பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலம் அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் ஆகும்.
அமைவிடம்: பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் எமனேஸ்வரம் அமைந்துள்ளது. பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன
தல சிறப்பு
திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த "கால சம்ஹாரமூர்த்தி'யாக அருளும் சிவன், இத்தலத்தில் "அனுக்கிரமூர்த்தி'யாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.ஆயுள் விருத்தி பெறவும், சனிதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.
தலபுராணம்
சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக் காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.
திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.
அவ்வாறு எமன் வந்து விழுந்த இந்த இடத்தில், அவர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டுத் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டு, எமனேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது
எனவே, இங்குள்ள சிவபெருமான் "எமனேஸ்வரமுடையார்" என்றும், 'அனுக்கிரக மூர்த்தி' என்றும் அழைக்கப்படுகிறார். என்பது புராணம்.
ஆலய அமைப்பு:
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுரம் கிடையாது. ஒரு சிறிய நுழைவு வாயிலும், அதன் மேல் காட்சி நாயகர் சுதையில் அமைக்கப்பட்டுள்ளார்.
உள் நுழைவில் முன்புறம் பெரிய வளாகமாகக் காணப்படுகிறது.
பலிபீடம் கொடி மரம் நந்தி தனி கல் மன்டபத்தில் உள்ளார்.
பெரிய மண்டபத்தின் தெற்கு பார்த்து ஸ்ரீசொர்ன குஜாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்
சுவாமி முன் மண்டபம் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. கருவறை முன்புறம் ராஜகணபதி கிழக்கு நோக்கியும் வள்ளி தெய்வானையுடன் முருகரும் இருபுறம் உள்ளார்கள். கருவரையில் தனித்துவமாக
ஸ்ரீ எமனேஸ்வரர் இருந்து அருள் பாலிக்கிறார்.
மண்டபத்தில் வடபுறம் நடராஜர் சபை உள்ளது.
வெளிப்பிரகாரத்தில் தலவரலாறு கல்வெட்டும் ஆலய உபயதாரர்கள் விபரமும் உள்ளன.
தென் பிரகாரத்தில் தனிசன்னதியாக கிழக்குப் பார்த்து ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் ஒரு நந்தியும் உள்ளார்.
மூலவர் கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரும்மா துர்க்கை மற்றும் தனிசன்னதியில் சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள்.
பிரகாரத்தின் வடகிழக்கில் தென்திசை நோக்கி தனி பைரவர் நாய் வாகனம் இன்றி தன்டம் சூலத்துடன் உள்ளார்.
வடகிழக்கில் தனி நவகிரக சன்னதியும் கிழக்கில், சந்திரன் மற்றும் சூரியன் உள்ளனர்.
கோயில் சிறப்புகள்:
ஆயுள் விருத்தி: எமதர்மன் வழிபட்ட தலம் என்பதால், நீண்ட ஆயுள் பெறவும், சனிதோஷம் நீங்கவும் இங்கு சிறப்பு வழிபாடுகள்செய்யப்படுகின்றன. திருமண மற்றும் குழந்தை வரம்: இங்குள்ள அன்னை 'சொர்ணகுஜாம்பிகை' சன்னதியில் பெண்கள் தங்களின் மாங்கல்யம் மற்றும் வளையல்களைக் கட்டி வழிபடுவதால் திருமணத் தடைகள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. வாழ்நாள் சடங்குகள்: அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வதற்கு இது மிகவும் உகந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பரமக்குடியில் உள்ள சௌராஷ்ட்ரா இன மக்கள் பெரும் உதவியும் ஆலய வளர்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்கள்.
பூசைகள் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டும் பராமரிப்பிலும் உள்ள ஆலயம்
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment