளது
சுவாமி கருவரை உள் மண்டபத்தில்
ஒரு முன் நந்தியுடன் துவாரபாலகர்களுடன் கிழக்கு நோக்கி அருள் தருகிறார்
கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மன் தனி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.
பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் தொடர்ந்து கேது விநாயகர் மற்றும் கேதீஸ்வர், கௌரி அம்மை அமைந்துள்ளனர் காளத்தி விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் முருகர் தனி சன்னதியில் உள்ளனர்
மேற்கு பிரகாரத்தில் ஆதிகைலாசநாதர் மற்றும் காளத்தீஸ்வரர் சன்னதியும் உள்ளன
சுவாமி அடுத்து தனி மண்டபத்துடன் கருவரை சன்னதியில் கிழக்கு நோக்கி சௌந்தரநாயகி அம்மன் உள்ளார். முன் நந்தி உள்ளது பள்ளியறையும் உள்ளது
வடகிழக்கில் தனி பைரவர் சன்னதியும் உள்ளது
நவலிங்க சன்னதி: பொதுவாகக் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். ஆனால், இங்கு நவகிரகங்களுக்குப் பதிலாக ஒன்பது லிங்கங்கள் (நவலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
💥ஆலயசிறப்புகள்
சுய அபிஷேகம்: பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்தி செய்துகொள்ளும் வசதி இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவகிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவகிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்
திருமணத் தடை & பிதுர் தோஷம்: நீண்ட நாள் திருமணத் தடை உள்ளவர்கள் மற்றும் பிதுர் தோஷம் நீங்க விரும்புவோர் இங்குப் பரிகார பூஜைகள் செய்கின்றனர்.
மரண பயம் & நரம்பு வியாதிகள்: மரண பயம் நீங்கவும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகவும் இத்தல வழிபாடு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
💥முக்கியத் திருவிழாக்கள்:
மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம் மற்றும் கார்த்திகை சோம வாரங்களில் (108 சங்காபிஷேகம்) சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல விருட்சம்: நெல்லி மரம்
தீர்த்தம்: பாலாவி தீர்த்தம்
பயண அனுபவக்குறிப்புகள்🕊️
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாகக் கருதப்படுவதால், இது "தென் காளஹஸ்தி" என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
26.4.26 இன்று வருஷாபிஷேகம் அன்று தரிசனம் பெற்றோம்
குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ராஜபதி ஆலயம் சாலை மிகவும் குறுகியது தாமிரபரணி கிளை ஓடைக்கரையில் பாதை.
ராஜபதி ஆலயம் அருகில் வேறு கடைகள் எதுவும் இல்லை
ஆலயம் முழுவதும் தூய்மையாக நல்ல பராமரிப்பில் உள்ளது பத்தர்கள் பிரார்த்தணை செய்து வழிபட்டு பலன்பெற்று செல்கிறார்கள்
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳
No comments:
Post a Comment