அங்கமங்கலம் நரசிங்க நாதர் ஆலயம்
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மேற்குப்பார்த்த புராதான சிவாலயம்
அமைவிடம்:⛳
தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரல் தாலுக்கா ஆழ்வார் திருநகரி வட்டத்தில் அங்கமங்கலம் என்ற கிராமத்தில் இந்த நரசிங்க நாதர் ஆலயம் அமைந்துள்ளது அன்னை அருள்மிகு ஆவுடையம்மாள்
தல சிறப்பு / வரலாறு
நரசிங்கநாதர் கோவில் ஒரு பழமையான மற்றும் தனித்துவமான சிவத்தலமாகும். இது மேற்கு நோக்கிய சிவாலயமாகவும், சைவ-வைணவ
ஒற்றுமையை விளக்கும் தலமாகவும் போற்றப்படுகிறது.
நரசிம்மர்கோபம் தீரவும் தன் கடமையினை தொடரவும் ஒரு ஆழ்ந்த பூஜை தேவைப்பட்டது
நரசிம்மமரின் தங்கை அன்னபூரணி ஒரு தீர்த்தம் உருவாக்கி அங்கே சிவலிங்கமும் உருவாக்கி அவரை பூஜை செய்ய சொன்னாள்
அங்கு பூஜை செய்தார் நரசிம்மர், இரணியன் அசுரன் சந்தேகமில்லை ஆனால் அவன் மாபெரும் பக்தன் பிரம்மாவிடம் வரம் எற்ற பக்தன் என்பதால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது
அந்த தோஷத்தை போக்கி தன் ஆவேசத்தை போக்கி இங்கு தன் அவதாரம் முடித்து அமைதியாக தன் இடம் சென்றார்
அவர் பாவம் போக்கிய தலமே அங்க மங்கலம், அன்னை உருவாக்கிய சிவலிங்கமே நரசிங்க நாதர்
இந்த ஆலயம் கிரியா தலம், அதாவது இந்த லிங்கம் கிரியா லிங்கம் என அழைக்கபடுகின்றது, அதாவது படைப்பு தத்துவம்
இந்த ஆலயத்தில் வழிபட்டால் அங்கம் நலமாகும் வாழ்வு மங்கலமாகும், அதனாலே இது அங்க மங்கலமாயிற்று
ஆலய அமைப்பு🛕
சமீபத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு ஆலயம் பொலிவுடன் உள்ளது.
ராஜகோபுரம் கொடி மரம் கிடையாது. பலீபீடம் உள்ளது அடுத்து சுவாமி மேற்கு பார்த்த ஆலயம்
ஏகப் பிரகாரம் முழு அளவிலான கற்றளி ஆலயம்
கன்னி மூலையில் விநாயகர் சன்னதி
வடமேற்கில் வாகன மண்டபம் வடக்குப்
பிரகாரத்தில் வள்ளி தெய்வாணை முருகர் தனி சன்னதி மற்றும் அகத்தியர் சனீஸ்வரர், வடகிழக்கு மூலையில் பைரவர் தென்கிழக்கில் சூரியன் தனி தனி சன்னதிகளில் உள்ளனர்
சன்டிகேஸ்வரர் உள்ளார்
கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி
உள்ளார் இங்குள்ள தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வர வடிவில் வீற்றிருப்பது மிகவும் அரிதானது.
ஆலய தென் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி
தனி கருவரை அம்பாள் ஆவுடையம்பாள்
சுவாமி ஆலயம் முகப்பில் உள் முன் மண்டப முகப்பில் சுவாமி அம்பாள், விநாயகர் முருகர் சுதையில் உள்ளனர் அடுத்து முன்மண்டபம் கடந்தால் உள் மன்டபத்தில் தனி கருவரையில் மேற்கு நோக்கி சுவாமி நரசிங்கநாதர் தனி கருவரையில் மேற்குப்பார்த்து உள்ளார்
சுவாமியை நோக்கிய ஒரு சிறிய நந்தியம் பெருமான் உள்ளார் கருவரை முன் துவாரபாலகர்கள் உள்ளனர். நடராஜர் சன்னதியும் உள்ளது
தரிசனபலன்கள்
'இந்த சிவன் நல்ல கர்மாவினை செய்ய கெட்டதை அழித்து தருவார், அந்த நரசிம்ம சாஸ்தா எல்லா வகை அருளையும் தருவார், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் , நல்ல கர்மா நல்ல சிந்தனையுடன் வந்து சேரும் எல்லோருக்கும் வழிகாட்டும், எல்லோருக்கும் பயனடையும் வெகு உயர்ந்த வாழ்வினை வாழ்ந்து தெய்வமாய் வழிகாட்டி நிற்பீர்கள், "
பயண அனுபவக்குறிப்புகள்🕊️
இந்து அறநிலையத்துறையின் ஆலயம்
ஊர் பெருமக்கள், மற்றும் அடியார் பராமரிப்பில் பூசையில் உள்ள ஆலயம்
முன் தகவல் கொடுத்து தரிசிக்க வேண்டிய புராதான தலம்
ஆலயம் ஒரு அமைதியான இடத்தில் உள்ளது. ஆலய வளாகத்தில் மரங்கள் அதிகம் காணப்படுகின்றதால், குளுமையாகவும், அமைதியாகவும் உள்ளது.
ஆலய முன்புறம் வாகனங்கள் நிறுத்த இடங்கள் உள்ளன
26.04.26 சுப்ராம் தரிசனம்
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳
No comments:
Post a Comment